2 மற்றும் 3-வது டிரைமெஸ்டரில் கருவின் வளர்ச்சி என்ன?

2 மற்றும் 3-வது டிரைமெஸ்டரில் கருவின் வளர்ச்சி என்ன?

முதல் மும்மாதங்களைப் (trimester) பற்றி ஏற்கெனவே பார்த்து இருக்கிறோம். அடுத்து வரும் 2வது மற்றும் 3வது மும்மாதங்களைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம். முதல் மும்மாதம் எவ்வளவு முக்கியம் என உங்களுக்கு தெரிந்து இருக்கும். குழந்தையின் பெரும்பாலான வளர்ச்சி முதல் மும்மாதத்திலே நடக்கிறதா என நீங்கள் ஆச்சர்யப்பட்டு இருப்பீர்கள். அடுத்து 2 மற்றும் 3-வது மும்மாதத்தில் என்னென்ன வளர்ச்சிகள் இருக்கும். என்னென்ன பிரச்னைகள் இருக்கும் என இங்கு பார்க்கலாம். இதையும் படிக்க : கர்ப்பக்காலத்தில் வரக்கூடிய உடல்நல பிரச்னைகளும் தீர்வுகளும்...

12வது வாரம்

கரு 9 செ.மீ அளவு காணப்படும். எலும்பு முனைகள் இணைந்து இருக்கும். பால் வேறுபாட்டை கூட அறியலாம். கருப்பையை நன்றாகக் கவனித்தால் சிறு சிறு அசைவுகள் உணரலாம்.

16வது வாரம்

கரு 15 செ.மீ வளர்ந்து இருக்கும். ஆண், பெண் குழந்தையா என மிக சரியாக சொல்லலாம். கருவின் உடலில் சிறு சிறு ரோமங்கள் காணப்படும்.

20வது வாரம்

கரு 18-20 செ.மீ நீளம், 500 கிராம் எடை கொண்டுள்ளதாக காணப்படும். தலை சற்று பெரிதாக, உடல் முழுதும் மாவு போன்று படிந்திருக்கும். தொப்பூழ்க்கொடி 1 அடி நீளத்தில் காணப்படும். second trimester of pregnancy Image Source : elevit
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });

24வது வாரம்

23 செ.மீ நீளம் இருக்கும். 930 கிராம் எடை கொண்டிருக்கும். தலை பெரியதாக காணப்படும். முகத்தில் கண் மற்றும் புருவங்கள் இருப்பது தெளிவாகத் தெரியும். தோலில் பல்வேறு சுருக்கங்கள் தெரியும்.

28வது வாரம்

28 செ.மீ நீளம் அளவு கரு வளர்ந்து இருக்கும். தோல் மிக கனமாகவும், சிவந்தும் காணப்படும். இந்த வாரத்தில் குறை பிரசவம் இருந்திட கூடாது. ஏனெனில் அப்படி பிறந்தால் குழந்தையை பிழைக்க வைப்பது கடினம்.

32வது வாரம்

30 செ.மீ நீளம் இருக்கும். 2074 கிராம் எடை அளவு குழந்தை இருக்கும். கை, கால் நகங்கள் வளர்ந்து இருக்கும். நரம்பு மண்டலம் வளர்ச்சி பெற்று இருக்கும். அனைத்து உறுப்புகளும் ஓரளவு வளர்ச்சி பெற்று இருக்கும். சிலருக்கு இந்த வாரத்தில் குறை பிரசவம் நடக்கலாம். அப்படி குழந்தை பிறந்தாலும் சரியான கவனிப்பு, பராமரிப்பு இருந்தால் மட்டுமே குழந்தையை நன்றாக கவனித்து, ஆரோக்கியமாகப் பிழைக்க வைக்க முடியும்.

36வது வாரம்

கரு 36 செ.மீ அளவு வளர்ந்து இருக்கும். 2500 கிராம் எடை உடையதாக இருக்கும். விதைப்பை வளர்ச்சி அடைந்து காணப்படும். நகங்கள் முழுமையாக வளர்ச்சி அடைந்து காணப்படும். இந்த வாரத்தில் குழந்தை பிறந்தால், இயல்பாக குழந்தையை வளர்க்க முடியும். பயம் வேண்டாம். இதையும் படிக்க : கர்ப்பிணிகள் எப்போது பயணம் செய்ய கூடாது? பயணிக்க உதவும் பாதுகாப்பு டிப்ஸ்... third trimester of pregnancy Image Source : Baby center

40 வது வாரம்

கருவானது முழுமையான வளர்ச்சி அடைந்து இருக்கும். 50 செ.மீ நீளம் இருக்கும். 3000 கிராம் எடை கொண்டிருக்கும். தோல் இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். உடல் உறுப்புகள் அனைத்தும் முழுமையாக வளர்ச்சி பெற்றிருக்கும். கை, கால் நகங்கள் சீராக இருக்கும். இரண்டு விதைகளும் விதைப்பையில் இறங்கி காணப்படும். குழந்தை பிறக்க ஏற்ற வாரம்… வாழ்த்துகள்...

2வது மற்றும் 3வது மும்மாதத்தில் கர்ப்பிணிகள் பராமரிக்க வேண்டியவை

எந்தவித தொற்று, நோய் தாக்குதல் இல்லாமல் இருக்க வேண்டும். இயல்பான கரு வளர்ச்சி முக்கியம். இயல்பான நாடி இருப்பது நல்லது. சரியான ரத்த அழுத்தம் அளவு இருக்க வேண்டும். சத்துள்ள உணவு வகைகளை சாப்பிடுவது முக்கியம். ரத்தத்தில் சரியான அளவு சர்க்கரை இருக்கும்படி செய்ய வேண்டும். மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். சரிவிகித உணவுகள் சாப்பிட வேண்டும். ஆரோக்கியம், மகிழ்ச்சியுடன் தாய் இருப்பது முக்கியம். போதுமான ஓய்வு இருப்பதும் நல்லது. இதையெல்லாம் சரியாக இருந்தால் ஆரோக்கியமான குழந்தை பிறப்பது நிச்சயம். இதையும் படிக்க : அறிவான குழந்தை பிறக்க தாய் என்னென்ன செய்ய வேண்டும்? ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா?  தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null