குழந்தையைப் பற்றி இம்மாதத்தில் ஓரளவுக்கு புரிந்து கொண்டிருப்பீர்கள். இந்த மாதத்தில் உங்கள் குழந்தையை இன்னும் கொஞ்சம் அதிகமாக கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கும். ஆம்… சில பிரச்னைகள் தலைதூக்கும். அதை சமாளிப்பது எப்படி எனவும் பார்க்கலாம்.
என்னென்ன பிரச்னைகள் வரலாம்?
- எக்களித்தல்.
- வாந்தி.
- வயிற்று வலி.
- தசை பிடித்தல்.
- பாலை விழுங்காமல் குழந்தை வாயிலே வைத்திருக்கும்.
- சளி பிடிக்கலாம்.
- லேசான இருமல்கூட வரலாம்.
என்னென்ன வளர்ச்சிகள் இருக்கும்?
- குழந்தைக்கு தலை கொஞ்சம் கொஞ்சமாக நிற்கும்.
- கைகளை நீட்டும்.
- தெரிந்தவர் குரலை கவனிக்கும்.
- 20 செ.மீ அளவுக்குப் பார்வை தெரிய ஆரம்பிக்கும்.
- அசைகின்ற பொருளை நன்கு உற்று கவனிக்கும்.
- கீச் குரலில் கத்தும்.
- அடிக்கடி குழந்தை சிரிக்கும்.
- ஒருவித ஈர்ப்புடன் மார்பு காம்புகளை பிடித்து பால் குடிக்கத் தொடங்கும்.
- இரவில் சற்று அதிக நேரம் தூங்க ஆரம்பிக்கும்.
- இரவில் ஒருமுறை மட்டும் எழுந்து குழந்தை அழுவும்.
- குழந்தைக்கு இரவும் பகலுக்குமான வேறுபாடு புரிய ஆரம்பிக்கும்.
- சிறுநீர் அடிக்கடி கழிப்பது கொஞ்சம் குறையும்.
- துணி, போர்வை தானாகவே இழுத்து மூடிக்கொள்ளும்.
இதையும் படிக்க: முதல் மாத குழந்தையைப் பராமரிக்க பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });
என்னென்ன செய்ய வேண்டும்?
- சற்று 25 செ.மீ தூரத்தில் நின்று உங்கள் குழந்தையிடம் பேசுங்கள். குழந்தை உங்களை நோக்கி பார்க்க ஆரம்பிக்கும். கீச் குரலிலும் கத்தலாம்.
- குழந்தை விழித்திருக்கும் போதெல்லாம் சின்ன சின்ன வார்த்தைகளை சொல்லி குழந்தையிடம் பேசுங்கள். குழந்தையும் அதை கவனிக்கும்.
- தடுப்பு மருந்தை போடுங்கள்.
- ஒரு நாளைக்கு 6 முறையாவது தாய்ப்பால் கொடுப்பது நல்லது.
- இரவு நேரங்களில் பால் தரும்போது, வெளிச்சம் இருக்க கூடாது. மங்கிய வெளிச்சம் இருக்கலாம்.
- இரவில் நாப்கின்களை அணிவதைக் குறைத்துக் கொள்ளலாம்.
- பெரிய கட்டிலில் குழந்தையைப் படுக்க வைக்கலாம்.
- தானாக குழந்தை போர்வையோ துணியோ மூடிக்கொள்ளும் என்பதால் மூச்சித்திணறல் வந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
இதையும் படிக்க: 3 வகையான பேபி மசாஜ் எண்ணெய் செய்வது எப்படி?
4 மாத குழந்தைகள்
- குழந்தையை நன்றாக புரிந்து கொண்டிருப்பீர்கள். நிறைய வளர்ச்சி மாற்றங்களை கண்டிருப்பீர்கள். இம்மாத கவனிப்பு முறைகளைப் பார்க்கலாம்.
- குழந்தையின் வளர்ச்சி
- சீரான இடைவெளியில் பால் குடித்தல்.
- இரவில் நீண்ட நேரம் தூங்குதல்.
- மகிழ்ச்சியான மாற்றங்கள் குழந்தையிடம் தெரியும்.
- குழந்தைக்கு கொஞ்சம் சிரிப்பும் பிரகாசமாக மாறும்.
- உணர்வுகளை அழுகை, உதட்டின் பிதுக்குதல் மூலம் வெளிப்படுத்தும்.
- விதவிதமான ஒலிகளை எழுப்பும்.
- அசைந்து கொண்டிருக்கும் பொருட்களை இழுக்கும். தொட ஆரம்பிக்கும்.
- கைத்தாங்கலாக தூக்குபவரை பிடித்துக்கொண்டு உட்கார முயற்சி செய்யும்.
- இல்லாத பல்லை கடிப்பது போல தாடையை ஆட்டும்.
- இசை எங்கேனும் ஒலித்தால் அதை கேட்கும்.
இதையும் படிக்க: கர்ப்பம் முதல் பிறப்பு வரை... பச்சிளம் குழந்தைகளின் மரணங்களைத் தடுப்பது எப்படி?
மிகவும் கவனிக்க வேண்டியவை
- இந்த மாதத்தில்தான் கை சூப்பத் தொடங்கும்.
- முதலில் விரல்களை வாயில் விட்டு எச்சிலால் நனைக்கும்.
- பின் அனைத்து விரல்களையும் வாயில் வைக்க முயற்சிக்கும்.
- மெத்தையில் புரள முயற்சி செய்யும்.
- தடுப்பு ஊசியை போட்டு விடுங்கள்
- விடுமுறை முடிந்து அலுவலகம் செல்ல வேண்டியோரால் தாய்ப்பால் குழந்தைக்கு அதிகமாக கிடைக்காமல் போகலாம்.
- மருத்துவரின் ஆலோசனைப்படி அவசியமான புட்டிப்பாலை பழக்கலாம். வேலைக்கு செல்லும் தாய்மார்கள் மட்டும்தான்.
- வீட்டில் இருப்பவர்கள் தாய்ப்பால் தருவதே மிக நல்லது.
- சில வீட்டில் 4-ம் மாதத்திலே திட உணவு தருவர். ஆனால், திட உணவு தர சரியான நேரம் இதுவல்ல.
- முடிந்தவரை தாம்பத்யம் தவிர்க்கலாம். அல்லது அளவுடன் இருக்கலாம்.
இதையும் படிக்க: குழந்தைக்கு 7 பாதிப்புகளை ஏற்படுத்தும் ரப்பர் நிப்பிள்… தீர்வு என்ன?
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர
இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
null
null