வாழைப்பழம் விதங்கள்!வியக்கும் நன்மைகள்!

வாழைப்பழம் விதங்கள்!வியக்கும் நன்மைகள்!

வாழைப்பழங்களில் பல்வேறு விதமான நன்மைகள் உள்ளன முக்கனியில் ஒன்றான வாழைப்பழத்திற்கு, நம்மூரில் சிறப்பான இடம் உண்டு. எந்த நிகழ்ச்சி என்றாலும் அங்கே வாழைப் பழம் இல்லாமல் இருக்காது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இனிமையான ஒரு பலவகை பழம் வாழைப்பழம். இந்த வாழைப்பழங்கள் எல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்கக் கூடியன. என்பது மற்றொரு சிறப்பு.இந்த வாழைப்பழத்தில் பல்வேறு விதமான பிரிவுகள் உள்ளன.
ஒவ்வொன்றும் சுவையிலும் ,மருத்துவக் குணங்களிலும் மாறுபட்டிருக்கும்.

வாழைப்பழத்தில் என்னென்ன சத்துக்கள் நிறைந்துள்ளன?

1.நார்சத்து
2.புரதச்சத்து
3.கொழுப்புச்சத்து
4.மாவுச்சத்து
5.இரும்புச் சத்து
6. சுண்ணாம்புச் சத்து 
7.விட்டமின் ஏ
8.விட்டமின் பி1
9.விட்டமின் பி2
10.மெக்னீசியம்
11.பொட்டாசியம்
12.விட்டமின் சி

என்று பலவகையான சத்துக்கள் நிரம்பிக் கிடக்கின்றன.

விதவிதமான வாழைப்பழ ரகங்கள்

வாழைப்பழங்களில் பல்வேறு விதமான ரகங்கள் உள்ளன. பூவன் வாழைப்பழம், கற்பூரவள்ளி வாழைப்பழம், பச்சை வாழைப்பழம், மொந்தன் வாழைப்பழம், மோரீஸ் வாழைப்பழம், ரஸ்தாளி வாழைப்பழம், செவ்வாழை, மலை வாழைப்பழம்,நேந்திரம் வாழைப்பழம், கதளி என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.வாழையிலே உலகத்தில் தோராயமாக 3,000 வகைகள் உள்ளதாம். அப்படி என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்?

வாழைப்பழங்களின் அபரிமிதமான மருத்துவ நன்மைகள்

வாழைப்பழம் பல்வேறு நன்மைகள் பெற்றது.கீழே சில ரகங்கள் மற்றும் அவற்றின் சிறந்த ஆரோக்கிய பலன்களைப் பற்றி விரிவாகக் காணலாம்.

பூவன் வழைப்பழம்

1.பூவன் பழங்கள் பார்க்க சிறியதாக இருக்கும். இந்த பூவன் வாழை பழங்கள் மிகவும் எளிமையாக கிடைக்கும் ரகம்.

2.மூலநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த பூவன் பழம் சாப்பிட ஏற்றது.

3.வாழைப்பழங்களில் நிறைவான அளவு நார்ச்சத்து உள்ளதால் அது ஜீரணத்திற்கு உதவும்.

4.உடலில் ரத்தம் சிறந்த அளவில் உற்பத்தி ஆகும்.

5.இரவு நேரத்தில் சாப்பாட்டுக்கு பிறகு தினம் ஒரு வாழைப்பழம் எடுத்துக் கொள்வது சிறந்தது.

6.இதன் மூலம் மலச்சிக்கல் ஏற்படாது. குறிப்பாக குழந்தைகளுக்கு தினமும் ஒரு வாழைப்பழம் தருவது மிகவும் சிறந்தது.

ரஸ்தாளி பழம்

1.இந்த பழத்தை கப்பல் வாழைப்பழம் என்றும் கூறுவார்கள்.இந்த பழம் உண்பதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.

2.இந்தப் பழத்தை உண்டால் வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும். இதற்கு காரணம் இதில் நிறைந்துள்ள பல்வேறு சத்துக்கள் தான். இந்த பழத்தில் அளவுக்கு அதிகமான மாவுச்சத்து உள்ளது. உணவு உண்ட உடனே இந்த பழத்தை எடுக்கக்கூடாது.உடலில் மந்த உணர்வு ஏற்பட்டு விடும்.

