குழந்தையின் சருமத்தில் ஏற்படும் பருக்கள்… தீர்வு என்ன?

குழந்தையின் சருமத்தில் ஏற்படும் பருக்கள்… தீர்வு என்ன?

குழந்தைகளுக்கும் முகம், கை, கால், நெஞ்சு பகுதிகளில் பரு போல ஏற்படும். சிவப்பாக, திட்டு திட்டாக தெரியும். ஆனால், கைக்குழந்தைகளுக்கு இந்த பிரச்னை இயல்பான ஒன்றுதான். சிவப்பான பருபோல வருவதைக் கண்டு பயப்பட தேவையில்லை. எனினும், இது நீண்ட காலம் நீடித்தால் மட்டுமே மருத்துவரை அணுக வேண்டும். பருக்கள் (Baby Acne) பிரச்னையை தீர்க்க என்னென்ன வழிகள் எனப் பார்க்கலாம்.

எந்த இடங்களில் குழந்தைகளுக்கான பருக்கள் வரும்?

  • கன்னம்
  • மூக்கு
  • முதுகு
  • தொடை
  • வயிறு போன்ற இடங்களில் வரும்.

எப்போது மருத்துவரை அணுகுவது?

  • இந்த பருக்கள் அதிகளவில் வர தொடங்குதல்.
  • இந்த பருக்கள் பொதுவாக வலியை ஏற்படுத்தாது. ஒருவேளை இதனால் குழந்தை அசௌகரியமாக உணர்தல்.
  • எரிச்சல், அரிப்பு போன்றவை குழந்தைக்கு ஏற்படுதல்.
  • நீண்ட காலம் நீடித்தல்.
baby acne Image Source : Baby center
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });

ஏன் பேபி-ஆக்னி (பருக்கள்) பிரச்னை குழந்தைக்கு வருகிறது?

  • இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.
  • தாய் வயிற்றில் இருந்தபோது தாயின் ஹார்மோன் மாற்றம் குழந்தையின் உடலிலும் ஏற்பட்டு அது அப்படியே தங்கி இருத்தல்.
  • குழந்தை சரியாக மலம் கழிக்காமல் இருத்தல்.
  • ஒத்துக்கொள்ளாத வானிலை மாற்றத்தால் குழந்தை அவதிப்படுதல்.
  • தாய்ப்பாலோ எச்சிலோ குழந்தையின் முகத்தில் இருத்தல்.
  • குழந்தையை சரியாக சுத்தம் செய்யாமல், பராமரிக்காமல் இருத்தல்.
  • இப்படி பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இந்தப் பிரச்னை அதிகமாக இருப்பின் சரும மருத்துவரையோ குழந்தை நல மருத்துவரையோ அணுகுவது நல்லது.
  • குழந்தை தன் கைகள் மூலம் இன்னும் பருக்களைப் பரப்பாமல் தடுப்பது பெற்றோரின் கடமை.

என்னென்ன தீர்வுகள்?

எப்போதுமே குழந்தைக்கு கெமிக்கல்கள் இல்லாத, அல்லது குழந்தைக்கு என்று பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மைல்டான சோப்களை பயன்படுத்த வேண்டும். ஹோம்மேட் சோப் தயாரித்து குழந்தைக்கு பயன்படுத்துவது நல்லது. இதனால் அதிக கெமிக்கல்கள் இருக்காது. இதையும் படிக்க: ஹோம்மேட் ஓட்ஸ் மீல் சோப் தயாரிப்பது எப்படி? குழந்தையை தூக்குவது, கொஞ்சுவது, உணவு ஊட்டுவது, குளிக்க வைக்கும்போதெல்லாம் கை சுத்தமாக இருக்கிறதா எனப் பரிசோதித்து கொள்வது நல்லது. குழந்தைக்கு பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. சிந்தடிக் ஆடைகளைத் தவிர்க்கலாம். அதிக டிசைன், ஃப்ரில், மணிகள் பதித்தது, ஜமிக்கி, ஜரிகை போன்ற அதிக வேளைப்பாடுகள் உள்ளவற்றைத் தவிர்க்கலாம். அதைபோல குழந்தைகளின் ஆடைகளைத் துவைக்க, மைல்டான சோப்பு தூள், துணி சோப் பயன்படுத்துவது நல்லது. சிலர் குழந்தைக்கு மூலிகை குளியல் பொடி, நலங்கு மாவு போன்றவற்றை பயன்படுத்துவர். இதுவும் குழந்தையின் சருமத்துக்கு ஏற்றது. இதையும் படிக்க: குழந்தையின் சருமத்தை ஆரோக்கியமாக, பிரகாசமாக மாற்றுவது எப்படி?  இதையும் படிக்க: ஆண், பெண் குழந்தைகளுக்கான குளியல் பொடி தயாரிப்பது எப்படி? பருக்கள் வந்த இடத்தில் தாங்களாக எந்த கிரீம், லோஷன் வாங்கி தடவ வேண்டாம். மருத்துவர் பரிந்துரைத்தால் பயன்படுத்தலாம். தாங்களாக மெடிக்கல் ஷாப்பில் சொல்லி, மருந்துகளை வாங்கி குழந்தைக்கு தந்தாலோ தடவினாலோ குழந்தையின் உடல்நிலையை பாதிக்ககூடும் என்பதை மறக்க வேண்டாம். மதிய வெயில், கோடை கால வெயில், சூரியன் சுட்டெரிக்கும் நேரத்தில் குழந்தைகளை வெளியில் அழைத்து செல்வதைத் தவிர்க்கலாம். babies skin problem குழந்தைக்கு காலை நேர இளவெயில் மட்டுமே ஏற்றது. குழந்தையை சுத்தமாக பராமரிக்கிறீர்களா எனக் கவனித்துக்கொள்ளுங்கள். தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்றவை குழந்தைகளுக்கு பயன்படுத்தினாலே குழந்தையின் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். பேபி மசாஜ் எண்ணெய்களை பயன்படுத்தி குழந்தையின் சருமத்தில் தடவி குளிப்பாட்டி வந்தாலும் குழந்தைக்கு எந்த சரும பிரச்னையும் வராது. இதையும் படிக்க: 3 வகையான பேபி மசாஜ் எண்ணெய் செய்வது எப்படி? குழந்தை பால் குடித்த பின் வாய், வாய் சுற்றி, கன்னங்களில் வியர்த்து இருந்தாலோ தாய்ப்பால் தெளித்திருந்தாலோ துடைத்து சுத்தப்படுத்துங்கள். சுத்தமான பருத்தி துணியோ 'வெட் பைப்ஸ்' பயன்படுத்தியும் குழந்தைகளைச் சுத்தம் செய்யலாம். ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா?  தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null