6+ மாத குழந்தைகளுக்கான 6 வகையான ஹோம்மேட் இன்ஸ்டன்ட் செர்லாக் பவுடர்

6+ மாத குழந்தைகளுக்கான 6 வகையான ஹோம்மேட் இன்ஸ்டன்ட் செர்லாக் பவுடர்

உடனடியாக குழந்தைக்கு உணவு ரெடியாக வேண்டுமா… வீட்டிலே செய்யலாம் ஹோம்மேட் இன்ஸ்டன்ட் செர்லாக் உணவுகள். இதற்கு வெறும் வெந்நீர் மட்டும் இருந்தால் போதும். சட்டென்று உணவு தயாராகிவிடும். பயணத்துக்கு சிறந்தது. இதை டிராவல் உணவுகள் எனவும் சொல்லலாம். ஆரோக்கியமான, சுவையான இன்ஸ்டன்ட் ஹோம்மேட் செர்லாக் விதவிதமாக 6 முறைகளில் செய்ய முடியும். இதோ உங்களுக்காக...

6 ஹோம்மேட் இன்ஸ்டன்ட் செர்லாக் ரெசிபி வகைகள்

#1. ஃபவ்வுட் ரைஸ் செர்லாக்

puffed rice cerelac for babies Image Source : 6PR

தேவையானவை

 • பொரி - 1 கப்
 • பொட்டுக்கடலை - ¼ கப்
 • வறுத்த பாதாம் - 8

செய்முறை

 • மிக்ஸியில் இந்த மூன்றையும் போட்டு அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
 • நன்கு பவுடராக அரைத்துக் கொள்ளுங்கள்.
 • அவ்வளவுதான் ஃபவ்வுட் ரைஸ் செர்லாக் ரெடி.
 • 6 வாரங்கள் வரை சேமித்து வைக்கலாம்.

ஃபவ்வுட் ரைஸ் செர்லாக் தயாரிப்பது எப்படி?

 • பவுலில் தேவையான பவுடரை போட்டு வெந்நீர் அல்லது ஃபார்முலா மில்க் கலந்து ஸ்பூனால் கலக்கவும்.
 • கட்டிகள் இல்லாமல் கலக்கியதும் 2-3 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடலாம்.
 • பிறகு, இளஞ்சூடாக குழந்தைக்கு கொடுக்கலாம்.
 • விருப்பப்பட்டால் ஆப்பிள் ப்யூரி அல்லது வாழைப்பழ ப்யூரியை சேர்த்துக் கொள்ளலாம்.
 • 6+ மாத குழந்தைகளுக்கு தரலாம்.
இதையும் படிக்க : குழந்தைகளுக்கான சத்துமாவு - ஹோம்மேட் செர்லாக்  தயாரிப்பது எப்படி?

#2. சம்பா கோதுமை செர்லாக்

wheat dalia cerelac for babies Image Source : Healthy Home Cafe

தேவையானவை

 • சம்பா கோதுமை- 1/2 கப்

செய்முறை

 • சம்பா கோதுமையை வாணலியில் போட்டு நன்றாக வறுத்துக் கொள்ளுங்கள்.
 • வறுத்த சம்பா கோதுமை தட்டில் போட்டு ஆற வையுங்கள்.
 • ஆறிய சம்பா கோதுமை மிக்ஸியில் போட்டு பவுடராக அரைத்துக்கொள்ள வேண்டும்.
 • 6 வாரங்கள் வரை சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

சம்பாகோதுமை செர்லாக் செய்வது எப்படி?

 • பவுலில் சம்பாகோதுமை செர்லாக் பவுடர் தேவையான அளவு போட்டு அதில் வெந்நீர் அல்லது ஃபார்முலா மில்க் ஊற்றி கலக்கவும்.
 • சுவைக்கு ஏதாவது ஒரு பழ ப்யூரியை சேர்த்துக் கொள்ளலாம்.
 • 6+ மாத குழந்தைக்கு தரலாம்.
இதையும் படிக்க : குழந்தையின் எடையை அதிகரிக்கும் நேந்திரம் பொடி செய்வது எப்படி?

