11 மற்றும் 12 மாத குழந்தைகளின் வளர்ச்சி… குழந்தைகளின் வளர்ச்சியைக் கண்டுபிடிக்க ஒரு டெஸ்ட்…

11 மற்றும் 12 மாத குழந்தைகளின் வளர்ச்சி… குழந்தைகளின் வளர்ச்சியைக் கண்டுபிடிக்க ஒரு டெஸ்ட்…

குழந்தைகள் வளர்ந்து கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு மாதத்துக்கு ஏற்ற வளர்ச்சியும் அதற்கேற்ற கவனிப்பும் தேவை. அதைச் சரியாக நீங்கள் செய்கிறீர்களா… இதோ இங்குப் பார்த்து சரி செய்து கொள்ளுங்கள். அவர்களுக்கு என்ன தேவை?

11 வது மாத குழந்தையின் வளர்ச்சி

நடக்கத் தொடங்கி இருப்பார்கள். அவர்களின் காலடி வீடெங்கும் இருக்கும். அந்தளவுக்கு சேட்டையும் இருக்கும். கட்டில், சேர், சுவர் என அனைத்தையும் பிடித்துக்கொண்டு நடப்பார்கள். கைகளில் உள்ள பொருட்களை எடுத்துக்கொண்டு, அருகில் இருப்பவர்களிடம் காண்பிப்பார்கள். இந்த மாதத்தில் குழந்தைகள் செய்யும் செயல்களை மிக்க மிகழ்ச்சியுடன் பார்த்து ரசியுங்கள். குழந்தையின் பேச்சில் கொஞ்சம் தெளிவு தெரியும். இரண்டு வார்த்தைகளுக்கு உள்ள தொடர்பையும் இணைத்து சரியாக பேசுவார்கள். சின்ன சின்ன வார்த்தைகளை நன்கு புரிந்து கொள்வார்கள். நீங்கள் கட்டளையிடும் சின்ன வாக்கியங்களைப் புரிந்து கொள்வார்கள். புதிய வார்த்தைகளை இந்த மாதத்தில் பேசுவார்கள். மழலை குழலில் இட்லி, தோசை என எதாவது புது புது வார்த்தைகளைப் பேச முயற்சிப்பார்கள். இன்னுமும் கை சூப்பிக்கொண்டு இருந்தால், அதைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற இந்த மாதத்திலிருந்தே தொடங்கி விடுங்கள். இதையும் படிக்க: குழந்தைகளின் விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்துவது எப்படி? இன்னமும் பால் பாட்டிலில் பால் குடிப்பது, தண்ணீர் குடிப்பது என இருந்தால் அந்தப் பழக்கத்தையும் மாற்றுங்கள். பெரும்பாலான குழந்தைகள் 1 - 1 ½ வயதுக்குள் நன்றாகப் பேச தொடங்குவார்கள். இந்த மாதத்திலிருந்து உங்கள் குழந்தையிடம் நீங்கள் அடிக்கடி பேசினால், குழந்தையும் தெளிவாக பேசும். குழந்தையின் குரல்வளமும் நன்றாக வரும். தெளிவான குரல்வளத்தை குழந்தைகள் பெற, நீங்கள் அவர்களிடம் பேச வேண்டும். ஆண், பெண் எனத் தந்தை, தாய், பாட்டி, தாத்தா என மாறி மாறி பேசினால்தான் குழந்தை மற்றவர்கள் போல குரல் வளம் பெறுவார்கள். ஆண், பெண்ணுக்கான குரல் வளத்தில் உள்ள வித்தியாசம் போன்றதை உணருவார்கள். உங்கள் குழந்தை பேசும் போதெல்லாம், முகம் பார்த்து என்னவென்று கேளுங்கள். கண்டுக்காமல் இருக்க வேண்டாம். நீங்கள் குழந்தைகளை அலட்சியப்படுத்தினால், அவர்கள் அடம் பிடிக்க தொடங்கிவிடுவார்கள். இந்த மாதத்தில் தாய், தந்தை அடுத்த குழந்தைக்கு உடனே முயற்சிக்க வேண்டும். 4-5 ஆண்டுகளாவது இடைவெளி இருப்பது நல்லது. ஆண்கள் காண்டம், பெண்கள் காப்பர் டி போன்றவற்றைப் பயன்படுத்தலாம். இதையும் படிக்க: 7 மற்றும் 8 மாத குழந்தையின் வளர்ச்சியும் பாதுகாப்பு முறைகளும்…
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });
11 month baby growth

12 வது மாத குழந்தைகளின் வளர்ச்சி

உங்கள் குழந்தை அடுத்த மாதம் பிறந்த நாளைக் கொண்டாடும். தானாக அமர, நிற்க, நடக்க கற்றுக் கொண்டிருக்கும். குழந்தைகளைப் பாராட்டுங்கள். நீங்களும் மகிழ்ச்சியாக இருங்கள். அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா என மழலை குரலில் குழந்தைகள் கூப்பிடுவதை ரசியுங்கள். இந்த மாதத்தில் உங்கள் குழந்தையின் உடல்நல வளர்ச்சியை சரி பார்த்துக்கொள்ளுங்கள். இதையும் படிக்க: 0 - 5 வயது குழந்தைகளின் மூளை வளர்ச்சியும் அவர்கள் கடக்க வேண்டிய மைல்கற்களும்

