உங்கள் குழந்தையைத் திட்டுவதால் ஏற்படும் 7 பாதிப்புகள்

உங்கள் குழந்தையைத் திட்டுவதால் ஏற்படும் 7 பாதிப்புகள்

குழந்தை இறைவனின் அழகான பரிசு.குழந்தையின் மழலை சிரிப்பும், கொஞ்சும் அழுகையும், மயக்கும் பார்வையும் கோடி ரூபாய் கொடுத்தாலும் ஈடாகாது.எத்தனையோ இன்னல்களுக்கு மத்தியில் உங்கள் குழந்தையின் சிறு புன்னகை உங்களை ஒரு கணம் இந்த உலகையே மறக்கச் செய்யும். உங்கள் குழந்தை எந்த வயதாக இருந்தாலும் சரி, அவன்/அவள் மீது உங்களுக்கு இருக்கும் அதீத அன்பு,உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து துன்பங்களையும், பிரச்சனைகளையும் எளிதில் சமாளிக்க வழி செய்து விடும். bad effects of scolding kids in Tamil இருப்பினும், சில பெற்றோர்கள் குடும்பத்தில், உறவினர்களின் மூலம், அலுவலகத்தில் மற்றும் பிற சூழல்களில் ஏற்படும் மோசமான அனுபவங்களால் தானும் பதற்றம் நிறைந்த வாழ்க்கை வாழ்வதோடு தன் குழந்தைகள் மீதும் அதனைத் திணிக்கத் தொடங்கி விடுகின்றனர்.

குழந்தைகளைப் புரிந்து கொள்ளுங்கள்

குழந்தைகள் சிறு சிறு தவறுகள் செய்வது இயல்பே. அவர்கள் ஒன்றும் பிறப்பதற்கு முன்பே இந்த உலகத்தில் வாழ்வதற்கான விதி முறைகளையும் சட்டங்களையும் கற்றுக் கொண்டு வருவதில்லை. ஏன் முதுமை அடைந்தவர்களும் இத்தனை கால வாழ்க்கை அனுபவத்திற்கு பிறகும் தவறுகள் செய்வது இயல்பே. ஆனால் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தவறு செய்வதை எண்ணிப் பொறுத்துக் கொள்ள முடியாமல் மனம் உடைகின்றனர். அவர்களைத் திருத்த அல்லது அவர்களது தவறுகளை எடுத்துச் சொல்ல முயலாமல் தங்களது அறியாமையால் குழந்தைகளை அதிகம் திட்டத் தொடங்கி விடுகின்றனர். இதனால் உற்சாகத்தோடு வளர வேண்டிய குழந்தைகள் பயத்துடன் வாழ மற்றும் வளரவும் தொடங்குகிறார்கள். பள்ளியில் ஆசிரியர்களுக்குப் பயந்து வீட்டில் பெற்றோர்களுக்குப் பயந்து தாங்கள் செய்வது சரியா அல்லது தவறா என்று தெரியாமல்,அறியாமையிலேயே பிள்ளைகள் தங்களது குழந்தைப் பருவத்தைத் தவறாகக் கடக்கின்றனர். இத்தகைய சூழல் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன.முக்கியமாகப் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் சென்று விடுதல், வீட்டில் தாத்தா, பாட்டி அல்லது வேறு உறவினர்கள் அவர்களுடன் துணையாக இருந்து விளையாடி நேரத்தை மகிழ்ச்சியாகக் கழிக்க இயலாத நிலை,அடுக்கு மாடி குடியிருப்பு வாழ்வு முறையில் வாசல் கதவிற்கு வெளியே எட்டிப் பார்ப்பதும் குற்றம் என்ற சூழலில் வளருதல் என்பன எல்லாம் ஆகும்.

