குழந்தைகள் உள்ள வீட்டில் இருக்க வேண்டிய 7 முக்கியமான வீட்டு வைத்தியம்

குழந்தைகள் உள்ள வீட்டில் இருக்க வேண்டிய 7 முக்கியமான வீட்டு வைத்தியம்

ஐந்து நிமிடங்களிலே தயாரிக்க கூடிய எளிமையான வீட்டு வைத்தியங்களைத் தெரிந்து கொண்டால் குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய உடல்நல பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியத்திலே தீர்வு காணலாம். வீட்டு கிச்சனில் உள்ள பொருட்களை வைத்தே நீங்கள் உடனடியாக மருந்து தயாரித்து விடலாம். குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கு இந்த வைத்தியம் பொருந்தும்.

ஒவ்வொரு தாயும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய 7 வீட்டு வைத்தியங்கள்

#1. செரிமான பிரச்னையை விரட்டும் தேன் இஞ்சி

தேவையானவை

இஞ்சி - 1 கப் தேன் - 2 கப்

செய்முறை

தோல் சீவிய இஞ்சியைக் கழுவிக் கொள்ளவும். வட்டமாக அரிந்து கொள்ளவும். வேகவைத்து வடிக்கட்டித் தேனில் ஊறப் போடுங்கள். 10-12 நாட்கள் கழித்து, சாப்பிடலாம். 1 வயது + குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

எதற்கு நல்லது?

அஜீரணம், சளி தொல்லை, இருமல், நெஞ்சு எரிச்சல் ஆகியவற்றைப் போக்கும். இதையும் படிக்க: குழந்தையின் வயிறு வலியை நீக்கும் வீட்டு வைத்திய முறைகள்...

#2. ஆஸ்துமாவைப் போக்கும் இஞ்சி டிகாஷன்

home remedies for asthma Image Source : Liberoportal

தேவையானவை

இஞ்சி சாறு - 20 மில்லி தேன் - 20 மில்லி எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் - அரை டம்ளர்

செய்முறை

தண்ணீருடன் இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, தேனுடன் கலந்தால் இஞ்சி கஷாயம் தயார். இதை சூடு செய்ய வேண்டாம்.

எதற்கு நல்லது?

சளி, இருமல், ஆஸ்துமா, செரிமான பிரச்னை, வயிற்று வலி ஆகிய பிரச்னைகளுக்கு நல்லது. இதையும் படிக்க: 0 - 3+ குழந்தைகளுக்கு ஏற்படும் சளியை நீக்கும் வீட்டு வைத்தியம்...

#3. சளி, இருமலை விரட்டும் துளசி மருந்து

தேவையானவை

துளசி - ஒரு கைப்பிடி அளவு மிளகு - 10

செய்முறை

இரண்டையும் சேர்த்து நன்கு இடித்து அரைத்து வைத்துக் கொள்ளவும். 1 வயது + குழந்தைகளுக்கு சிறிய நெல்லிக்காய் அளவு கொடுக்கலாம். 8 + மாத குழந்தைக்கு, பட்டாணி அளவு கொடுக்கலாம்.

எதற்கு நல்லது?

சளி, இருமலை விரட்டும். இதையும் படிக்க: குழந்தைக்கு உண்டாகும் காய்ச்சலுக்கான 10 வீட்டு வைத்தியம்...

#4. சளி பிரச்னைகளைப் போக்கும் கற்பூரவல்லி மருந்து

home remedies for cold Image Source : Pinterest

தேவையானவை

கற்பூரவல்லி - 8 மிளகு - 10

செய்முறை

இரண்டையும் சேர்த்து நன்கு இடித்து, பேஸ்ட் போல வைத்துக் கொள்ளவும். குழந்தைகளுக்கு சிறிய நெல்லிக்காய் அளவு கொடுக்கலாம். 8 + மாத குழந்தைக்கு, பட்டாணி அளவு கொடுக்கலாம்.

எதற்கு நல்லது?

சளி தொடர்பான அனைத்துப் பிரச்னைகளையும் விரட்டும். இதையும் படிக்க: பல நோய்கள் வராமல் தடுக்கும் ஒரே ஒரு மருந்து… இது நம் பாரம்பர்ய பொக்கிஷம்...

#5. இருமலைப் போக்கும் இனிப்பு மிளகு தேன்

தேவையானவை

மிளகு - சிறிதளவு தேன் - தேவையான அளவு

செய்முறை

மிளகை இடித்துப் பொடியாக்கி, தேனில் ஊற வைத்து சாப்பிட வேண்டும். அவ்வப்போது ஃப்ரெஷாக செய்து கொள்வது நல்லது.

எதற்கு நல்லது?

இருமல், சளி நீங்கும்.
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });

#6. காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து துளசி கஷாயம்

home remedies for fever Image Source : Youtube

தேவையானவை

தண்ணீர் - 4 டம்ளர் துளசி - 1 கைப்பிடி மிளகு - 3 கருப்பட்டி - தேவையான அளவு

செய்முறை

சூடான நீரில் அனைத்தையும் போட்டு கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்ததும் வடிகட்டி இளஞ்சூடாகப் பருகலாம்.

எதற்கு நல்லது?

காய்ச்சல் வராமல் தடுக்கும். காய்ச்சலைப் போக்கும். சளி பிரச்னையை நீக்க சிறந்தது. இதையும் படிக்க: குழந்தைகளுக்கான பல் வலியை நீக்கும் வீட்டு வைத்திய முறைகள்…

#7. வயிற்றுப்போக்கை நிறுத்தும் கொய்யா கஷாயம்

தேவையானவை

கொய்யா இலைகள் - 5 தண்ணீர் - 2-3 டம்ளர்

செய்முறை

2-3 டம்ளர் தண்ணீரில் கொய்யா இலைகளைப் போட்டு, கொதித்ததும் சிறிது நேரம் கழித்து நிறுத்திவிடுங்கள். சூடு ஆறிய பின் வடிகட்டிக் குடிக்க வயிற்றுப்போக்கு நிற்கும்.

எதற்கு நல்லது?

வயிற்றுப்போக்கை நிறுத்தும். உடலுக்கு வலிமை தரும். புத்துணர்ச்சி அளிக்கும். இதையும் படிக்க: கசப்பு இல்லாத 5 இனிப்பான சிரப்பால் தீரும் மலச்சிக்கல் பிரச்னை... ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null