குழந்தையின் கண்கள் மற்றும் மூக்கை சுத்தம் செய்வது எப்படி?

குழந்தையின் கண்கள் மற்றும் மூக்கை சுத்தம் செய்வது எப்படி?

குழந்தையின் கண்கள் பார்ப்பதற்கே பளிச்சென இருக்கும். அந்த கண்களை பார்க்கும் போதே அவர்கள் இந்த உலகின் பொக்கிஷங்கள் எனப் புரியும். நம் உலகை மாற்ற வந்தவர்கள். அந்த கண்களின் வழியே நமது மகிழ்ச்சியை நாம் பார்க்கலாம். குழந்தையின் கண்களை எப்படிப் பராமரிப்பது, சுத்தம் செய்வது எனத் தெரியுமா? அதிகமான மெனக்கெடல் தேவையில்லை. கொஞ்சம் பொறுமையும் கவனிப்பும் இருந்தால் போதும். நீங்கள் அதிக சிரமம் எடுக்கத்தேவையில்லை. தொடர்ந்து முறையான, சரியான பராமரிப்பை மேற்கொண்டாலே போதும். குழந்தையின் ஒவ்வொரு உறுப்புகளையும் நாம் அதிக கவனம் எடுத்துப் பார்த்துக்கொள்ள வேண்டும். அதில் ஒன்றுதான் கண்கள். அவற்றை எவ்வாறு கவனித்து, பராமரிப்பது எனப் பார்க்கலாம். நவீன அறிவியல் ரீதியாக குழந்தை வளர்ந்து 6 மாதத்துக்கு பிறகே, பார்வைத்திறன் முழு வளர்ச்சியில் இருக்கும் என்பார்கள். குழந்தையின் கண்களை நாம் சுத்தம் செய்து, முறையாகப் பராமரித்துக்கொள்ள வேண்டும். சரியான இடைவெளிக்கு ஒருமுறை குழந்தையின் கண்களை சுத்தம் செய்வது நல்லது.

எப்படி கண்களை சுத்தம் செய்வது?

babies eyes care Image Source : Ramper இதையும் படிக்க: குழந்தைகளின் கண்களில் மை வைக்கும் முறை சரியா? தீர்வு என்ன? குழந்தையின் கண்களை சுத்தம் செய்யும் முன், உங்களது கைகளை நன்றாகக் கழுவி கொள்ளுங்கள். சமையல் வேலை, துணி துவைப்பது போன்ற வேலைகளை செய்துவிட்டு கைகளை சரியாக கழுவாமல் குழந்தைக்கு அருகில் வருவது சரியல்ல. சாஃப்ட் பருத்தி துணி அல்லது பஞ்சை இளஞ்சூடான தண்ணீரில் நனைத்து, கண்களை சுற்றி மெதுவாக துடைக்கவும். கண்களில் அதிக நீர் வழிந்திருந்தாலும், அழுக்கு இருந்தாலும் மென்மையாகத் துடைத்து எடுக்கவும். குழந்தையின் சருமம் மிகவும் சென்ஸிடிவ் என்பதால், சோப், லிக்விட் சோப், ஃபேஸ்வாஷ் போன்ற எதுவும் பயன்படுத்த வேண்டாம். வெறும் தண்ணீரே போதுமானது. குழந்தையின் கண்களை சுத்தம் செய்யும் சமயத்தில், குழந்தையிடம் பேசுவது அல்லது பாடுவது போன்றவற்றை செய்யலாம். இதனால் குழந்தையின் கவனம் உங்கள் மீது இருக்கும். நீங்கள் எளிதில் குழந்தையின் கண்களை சுத்தம் செய்திட முடியும். பஞ்சு அல்லது வெள்ளை பருத்தி துணியால், குழந்தையின் மூக்கு அருகில் உள்ள கண்ணின் ஓரப் பகுதியிலிருந்து குழந்தையின் கண்களின் வெளிப் பகுதியில் உள்ள ஓரப்பகுதி வரை மெதுவாகத் துடைத்து எடுக்கவும். இரு கண்களுக்கும் இரண்டு பருத்தி துணி அல்லது பஞ்சை பயன்படுத்துங்கள். ஒரே துணி அல்லது பஞ்சால் சுத்தம் செய்தால், இந்த கண்களில் உள்ள தொற்று அடுத்த கண்ணுக்குப் பரவலாம். எனவே, இருவேறு துணிகள் அல்லது பஞ்சை பயன்படுத்துவது நல்லது. சில குழந்தைகளுக்கு கண்களை சுத்தம் செய்தாலே பிடிக்காது. வேண்டாம் என்ற எதிர்ப்பை காண்பித்துக் கொண்டே இருப்பார்கள். இதனால் நீங்கள் இளஞ்சூடான தண்ணீரைப் பயன்படுத்தி சுத்தம் செய்துவிட்டால் உடனடியாக சுத்தம் செய்து முடித்து விடலாம். குழந்தைகளும் அழுக மாட்டார்கள். சாதாரண தண்ணீரால் அவ்வளவு சீக்கிரம் சுத்தம் செய்ய முடியாது. அடிக்கடி கண்களை சுத்தம் செய்வதால், குழந்தைக்கு தொற்று வராமல் பார்த்துக்கொள்ளலாம். ஒருவேளை தொற்றோ காயமோ கண்களில் இருந்தால், அவற்றை சுத்தம் செய்யும் போது சுத்தமான பஞ்சை பயன்படுத்தி, அதை தூக்கி எறிந்து விடுங்கள். குழந்தையின் கண்களுக்கு உள்ளே சுத்தம் செய்ய முயற்சிக்க வேண்டும். வெளிப்புறம், உள் ஓரம், வெளி ஓரம் சுத்தம் செய்தாலே போதுமானது. எப்போதும் இளஞ்சூடான நீரை மட்டுமே பயன்படுத்துங்கள். வெந்நீர் பயன்படுத்த கூடாது. 6 + மாத குழந்தைகளுக்கு சமச்சீரான சத்துகள் உள்ள உணவுகளைக் கொடுக்கிறீர்களா என உறுதி செய்து கொள்ளுங்கள். விட்டமின், தாதுக்கள், புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, நார்ச்சத்து ஆகிய சத்துகள் உள்ள உணவுகளை அன்றாடம் கொடுக்க வேண்டும். கண்களும் பார்வை திறனும் அப்போதுதான் நன்றாக இருக்கும். குழந்தைநல மருத்துவரிடம் சரியான இடைவெளிக்கு ஒருமுறை குழந்தையை காண்பியுங்கள். சில குழந்தைகளுக்கு அதிகமாக கண்ணீர் வழியலாம். அதே முறையாகத் தொடர்ந்து சுத்தம் செய்து வருவது நல்லது.

