எந்தெந்த உணவுகளால் குழந்தைக்கு அலர்ஜி ஏற்படுகிறது?

எந்தெந்த உணவுகளால் குழந்தைக்கு அலர்ஜி ஏற்படுகிறது?

எல்லாக் குழந்தைகளுக்கும் எல்லா உணவுகளும் ஒத்துப்போவதில்லை. சில குழந்தைகளுக்கு சில உணவுகளால் அலர்ஜி ஏற்படுகிறது. இதை ‘ஒவ்வாமை’ என்று சொல்கின்றனர். இந்த ஒவ்வாமையால் பல உபாதைகள் ஏற்படுகின்றன. இந்த அலர்ஜி பிரச்னையை எப்படித் தவிர்க்கலாம் என இப்பதிவில் பார்க்கலாம்.

எந்த உணவுகள்? என்னென்ன அலர்ஜிகள்?

பால் அலர்ஜி

 • பாலில் உள்ள ‘லாக்டோஸ்’ என்ற சத்து சில குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும்.
 • பால் கொடுத்தால், அது குழந்தைக்கு செரிமானமாகாமல் வயிற்றுப்போக்கு ஏற்படும்.
 • பாலுக்குப் பதிலாக பால் பவுடர், பிற உணவுகளைத் தரலாம்.

6+ மாத குழந்தைகள்

 • ஆறு மாதத்துக்குப் பிறகு குழந்தைக்கு திட உணவு தர வேண்டும். சில குழந்தைகளுக்கு சில திட உணவுகள் ஒத்துக்கொள்ளாது.
 • 5% குழந்தைகளுக்கு இப்படி அலர்ஜி ஏற்பட வாய்ப்புண்டு.
இதையும் படிக்க: திட உணவு கொடுத்தல்... என்னென்ன உணவுகள், எப்போது, எவ்வளவு, எந்த நேரம்?

எந்த உணவுகள் அலர்ஜியை ஏற்படுத்தும்?

 1. நிலக்கடலை
 2. சோயாபீன்ஸ்
 3. கடுகு
 4. சில கொட்டை வகைகள்
 5. பால்
 6. மீன்
 7. முட்டை
 8. சில தானிய வகைகள் - கோதுமை போன்றவை
 9. எலுமிச்சை
10 Foods to Boost Baby's Brain Power மேற்சொன்ன உணவுகளில் உள்ள புரதமோ மற்ற பொருட்களோ அலர்ஜிக்கு காரணமாகலாம்.
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });

அலர்ஜி வரும் அறிகுறிகள் என்ன?

 • வயிற்றுப்போக்கு
 • வாந்தி
 • வயிற்று வலி
 • மூச்சுத்திணறல்
 • மயக்கம்
 • தொண்டைப் பகுதியில் வீக்கம்
 • மூக்கிலிருந்து நீர் வழிதல்
 • தோல் சிவந்து போதல், தடிப்பு, அரிப்பு
 • நாக்கு, உதடு, தொண்டைப் பகுதியில் எரிச்சல் ஏற்படுதல்
 • உடலெங்கும் குத்தும் உணர்வு
 • தலைச்சுற்றல்
இதையும் படிக்க: உணவுகள் மூலம் தாய்ப்பாலை அதிகமாக சுரக்க வைப்பது எப்படி?

அலர்ஜியை கண்டுபிடிப்பது எப்படி?

தோல் பரிசோதனை

எந்த உணவு அலர்ஜியோ அந்த உணவில் தயார் செய்த திரவத்தை, சிறிதளவு சருமத்தில் தடவியோ ஊசி மூலம் செலுத்தியோ கண்டுபிடிக்கப்படும். அந்த இடம் சிவந்துவிட்டால் அலர்ஜி இருப்பது தெரிய வரும். இன்னும் சில அறிகுறிகளும் தென்படும்.

ரத்த அலர்ஜி புரத பரிசோதனை

எதிர்ப்பு ஆற்றல் புரதம், எந்த உணவு அதிகமாக உருவாகி இருக்கிறதோ அந்த உணவால் அலர்ஜி ஏற்படுவதைக் கண்டறியலாம்.

மற்ற எதிர்ப்பு ஆற்றல் புரதங்கள் அலர்ஜி

IgG, IgM, IgA ஆகிய எதிர்பாற்றல் புரதங்களின் அளவை கணக்கிட்டு எந்த உணவால் அலர்ஜி எனக் கண்டுபிடிக்கலாம்.

உணவு கொடுக்கும் பரிசோதனை

எந்த உணவு அலர்ஜியோ அந்த உணவை சிறிதளவு கொடுத்துக் கண்டறியும் முறை. அலர்ஜி உறுதியானதும் அலர்ஜி ஏற்படுத்தும் உணவுகளைத் தவிர்த்தல் வேண்டும். இதையும் படிக்க: ஒரு நாளைக்கு எத்தனை முறை, எவ்வளவு நேரம் தாய்ப்பால் கொடுக்கலாம்? 7 Benefits of Including Eggs into Baby's Diet Image Source : Eggs.ca

தடுக்கும் முறைகள்

 • மருத்துவரிடம் குழந்தையைக் காண்பித்து முறையான பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்.
 • மருத்துவர் கூறும் ஆலோசனைகளை சரியாக பின்பற்றுதல் வேண்டும்.
 • தடுப்பு மருந்துகள், அலர்ஜி மருந்துகள் ஆகியன மருத்துவர் பரிந்துரைத்தால் அதை அவசியம் சாப்பிட வேண்டும்.
 • 6 மாதத்துக்கு மேல் திட உணவை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தினால் 3-நாள் விதிமுறையைப் பின்பற்றுதல் நல்லது.
 • ஒரு உணவை சிறிதளவு குழந்தைக்கு அறிமுகப்படுத்தி, குழந்தை அதை உண்ட பிறகு 3 நாள் வரை குழந்தையை நன்றாக கவனியுங்கள். அலர்ஜி ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் அழைத்து செல்லலாம். அலர்ஜி ஏற்படாமல் இருந்தால், அந்த குழந்தைக்கு அந்த உணவு ஒத்துக்கொள்கிறது என அர்த்தம்.
அலர்ஜி ஏற்படுத்தும் உணவுகளை எக்காலத்துக்கு எக்காரணத்துக்கும் குழந்தைகளுக்கு திரும்ப தர கூடாது. இதையும் படிக்க: எந்த நோயும் வராமல் தடுக்க என்னென்ன உணவுகளை குழந்தைக்கு தரலாம்? ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா?  தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null