0 - 2 வயது வரை... குழந்தைகளின் வளர்ச்சி பற்றித் தெரியுமா?

0 - 2 வயது வரை... குழந்தைகளின் வளர்ச்சி பற்றித் தெரியுமா?

ஒரு குழந்தையின் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கும் காலம், இந்த முதல் 1000 நாட்கள் (First 1000 days of babies). பிறந்த குழந்தையில் தொடங்கி முதல் 1000 நாட்கள் மனிதனுக்கு மிகவும் முக்கியமான காலகட்டம். அதாவது, கருவுற்றதலிருந்து முதல் 2 ஆண்டுகள் வரை (Babies Growth). இந்த வளர்ச்சி குழந்தையின் வாழ்க்கையை தீர்மானிக்கிறது.

குழந்தையின் முதல் 1000 நாட்கள் (Importance of First 1000 days of babies)

முதல் 1000 நாட்கள் எப்படி பிரிக்கப்படுகின்றன எனப் பார்க்கலாம்.

  • கருவில் 270 நாட்கள் (In Pregnancy 270 Days)
  • முதல் வருடத்தில் 365 நாட்கள் (365 days – 1st Year)
  • இரண்டாம் வருடத்தில் 365 நாட்கள் (365 days – 2nd Year)
  • மொத்தம் 1000 நாட்கள் (Totally 1000 Days)

இந்த காலக்கட்டம் குழந்தையின் மிக மிக முக்கியமான பகுதி என்பதை உலகளாவிய ஆதாரம் புலப்படுத்துகிறது.

ஒரு குழந்தையின் உடல்நலம், மனநலம் குழந்தை வளர்ந்து பெரியவராகி ஈட்டும் சமூக பங்கு ஆகியவை எல்லாம் இந்த முதல் 1000 நாட்களின் அடிப்படையை சார்ந்திருக்கும்.

முதல் 1000 நாட்களின் முக்கியத்துவம் என்ன? (Why 1000 Days?)0 - 2 வயதுக்குள் குழந்தைகளின் வளர்ச்சி

  • ஊட்டச்சத்துத் தேவையை பூர்த்தி செய்யும் காலம்.
  • புத்திகூர்மை
  • உயரம்
  • பள்ளியில் அக்குழந்தை செயல்படும் விதம்
  • அக்குழந்தை வளர்ந்து பெரியவராகி ஒரு தனி நபராக மாறி சம்பாதிக்கும் திறன் ஆகியவற்றைகூட முதல் 1000 நாட்கள் முடிவு செய்கிறது.
  • ஒரு குழந்தையின் பழக்க வழக்கம் மற்றும் அணுகுமுறை
  • குழந்தை வளர்ந்த பிறகு தனி நபரின் வெற்றியும் மகிழ்ச்சியும் கூட நிர்ணயிக்கும் பகுதிதான் இந்த முதல் 1000 நாட்கள்.

இதையும் படிக்க: ஃபேஸ்புக் நிறுவனரான ‘மார்க்’ தன் குழந்தைக்கு ‘குவான்டம் ஃபிஸிக்ஸ்’ வாசித்து காட்டுகிறார்… ஏன்?

நோய்கள் வர காரணம் (Diseases of malnutrition)

  • குழந்தையின் ஆரம்ப ஆண்டுகளில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு (malnutrition)
    குறைந்த எடையோடு பிறப்பது.
  • அக்குழந்தையின் வளரிளம் பருவத்தில் உயர் ரத்த அழுத்தம் வருவது
    சர்க்கரை அளவு உயர்ந்திருப்பது.
  • உடல் வளர்ச்சிக்கு தேவையான கொழுப்பு குறைந்து இருப்பது போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட காரணமாக இருப்பது குழந்தையின் ஆரம்ப காலமான, முதல் 1000 நாட்கள்.

0 - 2 வயதுக்குள் குழந்தைகளின் வளர்ச்சி

முதல் 1000 நாட்களை அலட்சியப்படுத்தினால்… (Effects of malnutrition)

  • உலகில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 45% இறப்புக்கான காரணம் ஊட்டச்சத்து குறைபாடு (malnutrition in children). ஏறக்குறைய அனைத்துக் குறைபாடுகளும் கருவுற்ற பிறகு குழந்தையின் முதல் 1000 நாட்களில் நடைபெறுகிறது.
  • 12-36 மாதங்களில் குள்ளமாதல் எனப்படுகின்ற உடல் வளர்ச்சி குறைபாடு ஏற்பட்டால் அது இடை நிலை பள்ளிக் கல்வியின் போது குறைவான செயல்பாட்டுக்கு வழிவகுக்கும்.
  • அதே நேரத்தில், துவக்க ஆண்டுகளில் வயதுக்கு ஏற்ற வகையில் உயரமாக குழந்தைகள் வளர்ந்தால் 11-26 ஆண்டுகளில் அறிவுசார் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற காரணமாகிறது.
  • குள்ளமாதல் எனும் வளர்ச்சிக் குறைபாடுள்ள குழந்தைகள் (malnutrition children), வயது வந்த பின்னர் அவர்களின் வருவாயில் 22% இழக்கிறார்கள்.
  • ஒரு மனிதரின் உயரத்தில் அதிகரிக்கும் 1% (சதவிகிதம்). அவர்களின் ஊதியத்தில் 2.4% சதவிகிதம் உயர்வுக்கு சமம் ஆகிறது.
  • ஊட்டச்சத்து குறைப்பாட்டால் (பிறந்த குழந்தையின் முதல் 1000 நாட்களில் ஏற்படுவது) நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவிகிதம் இழப்பு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: குழந்தைகளின் முதல் 1000 நாட்கள் … மறக்கவே கூடாத 21 விதிமுறைகள்..!

ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன?

ஒரு குழந்தையின் முதல் 1000 நாட்கள் (வளர்ந்து தனி நபராகும்போது) கீழ் கண்டவற்றை முடிவு செய்கிறது…

  • குழந்தையின் வளர்ச்சி (Babies Growth)
  • ஊட்டச்சத்து குறைபாடு
  • குழந்தை பருவத்தில் உடல் வளர்ச்சி குறைவதால் தனி நபரின் உயரம் குறைகிறது.
  • பிரசவத்திலே குழந்தை இறக்க நேரிடுகிறது அல்லது பிறந்து இறக்க நேரிடுகிறது.
  • மூளை வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
  • ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள், 18 வயது வந்த பின்னர் ஒரு தனி நபர் வருவாய் ஈட்டும் திறன் குறைந்து காணப்படுகிறது.
  • இதனால் நாட்டின் உற்பத்தி திறன், மொத்த உள்நாட்டு உற்பத்தியும் குறைகிறது.

ஒரு குழந்தையின் முதல் 1000 நாட்கள் குழந்தையின் உடல் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தோடு ஒரு தனி நபர், குடும்பம், சமூகம் மற்றும் நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான அடித்தளத்தை சார்ந்துள்ளது.

குழந்தைகளுக்கான முதல் 1000 நாட்களில் என்ன செய்ய வேண்டும் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Source: UNICEF, World Health Organization, LANCET, INAP in Guatemala, GDP

இதையும் படிக்க: பிறந்த குழந்தைகளின் இறப்பைத் தடுக்க… தாய் கட்டாயமாக செய்ய வேண்டிய 2 டெக்னிக்

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா?  தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null