குழந்தைகளின் முடியைப் பராமரிக்க 13 வழிகள்...

குழந்தைகளின் முடியைப் பராமரிக்க 13 வழிகள்...

குழந்தைகள் முடி எப்போதும் மிருதுவாக, அடர்த்தி குறைவாக இருக்கும். சில குழந்தைகளுக்கு முடி அவ்வளவாக இருக்கவே இருக்காது. எனினும் முடிகள், ஸ்கால்ப் (மண்டைத் தோல்) ஆகியவற்றைப் பராமரிப்பது (Babies Hair care Tips) அவசியம். ஒவ்வொரு குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாதிரியான முடி. சில்கி, சுருட்டை, வேவி (அலை அலையான முடி), அடர்த்தியான முடி, மிகவும் குறைந்த முடி, மொட்டைத் தலை இப்படி ஒவ்வொரு குழந்தையும் தனி அழகுதான். சில பெற்றோர் தன் குழந்தைக்கு தலையில் முடியில்லை எனப் பயப்படவும் செய்வார்கள். கவலை வேண்டாம். குழந்தையின் முடி மற்றும் மண்டைத் தோலை பராமரித்தாலே போதும். முடி வளர்ச்சி நன்றாக, ஆரோக்கியமாக இருக்கும்.

குழந்தையின் முடி மற்றும் ஸ்கால்ப்பை பராமரிக்கும் முறைகள்

#1. ஷாம்பு

குழந்தையின் தலையில் முடி இருக்கிறதோ இல்லையோ வாரம் இருமுறை தலைக்கு குளிப்பாட்டுங்கள். தினமும் தலைக்கு குளிப்பாட்ட வேண்டாம். வெயிலில் சென்றால் தலையில் மறைக்க பேபி டவல், ஹேட், கேப் பயன்படுத்துங்கள். குழந்தையின் தலையில் பொடுகு எதாவது இருந்தால் ஆலிவ் எண்ணெய் தடவி, லேசாக மசாஜ் செய்துவிட்டு பின்னர் மைல்டான பேபி ஷாம்பு பயன்படுத்துங்கள். குழந்தைக்கு மைல்டான பேபி ஷாம்புவை பயன்படுத்துங்கள். இதை கடையிலும் வாங்கலாம். இல்லையெனில் நீங்களே வீட்டில் செய்யலாம். இதையும் படிக்க : 5 நிமிடங்களில் 2 விதமான ஹோம்மேட் பேபி ஷாம்பு செய்வது எப்படி?  குழந்தையின் முடியின் நீளத்தை பொறுத்து நீங்கள் உங்களுக்கு தேவையான ஷாம்புவை கையில் எடுத்துக் கொள்ளலாம். எப்போது குழந்தைக்கு ஷாம்பு பயன்படுத்தினாலும் அதை கையில் சிறிதளவு ஷாம்பு எடுத்து, சிறிது நீர் விட்டு நீர்க்க செய்து பயன்படுத்த வேண்டும். பெரியவர்கள் பயன்படுத்தும் கெமிக்கல்ஸ் நிறைந்த ஷாம்புவை குழந்தைக்கு பயன்படுத்த கூடாது. தலைக்கு ஊற்றும் தண்ணீர் முகத்தில் விழாதபடி, பேபி கேப்கள் வந்துவிட்டன. அதை குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம்.

#2.பேபி டவல்

towel for babies குழந்தையின் தலையில் உள்ள ஈரத்தை, அழுத்தித் தேய்க்க கூடாது. எப்போதும் ஒத்தி ஒத்தி எடுக்க வேண்டும். டர்கி டவல் என்று சொல்கின்ற துண்டைப் பயன்படுத்தினால் ஈரம் விரைவில் உறிஞ்சும். பருத்தி டவல் பயன்படுத்துவதும் நல்லது. காதுகளில் தண்ணீர் போய் இருந்தால் டவலால் ஒத்தி எடுங்கள். காட்டன் பட்ஸ் போன்றவை பயன்படுத்த கூடாது. இதையும் படிக்க : குழந்தைகளைக் குளிப்பாட்டி பராமரிப்பது எப்படி?

