பாதாம் பயன்கள்: குழந்தை முதல் பெரியவர்கள் வரை!

பாதாம் பயன்கள்: குழந்தை முதல் பெரியவர்கள் வரை!

எல்லா பெற்றோர்களுக்கும் தங்கள் குழந்தைகள் ஆரோக்கியமானவர்களாகவும், புத்திக் கூர்மை கொண்டவர்களாகவும் விளங்க வேண்டும் என்பதே ஆசையாக உள்ளது. அதனால் அவர்கள் தங்கள் குழந்தைகளுக்குக் குடிக்கத் தருவதிலிருந்து சாப்பிடத் தருவது வரை அனைத்திலும் கவனமாக உள்ளனர். இன்றைய பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைத் தருவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் உடல் மற்றும் மனவளர்ச்சி சம்பந்தமான பல விஷயங்களுக்கும் உதவ முனைகின்றனர்.

கொட்டைகளில் நிறைய அளவு புரதச்சத்து உள்ளது. இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் நன்மையைச் செய்யக்கூடியது. அதில் பாதாம் பருப்புகளை மிகவும் குறிப்பிட்டுக் கூறலாம். ஏனென்றால் இவற்றில் மிகவும் அதிக அளவு புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளன. இந்த பதிவில் குழந்தைகளுக்குப் பாதாம் பருப்புகளை (Patham paruppu) எப்போது தரலாம், பாதாம் பருப்பால் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகள் / பயன்கள் என்ன? என்று அனைத்தையும் தெளிவாகக் காணலாம்.

குறிப்பு: இது குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களுக்குமான பதிவு தான். நீங்கள் பாதாமின் நன்மைகளை தெரிந்துகொண்டால் தானே குழந்தைகளுக்குத் தர முடியும்.

எந்த வயதில் குழந்தைகளுக்கு பாதாம் தரலாம்? (Patham paruppu)

குழந்தைகளுக்கு மிகவும் சிறிய பருவத்தில் பாதாம் பருப்புகளைத் தரக்கூடாது. அதாவது ஆறுமாதம் வரை குழந்தைகளுக்குத் தருவது கூடாது. குழந்தைகள் 7 அல்லது 8 மாதங்களில் இருக்கும் பொழுது பாதாம் பருப்புகளைக் கொடுக்கத் தொடங்கலாம்.இதுவே சாப்பிட ஏற்ற தருணமாகும். பருப்புகளின் தோலின் மீது எந்தவிதமான ரசாயனங்களும் பூசப்பட்டு இருக்கக் கூடாது. இயற்கையான முறையில் உள்ள பாதாம் பருப்புகளைக் குழந்தைகளுக்கு உண்ணத் தர வேண்டும். ஒரு வேளை குழந்தைகளுக்கு மெல்வதில் அல்லது ஜீரணம் செய்வதில் சிரமம் இருந்தால் பாதாம் பருப்புகளை (patham paruppu /Badam) அரைத்து பொடியாக்கிக் குழந்தைகளுக்குச் சாப்பிடத் தரலாம்.

எவ்வளவு பாதாம் பருப்புகளை ஒரு நாளைக்கு தரலாம்?

குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் அரை பாதாம் பருப்பு சாப்பிடத் தரலாம். இதுவே குழந்தைக்கு ஒரு வயது ஆகிவிட்டது என்ற பொழுது, ஒரு பாதாம் பருப்பு சாப்பிடத் தரலாம். அதற்குப் பிறகு குழந்தையின் வயது அதிகரிக்க படிப்படியாக இதன் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொள்ளலாம். ஆனால் ஆரம்பக் கட்டத்தில் பாதிக்கு மேல் தர வேண்டாம்.

ஏனென்றால் குழந்தையால் அதற்கு மேலே செரிக்க இயலாது மேலும் இதனால் குழந்தைக்கு வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் அளவான அளவில் தினம் கொடுப்பதால் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். மேலும் அதன் மூளை வளர்ச்சி சிறப்பான வகையில் ஏற்படும்.