ஏங்கித் தவிக்கும் பிஞ்சுகள்

பெற்றோர்கள் மிகவும் அழுத்தம் நிறைந்த சூழலில் அலுவலக பணிகளைச் செய்து வீடு திரும்புகின்றனர்.குழந்தைகள் தங்களுடன் தன் அம்மா அப்பா நேரம் ஒதுக்க வேண்டும் என்ற ஏங்குகின்றனர். அம்மா அப்பாவுடன் சென்று பேசவே தயங்குகின்றனர்.எங்கு அவர்களுக்குத் தொந்தரவு தந்துவிடுவோமோ என்ற ஐயத்தொடுக் குழந்தைகள் தவிப்பது மிகவும் வருந்தத் தக்க சூழலாகும். காலை முதல் மாலை, ஏன் இரவு வரையிலும் அலுவலக பணிகளை முடித்து விட்டு மன அழுத்தத்துடன் வீடு திரும்பும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வீட்டை அசுத்தமாக வைத்திருப்பது, சரியாகத் தின்பண்டங்களை உண்ணாமல் இருப்பது, வீட்டுப் பாடத்தை முடிக்காமல் இருப்பது என்று பலவற்றையும் கண்டு அவர்கள் மீது கோபம் கொள்கிறார்கள். மேலும் அவர்களைத் திட்டவும் தொடங்குகிறார்கள். அவ்வாறு குழந்தைகளைத் திட்டும் போது அது அவர்களின் மனம்,ஆரோக்கியமான சிந்தனை மற்றும் உடல் வளர்ச்சி ஆகியவற்றை எவ்வளவு பாதிக்கின்றது என்ற உண்மையை அறியாமல் பல பெற்றோர்கள் நாட்களை நகர்த்துகிறார்கள்.

உங்கள் குழந்தையைத் திட்டுவதால் ஏற்படும் 7 பாதிப்புகள் பின்வருமாறு (Bad effects of scolding kids in Tamil)

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளைத் திட்டுவதால் ஏற்படும் பாதிப்புகளைத் தெரிந்து கொண்டால், நீங்கள் மாறுவதோடு, நேர்மறை சக்திகளையும் எண்ணங்களையும் உங்கள் குடும்பத்தில் ஏற்படுத்த முனைந்து ,உங்கள் குழந்தைகளையும் தன்னம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் வளர்க்கும் சூழலை ஏற்படுத்துவீர்கள்.உங்கள் குழந்தைகளைத் திட்டுவதால் ஏற்படும் 7 பாதிப்புகளை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்!

#1.மன உளைச்சல் / மன வருத்தம் (Mental worries)

ஒருவர் நம்மை தொடச்சியாகத் திட்டுவதாக எண்ணிக்கொள்ளுங்கள். அப்போது நம் மனம் சுக்கல் சுக்கலாக உடைந்துவிடும்.இது எதார்த்தமான உண்மை தானே. உங்கள் குழந்தையை நீங்கள் தொடர்ந்து திட்டிக் கொண்டே இருக்கும்போது அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அதிகம் வருத்தம் கொண்ட மனதோடு இருப்பதால் அவர்கள் எப்போதும் சோர்ந்தே காணப் படுவார்கள். இது அவர்களது வளர்ச்சியையும், வயதிற்கு ஏற்ற அறிவையும் பாதிக்கும்.மன உளைச்சலே பல கடுமையான நோய்களுக்கும் முதல் படி என்பதை தயவு செய்து நினைவு கூறுங்கள்.எதிர்காலத்தில் இது தற்கொலை எண்ணத்தைக் கூடத் தூண்டிவிடும்.

#2. உற்சாகம் குறைவது (Lack of enthusiasm)

உங்கள் குழந்தையின் உற்சாகம் குறையத் தொடங்கும். நாம் செய்வது சரியா தவறா என்று புரியாமல் குழப்ப நிலைக்குத் தள்ளப்படுவர். நம் அப்பா அல்லது அம்மா எதற்காகத் திட்டுவார்கள் என்று கூட யூகிக்கத் தெரியாமல் தவிக்கத் தொடங்குவர். நாளடைவில் அவர்களுக்கு எதுவும் செய்ய உற்சாகம் இல்லாமல் போய் விடும்.படிப்படியாக மந்தநிலை அடைவர்.எந்த விசயத்திலும் நாட்டம் இருக்காது.சமவயதில் உள்ள மற்ற பிள்ளைகளுடன் பேச மாட்டார்கள்,கூடி விளையாட மாட்டார்கள்.சில நாட்களிலே தனி உலகத்தில் முடங்கி விடுவர்.இந்த நிலை நம் பிள்ளைகளுக்கு மறந்தும் வர நாம் அனுமதிக்கக் கூடாது.

#3. பாதுகாப்பற்ற உணர்வு (Lack of security)

ஒரு குழந்தை தனக்கு அம்மா அப்பா இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையோடு தான் இந்த உலகத்தில் ஜனித்து வாழத் தொடங்குகிறது. அப்படி இருக்கும் போது, அவர்களே தங்களைத் தொடர்ந்து திட்டிக் கொண்டு இருந்தால்,எப்படி அவர்கள் உங்களிடமிருந்து ஒரு பாதுகாப்பான உணர்வைப் பெறுவார்கள்? குழந்தைகளுக்கு மனதளவில் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துவது பெற்றோர்களின் முக்கிய பங்காகும்.