#3.சீப்

குழந்தைக்கு எப்போதும் அகலமான பற்கள் கொண்ட சீப்பை பயன்படுத்துங்கள். ஈரம் நீங்கியவுடன் சீப்பால் மெதுவாக குழந்தைக்கு வாரி விட வேண்டும். நீங்கள் சீப்பால் வாருவது குழந்தைக்கு சுகமாக இருக்க வேண்டும். அந்த அளவுக்கு மெதுவாக வார வேண்டும். சுருட்டை முடி அதிகமாக உள்ள குழந்தைகளுக்கு முதலில் கைகளால் மெதுவாக சிக்கலை எடுத்துவிட்டு பின் சீப் போட்டு வாரலாம்.

#4.ஹோம்மேட் கண்டிஷனர்

இந்த ஹோம்மேட் கண்டிஷனர் எல்லாக் குழந்தைகளுக்கும் கிடையாது. அதிக முடி, சுருட்டை முடி, வறண்ட முடி உள்ள குழந்தைகளுக்கு மட்டும் ஹோம்மேட் கண்டிஷனர் பயன்படுத்தலாம். இதை 8 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு செய்யலாம். 2 ஸ்பூன் தேன், 2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து, அதைக் குழந்தையின் முடியில் தடவி, மிதமாக மசாஜ் செய்த பின் மைல்டான ஷாம்புவால் அலசி விடலாம். தேன் முடியில் தடவலாம். தேன் முடியை வெள்ளையாக்கும் என்பது தவறான கருத்து. பழுத்த வாழைப்பழம் பாதி, அதை நன்றாக பேஸ்டாக்கி கொள்ளுங்கள். இதனுடன் 2 ஸ்பூன் தேன், 2 ஸ்பூன் யோகர்ட், 2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் போட்டு கலக்கவும். இதைக் குழந்தையின் முடியில் பூசி 10 நிமிடங்கள் கழித்து, ஷாம்பு போட்டு அலசி விடலாம். அவகேடோ பழத்தின் விழுது 2 ஸ்பூன், தேங்காய்ப் பால் - 3 ஸ்பூன், 2 ஸ்பூன் தேன் கலந்து குழந்தையின் முடியில் தடவி 10 நிமிடங்கள் கழித்து, ஷாம்பு போட்டு அலசி விடலாம்.

#5.கற்றாழை ஜெல் - 9 மாத குழந்தைகள் முதல்...

aloevera gel for babies Image Source : Body Building கடையில் விற்கும் கற்றாழை ஜெல்லை வாங்குங்கள். குழந்தைக்கு தலைக்கு குளிக்கும் முன், எண்ணெய் தடவுவீர்களே அப்போது எண்ணெயுடன் சிறிது கற்றாழை ஜெல்லையும் சேர்த்து கலந்து, குழந்தையின் முடிகளில் பூசி 15 நிமிடங்கள் கழித்து மைல்டான ஷாம்புவால் அலசி விடலாம். ஃப்ரெஷ்ஷான் ஆலுவேரா ஜெல் பயன்படுத்தலாம். இது குளிர்ச்சி என்பதால் மிதமான சூட்டில் உள்ள எண்ணெயில் போட்டு விடுங்கள். பின்னர் கலந்து குழந்தையின் முடியில் பூசி 10 நிமிடங்கள் கழித்து ஷாம்புவால் அலசி விடுங்கள்.

#6.ப்ளோ ட்ரையர்

குழந்தைகளுக்கு முடியை காய வைக்க டவலால் துடைப்பதே சரியான வழி. ப்ளோ ட்ரையர் போன்றவற்றை எக்காரணத்துக்கும் பயன்படுத்த கூடாது. மிகவும் அவசரமான, அவசியமான தருணங்களில் கூல் மோடில் வைத்து முடிக்கும் ட்ரையருக்கு நல்ல இடைவேளி விட்டு முடியை காய வைக்கலாம். இதையும் படிக்க : ஹோம்மேட் ஓட்ஸ் மீல் சோப் தயாரிப்பது எப்படி? 

#7.ஹேர் கட்

சம்மர், வின்டர் போன்ற எந்த காலத்திலும் குழந்தைகள் முடியை அதிகமாக வைத்துக் கொள்ளாமல் அளவாக வைத்துக் கொள்ள வேண்டும். 3 மாதத்துக்கு ஒரு முறை குழந்தைகளுக்கு டிரிம் செய்யலாம். சில குழந்தைகள் முடி வெட்ட பயப்படலாம். அவர்களுக்கு முடி வெட்டினால் அழகாக இருக்கும் என்று சொல்லி சில குழந்தைகளின் போட்டோ காண்பித்து பிறகு சலூனுக்கு அழைத்து செல்லலாம். முடி வெட்டும் போது, தாயோ தந்தையோ அருகில் இருப்பது நல்லது.

