பச்சை, கருப்பு, வெள்ளை, பழுப்பு… குழந்தையின் மலம் எந்த நிறத்தில் இருக்க கூடாது?

பச்சை, கருப்பு, வெள்ளை, பழுப்பு… குழந்தையின் மலம் எந்த நிறத்தில் இருக்க கூடாது?

தாய்மார்களுக்கு குழந்தையின் மலத்தின் நிறத்தைப் பார்த்து இது நார்மலா… நார்மல் இல்லையா எனப் பல குழப்பங்கள் வரும். மலத்தின் நிறமும் தோற்றமும் மாறுப்படுவதைப் பார்த்து பயந்து கொண்டே இருப்பார்கள். குழந்தையின் உடல்நலத்தில் பிரச்னையா என்ற கவலையிலும் மூழ்கி விடுவார்கள். குழந்தையின் வளர்ச்சி பருவத்தில் ஏற்பட கூடிய மாற்றங்களை, இளம் தாய்மார்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

குழந்தையின் முதல் மலம்

குழந்தை பிறந்த பின், முதல் முறையாக மலம் கழிப்பதை மெக்கோனியம் என்று சொல்வார்கள். பிசுபிசுப்பான, திக்கான, பச்சையும் கருப்பும் கலந்த நிறத்தில் மலம் வெளியாகும். இது மெக்கோனியம். மியூகஸ், சரும செல்கள், அம்னியாடிக் திரவம் (பனிக்குட நீர்) ஆகியவை கலந்து வெளியேறும். இப்படியான மலம், 2-3 நாளைக்கு வரலாம். முதல் முறையாக குழந்தை தாய்ப்பால் குடித்து, அந்த பால் வயிற்றுக்குள் சென்று சிறுகுடலுக்கு சென்று, சத்துகள் பிரிக்கப்பட்டு பின் அடுத்தக்கட்டத்துக்கு செல்லும். தாய்ப்பால் செரிப்பதுடன், தேவையில்லாதவை வெளியில் மலமாக வரும். வித்தியாசமான நிறங்களிலும் துர்நாற்றமும் இருக்கக்கூடும். இது இயல்பான நிலை. பயம் தேவையில்லை.

மலத்தின் நிறமும் பிரச்னையின் அறிகுறிகளும்…

கருப்பு

தாய்ப்பால், ஃபார்முலா மில்க் குடிக்கும் பிறந்த குழந்தைகளுக்கு வரலாம். முதல் கொஞ்ச நாட்கள் இப்படி வரும், இது நார்மல். வளர்ந்த பிறகு இப்படி வந்தால்தான் பிரச்னை. ஆரம்பத்தில் இந்த நிறத்தில் மலம் வந்தால் கவலைப்பட வேண்டாம்.

மஸ்டர்ட் மஞ்சள்

மெக்கோனியம் என்ற கருப்பு நிற மலம் வெளியேறிய பின்னர், இயல்பு நிலையாக இந்த மஸ்டர்ட் மஞ்சள் நிறத்தில் மலம் வெளியேறும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இந்த நிறத்தில் மலம் வரும். இதுவும் நார்மல்தான். baby poop Image Source: World of Moms இதையும் படிக்க : கசப்பு இல்லாத 5 இனிப்பான சிரப்பால் தீரும் மலச்சிக்கல் பிரச்னை...

அடர்நிற மஞ்சள்

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இந்த நிறத்தில் மலம் வரலாம். மிகவும் நீர்த்த தன்மையில் வந்தால் வயிற்றுபோக்காக இருக்கலாம். அதிகமாக வயிற்றுப்போக்கு குழந்தைக்கு இருந்தால், குழந்தையின் உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடலாம். எனவே, மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

ஆரஞ்சு

தாய்ப்பால், ஃபார்முலா மில்க் குடிக்கும் குழந்தைகளுக்கு ஆரஞ்சு நிறத்தில் மலம் வரலாம். செரிமானமாகாத உணவுகளால் ஏற்படும் பிரச்னை இது. குழந்தைக்கு எளிதில் செரிமானமாகும் உணவுகளைக் கொடுத்து பழகினால் இந்த நிறத்தில் மலம் வெளியேறுவது தவிர்க்கப்படும். இதுவும் நார்மல்தான்.

