காலை நேர உணவை சாப்பிட வைப்பதற்குள்ளே முடியலப்பா எனத் தாய்மார்கள் புலம்புகிறார்கள். புதுமையான முறையில், வித விதமாக தினமும் சத்துள்ள அதேசமயம் சுவையான காலை உணவாக கொடுத்தால் அன்றைய நாளே ஆரோக்கிய நாளாக மாறிவிடும்.
ஒரு நாளை ஆரோக்கியத்துடன் தொடங்க உதவுவது, காலை நேர உணவு. அதைக் குழந்தைகளே விரும்பி சாப்பிடும் அளவுக்கு சில சத்தான, சுவையான ரெசிபிகள் உள்ளன. இந்தப் பதிவில் நாம் 7 நாளைக்கும் 7 வகையான புதுமையான ரெசிபிகளை பார்க்க இருக்கிறோம்.
1 வயது + குழந்தைகளுக்கு 7 வகையான சத்துள்ள ரெசிபி (7 Healthy Breakfast Ideas for Kids in Tamil)
#1. காராமணி இனிப்பு கொழுக்கட்டை
தேவையானவை
வறுத்து, அரைத்த அரிசி மாவு - 1 கப்
காராமணி - ½ கப்
துருவிய தேங்காய் - ½ கப்
வெல்லம் - ½ கப்
ஏலத்தூள் - ½ டீஸ்பூன்
நெய் - சிறிதளவு
செய்முறை
காராமணியை வறுத்து சிறிதளவு நீர் ஊற்றி வேக வைக்கவும்.
வெல்லத்தை, 2 கப் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும்.
வடிகட்டி வெல்ல கரைசலில் துருவிய தேங்காய், நெய், காராமணி, ஏலத்தூள், அரிசி மாவு போட்டு பிசையவும்.
சின்ன சின்ன உருண்டைகளாக பிடித்து, அதை சின்ன சின்ன வட்டங்களாக தட்டிக் கொள்ளவும்.
இதை நெய் தடவிய தட்டில் வைத்து ஆவியில் வேக வைக்கவும்.
மிக மிக ஆரோக்கியமான கொழுக்கட்டை தயார்.
குறிப்பு : 1 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொடுத்தால் வேக வைத்த காராமணியை லேசாக மசித்துக் கொள்ளுங்கள்.
பலன்கள்
காலை உணவே போஷாக்கு நிறைந்ததாக மாறிவிடும்.
இரும்புச்சத்து கிடைக்கும்.
புரதம் சத்துகள் அதிகம்.
Image source : Trip Advisor
#2.வாழைப்பழ சப்பாத்தி
தேவையானவை
வாழைப்பழம் - 2-3
கோதுமை மாவு - 3 கப்
காய்ச்சிய பால் - 1 கப்
பொடித்த சர்க்கரை - 2 டீஸ்பூன்
எண்ணெய் - சிறிதளவு
செய்முறை
வாழைப்பழத்தை உரித்து, நறுக்கி அதனுடன் தேவையான பால், சர்க்கரை சேர்த்து அரைக்கவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு போட்டு அதில் அரைத்து வைத்த வாழைப்பழ கூழ் போடவும்.
தேவைப்பட்டால் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போல பிசையவும்.
சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல திரட்ட வேண்டும்.
சூடான தவாவில் போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
சுவையான வாழைப்பழ சப்பாத்தி தயார்.
குறிப்பு: 1 வயது + குழந்தைகளுக்கு, சர்க்கரை சேர்க்கலாம். ஒரு வயது கீழ் உள்ள குழந்தைகளுக்கு சர்க்கரை சேர்க்க வேண்டாம்.
9+ மாத குழந்தைகள் முதல் இதை செய்து கொடுக்கலாம்.
பலன்கள்
பொட்டாசியம் சத்து அதிகம்.
காலை நேர டிபனாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
உடல் எடை அதிகரிக்கவும் உதவும்.
நீண்ட நேரம் பசி தாங்கும்.
இனிப்பு சுவை உள்ளதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.
இதையும் படிக்க: குழந்தைகளுக்கு ஏற்ற மதிய உணவு… நம் ஊர் பாரம்பர்ய வகை சாதம் ரெசிபி...
#3.கிரீன் தோசை
தேவையானவை
பச்சைப்பயறு - 1 கப்
சின்ன வெங்காயம் - 5
காய்ந்த மிளகாய் - 2
பூண்டு - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
முந்திரி - 3
உப்பு - சிறிதளவு
செய்முறை
பச்சைப்பயறை இரவே தண்ணீரில் ஊறவைத்து விடவேண்டும்.
காலையில் ஊறவைத்த பச்சைப்பயறை மிக்ஸியில் போட்டு அதனுடன் மேற்சொன்ன அனைத்தையும் போட்டு, சிறிது உப்பு போட்டு அரைக்கவும்.
தோசை மாவு பதத்துக்கு மாவை கரைத்துக்கொள்ளவும்.
சூடான தவாவில், மாவை ஊற்றி இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
தக்காளி சட்னி, வெங்காய சட்னியுடன் பொருத்தமாக இருக்கும்.
பலன்கள்
புரதம் மற்றும் நுண்ணூட்ட சத்துகள் அதிகமாக உள்ளன.
வயிற்றுக்கு நல்லது.
காலை நேர போஷாக்கான உணவாக அமையும்.
தேவையான எனர்ஜி கிடைக்கும்.
இதையும் படிக்க: குக்கரில் செய்யக்கூடிய 3 வகை ஹோம்மேட் பிஸ்கெட் ரெசிபி...