#8.முடியின் வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்

hair foods Image Source : Bee Queen Hair வால்நட், பாதாம், கீரைகள், காய்கறிகள், பழங்கள், பருப்பு-பயறு வகைகள், முழு தானியங்கள் ஆகியவை சிறந்தவை. அசைவ உணவுகளில் முட்டை, மீன் ஆகியவை சிறந்தவை. 6 மாதம் முதல் - 9 மாத குழந்தைகளுக்கு சர்க்கரைவள்ளி கிழங்கு கூழ், ராகி கூழ், கேரட் ப்யூரி, பரங்கிகாய் ப்யூரி, கீரை பருப்பு மசியல் போன்ற மசித்த கஞ்சி, கூழ் வகைகளில் கொடுக்க முடி வளர்ச்சி சீராக இருக்கும்.

#9.பாதாம் நல்லது...

தினமும் குழந்தைகளுக்கு 3-5 பாதாம்களைக் கொடுக்கலாம். பல் இல்லாத குழந்தைகளுக்கு, பொடியாக, பவுடராக உணவில் கலந்து தரலாம். 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, காலை உணவுடன் பாதாமை சேர்த்துக் கொடுக்கலாம்.

#10.பேபி ஆயில் - எண்ணெய்

சுத்தமான செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் மிக சிறந்தது. அடுத்ததாக, பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் சிறந்தவை. வீட்டிலே நீங்கள் ஹோம்மேட் பேபி எண்ணெயும் தயாரிக்கலாம். எப்போது எண்ணெய் தேய்த்தாலும் 3-4 நிமிடங்களுக்கு முடியின் வேர்க்கால்களில் எண்ணெய்ப்படுவது போல மசாஜ் செய்துவிடுங்கள். நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், நெல்லிக்காய் சேர்த்த எண்ணெய் ஆகியவையும் நல்லது. இதையும் படிக்க : குழந்தையின் சருமத்தை ஆரோக்கியமாக, பிரகாசமாக மாற்றுவது எப்படி? 

#11.நீர்ச்சத்து - ஹைட்ரேஷன்

குழந்தையின் முடிக்கும் சருமத்துக்கும் முக்கியமானது நீர்ச்சத்து. பழங்கள், கீரைகள், காய்கறிகளில் நீர்ச்சத்து கிடைக்கும். போதுமான அளவு தண்ணீர் கொடுங்கள். வெயில் காலத்தில் கூடுதலாகத் தண்ணீர் கொடுங்கள். ஃப்ரெஷ் ஜூஸ், சாலட், ஸ்மூத்தி ஆகியவைத் தரலாம். யோகர்ட், லஸ்ஸி போன்றவையும் நல்லது.

#12.ஹேர் ஸ்டைல்

hair accessories for babies Image Source : AliExpress அதிக முடி உள்ள குழந்தைகளுக்கு மிகவும் இறுக்கமான ஹேர் ஸ்டைல் செய்ய வேண்டாம். ரப்பர் பேண்ட், கிளிப், பாபி பின்ஸ் ஆகியவை குழந்தையின் தலை, முடியைப் பாதிக்காத முறையில் பயன்படுத்துங்கள்.

#13.விட்டமின் டி

பிறந்த 4 நாள் குழந்தை முதல் பெரிய குழந்தைகள் வரை அனைவருக்குமே விட்டமின் டி சத்து தேவை. இது சூரியனிடமிருந்து கிடைக்கும். 0-6 மாத குழந்தைகளை தினமும் 3-5 நிமிடங்கள் வெயிலில் காண்பிக்கலாம். 6 மாத குழந்தை முதல் 2 வயது வரை 5-10 நிமிடங்கள் வெயிலில் விளையாட விடுங்கள். 2 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளை 10 நிமிடங்களுக்கு மேல் வெயிலில் விளையாட அனுமதியுங்கள். இதையும் படிக்க : குழந்தைகளுக்கான குளியல் பொடி தயாரிப்பது எப்படி?  ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null