சிவப்பு

ஏதாவது சிவப்பு நிறத்தில் உணவு கொடுத்தீர்களா எனக் கவனியுங்கள். அல்லது பாலூட்டும் தாய்மார்கள் சிவப்பு நிற உணவுகளை உண்டீர்களா என சிந்தியுங்கள். தக்காளி ஜூஸ், பீட்ரூட் ஜூஸ், சிவப்பு நிற காய்கறிகள் மற்றும் பழங்களின் ப்யூரி கொடுத்து இருந்தாலும் வரும். புதிதாக சிவப்பு நிற உணவுகளைக் குழந்தைகளுக்கு கொடுத்தால் இப்படி மலம் சிவப்பாக வரலாம். 2-3 நாட்கள் கழித்து நார்மல் ஆகிவிடும். நார்மலுக்கு வரவில்லை என்றால் மருத்துவரிடம் காண்பிக்கவும். சிவப்பு நிற மலத்தில் ரத்தம் வெளியேறினால் உடனடியாக மருத்துவரிடம் கொண்டு செல்லுங்கள். ரத்தம் மலத்துடன் கலந்து வந்தால், குழந்தைக்கு பால் அலர்ஜி இருக்கிறதா என ஒருமுறை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

லேசான கருப்பு கலந்த பச்சை நிறம்

ஃபார்முலா மில்க் குடிக்கும் குழந்தைகளுக்கு வரலாம். லேசான கருப்பு கலந்த பச்சை நிறம் மற்றும் மஞ்சள் நிறம் கலந்த மலம் வெளியேறும். இதுவும் நார்மல்தான்.

அடர் பச்சை

பச்சை பட்டாணி, கீரை போன்ற உணவுகள் கொடுத்து இருந்தால், இந்த நிறத்தில் மலம் வெளியாகலாம். இரும்பு சத்து மாத்திரை, சிரப், சப்ளிமெண்ட் கொடுத்தாலும் இந்த நிறத்தில் மலம் வெளியாகலாம். பச்சை நிற உணவுகள் கொடுத்ததால் ஏற்பட்டிருந்தால் மட்டும் நார்மல்.

வெள்ளை மற்றும் சாம்பல் நிறம்

இந்த இரண்டு நிறங்களில் மலம் வெளியேறினால், அவசியம் மருத்துவரிடம் குழந்தையை காண்பிக்கவும். கட்டாயம் மருத்துவரிடம் ஆலோசனை கேளுங்கள். கவனிக்காமல் விட்டுவிட வேண்டாம். இந்த அறிகுறிகள் இருந்தால் மட்டும் உடனடியாக கவனிக்கவும்…

சாக் நிற வெள்ளை நிறம்

குழந்தையின் மலம், சாக் நிற வெள்ளையாக இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் அழைத்து செல்லவும். குழந்தையின் கல்லீரலால் சரியான அளவு பைல் எனும் பொருளை சுரக்க முடியாததால் ஏற்படும் பிரச்னை இது.
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });
blue eyes Image Source: Baby Gooroo

அடர் கருப்பு நிறம்

அடர் கருப்பு நிறத்திலும், ரத்தமும் கலந்து மலம் வந்தால் மருத்துவரிடம் உடனடியாக கொண்டு செல்லுங்கள்.

அடர் சிவப்பு நிறம்

சில மருந்துகள், பீட்ரூட், ஃபுட் கலரிங்காலும் இருக்கலாம். இது பிரச்னை இல்லை. மேற்சொன்ன காரணங்கள் இல்லாமல் தீடிரென்று இப்படி அடர் சிவப்பாக மலம் வந்தால் மட்டும், என்னவென்று கவனிக்கவும். மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது.

கவலைப்பட தேவையில்லை

பச்சை, ஆரஞ்சு, மஞ்சள் நிறத்தில் மலம் வந்தால் பயப்பட ஒன்றும் இல்லை. ஏதாவது சின்ன செரிமான கோளாறுகள்தான் இருக்கும்.

குழந்தையின் மலத்தின் தோற்றம் பார்த்து உடல்நிலையை அறிவது...