இதோ ஒரு சின்ன டெஸ்ட்…

நீண்ட நேரம் உங்கள் குழந்தையால் ஒரே இடத்தில் உட்கார முடிகிறதா? தானாக எழுந்து அங்கும் இங்கும் அவர்கள் நடக்கிறார்களா? பெயரை சொல்லி கூப்பிட்டவுடன் குழந்தை திரும்பி பார்க்கிறதா? எங்கேயாவது சத்தம் கேட்டால் பயப்படுகிறதா? ஓடி போய் பார்க்கிறதா? தனக்குத் தெரிந்த பொருட்கள் இடம் மாறி இருந்தால் கவனிக்கிறார்களா? தனக்குத் தெரிந்த நபர்கள் வந்தால் கவனிக்கிறார்களா? ஐந்து விரல்களால் சின்ன பொருட்களை சரியாக எடுக்கிறார்களா? ஒரு கையில் உள்ள பொருளை இன்னொரு கையில் சரியாக அவர்களால் மாற்ற முடிகிறதா? அர்த்தமே இல்லாத தொடர்பே இல்லாத உரையாடல்கள் நடக்கிறதா? தன் கைவிரல்களால் உணவை உழப்பி உண்கிறார்களா? இதையெல்லாம் பெற்றோர் கட்டாயமாக கவனிக்க வேண்டும். இதற்கான பதில் ‘ஆம்’ என்றால் உங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறார்கள். வாழ்த்துகள்… 2-3 கேள்விகள் பதில் ‘இல்லை’ என்றால் பயப்பட வேண்டாம். இன்னும் 2 மாதத்தில் அதுவும் சரியாகி விடும். 2 மாதம் கழித்தும் ‘இல்லை’ என்ற பதில் வந்தால், குழந்தையை மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள். இதையும் படிக்க: அலட்சியப்படுத்தக்கூடாத அறிகுறிகள்... மாற்றுத்திறனாளி குழந்தைகளை அறிவது எப்படி? 12 month baby growth

வளர்ச்சி எப்படி இருக்கும்?

இந்த மாத இறுதியில் உங்களைப் போலவே சாப்பிட தொடங்குவார்கள். நீங்கள் விரும்பும் உணவுகளை அவர்களும் விரும்பி உண்ணத் தொடங்குவார்கள். இப்போது உப்பு சுவை உங்கள் குழந்தைகளுக்கு பிடிக்க ஆரம்பிக்கும். உப்பு, புளிப்பு சுவைகளின் மேல் குழந்தையின் கவனம் இருக்கும். உப்பு, இனிப்பு, புளிப்பு உள்ள துரித உணவுகளை குழந்தைகளுக்கு அறிமுகம் படுத்த வேண்டாம். இட்லி, தோசை, சாம்பாரில் உள்ள உப்பே போதுமானது. அதிக உப்பை குழந்தைக்கு கொடுக்க வேண்டாம். அதிக உப்பால் உடற்பருமன் அதிகரித்து, குடல் மற்றும் வயிற்றுப் பகுதியில் வீக்கம் வரலாம். தாய்ப்பால் கொடுத்து கொண்டிருந்தால் அதைத் தொடருங்கள். புட்டியில் பால் குடிப்பதை மாற்றி, ஸ்ட்ரா வைத்த டம்ளரில் பால் குடிக்கப் பழக்கப்படுத்துங்கள். தண்ணீர் குடிக்க பழக்கப்படுத்துங்கள். சாதாரண டம்ளரில் குடிக்க பழக்கப்படுத்துங்கள். இது பெஸ்ட். நீங்கள் இப்படி மாற்றி பழக்காவிட்டால் குழந்தையின் பல் வளர்ச்சியில் மாறுபாடு வரலாம். பற்கள் வெளி நோக்கியோ உள் நோக்கியோ வளரலாம். திட உணவுகள் குழந்தைக்கு மிக மிக முக்கியம். இதை சாப்பிடாமல் பாலையே குடித்துக் கொண்டிருந்தால் ரத்தசோகை நோய் வந்துவிடும். சில குழந்தைகள் வாயில் புட்டி பால் வைத்துக்கொண்டே தூங்குவார்கள். இது மிக மிக தவறான, ஆபத்தான பழக்கம். உங்கள் குழந்தையின் பற்கள் மிக மோசமாக சேதமடையும். எனவே புட்டிபால் தவிருங்கள். காலி புட்டி பாட்டிலை வைத்துக் கொண்டு குழந்தைகள் உறிஞ்சி கொண்டே இருந்தால், காற்று உள்ளே போய் வயிறைப் பெருக்க வைக்கும். உறங்குவதற்கு முன்பாக புட்டியில் பாலைக் கொடுக்கவே கூடாது. அடிக்கடி டிவி பார்ப்பார்கள். இந்தப் பழக்கம் 4-5 வயது வரை நீடிக்கும். இப்போதே டிவி பார்க்கும் பழக்கத்தைக் குறைத்து விடுவது நல்லது. அளவான சத்தம், 3 மீட்டர் தொலைவில் அரை மணி நேரம் மட்டும் குழந்தைகள் டிவி பார்க்கலாம். அதற்கு மேல் வேண்டாம். குழந்தைகள் டிவி பார்க்கும்போது நீங்களும் அருகில் இருங்கள். அம்மா, அப்பா, குழந்தை பாட்டு, சித்திரங்கள், கார்டூன்கள் உள்ளவற்றைப் பார்க்க அனுமதிக்கலாம். குழந்தை விளையாடும்போது, டிவியை நிறுத்தி விடுங்கள். அல்லது சத்தத்தை குறைத்து விடுங்கள். வெகு நேரம் டிவி பார்த்துக்கொண்டே இருந்தால் புதிய விளையாட்டு பொம்மை, வெளி இடங்களுக்கு அழைத்து சென்று கவனத்தை மாற்றி விடுங்கள். இதையும் படிக்க : குழந்தைகளின் பற்களின் வளர்ச்சிக்கு என்னென்ன தேவை? எதை சாப்பிட வேண்டும்? Source: ஆயுஷ் குழந்தைகள் ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null