1-2 வயதுக்குள் உள்ள குழந்தைகளின் வளர்ச்சி நிலை தெரியுமா?

1-2 வயதுக்குள் உள்ள குழந்தைகளின் வளர்ச்சி நிலை தெரியுமா?

ஒரு வயது முடிந்தாகிவிட்டது. இனி குழந்தையின் வளர்ச்சி எப்படி இருக்கும். ஒவ்வொரு மாதமும் என்னென்ன வளர்ச்சி இருக்கும். என்னென்ன நடத்தைகளைக் குழந்தைகள் செய்வார்கள் என்பதை விளக்கமாகத் தெரிந்து கொள்ளலாம்.

1 வயது + குழந்தைகளுக்கான வளர்ச்சி...

13 வது மாதம்

உடலை முன்னோக்கி குனிந்து, வளைந்து கீழே உள்ள பொருட்களை எடுப்பார்கள். குழந்தைகள் இந்த மாதத்தில் குட்டிக்கரணம் அடிக்கத் தொடங்குவார்கள்.

14 வது மாதம்

இந்த மாதத்தில் தன் கைவிரல்களால் தானே சாப்பிடும் பழக்கத்தை மேற்கொள்வார்கள். மற்றவர்கள் பேசுவதைப் போல பேசி நடிப்பார்கள். பெற்றோர் இடும் கட்டளையை செய்வார்கள். டப்பாகளை திறந்து, மூடுவது, பொம்மைகளைப் பிரித்து எடுப்பது எனத் தொடர்ந்து எதையாவது செய்வார்கள்.

15 வது மாதம்

பந்து வைத்து விளையாடுவார்கள். பென்சில், பேனா வைத்துக் கிறுக்குவார்கள். அடிக்கடி வேண்டாம் எனச் சொல்வார்கள். உஷ் என்றெல்லாம் சத்தம் போட தொடங்குவார்கள்.

16 வது மாதம்

பிடித்த பொம்மைகளுடன் அப்படியே ஒன்றி போவார்கள். தன்னிடம் உள்ள புத்தகத்தை புரட்டி புரட்டி பார்ப்பார்கள். அடிக்கடி பிடிவாதம் பிடிக்கலாம். சோஃபா, கட்டிலில் தானே ஏறி, இறங்கி குதிப்பார்கள். இதையும் படிக்க: கர்ப்பக்காலத்தில் கட்டாயமாக சாப்பிட கூடாத 13 வகை உணவுகள்

17 வது மாதம்

4-5 வார்த்தைகள் வரை இணைத்துப் பேசுவார்கள். மூன்று கால் சைக்கிளில் விளையாட ஆசைப்படுவார்கள். தான் எப்படி பால், உணவு சாப்பிடுவது போல தன் பொம்மைகளுக்கும் உணவு ஊட்டிவிடுவார்கள். பிடித்தமான பாடல்களை முனுமுனுப்பார்கள். நடனம் ஆடுவார்கள். காலால் எதையாவது எட்டி உதைப்பார்கள்.

18 வது மாதம்

பேப்பர், புக் என எதையாவது எடுத்துக்கொண்டு படிக்கத் தொடங்குவார்கள். எதையாவது கிறுக்கி கொண்டு இருப்பதை, அனைவரிடமும் காண்பித்துக் கொண்டிருப்பார்கள். தள்ளிவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள். கொஞ்சம் சுட்டித்தனம் அதிகமாக இருக்கும். மலம் வருகிறது என்கிறதைத் தெளிவாக சொல்ல தெரியும். இதையும் படிக்க: கர்ப்பிணிகள் எப்போது பயணம் செய்ய கூடாது? பயணிக்க உதவும் பாதுகாப்பு டிப்ஸ்...
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });
1 year above child growth

19 வது மாதம்

வீட்டை விட்டு வெளியில் சென்று விளையாடுவார்கள். மற்றவர்களின் பெயரை மாற்றி கூப்பிட்டால், சரியாக கண்டுபிடித்து ‘இல்லை’. இவரது பெயர் இதுதான் என்று சொல்லும் அளவுக்கு மூளை வளர்ச்சி பெற்றிருக்கும். படங்களில் உள்ள விலங்குகளை அடையாளம் கண்டுகொள்வார்கள்.

20 வது மாதம்

தங்களது ஆடையை தானாக கழற்றி மாட்டுவார்கள். தனக்கு பிடித்த ஆடைகளை போட வேண்டும் என விரும்புவார்கள். அடம் செய்வார்கள். 6-10 வார்த்தைகளை தினந்தோறும் புதிதாக கற்றுக் கொள்வார்கள். மற்றவர்கள் துணையோடு அல்லது மாடி கைப்பிடியை பிடித்துக் கொண்டு படியேறுவார்கள். அந்தரங்க பகுதிகளை அடிக்கடி வெளியே காண்பிப்பார்கள். கண், காது, மூக்கு, வாய் என அனைத்து உறுப்புகளுக்கும் சரியாகப் பெயரை சொல்லி கூறும் திறமை உண்டு.

21 வது மாதம்

பொம்மைகளை சரியான இடத்தில் அடுக்கி வைப்பார்கள். பொம்மைகள் இல்லையென்றால் தேடவும் ஆரம்பிப்பார்கள். பயம் இல்லாமல் படியில் ஏறுவது, இறங்குவது எனச் செய்வார்கள். இதையும் படிக்க: கர்ப்பக்காலத்தில் வரக்கூடிய உடல்நல பிரச்னைகளும் தீர்வுகளும்...

22 வது மாதம்

இந்த மாதத்தில் அறிவாற்றல் அதிகமாகவே இருக்கும். பெரியவர்களின் கட்டளைகளை சரியாக புரிந்து கொள்வார்கள். 2-3 கட்டளைகளை ஒன்றாக சொன்னாலும், புரிந்து கொள்ளும் திறமை இருக்கும். பொம்மையின் பேட்டரி மாட்டுவது, பொம்மைகளை செட் செய்வது எனச் சரியாக செய்வார்கள்.

23 வது மாதம்

நீண்ட வார்த்தைகளை பேசுதல். கதவு, ஜன்னல்களை திறக்க கற்றுக் கொள்வார்கள். தன் வயதுள்ள குழந்தைகளுடன் விளையாட தொடங்குவார்கள். ‘ஏன்’ என்ற கேள்வியை அடிக்கடி கேட்பார்கள். உங்களது கட்டளைகளுக்கெல்லாம் ஏன் என்று கேட்பார்கள்.

24 வது மாதம்

2 அல்லது 3 வாக்கியங்களைத் தொடர்ந்து பேசுவார்கள். ஆண், பெண் வித்தியாசத்தை உணர்ந்து கொள்வார்கள். குறிப்பாக அந்தரங்க பகுதியின் வித்தியாசத்தை உணர்ந்து கொண்டு கேள்வி கேட்பார்கள். கட்டிலில் இருந்து குதிப்பது, படியிலிருந்து குதிப்பது போன்றதை செய்வார்கள். இதையும் படிக்க: அறிவான குழந்தை பிறக்க தாய் என்னென்ன செய்ய வேண்டும்? ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா?  தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null