9 மற்றும் 10 மாத குழந்தையின் வளர்ச்சியும் பராமரிப்பு முறைகளும்

9 மற்றும் 10 மாத குழந்தையின் வளர்ச்சியும் பராமரிப்பு முறைகளும்

குழந்தைகள் வளர்ந்து கொண்டு இருக்கிறார்கள். 9 மற்றும் 10 மாத குழந்தைகளின் வளர்ச்சி எப்படி இருக்கும்? அவர்களின் செய்கைகள் என்னென்ன? அவர்களைப் புரிந்து கொள்வது எப்படி? அவர்களின் பராமரிப்பு முறைகளைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

9 மாத குழந்தைகள்…

உங்கள் குழந்தையின் பார்வைத் திறன் கூர்மையாக இருக்கும். தனக்குப் பழக்கமானவர்களை நன்றாக அடையாளம் தெரியும். தனக்குப் பிடித்தமானதை எல்லாம் சரியாக கண்டுபிடிப்பார்கள்.. 15 அடி தூரத்தில் உள்ள பொருட்களை கூட குழந்தை நன்றாகப் பார்க்கும். பொருட்களை எல்லாம் எடுத்து ஆராய்ச்சி செய்யத் தொடங்குவார்கள். இந்தக் காலத்தில் பொருட்களை எல்லாம் வாயில் வைப்பார்கள். எனவே கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். குழந்தைகள் தங்களுக்கு பிடித்தவர் மீது, நெருக்கமாக இருப்பார்கள். பாசமாக கொஞ்சுவார்கள். அம்மா போன்ற அதிகமாக குழந்தையுடன் இருப்பவர்களை விட்டு குழந்தைகள் அதிக நேரம் பிரிந்து இருக்க மாட்டார்கள். குழந்தைக்கு பிடித்தமானவர்கள் தள்ளி இருந்தால் அழுது, அடம் செய்வார்கள். தாய், தந்தை தன்னை விட்டு கடைக்கு சென்றால் அழுது, ஆர்பாட்டம் செய்ய தொடங்கலாம். ஏனெனில் இந்தக் காலத்தில்தான் குழந்தைகள் தன் அம்மா, அப்பாவை நன்கு அறிந்து வைத்திருப்பார்கள். அழுது, அடம் செய்யும் குழந்தைகளை அடிக்க வேண்டாம். இந்தக் காலத்தில் குழந்தைகள் தன் அப்பா, அம்மா கூடவே இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும். சும்மா… 20 நிமிடம் எங்கேயாவது ஒளிந்திருந்து பின் குழந்தை முன் தோன்றி குழந்தைக்கு நம்பிக்கை செலுத்துங்கள். இதனால் குழந்தைகள் தன் அப்பா, அம்மா அருகேதான் இருக்கின்றனர் என நம்புவார்கள். நம்பகமானவர்களுடன் குழந்தையை விளையாட விடுங்கள். அடிக்கடி டாட்டா காண்பித்து வெளியே செல்லாதீர்கள். இதனால் குழந்தை தன்னை விட்டு போகிறார்கள் என அழத் தொடங்கும். குழந்தைக்கு ‘ஃபிங்கர் ஃபுட்ஸ்’ செய்து கொடுங்கள். மென்மையான உணவுகளைக் கடிக்க கொடுக்கலாம். குழந்தை அதை தன் ஈறுகளால் சப்பி, கடித்து சாப்பிட உதவியாக இருக்கும். குழந்தை தன் விரல்களால் தானே உணவு எடுத்து, கடித்து சாப்பிடும்படி சொல்லி கொடுங்கள். தாய்மார்களும் இந்தக் காலத்தில் உடற்பயிற்சி செய்து தங்களது உடலை பராமரித்துக் கொள்ளுங்கள். பழங்கள், கீரைகள், காய்கறிகள் என சத்துள்ள உணவுகளை சாப்பிடுங்கள். இதையும் படிக்க: குழந்தையின் காது கேட்கும் திறனையும் பேசும் திறனையும் அறிவது எப்படி?
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });
babies growth

10 மாத குழந்தைகள்...

உங்கள் குழந்தையை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். தட்டுத் தடுமாறி எழுந்து தானாக நடக்க முயற்சி செய்வார்கள். நீங்கள் அருகிலே இருப்பது நல்லது. மழலை வார்த்தைகளால் உளறுவார்கள். வீட்டில் கிடக்கும் காலணிகளை அணிய ஆசைப்படுவார்கள். அம்மாவின் கைகளில் உள்ள வளையலை எடுக்க ஆசைப்படுவார்கள். குழந்தையின் சுட்டித்தனம் அதிகமாகும். விளையாட்டும் அதிகமாகும். இதனால் சாப்பிட வைப்பது கடினமாக இருக்கும். வேணும், வேண்டாம் போன்ற வார்த்தைகளை சொல்லிப் பழக்குங்கள். தினமும் 3-4 வேளை திட உணவுகளைக் கொடுத்துப் பழக்குங்கள். உணவை மென்று திண்ண வேண்டும் எனச் சொல்லி கொடுங்கள். குழந்தையும் இந்தக் காலத்தில் நன்கு கற்றுக் கொள்வார்கள். வேக வைத்த காய்கறிகளை குழந்தை கையில் கொடுத்து சாப்பிட கொடுக்கலாம். அதுபோல தோல் நீக்கி பழங்களை சாப்பிட கொடுங்கள். வீட்டு பலகாரங்களை செய்து தரலாம். வேகவைத்த பயறுகளை சாப்பிட கொடுக்கலாம். ஆப்பிள், மாம்பழம், வாழைப்பழம் போன்றவற்றை நறுக்கி சாப்பிட கொடுக்கலாம். குழந்தையை வீட்டில் செருப்பு, ஷூ இல்லாமல் நடக்க வைக்கலாம். வெளி இடங்களில் செருப்பு, ஷூ அணிவித்து நடக்க வைக்கலாம். முட்டி விளையாடும் பழக்கம் வரலாம். கவனம்… கூர்மையான இடங்களைத் தவிர்க்கலாம். எங்கேயாவது வேகமாக முட்டி அடிபட்டு விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பிடிவாதம் பிடிக்கத் தொடங்குவார்கள். தனக்கு பிடித்தது வேண்டும் என அடம் செய்வார்கள்; அழுவார்கள். சில நாட்கள் வரை இந்தப் பழக்கம் அதிகமாக இருக் கும். பின்னர் கொஞ்ச கொஞ்சமாக குறையும். நிறைய பொம்மைகளை விரும்புவார்கள். பாதுகாப்பான பொம்மைகளை குழந்தைக்கு வாங்கி கொடுக்கலாம். இந்த மாதத்தில் நீங்கள் குழந்தையுடன் அதிகமாக விளையாட வேண்டியது மிக அவசியம். குழந்தைகளும் நீங்கள் விளையாட வேண்டும் என விரும்புவார்கள். இதையும் படிக்க: 0 - 5 வயது குழந்தைகளின் மூளை வளர்ச்சியும் அவர்கள் கடக்க வேண்டிய மைல்கற்களும் ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null