மூக்கை சுத்தம் செய்வது எப்படி?

babies nose care Image Source : Acchitips இதையும் படிக்க: கிருமிகள் தாக்காமல் குழந்தைகளின் துணியை எப்படி பராமரிப்பது? பெரியவர்களை போல குழந்தைகளால் தாங்களாகவே மூக்கை சுத்தம் செய்துகொள்ள முடியாது. அழுக்காகதான் இருக்கும். சில குழந்தைகள் தன் கைகளால் மூக்கைத் தேய்க்கவும் செய்வார்கள். மூக்கில் உள்ள அழுக்கை சுத்தம் செய்யாமல் அப்படியே விடக்கூடாது. இது குழந்தைக்கு நல்லதல்ல. அழுக்கு அடைத்துள்ள மூக்கால் குழந்தை மூச்சு விட மிகவும் சிரமப்படும். மூக்கில் உள்ள அழுக்கால்,
  • மூச்சு விடுவதில் சிரமம்
  • சத்தமான மூச்சு
  • தூக்கம் சரியாக வராமல் தவிப்பார்கள்
  • தொற்றுக்கள் உருவாகவும் வாய்ப்பு அதிகம்.
குழந்தையின் மூக்கை அடிக்கடி, தொடர்ந்து சுத்தம் செய்ய வேண்டியது பெற்றோரின் பொறுப்பு. குழந்தைகள் முழுக்க முழுக்க பெற்றோரை சார்ந்திருப்பதால் அவர்களின் சுகாதாரமும் ஆரோக்கியமும் பெற்றோரின் கையிலே இருக்கிறது. ஆகையால், குழந்தையை முறையாக கவனிக்கத் தவறி விடாதீர்கள். சுத்தமான குழந்தை என்றும் ஆரோக்கியமான குழந்தை என்பதை நினைவில் வையுங்கள். ஆரோக்கியமான குழந்தை என்றும் மகிழ்ச்சியான குழந்தையாக இருக்கும். இதையும் படிக்க: 3 மற்றும் 4 மாத குழந்தைகளை எப்படி கவனித்துக்கொள்ள வேண்டும்?
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });

குழந்தையின் மூக்கை சுத்தம் செய்வதற்கான டிப்ஸ்

கடையில் விற்கும் வேப்பரைசர் (Vapourizer) வாங்கிப் பயன்படுத்துவதற்கு, அவற்றால் எப்படி சுத்தம் செய்வது என மருத்துவரிடம் தெரிந்து கொள்ளுங்கள். குழந்தை மூக்கில் உள்ள அழுக்கு, மிகவும் கடினமானதாக இருந்தால், மூக்கில் ஊற்றப்படும் டிராப்ஸ்களை (Saline drops) பயன்படுத்தலாம். மூக்கில் உள்ள அழுக்கை உங்களால் வெளியே எடுக்க முடியவில்லை என்றால், சிறிதளவு வேப்பர் ரப்பை மூக்கு, கழுத்து பகுதியில் லேசாகத் தடவி விடுங்கள். இதனுடன் உள்ளங்காலிலும் வேப்பர் ரப் தடவி சாக்ஸ் அணிந்து விடுங்கள். காலையில், மூக்கடைப்பு நீங்கி, அழுக்கு மூக்கில் நீர் போல வழிந்து ஒழுகிவிடும். நீங்கள் அதை எளிதில் சுத்தம் செய்து விடலாம். குழந்தைக்கு எப்போதும் அளவான வேப்பர் ரப்பை பயன்படுத்துங்கள். அதிகமாகப் பயன்படுத்த கூடாது. குழந்தைக்கு எரிச்சல் உண்டாகலாம். இதையும் படிக்க: 2-வது மாத குழந்தையை எப்படி பாதுகாப்பது? தாய்க்கு வரும் பிரச்னைகளை தவிர்ப்பது எப்படி? ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null