மலத்தின் நிறம் பார்த்து குழந்தையின் உடல்நிலையை கண்டுபிடித்தோம். அதுபோல, குழந்தையின் மலத்தின் அமைப்பும் தோற்றமும் கவனிக்கப்பட வேண்டும்.

பிறந்த குழந்தையின் மலத்தின் நிலை

திக்கான, கருப்பு நிற பிசுபிசுப்பான மலம் வரும். இது நார்மல். 2-3 நாளைக்கு இப்படி குழந்தை பிறந்த பின் வெளியேறுவது இயல்புதான். ஒரு வாரம் கழித்தும்கூட மஞ்சள் நிறத்தில், குழந்தை மலம் கழிக்கவில்லை என்றால் மருத்துவரை நாடுங்கள். மலம் திக்காக இல்லாமல் சற்று இளகி இருக்க வேண்டும். போதுமான தாய்ப்பால் குழந்தைக்கு சேரவில்லை என்றால் இயல்பான மலம் வெளியேற்றம் குழந்தைக்கு இருக்காது.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தையின் மலம்

இளகிய மலம் வெளியேறும். விதைகள் போன்ற மலத்தின் அமைப்பு இருக்கலாம். இதனால் இதை வயிற்றுப்போக்கு என நினைக்க வேண்டாம்.

ஃபார்முலா மில்க் குடிக்கும் குழந்தையின் மலம்

உறுதியான மலமாக வெளியேறும். அடர்பழுப்பு, மஞ்சள், பச்சை போன்ற நிறங்கள் கலந்து மலம் வெளியாகலாம். மலச்சிக்கல் இருக்கலாம். எனவே, மலச்சிக்கல் போக வைத்தியம் செய்யுங்கள். மலம் கழிக்க குழந்தை சிரமப்படும். இதையும் படிக்க : குழந்தைகளுக்கு உண்டாகும் மலச்சிக்கலைப் போக்கும் வீட்டு வைத்தியம் green poop Image Source: Thrillist

திட உணவு அறிமுகப்படுத்திய குழந்தையின் மலம்

திட உணவை குழந்தைக்கு கொடுக்க தொடங்கிய பின், மலம் சற்று பெரியவர்கள் போல கெட்டியாக, தடிமனாக வரலாம். இதுவும் நார்மல்தான். மலச்சிக்கல் இருக்கும் குழந்தையின் மலம் உறுதியான மலமாக இருக்கும். ஹார்ட் ஸ்டூல் என்பார்கள். குழந்தை மலம் கழிக்க சிரமப்படும். அழவும் செய்யலாம். சின்ன, சின்ன, கூழாங்கற்கள் போல மலம் வெளியாவது, அடர் பழுப்பு நிறத்தில் மலம் வெளி வருவது போன்றவை மலச்சிக்கலுக்கான அறிகுறி. மலச்சிக்கலைப் போக்க வைத்தியம் பாருங்கள்.

வயிற்றுப்போக்கு

மிகவும் இளகிய, நீர்த்த தன்மை கொண்டது போல வந்தால் அது வயிற்றுப்போக்கு. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு, பொதுவாகவே இப்படியான மலம் வரும். அதனால் வயிற்றுபோக்காக இருக்குமா என சிந்திக்க வேண்டாம்.

மியுகஸ் அல்லது நுரையுடன் வெளியேறும் மலம்

பல் முளைக்கும் போது, சளியை தொடர்ந்து குழந்தைகள் விழுங்கினால் இப்படியான மலம் வெளியேறும். இயல்பற்ற நுரையுடன் மலம் காணப்பட்டால் ஒருமுறை மருத்துவரிடம் சென்று காண்பியுங்கள்.

உணவு துகள்கள் கலந்து வரும் மலம்

சில உணவு துகள்கள் அப்படியே மலத்தில் வெளியேறினால், குழந்தைக்கு செரிமான பிரச்னை இருக்கலாம். குழந்தையின் மலம் மற்றும் தோற்றத்தைப் பார்த்து உடல்நிலையை கண்டுபிடிக்க முடியும். சரியாக கவனியுங்கள். தாய்ப்பால் தருவது பெஸ்ட். குழந்தைக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதையும் படிக்க:  கழிப்பறைப் பயிற்சியை குழந்தைக்கு எப்போது தொடங்கலாம்? ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null