3.சாப்பாட்டுக்குப் பிறகு சிறிய இடைவெளி விட்டு ரஸ்தாளி பழம் உண்ணலாம்.

4.வாழைப்பழத்தின் மற்றொரு சிறப்பு  இது வயிற்றுப்போக்கை  கட்டுப்படுத்த உதவும்.

5.குழந்தைகளுக்கு வாழைப்பழத்தை தேனில் குழைத்து சாப்பிட தரலாம். அவர்கள் விரும்பி சாப்பிடுவர்.

6.மேலும் சாலட் தயாரிக்கும் பொழுது இந்த வாழைப்பழத்தைத் துண்டுகளாக நறுக்கி சேர்க்கலாம்.

7.இந்த பழம் மன அழுத்தத்தை குறைக்க உதவும்.

8.உடல் எடையைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது.

பச்சை வாழைப்பழம்

1.பச்சை நிறத்துடன் சற்று நீளமாக காணப்படுதால் இந்த வாழைப்பழம் பச்சை வாழைப்பழம் என்று வழங்கப்படுகின்றது.இந்த பச்சை வாழைப்பழத்திற்கு,’பச்சை நாடன்’ என்று மற்றொரு பெயரும் உண்டு.

2.இந்த பழத்தை சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும். வெயில் காலத்தில் சாப்பிட ஏற்ற சிறந்த பழம்.

3.சளி ,இருமல்,ஆஸ்துமா ,சைனஸ் போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்.

4.இந்த பழத்தை சாப்பிடுவதன் மூலம் ஜீரண சக்தி அதிகரிக்கும். மலச்சிக்கல் ஏற்படாது.

கற்பூரவள்ளி வாழைப்பழம்

1.இந்த பழம் அளவில் சிறியதாக காணப்படும். இந்த பழம் தேன் போன்ற தித்திப்பான சுவை கொண்டது. இந்த பழத்தின் சுவைக்கு மயங்காதவர்கள் இருக்க முடியாது.

2.இந்த பழம் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது.

3.இந்த பழத்தை சாப்பிட்டப் பிறகு உடலுக்கு தேவையான சத்து கிடைப்பதால், குழந்தைகள் சுறுசுறுப்போடு காணப்படுவார்கள்.

4.இந்த பழங்களை அதிக நாள் வைத்து சாப்பிட முடியாது. சீக்கிரம் கனியும் தன்மை கொண்டது.

நேந்திரம் வாழைப்பழம்

1.இந்த பழம் கேரள மாநிலத்தில் அதிக அளவு காணப்படுகின்றது. இந்த பழத்தை கொண்டு நேந்திரம் சிப்ஸ் தயாரிக்கப்படுகிறது.

2.நேந்திரம் வாழைப்பழம் உடல் எடையை அதிகரிக்க உதவும். இதில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது.

3.மிகவும் மெல்லிய உடல்வாகு கொண்ட குழந்தைகளுக்கு நேந்திரம் பழம் தரலாம். இதன் மூலம் அவர்களின் உடல் எடை கூடி போஷாக்கு பெறுவார்கள்.

4.மேலும் நேந்திரம் வாழைப்பழம் வயிற்றில் உள்ள குடல் புழுக்களை நீக்கும் குணம் பெற்றது.

மொந்தன் வாழைப்பழம்

1.இந்த பழம் சற்று பெரிய அளவில் காணப்படும். வாழைப்பழங்களில் இந்த பழம் மிகவும் சத்து நிறைந்த ஒரு வகையாகும்.

2.இந்த பழம் உடலுக்கு தேவையான குளிர்ச்சியை வழங்கும் தன்மை கொண்டது.

3.அம்மை நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் இந்த மொந்தன் வாழைப் பழத்தை சாப்பிடுவது உகந்தது.

4.இந்த மொந்தன் வாழைப்பழத்திற்கு மற்றொரு சிறப்பு உண்டு.இது வாந்தியை கட்டுப்படுத்தும் குணம் கொண்டது.

5.இந்தப் பழம் காமாலை நோயைக் குணப்படுத்தவும்உதவும் தன்மை கொண்டது.

மலை வாழைப்பழம்

1.இந்த பழம் சற்று விலை அதிகமானது. இந்த பழத்தின் தனித்துவம் என்னவென்றால் இது மிகவும் ருசியானது ஆகவும் ,மணம் வாய்ந்ததாகவும் இருக்கும். இந்தப் பழத்தை தொடர்ச்சியாக சாப்பிட்டு வர சருமம் பொலிவு பெறும்.