பாதாம் பருப்பில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் அளவு

  • எனர்ஜி 2423 KJ (579 கலோரி )
  • கார்போஹைட்ரேட் கிராம் 21.6 கிராம்
  • கொழுப்பு கிராம் 49.9 கிராம்
  • புரதம் கிராம் 21.2கிராம்
  • கால்சியம் 264 மில்லிகிராம்
  • விட்டமின் ஏ
  • விட்டமின் இ
  • இரும்பு ,மெக்னீசியம் ,பொட்டாசியம் ,விட்டமின் பி6 மற்றும் பல…

பாதாம் பருப்புகளைக் குழந்தைகளுக்குக் கிடைக்கும் பயன்கள் என்ன?

பாதாம்பருப்புகளால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.அதனால் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு இவற்றைத் தருவது எதற்காக என்று அறிந்து கொள்ள வேண்டும். மூளையின் சக்தி பாதாம் பருப்புகளைச் சாப்பிடுவதால் அதிகரிக்கும்.பொடியாக அரைத்த பாதாம் பருப்பைப் பாலில் கலந்து தினமும் பருகுவதால் குழந்தையின் உடலில் ஊட்டச்சத்தின் அளவு அதிகமாகச் சேர வாய்ப்புள்ளது. பாதாம் பருப்பு கலந்த பாலை குளிர்காலத்தில் அருந்துவதால் குழந்தையின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும் குளிரைத் தாங்கக்கூடிய சக்தியைக் குழந்தையின் உடல் பெறுகின்றது.

மூளை வளர்ச்சி

பாதாம் பருப்பில் உள்ள புரதச் சத்தானது மூளையின் இயக்க ஆற்றலை அதிகரிக்கிறது. மேலும் நினைவாற்றல் மற்றும் மூளையின் சக்தியைப் பெருகுகின்றது. குழந்தையின் மூளையில் உள்ள செல்களில் உள்ள குறைபாடுகளைச் சரி செய்து, அவர்களைப் புத்திசாலியாக மாற்றுகின்றது.

எலும்புகளை வலிமையாக்குகின்றது

பாதாம் கலந்த பாலை பருகுவதால் குழந்தையின் எலும்புகள் வலுவடைகின்றன. இந்த பாலின் மூலம் குழந்தைக்குக் கூடுதலாக வைட்டமின் டி சத்து கிடைக்கின்றது விட்டமின் டி சத்து கிடைக்கப்பெறுவதால் குழந்தையின் எலும்புகளுக்குத் தேவையான கால்சியம் சத்து எளிதில் சென்று சேருகிறது. பாதாம் கலந்த பால் மூட்டுவலி, ஆஸ்டியோபொரோசிஸ் தொந்தரவுகள் குழந்தைகளுக்கு ஏற்படாமல் பாதுகாக்கிறது

எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது

குளிர் காலத்தில் சளி ,இருமல் போன்ற தொல்லைகள் குழந்தைகளுக்கு ஏற்படுவது இயல்புதான். இந்த மாதிரி நேரத்தில் பாதாம் கலந்த பாலை குழந்தைக்குத் தினமும் பருக தருவதன் மூலம், அவர்களின் உடலின் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்துக் கொள்ள முடியும். இந்த பால் சாப்பிடுவதன் மூலம் குழந்தைகள் எளிதில் குளிர்காலத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளாக முடியாது.

கண்கள் ஆரோக்கியம் பெறும்

பாதாமில் நிறைந்துள்ள விட்டமின் ஏ சத்து கண்களின் வளர்ச்சிக்கு மிக மிக அவசியமானது. இதை சாப்பிடுவதன் மூலம் குழந்தைகளுக்குக் கண் சம்பந்தமான குறைபாடுகள் ஏற்படாது. கண் பார்வை கூர்மை அடையும்.

ஆரோக்கியமான சருமம் கிடைக்கும்

பாதாம் பருப்பில் உள்ள விட்டமின் இ சத்தானது சருமம் சம்பந்த நோய்கள் ஏற்படாமல் காப்பாற்றும்.மேலும் சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ள உதவும். இது குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பயன் அளிக்கும் விஷயமாகும். சருமத்தில் ஏற்படும் புண்கள் ,கொப்புளங்கள் போன்ற பிரச்சனைகளை நிவர்த்தி செய்யப் பாதாம் பருப்புகள் உதவும்.