#4. பொய் சொல்லத் தொடங்குவது (Begin to lie)

இது நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயம். தம் பெற்றோர்களிடமிருந்து திட்டு வாங்காமல் இருக்க, தாங்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த தவற்றை மறைக்க அவர்களிடம் சிறு சிறு பொய்களைக் குழந்தைகள் சொல்லத் தொடங்கி விடுவார்கள். இதற்கு முழு காரணமும் எப்போதும் அச்சுறுத்தும் வகையில் பெற்றோர்கள் நடப்பதுவே ஆகும். உங்கள் குழந்தைகளுடன் நல்ல நண்பனாகத் தோழமையோடு இருக்கப் பழகுங்கள்.அப்போது மட்டுமே அவர்கள் எந்த பிரச்சனையையும் மனம் விட்டுப் பேசுவார்கள்.அவர்களுக்கு அந்த நம்பிக்கையை நாம் தருவது முக்கியம்.

#5. பெற்றோர்கள் மீது பயம் ஏற்படுவது (Afraid of parents)

ஒரு குழந்தை தன் வாழ்க்கையில் எந்த இடத்திலும் பயம் இல்லாமல் இருப்பதுவே ஆரோக்கியமான சூழல்.ஆனால் இன்றைய கால கட்டத்தில் குழந்தை தன் சொந்த வீட்டிலேயே அச்சத்தோடுதான் வளருகின்றது.இது முற்றிலும் கசப்பான உண்மை.அதிக பயம் அவர்கள் தன்னம்பிக்கையை இழக்கச் செய்வதோடு அவர்களை வாழ்க்கையில் தவறான பாதையில் செல்லவும் தூண்டிவிடுகிறது. 6. படிப்பில் ஆர்வம் குறைவது(lack of interest on studies) உங்கள் குழந்தையை நீங்கள் எப்போதும் திட்டிக் கொண்டே இருந்தால் அவர்கள் படிப்பு, கைத்திறன் அல்லது விளையாட்டு போன்ற விசயங்களில் ஆர்வம் குறைந்து காணப்படுவார்கள். தனக்கு உற்சாகத்தைத் தரக்கூடிய பெற்றோர்களே எப்போதும் திட்டிக் கொண்டு இருந்தால் எப்படி அந்தக் குழந்தை ஆர்வத்தோடு இருக்கும்? என்று நீங்கள் சற்று யோசிக்க வேண்டும்.

#7. தன்னம்பிக்கை இழப்பது (Lack of self confidence)

நீங்கள் தொடர்ந்து உங்கள் குழந்தையைத் திட்டிக் கொண்டே இருந்தால் அவன் நிச்சயம் ஒரு நாள் தன்னம்பிக்கையை இழந்து விடுவான். மனதில் நீங்கள் ஒன்றை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையோடு வளரும் குழந்தைகள் மட்டுமே தங்கள் வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி அனைத்து விசயங்களிலும் வெற்றி பெற்று முன்னேறிச் செல்ல முடியும். இல்லை என்றால் தன்னுடைய அடிப்படைத் தேவைகளுக்குக் கூட ஒருவரைச் சார்ந்து வாழ வேண்டிய நிலைக்கு அவன்/அவள் தள்ளப் பட நேரிடும். மேலே குறிப்பிட்டுள்ள விசயங்களை மனதில் கொண்டு உங்கள் குழந்தைகளுடன் நீங்கள் மகிழ்ச்சியாகவும் நல்ல நண்பனாகவும் இருக்க வேண்டும்.அவர்களை எப்போதும் திட்டிக் கொண்டே இருக்காமல்,உங்கள் இல்லத்தில் அன்பைப் படரவிடுங்கள்.எதையும் குணமாகவும்,பக்குவமாகவும் எடுத்துக் கூறுங்கள்.குழந்தைகள் கண்ணாடி மாதிரி,கவனமாகக் கையாளுங்கள்.இறுதியாக நம் அன்பில் விழைந்தவர்களே பிள்ளைகள்,அவர்களையும் அன்பு வெள்ளத்தில் திளைக்கவிடுங்கள். இது அவனை/அவளை ஒரு நல்ல மனிதனாக வளர வழி செய்வதோடு,வெற்றியாளராகவும் மாற்ற உதவும். ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null