6 மாத குழந்தைகளுக்கான உணவு அட்டவணை

6 மாத குழந்தைகளுக்கான உணவு அட்டவணை

பெரும்பாலான தாய்மார்களுக்கு தாய்ப்பாலுக்கு பிறகு குழந்தைக்கு (6 months Babies Food chart) என்ன தர வேண்டும் என்பதில் எப்போதும் குழப்பமே.

6 மாதத்துக்குள் உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பாலை விட சிறந்த உணவு எதுவும் இல்லை.

சில குழந்தைகள் 5 மாத முடிந்த உடனே திட உணவுக்குத் தயாராகி விடுவார்கள். ஆனால், திட உணவுக்கு குழந்தைகள் தயாரா என்பதைக் கண்டுபிடிப்பது முக்கியம்.

உங்கள் குழந்தை திட உணவுக்கு தயாரா என எப்படி கண்டுபிடிப்பது?

  • தாய்ப்பால் கொடுத்த பிறகு அழுது கொண்டு இருப்பது, கைகளை சூப்புவது.
  • தலை சரியாக நின்றுவிடுதல்.
  • உணவைப் பார்த்து சப்பு கொட்டுவது, உணவின் மீது ஆர்வம் காட்டுவது.
  • நல்ல, சுத்தமான ஸ்பூனை குழந்தையின் வாயில் வைத்துப் பாருங்கள். குழந்தையால் அந்த ஸ்பூனை சப்ப முடிகிறதா… பிடிக்க முடிகிறதா…

  • முதல் முறையாக குழந்தை திட உணவை சுவைத்து, தன் நாக்குக்கு புது சுவையை அறிமுகப்படுத்துவதால் குறைவான அளவிலிருந்து உணவைக் கொடுக்க தொடங்கலாம்.
  • யாருடைய துணையும் இல்லாமல் தானாக உட்காருவது.
  • ஒரே உணவைக் கொடுக்காமல் மாற்றி மாற்றிக் கொடுப்பதும் நல்லது.

 இதையும் படிக்க: உணவுகள் மூலம் தாய்ப்பாலை அதிகமாக சுரக்க வைப்பது எப்படி?

திட உணவு கொடுக்கும்போது நினைவில் வைக்க வேண்டியவை

  • பழங்களின் கூழ் (Fruit Purees) பெஸ்ட்.
  • முதல் முதலில் கொடுத்தால், ஒரு நாளைக்கு ஒரு ஸ்பூன் என ஆரம்பித்து படிபடியாக உணவின் அளவை அதிகரிக்கலாம்.
  • குழந்தையை கட்டாயப்படுத்தி உணவை ஊட்ட கூடாது.
  • குழந்தை உணவு வேண்டாம் எனக் கழுத்தை, முகத்தை திருப்பினால் உணவைக் கொடுப்பதை நிறுத்தி விட வேண்டும்.

introducing solid for babies

  • தாய்ப்பால் / ஃபார்முலா மில்க் காலையிலும் இரவு தூங்கும்போதும் கொடுக்கலாம்.
  • மதியம் 12 மற்றும் மாலை 4 மணிக்கு திட உணவுகளைக் கொடுக்கலாம்.
  • மதிய உணவு குழந்தைக்கு நல்ல சத்தான உணவாக இருப்பது மிகவும் நல்லது.
  • இரண்டு முறை திட உணவுக் கொடுத்தாலும் தேவையின் போதெல்லாம் தாய்ப்பால் கொடுப்பது நல்லது.
  • குழந்தைக்கு தயாரிக்கும் உணவு, குழந்தை சுவைக்கும்படி பக்குவமாக செய்வது நல்லது.
  • குழந்தைக்கு ஊட்டும்போது குழந்தையை மேலே உயர்த்தி வைத்துக் கொள்ளுங்கள். உணவை குழந்தைகள் பார்க்கட்டும்.
  • குழந்தை சாப்பிடுவதை நீங்கள் கவனியுங்கள். அவர்களுக்கு பிடிக்கிறதா, விழுங்க முடிகிறதா, புரை ஏறுகிறதா எனக் கவனிப்பது முக்கியம்.
  • உணவு ஊட்டும் போது விளையாட்டு காண்பிக்காமல், குழந்தையிடம் பேசியபடியே உணவை ஊட்டுங்கள்.
  • குழந்தை உணவைத் தொட முயற்சித்தால், தொடுவதற்கு அனுமதிக்கவும்.
  • குழந்தை கையில் உணவை பிடிக்க ஆர்வம் காட்டினால், நீங்கள் கைகளில் பிடித்தபடியே, குழந்தை உணவை வாயில் வைத்து சுவைக்க அனுமதிக்கவும்.

food chart for 6 month babies

  • முதல் முதலாக ஒரு உணவை கொடுத்தால் 3 நாள் வரை காத்திருந்து, மீண்டும் அந்த உணவை செய்து குழந்தைக்கு கொடுக்கலாம்.
  • உதாரணத்துக்கு, இன்று கேரட் கொடுத்தால் 3 நாள் கழித்து, குழந்தைக்கு ஒத்து கொள்கிறதா எனக் கவனித்த பிறகு மீண்டும் கொடுக்கலாம்.
  • குழந்தைக்கு உணவின் மூலம் அலர்ஜி வருகிறதா எனத் தெரிந்து கொள்ள, தொடக்கத்தில் ஒரு உணவை மட்டும் கொடுத்துப் பாருங்கள். பின்னர் கலவையான உணவுகளைக் கொடுக்கலாம்.

இதையும் படிக்க: குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் 15 உணவுகள்

அலர்ஜி… அறிகுறிகள்…

  • இருமல்
  • வயிற்று வலி
  • வாந்தி
  • அரிப்புகள்
  • சிவந்து போகுதல்
  • முகத்தில் வீக்கம்
  • மூச்சு விட சிரமம்

குழந்தைக்கு உணவு தரும்போது குழந்தையை நன்றாக கவனியுங்கள். அலர்ஜி எதுவும் தென்பட்டால் உடனே அந்த உணவை நிறுத்தி விடுங்கள். குழந்தை நல மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெற வேண்டும்.

இதையும் படிக்க: திட உணவு தொடர்பான 9 கேள்விகளும் பதில்களும்

fruit puree for 6 month babies

6 மாதத்தில் கொடுக்க கூடாத உணவுகள்

  • நிலக்கடலை
  • விதைகள்
  • முழு நட்ஸ்
  • முழு உலர்திராட்சை
  • ஆப்பிள் (கூழாக தரலாம்)
  • சாக்லேட்

பொதுவாக, குழந்தைகள் உணவை வேக வேகமாக சாப்பிட முயல்வார்கள். ஆனால், நீங்கள் மெதுவாக இடைவேளி விட்டு உணவை ஊட்டிவிடுங்கள். ஒவ்வொரு முறை ஊட்டும்போதும் வாயில் ஏற்கெனவே உணவு இருக்கிறதா எனப் பாருங்கள். வாயில் உணவு இருந்தால் அடுத்த உணவைக் கொடுக்க வேண்டாம்.

இதையும் படிக்க: 6 – 9 மாத குழந்தைகளுக்கான 15 கூழ் ரெசிபி வகைகள்

குழந்தைகளுக்கு சத்தான உணவை அறிமுகப்படுத்துங்கள். குழந்தையின் உடல்நலம் சிறக்கட்டும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null