தாயுக்கு தேவையான 5 ஊட்டச்சத்துகள்… இதெல்லாம் உங்கள் உணவில் இருக்கிறதா?

தாயுக்கு தேவையான 5 ஊட்டச்சத்துகள்… இதெல்லாம் உங்கள் உணவில் இருக்கிறதா?

நமக்கெல்லாம் அதிகம் தெரிந்தது கால்சியம், விட்டமின்கள், புரோட்டீன் போன்றவை. இன்னும் நிறைய முக்கிய சத்துகள் உள்ளன. அவற்றையெல்லாம் நாம் கவனிக்க மறந்துவிட்டோம். 5 முக்கிய ஊட்டச்சத்துகள் இருக்கின்றன. அவை குழந்தையின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் அரணாக நிற்கின்றன. பெண்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும் துணையாக (Nutrition for Mothers) இருக்கின்றன. மனிதர்களாகிய அனைவருக்குமே மிகவும் தேவை. சரியான அளவில் இருக்க வேண்டியது அவசியம். அவற்றைப் பற்றி இங்கு பார்க்கலாம். குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் கவனியுங்கள். இந்த சத்துகள் அனைவருக்கும் முக்கியம்தான். இதனால் பல நோய்கள் வராமல் தடுக்கலாம்.

முக்கியமான 5 ஊட்டச்சத்துகள்

#1. தாமிரம் (Copper)

  • ஒருவருக்கு, ஒரு நாளைக்கு 900 மை.கி தாமிரச்சத்து தேவைப்படுகிறது.

உணவுகள்

  • சூரியகாந்தி விதை
  • முழு தானியங்கள்
  • ஆட்டு கறி
  • ஈரல்
  • முந்திரி
  • காளான்
  • உலர் பழங்கள்
cashews

எதற்கு தேவை?

  • எலும்பு உருவாக
  • ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாக
  • சீரான ரத்த ஓட்டம் நடைபெற
  • செல்களின் ஆற்றல் அதிகரிக்க
  • இரும்புச்சத்தை கிரகிக்க

தாமிரம் உடலில் குறைந்தால்…

  • ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.
  • எலும்பு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும்.

#2. மக்னீசியம் (Magnesium)

  • ஒரு ஆணுக்கு - 420 மி.கி
  • ஒரு பெண்ணுக்கு - 320 மி.கி

உணவுகள்

  • காளான்
  • கீரைகள்
  • கோழி கறி
  • இறைச்சி
  • பச்சைக் காய்கறிகள்
  • பாதாம்
  • வாழைப்பழம்
  • முழுத்தானியங்கள்
mushrooms for mothers

எதற்கு தேவை?

  • தசை மற்றும் நரம்பு மண்டலம் செயல்பட
  • இதயத்துடிப்பு சீராக இருக்க
  • எலும்பு உறுதியாக இருக்க
  • உடலில் 300 வகையான வேதி செயல்பாடுகள் நடக்க

மெக்னீசியம் உடலில் குறைந்தால்…

  • உயர் ரத்த அழுத்தம் சரியாக
  • இதய நோய்கள் வராமல் தடுக்க
  • எதிர்ப்பு சக்தி கிடைக்க
  • மனஅழுத்தம், பதற்றம் வராமல் இருக்க
  • தலைவலி வராமல் இருக்க
  • ஆஸ்டியோபொரோசிஸ் பாதிப்பு வராமல் இருக்க
இதையும் படிக்க: பெண்கள், குழந்தைகளுக்கு வரும் ரத்தசோகையை  தடுக்கும் உணவுகள்

#3. ஃபுளுரைட் (Fluoride)

  • ஒரு ஆணுக்கு - 3 மி.கி
  • ஒரு பெண்ணுக்கு - 4 மி.கி

உணவுகள்

  • முட்டைக்கோஸ்
  • கேரட்
  • பச்சைக் காய்கறிகள்
  • பூண்டு
  • மீன்
  • சில பற்பசைகளில் சிறிதளவு இருக்கும்.
carrots for mother

எதற்கு தேவை?

  • எலும்பு அடர்த்தி குறையாமல் இருக்க
  • நோய்த் தொற்று கிருமிகளுக்கு எதிராக செயல்பட
  • பற்சிதைவுகளைத் தடுக்க
  • பற்களைப் பாதுகாக்க
  • வெண்மையான பற்கள் இயற்கையாகவே கிடைக்க

ஃபுளூரைட் உடலில் குறைந்தால்…

  • பற்சிதைவுகள் ஏற்படும்.
  • எலும்பு உறுதி தன்மை இழந்துவிடும்.
  • முதுகெலும்பு வளைந்துவிடும்.
  • பார்வை குறைபாடு ஏற்படலாம்.
இதையும் படிக்க: ரத்தசோகையால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகள்...

#4. துத்தநாகம் (Zinc)

  • ஒரு ஆணுக்கு - 14 மி.கி
  • ஒரு பெண்ணுக்கு - 12 மி.கி
  • கர்ப்பிணிகளுக்கு - 27 மி.கி

உணவுகள்

  • கடல் உணவுகள்
  • இறைச்சி
  • பாதாம்
  • நிலக்கடலை
  • பால் பொருட்கள்
  • காளான்
  • சூரிய காந்தி விதை
  • கோதுமை
  • கீரை
greens for mothers

எதற்கு தேவை?

  • நோய் எதிர்ப்பு சக்திக்காக
  • இனப்பெருக்க மண்டலம் சீராக இருக்க
  • நரம்பு மண்டலம் நன்றாக வேலை செய்ய
  • ரத்த உறைவதற்கு துத்தநாகம் மிக மிக அவசியம்.

துத்தநாகம் உடலில் குறைந்தால்…

  • பார்வைக் குறைபாடு வரலாம்
  • சுவை உணராமல் போகலாம்.
  • வாசனை உணர்வதில் பிரச்னை வரலாம்.
  • அலர்ஜி வரும்.
  • வயிற்றுப்போக்கு இருக்கலாம்.
  • வாந்தி, தலைவலி ஏற்படலாம்.
இதையும் படிக்க: தாயாகத் திட்டமிடும் பெண்களுக்கு 10 டிப்ஸ் 

#5. செலீனியம் (Selenium)

  • ஒரு ஆணுக்கு - 55 மை.கி
  • கர்ப்பிணிக்கு - 60 மை.கி

உணவுகள்

  • சூரியகாந்தி விதை
  • மீன்
  • நண்டு
  • ஈரல்
  • முட்டை
  • கேழ்வரகு
  • காளான்
  • அனைத்து தானியங்கள்.
eggs for mothers

எதற்கு தேவை?

  • செல்கள் சேதம் அடையாமல் இருக்க
  • தைராய்டு செயல்பாடு ஒழுங்குபட
  • ஆண்களுக்கு விந்தணுக்கள் உற்பத்தியாக
  • ப்ராஸ்டேட், நுரையீரல், குடல் புற்றுநோய் வாய்ப்பு குறைக்க

செலீனியம் உடலில் குறைந்தால்…

  • தசைகள் தளர்வாகும்
  • இதயம் பெரிதாகும்.
  • நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும்.
இதையும் படிக்க: கர்ப்பக்கால சர்க்கரை நோயைத் தவிர்க்கும் உணவுகள் ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null