குழந்தைகளுக்கு எப்படி பாதாம் பருப்புகளைக் கொடுப்பது?

ஊறவைத்துக் கொடுங்கள்

பாதாம் பருப்பை இரவு நேரத்தில் தண்ணீரில் போட்டு ஊற வைத்து விடுங்கள், பின் அதன் தோலை உரித்து, காய விடுங்கள். பிறகு இதனைக் குழந்தைகளுக்குச் சாப்பிடக் கொடுங்கள்.

பாதாம் பொடி தயாரியுங்கள்

ஒரு வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகளுக்குத் தரப் பாதாம் பருப்புகளை அரைத்து பொடியாக்கி வைத்துக் கொள்ளலாம்.இந்தப் பொடியைக் குழந்தைகளின் உணவுகளில் கலந்து கொடுக்கலாம்.சற்று பெரிய குழந்தை என்றால் சின்ன சின்ன துண்டுகளாகப் பாதாம் பருப்புகளை வெட்டி சாப்பிடக் கொடுக்கலாம்.இருப்பினும் குழந்தையின் தொண்டையில் பாதாம்பருப்பு சிக்க வாய்ப்பு உள்ளது. இதனைத் தவிர்க்கப் பால் அல்லது மற்ற உணவுகளில் சேர்த்துக் கொடுப்பது நல்லது.

பாதாம் பால்

இது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது. பாதாம் பருப்பை அரைத்து
வைத்துக் கொள்ள வேண்டும் இந்த பொடியைத் தாய்ப்பால் அல்லது பார்முலா பாலில் கலந்து குழந்தைக்குச் சாப்பிடத் தர வேண்டும். குளிர்காலத்தில் இது தருவது மிகவும் ஏற்புடையது.

சாப்ரான் பாதாம் பால்

சற்று பெரிய குழந்தை என்னும் பட்சத்தில் பாதாம் பருப்பை அரைத்து சற்று சூடான பாலில் கலந்து கொள்ளவும். இத்தோடு ஏலக்காய் பொடி மற்றும் சாப்ரான் பொடியைக் கலந்து பாலை சூடு செய்ய வேண்டும். பிறகு இதனைக் குழந்தைக்குச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். இந்த பாலை அருந்துவதால் குழந்தையின் ஆரோக்கியத்தில் மிகச்சிறந்த வளர்ச்சி தெரியும்.

தேனில் கலந்து தரலாம்

சற்று பெரிய குழந்தை என்றால் பாதாம்பருப்பைத் தேனில் கலந்து சாப்பிடக் கொடுக்கலாம்.

இவற்றைத் தவிர பாதாம் பருப்புகளில் உள்ள மற்ற நன்மைகள் என்ன? (Almond benefits in Tamil)

  • குழந்தையின் இரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். இதன் மூலம் உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும்.
  • குழந்தையின் முகம் எப்பொழுதும் பொலிவாகக் காணப்படும்.
  • அதேசமயம் பாதாம் பருப்புகளை அளவான அளவிலே தர வேண்டும்.அதிக அளவு சாப்பிடும் போது குழந்தையின் உடல் சூடாக வாய்ப்புள்ளது.இது ஏதாவது பாதிப்புகளைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்திவிடும்.
  • குளிர்காலத்தில் பொடியாக சாப்பிடுவது மிகவும் ஏற்புடையது. அதே போல வெயில் காலத்தில் தண்ணீரில் ஊறவைத்து கொட்டைகளைச் சாப்பிட உகந்தது .

இந்த பதிவின் மூலம் பாதாம் பருப்புகளை எப்படிச் சாப்பிட வேண்டும் என்பது பற்றியும் அதன் பல்வேறு நன்மைகளைப் (Almond benefits in Tamil) பற்றித் தெளிவாக அறிந்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null