#3. ஓட்ஸ் செர்லாக்

oats cerelac for babies Image Source : Daily Mail

தேவையானவை

 • ஓட்ஸ் - 1 கப்

செய்முறை

 • வாணலியில் ஓட்ஸை போட்டு நன்றாக வறுத்துக் கொள்ளுங்கள்.
 • வறுத்த ஓட்ஸை ஆற வைக்கவும்.
 • ஆறிய ஓட்ஸை பவுடராக அரைத்துக் கொள்ளுங்கள்.
 • சுத்தமான டப்பாவில் சேமித்து 6 வாரம் வரை பயன்படுத்தலாம்.

ஓட்ஸ் செர்லாக் செய்வது எப்படி?

 • ஓட்ஸ் செர்லாகை தேவையான அளவு பவுலில் போட்டு கொள்ளுங்கள். அதில் வெந்நீர் அல்லது ஃபார்முலா மில்க் கலந்து குழந்தைக்கு தரலாம்.
 • தேவையெனில் பழ ப்யூரியை கலந்து கொள்ளலாம்.
இதையும் படிக்க : குழந்தைகளுக்கான ஹோம்மேட் ஹார்லிக்ஸ் பவுடர் தயாரிப்பது எப்படி?

#4. ரைஸ் செர்லாக்

rice cerelac for babies Image Source : Cook for your life
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });

தேவையானவை

 • அரிசி - 1 கப்

செய்முறை

 • கல், மண் தூசி இல்லாமல் அரிசியை சுத்தம் செய்துக்கொள்ளுங்கள்.
 • தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவிக் கொள்ளுங்கள்.
 • பிறகு அரிசியை 1 மணி நேரம் நன்கு ஊறவைத்துக் கொள்ளுங்கள்.
 • ஊறவைத்த அரிசியை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி கொள்ளுங்கள்.
 • வடிகட்டியை அரிசியை ஒரு வெள்ளை துணியில் போட்டு உலர வையுங்கள்.
 • நன்கு உலர்ந்த அரிசியை வாணலியில் போட்டு நன்றாக வறுத்துக் கொள்ளுங்கள்.
 • மிதமான தீயில் வறுப்பது நல்லது.
 • வறுத்த அரிசியை மிக்ஸியில் போட்டு நன்றாக பவுடராக அரைத்துக்கொள்ளுங்கள்.
 • அவ்வளவுதான். ரைஸ் செர்லாக் ரெடி.
 • சுத்தமான டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
 • இந்த பவுடரை 6 வாரங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

ரைஸ் செர்லாக் செய்வது எப்படி?

 • பவுலில் தேவையான ரைஸ் செர்லாக் போட்டு அதில் வெந்நீரை ஊற்றி விட்டால் ரைஸ் செர்லாக் ரெடி.
 • விருப்பப்பட்ட பழ ப்யூரியை இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்க : வீட்டிலே செய்யலாம் ஹோம்மேட் ராகி பூஸ்ட் பவுடர்… 

#5. அவல் செர்லாக்....

poha cerelac for babies Image Source : Great British Chef

தேவையானவை

 • அவல் பாக்கெட் - 1
 • பனை வெல்லம் பவுடர் - 1 டீஸ்பூன் (தேவைப்பட்டால்)
 • வாழைப்பழ ப்யூரி - ¼ கப் (தேவைப்பட்டால்)
 • ஃபார்முலா மில்க் அல்லது வெந்நீர் - தேவையான அளவு

செய்முறை

 • அவலை வாணலியில் போட்டு நன்கு வறுத்துக் கொள்ளுங்கள்.
 • மிதமான தீயில் 5 நிமிடங்கள் வறுக்க வேண்டும்.
 • வறுத்த அவலை மிக்ஸியில் போட்டு பவுடராக அரைத்துக் கொள்ளுங்கள்.
 • ஃபார்முலா பால் அல்லது வெந்நீர் ஊற்றி, நன்கு கலந்து கொள்ளுங்கள்.
 • அவ்வளவுதான் அவல் செர்லாக் ரெடி.
 • 6 வாரங்கள் வரை சேமித்து வைத்துக்கொள்ளலாம்
 • தேவைப்பட்டால் பனை வெல்லம் பவுடர் அல்லது ஏதாவது ஒரு பழத்தின் கூழை இதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

குறிப்பு:

 • 6+ மாத குழந்தைகளுக்குகூட தரலாம்.
 • 9 மாத குழந்தைக்கு கீழ் இருந்தால் வாழைப்பழ ப்யூரி மட்டும் சேர்க்கலாம்.
 • 9 + மாத குழந்தைக்கு பனை வெல்லம் சேர்க்கலாம்.
 • குழந்தைக்கு பிடித்த பழ ப்யூரியை சேர்க்கலாம்.
 • பயணத்தில் வாழைப்பழ ப்யூரி செய்வது சுலபம்.
 • அவல் செர்லாக்கில், வாழைப்பழ ப்யூரி போட்டு வெந்நீர் அல்லது ஃபார்முலா பால் ஊற்றினால் குழந்தைக்கு சுவையான உணவு தயார்.
இதையும் படிக்க : ஹோம்மேட் ஹெல்த் டிரிங்க் பவுடர் செய்வது எப்படி?

#6. வீட் செர்லாக் மற்றும் வீட் பிஸ்கெட்

வீட் பிஸ்கெட்

wheat biscuit for babies Image Source : Recipes of My Art

தேவையானவை

 • கோதுமை மாவு - 1 கப்
 • வெண்ணெய் - ¼ கப்
 • ஃபார்முலா மில்க் - ¼ கப்
 • பனை வெல்லம் பவுடர் - ¼ கப்

செய்முறை

 • பனை வெல்லத்தை மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
 • ஒரு பவுலில் கோதுமை மாவு, பனை வெல்லம் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
 • வெண்ணெயை உருக்கி கொள்ளுங்கள்.
 • பவுலில் உள்ள கோதுமை மாவில் உருக்கிய வெண்ணெயை ஊற்றுங்கள்.
 • வெண்ணெயை ஊற்றியதும் நன்றாக கலக்கவும்.
 • பால் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளுங்கள்.
 • பட்டர் பேப்பரில் மாவை, கெட்டியாக தட்டி 2 நிமிடம் வையுங்கள்.
 • மெல்லிசான பட்டர் பேப்பர் ஷீட்டில் சப்பாத்தி போல மெல்லிசாக திரட்டி கொள்ளுங்கள்.
 • திரட்டிய சப்பாத்தியை, சதுரமாக கத்தியால் கட் செய்து கொள்ளுங்கள்.
 • அவனில் வைத்து பேக் செய்து கொள்ளுங்கள்.
 • சதுரமான பிஸ்கெட்கள் போல கிடைக்கும்.
 • அவ்வளவுதான் வீட் பிஸ்கெட் ரெடி.
 • 10 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைக்கு வீட் பிஸ்கெட் கொடுக்கலாம்.
இதையும் படிக்க : குழந்தைகளுக்கான ஹோம்மேட் நட்ஸ் பவுடர் செய்வது எப்படி? 

வீட் செர்லாக் பவுடர் தயாரிக்கும் முறை

 • வீட் செர்லாக் பிஸ்கெட்டுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
 • இந்த பிஸ்கெட்களை மிக்ஸியில் போட்டு நன்றாக பொடித்து வைத்துக்கொள்ளுங்கள்.
 • இன்ஸ்டன்ட் வீட் செர்லாக் பவுடர் ரெடி.
 • 6 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கலாம். செர்லாக்காக தயாரிக்க நினைத்தால் பனை வெல்லம் போட தேவையில்லை.
wheat cerelac for babies

வீட் செர்லாக் செய்வது எப்படி?

தேவையான வீட் செர்லாக் பவுடரை போட்டு, அதில் கொஞ்சம் வெந்நீர் சேர்த்து ஸ்பூனால் கலக்குங்கள். அவ்வளவுதான் சுவையான வீட் செர்லாக் ரெடி.

டிராவல் ஃபுட் - வீட் செர்லாக்

 • நீங்கள் பயணம் செய்யும்போது, இந்த வீட் செர்லாக் பொடியை டப்பாவில் போட்டு எடுத்துக்கொண்டு செல்லலாம்.
 • வெந்நீர் வாங்கி ஊற்றி, கலக்கி குழந்தைக்கு கொடுக்கலாம்.
 • சுத்தமான, சுவையான, ஹோம்மேட் உணவு பயணங்களிலும் குழந்தைக்கு கிடைக்கும்.
இதையும் படிக்க : ஹோம்மேட் டேட்ஸ் சிரப், டேட்ஸ் ப்யூரி செய்வது எப்படி?  ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null