குழந்தைக்கு 7 பாதிப்புகளை ஏற்படுத்தும் ரப்பர் நிப்பிள்… தீர்வு என்ன?

குழந்தைக்கு 7 பாதிப்புகளை ஏற்படுத்தும் ரப்பர் நிப்பிள்… தீர்வு என்ன?

ரப்பர் நிப்பிளை குழந்தைக்கான பொருள் என்றே அனைவரும் பார்க்கின்றனர். ஆனால், அது குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. அழும் குழந்தை, சோர்வாக மகிழ்ச்சி இல்லாத குழந்தையை இயல்பு நிலைக்குத் திருப்ப பலரும் இந்த ரப்பர் நிப்பிளை (Baby Pacifier) பயன்படுத்துகின்றனர். ஆனால், உண்மையில் குழந்தைகளுக்கு இந்த ரப்பர் நிப்பிள் தேவையா?

குழந்தைகள் அழாமல் இருக்க வாயில் வைக்கப்படும் ரப்பர் நிப்பிள் குழந்தைக்கு பாதுகாப்பானதா? நிச்சயம் இல்லை. 6 மாதமாக பயன்படுத்தும் ரப்பர் நிப்பிள் குழந்தையை தாய்ப்பால் அருந்தவிடாமல் பாதிக்க செய்யும். கழுத்து போன்ற பகுதிகளில் அடைத்துகொள்ளும் வாய்ப்பையும் ஏற்படுத்தும்.

அலர்ஜியை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. தொடர்ந்து இந்த ரப்பர் நிப்பிளை பயன்படுத்தினால் பற்கள் தொடர்பான பிரச்னைகளும் வரலாம். குழந்தை பேசுவதில் பிரச்னை ஏற்படலாம்.

ரப்பர் நிப்பிளால் ஏற்படும் பாதிப்புகள்

baby pacifier

Image source : Gables Sedation Dentistry

கிருமிகளின் கூடம்

  • ரப்பர் நிப்பிளை தொடர்ந்து வாயில் வைப்பதால் கிருமிகள் வளர வாய்ப்பைத் தருகிறது. கிருமிகள் வளர அதிகம் உதவுகிறது. சுத்தப்படுத்தாமல் மீண்டும் மீண்டும் பயன்படுத்துகையில் வாயில் தொற்றும் ஏற்படுகிறது.
  • Staphylococcus bacteria, Candida fungus ஆகியவை குழந்தைகளை பாதிக்கும். பெரும்பாலும் இந்த செயற்கை நிப்பிளைத் தவிர்ப்பதே நல்லது.
  • அவசியம் தேவைப்பட்டால் சிலிக்கான் நிப்பிள் வாங்கலாம். அதையும் முறையாக சுத்தப்படுத்துதல் அவசியம். குழந்தைக்கு அடிக்கடி கொடுக்க கூடாது.

தாய்ப்பால் குடிப்பதை பாதிக்கும்

  • குழந்தைக்கு நீங்கள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என நினைத்தால் இந்த ரப்பர் நிப்பளை குழந்தைக்கு கொடுக்க கூடாது.
  • அதிகமாக இதைப் பயன்படுத்தினால் குழந்தைகள் தாய்ப்பால் குடிக்க மாட்டார்கள்.
  • குழந்தைகள் தாய்ப்பால் குடிப்பதை விரைவில் நிறுத்திக் கொள்வார்கள்.
  • தாய்ப்பால் இல்லாமல் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்காது.

இதையும் படிக்க:குழந்தைகளின் விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்துவது எப்படி?

தாயை தூர வைக்கும்

  • தாய்ப்பால் கொடுப்பதால் தாயும் குழந்தையும் இரண்டு மடங்குக்கு மேல் அன்போடு ஈர்க்கப்படுவார்கள்.
  • குழந்தைக்கும் தாயுக்குமான உறவு மேம்படும்.
  • ஆனால், ரப்பர் நிப்பிள், சிலிக்கான் நிப்பள் போன்ற எல்லாமே தாயையும் குழந்தையும் பிரித்து வைக்கும்.
  • குழந்தைகளுக்கு தாய்ப்பாலின் மீது ஈடுபாடு இல்லாமல் போய்விடும்.

baby pacifiers

Image source : Cybush

googletag.cmd.push(function() { googletag.display(‘div-gpt-ad-1528202144377-0’); });

திடீர் அடைப்பு (Choking Risk)

  • குழந்தையின் கழுத்தில், கைகளில் ரப்பர் நிப்பிளை கட்டிவிட கூடாது.
  • தவறுதலாக குழந்தைக்கு திடீர் அடைப்பு ஏற்பட்டு விடலாம். இதனால் குழந்தைக்கு ஆபத்தான பாதிப்பு கூட ஏற்பட்டுவிடும்.