Image source : Sanjeev kapoor
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });
#4. ஆப்பம்
தேவையானவை
பச்சரிசி - 2 கப்
புழுங்கல் அரிசி - 2 கப்
தேங்காய் பால் - 2 கப்
இந்துப்பு - சிறிதளவு
ஃப்ரூட் சால்ட் - ஒரு சிட்டிகை
செய்முறை
பச்சரிசி, புழுங்கல் அரிசி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
இந்த அரிசியை நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
உப்பு, சிறிதளவே மோர் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
மறுநாள் காலையில் தேவையான தேங்காய்ப் பால் ஊற்றி, மாவுடன் சேர்த்து, ஃப்ரூட் சால்ட் சேர்த்து மாவாக கரைக்கவும்.
ஆப்ப சட்டியில் எண்ணெய் விட்டு, ஆப்பமாக சுட்டு வேக விடவும்.
தேங்காய்ப்பாலுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
தேங்காய்ப் பாலில் பனை வெல்லம் கலந்து, ஒரு சிட்டிகை ஏலத்தூள் கலக்கலாம்.
பலன்கள்
ஆரோக்கியமான நாளை உருவாக்கிடும்.
செரிமானமாவது எளிது.
வயிறு, குடலுக்கு நல்லது.
வயிற்று, வாய் புண்களை குணப்படுத்தும்.
#5. ரவை புட்டு
தேவையானவை
ரவை - 3 கப்
தேங்காய்த் துருவல் - 2 கப்
வாழைப்பழம் - 2
நாட்டு சர்க்கரை - தேவையான அளவு
உப்பு - சிறிதளவு
செய்முறை
ரவையை அகலமான பாத்திரத்தில் போடவும்.
கொஞ்சம் சூடான நீர் தெளித்து ஈரப்பதத்துடன் பிசைந்து கொள்ளவும்.
புட்டுக் குழலில் தேங்காய் துருவல் கொஞ்சம் பிசைந்த ரவை மீண்டும் தேங்காய் துருவல் என நிரப்பி வேக வைக்கவும்.
வெந்ததும் வாழைப்பழம், நாட்டு சர்க்கரை போட்டு பிசைந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
பலன்கள்
ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவு
காலை உணவாக கொடுக்க சிறந்தது.
இதையும் படிக்க: டைம் சேவிங் முறையில் குழந்தைகளை அசத்தும் 5 வகையான அல்வா ரெசிபி…
#6.கவுனி அரிசி சத்து கஞ்சி
தேவையானவை
கவுனி அரிசி - ½ கப்
காய்ச்சிய பால் - 1 கப்
நாட்டு சர்க்கரை - தேவையான அளவு
தேங்காய்ப் பால் - அரை கப்
நட்ஸ் பவுடர் - ஒரு டீஸ்பூன்
முந்திரி, திராட்சை, பாதாம் - தேவையான அளவு
ஏலப்பொடி - 1 சிட்டிகை
நெய் - சிறிதளவு
செய்முறை
கவுனி அரிசியை இரவு முழுவதும் ஊறவிடவும்.
காலையில், குக்கரில் 3 கப் நீர் ஊற்றி, கவுனி அரிசி போட்டு 15 நிமிடங்கள் வேக வைக்கவும்.
நன்கு வெந்த கவுனி அரிசியை, ஆறிய பின் மிக்ஸியில் போட்டு கொர கொரவென (ஓன்னும் பாதியுமாக) அரைக்கவும்.
அரைத்ததை அடுப்பில் ஏற்றி ஒரு கப் பால், அரை கப் தேங்காய் பால் ஊற்றி நாட்டு சர்க்கரை சேர்க்கவும்.
நட்ஸ் பவுடரும் சேர்த்துக் கலக்கவும்.
5 நிமிடங்கள் வேக விடவும். அவ்வப்போது கிளறவும்.
சிறிது நெய்யில் நட்ஸ் வறுத்து, ஏலப்பொடி சேர்த்து இறக்கவும்.
பலன்கள்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துகள் கிடைக்கும்.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு நீண்ட நேரம் பசிதாங்கும்.
கவுனி அரிசியில் உள்ள சத்துகள், புற்றுநோயைத் தடுக்கும்.
Image source : Raks kitchen
#7. ராகி கீரை அடை
தேவையானவை
முருங்கைக்கீரை - 1 கப்
ராகி மாவு - 2 கப்
தோசை மாவு - 1 கரண்டி
மிளகு தூள் - ½ டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்
கேரட் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - சிறிதளவு.
செய்முறை
முருங்கைக்கீரை சுத்தம் செய்து நன்கு அலசவும்.
லேசாக எண்ணெய் விட்டு வதக்கி கொள்ளவும்.
அகலமான பாத்திரத்தில் எண்ணெயை தவிர அனைத்தையும் கொட்டி கெட்டியான மாவு பதத்துக்குத் தயாரிக்கவும்.
சூடான தவாவில் அடைகளாக தட்டி, இருபுறமும் எண்ணெய் விட்டு வேக விடவேண்டும்.
இதற்கு தேங்காய் சட்னி, வெங்காய சட்னி நன்றாக இருக்கும்.
பலன்கள்
இரும்புச்சத்து உள்ளது.
ரத்தசோகை நீங்கும்.
எலும்பு, பல் வளர்ச்சிக்கு உதவும்.
சருமத்துக்கு நல்லது.
பார்வைத்திறன் மேம்படும்.
இதையும் படிக்க: குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தைத் தரும் விதவிதமான துவையல் ரெசிபி
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர
இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
null
null