2.இந்த பழத்தில் பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடல் வலிமை அடையும்.

3.ரத்த சோகை நோயால் பாதிப்பால் ஆளானவர்கள் இந்த பழத்தை தினமும் எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் ரத்தம் விருத்தி அடைந்து வியாதி குணமடையும்.

செவ்வாழைப்பழம்

1.இந்த பழத்தின் தோல் சிவப்பு நிறத்தில் காணப்படும். சற்று நீளமாகவும் , தடிமனாகவும் காணப்படும்.

2.இந்த பழத்தில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது.மற்ற பழங்களை விட செவ்வாழைப்பழம் சற்று அதிகமான விலையோடு இருக்கும்.

3.இந்த செவ்வாழைப் பழத்தின் சுவை சற்று வேறுபட்டு இருக்கும். ஒருசிலருக்கு சுவை பிடிக்காது. இருப்பினும் இந்த பழத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளன.

4.இந்த பழத்தில் பல்வேறு விதமான விட்டமின்கள் மற்றும் மினரல்கள் காணப்படுகின்றன.

5.இந்த பழத்தை குழந்தைகள் சாப்பிட்டு வர, அவர்களின் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி நல்ல முறையில் அதிகரிக்க தொடங்கும்.

6.குழந்தையின்மை பிரச்சனையால் தவிக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு செவ்வாழைப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். ஆண்கள் உடல் வலிமை அடையும்.
மேலும் கை கால் நடுக்கம் நரம்பு தளர்ச்சி போன்ற பல்வேறு பிரச்சனைகள் நிவர்த்தியாகும்.

7.பெண்களின் கர்ப்பப்பையில் உள்ள பிரச்சினைகளை தீர்க்கும் ஆற்றல் கொண்டது. இது மாதிரியான பிரச்சனைகள் உள்ளவர்கள் செவ்வாழைப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர குழந்தை பாக்கியம் ஏற்படும்.

8.மாலைக் கண் நோய்,கண் பார்வை பாதிப்பு உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து ஆகும்.

9.இந்த பழம் சிறுநீரகத்தில் கல் ஏற்படாமல் பாதுகாக்கின்றது.

10.சரும நோய்கள் ஏற்படாமல் உதவுகிறது.

பேயன் பழம்

1.இந்த பழத்தை சாப்பிடுவதன் மூலம் வயிற்றில் உள்ள புண்கள் அனைத்தும் குணம் அடைந்து விடும். அல்சர் சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்களுக்கு பேயன் பழம் சாப்பிட உகந்தது.

2.இந்த பழம் சிறுநீரகம் சிறப்பாக செயல்பட உதவும்.

கதளி

1.இந்த வாழைப்பழ வகையில் அதிக அளவு ஆன்டிஆக்சிடன்ட் காணப்படுகின்றது.

2.இந்த வாழைப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் உடலிலுள்ள கழிவுகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும்.

மோரிஸ் வாழைப்பழம்

1.இந்த வாழைப்பழம் சுவையும் சத்தும் நிறைந்தது. இந்த பழம் சற்று நீளமான அமைப்போடு இருக்கும்.

2.பல்வேறு வைட்டமின்கள் பெற்ற இந்த வாழைப்பழம் பெரியவர்கள் வரை சிறியவர்கள் முதல் அனைவரும் சாப்பிட உகந்தது.

3.வாழைப் பழங்களில் அதிக அளவு பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் சத்து காணப்படும். இந்த இரண்டு சத்துக்களும் சீரான இதய செயல்பாட்டிற்கு அவசியமானவை.

4.வாழைப் பழங்களை சாப்பிடுவதன் மூலம் மன அழுத்தம் குறையும் என்றும் நம்பப்படுகிறது.

இந்த பதிவின் மூலம் வாழைப்பழங்களின் பல்வேறு ரகங்களை பற்றியும், அவற்றின் அற்புதமான மருத்துவ குணங்கள் பற்றியும் தெளிவாக அறிந்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். இனி நாள் தவறாமல் இந்த இனிமையான வாழைப்பழம் சாப்பிட்டு பயன்பெறுங்கள்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null