பேசுவதில் தடை

  • நிறைய குழந்தைகள் பேசவே இல்லை எனப் பெற்றோர்கள் மருத்துவர்களிடம் அழைத்து செல்கின்றனர்.
  • குழந்தைகளுக்கு அதிகமாக ரப்பர் நிப்பிளை பயன்படுத்தினால் அவர்கள் பேசுவதில் தடையை ஏற்படுத்தும்.
  • சில குழந்தைகளுக்கு, வாய், பற்கள் ஆகியவை பாதிக்கப்படும்.
  • பற்களின் வளர்ச்சி நன்றாக இருக்காது.
  • சரியான வளர்ச்சி இல்லாமல் இருந்தால், குழந்தைகள் பேச முடியாமல் போகும்.

அலர்ஜி

  • லேட்டக்ஸ் எனும் மெட்டிரியல் கொண்டு தயாரிக்குப்படும் நிப்பிள், அலர்ஜியையும் ஏற்படுத்தும்.
  • ரப்பர் நிப்பிள் அலர்ஜியை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.
  • மூக்கு, கண், வாய் போன்ற இடங்களில் எரிச்சல்தன்மையும் அதிகமாக இருக்கும்.
  • தொண்டை வீக்கமடையும்.
  • மூச்சு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும்.

இதையும் படிக்க: பெட் வெட்டிங் செய்ய காரணங்களும் தீர்வுகளூம்…

பற்கள் சிதைவு

teeth problem

Image source : Truth Code

  • கை சூப்புவதே தவறு. அதை நிறுத்தவே பல முயற்சிகளை பெற்றோர் எடுத்து வருகின்றனர்.
  • இதில் ரப்பர் நிப்பிள் இன்னும் தவறானது. வாய்க்குள் கிருமிகள், உருவாகி படர்ந்து பற்களையே சிதைத்துவிடும்.
  • இதுமட்டுமல்லாமல் குழந்தைகள் சாக்லேட், மிட்டாய் என சாப்பிட்டு வருவதும் பற்கள் சிதைவுக்கு முக்கிய காரணம்.
  • 3-5 வயது குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை அதிகமாக வருகிறது.
  • ரப்பர் நிப்பிள் பயன்படுத்தாத குழந்தைகள், ரப்பர் நிப்பிளை மிக குறைந்த அளவில் பயன்படுத்திய குழந்தைகளுக்கு 3-5 வயதாகும்போது பற்கள் தொடர்பான பிரச்னைகள் வருவதில்லை.

தீர்வு

  • இப்போது உங்கள் குழந்தை இந்த ரப்பர் நிப்பிளை பயன்படுத்தி கொண்டு இருந்தால் உடனே நிறுத்தாமல் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்துங்கள்.
  • உங்கள் குழந்தைக்கு 6 மாதம் வரை அளவுடன், பாதுகாப்பான முறையில் மருத்துவர் ஆலோசனை பெற்று பயன்படுத்துங்கள்.
  • 6 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைக்கு இதைப் பயன்படுத்த வேண்டாம்.
  • முடிந்த அளவு குழந்தையை இந்த செயற்கையான விஷயங்களிலிருந்து தள்ளி வையுங்கள். தாய், தந்தையின் அரவணைப்பே குழந்தைகளை ஆரோக்கியமாக்கும்.
  • 6 மாதத்துக்கு மேல் திட உணவை குழந்தைக்கு கொடுங்கள்.
  • பிறந்தது முதல் 6 மாதம் வரை தாய்ப்பாலை கொடுப்பதே நல்லது.
  • தாய்ப்பால் தருவதுதான் சிறப்பு. முடியாத பட்சத்தில் ஃபார்முலா மில்க் தரலாம். ஃபார்முலா மில்கை புட்டி பாலில் தருகிறீர்கள் என்றால், அதை அவசியம் சுத்தப்படுத்துங்கள்.
  • சுத்தப்படுத்தி, பாதுகாப்பான முறையில் கொடுப்பது மிக மிக அவசியம்.
  • தற்போது ஸ்டீல் பாட்டில்கள் வந்துவிட்டன. அவற்றை வாங்கி பயன்படுத்தலாம்.

இதையும் படிக்க: ஃபேஸ்புக் நிறுவனரான ‘மார்க்’ தன் குழந்தைக்கு ‘குவான்டம் ஃபிஸிக்ஸ்’ வாசித்து காட்டுகிறார்… ஏன்?

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null