கர்ப்ப காலத்தில் இளநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

கர்ப்ப காலத்தில் இளநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

இளநீர் உலகில் அனைத்து பகுதிகளில் எளிதாகக் கிடைக்கும். சிறிய குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவரும் இளநீரை விரும்பி அருந்துகின்றனர். இதற்கு முக்கிய காரணம் இதன் இனிமையான சுவையும், குளிர்ந்த தன்மையும் தான்.இளநீர் மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் ஒரு பானம்.அதே சமயம் எண்ணில் அடங்க நன்மைகளைப் பெற்றது.

 

சிறந்த பானம் (Best drink)

கோடைக் காலங்களில் மக்கள் அதிகம் இளநீரை அருந்த விரும்புகின்றனர். வருடத்தின் அனைத்து காலங்களிலும் இளநீர் எளிதாகக் கிடைப்பதால் பலர் இதனைத் தினமும் அருந்துகின்றனர். குறிப்பாக இதில் நிறைந்துள்ள சத்துக்களின் காரணங்களால், கர்ப்பிணிப் பெண்கள் அருந்துவது, அவர்கள் நல்ல ஆரோக்கியத்தோடும், பலத்தோடும் இருக்க உதவுகின்றது.  

 

இளநீர் உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகின்றது. குறிப்பாக உங்கள் உடலுக்குத் தேவையான நீர்ச் சத்தை இது பெற உதவுகின்றது. நீங்கள் கோடைக் காலங்கள் மற்றும் உடற்பயிற்சி செய்யும் போது இளநீரை அருந்தினால் விரைவில் சக்தி பெறுவதை உணருவீர்கள். மயக்கம் மற்றும் சோர்வைப் போக்க இளநீர் பெரிதும் உதவுகின்றது. இதில் இயற்கையாகவே தேவையான உப்புச் சத்தும் உள்ளது. இது உடலுக்கு மேலும் பலத்தைத் தருகின்றது.

 

இளநீரில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக எலக்ட்ரோலைட்கள், குளோரைடுகள், பொட்டாசியம், சோடியம் மற்றும் புரதச் சத்துக்கள் உள்ளன. இதில் போதிய அளவு நார்ச் சத்தும் நிறைந்துள்ளது. இது மட்டுமல்லாது கால்சியம், உயிர்ச்சத்து சி மற்றும்  மாங்கனீஸ்சும் உள்ளன.

 

கர்ப்பிணிப் பெண்கள் எப்போது இளநீர் அருந்த வேண்டும்? (When can pregnant women have tender coconut water?)  

பொதுவாக அனைவரும் காலை நேரத்தில் இளநீர் அருந்தினால் நல்ல பலனைப் பெறலாம். அதிலும் குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்கள் காலை நேரத்தில், அதிலும் குறிப்பாகக் காலை 5 மணி முதல் 7 அல்லது 8 மணிக்குள்ளான நேரத்தில் இளநீரை அருந்துவது நல்ல பலனைத் தரும். இதில் அதிகம் எலெக்ட்ரோலைட்டுகள்  மற்றும் பிற சத்துக்கள் இருப்பதால் வெறும் வயிற்றில் இளநீர் அருந்துவதால் எலெக்ட்ரோலைட்டுகள் விரைவாக உடம்பில் சேர்ந்து தேவையான சத்துக்களை எடுத்துக் கொள்ள உதவுகின்றது.

 

கர்ப்பிணிப் பெண்கள் இளநீரை அருந்தலாமா? (Can pregnant women drink tender coconut water?)

கர்ப்பிணிப் பெண்களின் உடலுக்கு எப்போதும் அதிக சக்திகள் தேவை. அவர்கள் விரைவாகச் சோர்ந்து போவார்கள். மேலும் உடலில் உள்ள நீர்ச் சத்தும் குறைந்து கொண்டே இருக்கும். இதற்கு முக்கிய காரணம், கருவில் இருக்கும் குழந்தை சத்துக்களை விரைவாக உறிஞ்சிக் கொள்வதுதான். மேலும் கர்ப்ப காலத்தில் பெண்ணின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதனால் போதுமான அளவு உடலில் நீர்ச் சத்து இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

 

இளநீரில் அதிகம் தாதுச் சத்துக்கள் மற்றும் உயிர்ச்சத்துகள் உள்ளன. இது கர்ப்ப காலத்தில் அந்தப் பெண் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்க உதவும்.

 

கர்ப்பிணிப் பெண்கள் இளநீர் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் (Benefits of drinking tender coconut water during pregnancy)

கர்ப்பிணிப் பெண்கள் இளநீர் அருந்துவதால் எண்ணற்ற பலன்களைப் பெறுகின்றனர். அதிலும் குறிப்பாகக் காலைச் சோர்வு, மலச் சிக்கல் மற்றும் அமிலத்தன்மையால் ஏற்படும் நெஞ்சுக்கரிப்பு போன்ற பிரச்சனைகள் இருக்கும் கர்ப்பிணிப் பெண்கள் கட்டாயம் இளநீரை அருந்த வேண்டும். ஆயுர்வேதத்தில் இளநீர் மலமிளக்கியாகப் பயன் படுத்தப்படுகின்றது. மேலும் இது உடல் சூட்டைக் குறைத்து குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் உதவுகின்றது.இந்த முக்கிய காரணத்தால் இளநீர் அதிகம் அருந்தப் பரிந்துரைக்கப்படுகின்றது.

 

கர்ப்பிணிப் பெண்கள் இளநீரை அருந்துவதால் கிடைக்கும் மேலும் பல நற்பலன்களைப் பற்றித் தெரிந்து கொள்ள, தொடர்ந்து படியுங்கள்:

 

நீர்ச் சத்து (Water)

கர்ப்பிணிப் பெண்களின் உடலில் நீர்ச் சத்து இன்றியமையாதது.ஆக அவர்கள் இளநீர் அருந்துவது நல்லது.இளநீர் உடலின் நீர்ச் சத்து மற்றும் எலெக்ட்ரோலைட்டுகளை அதிகப்படுத்துகின்றது. இளநீரில் சர்க்கரை மற்றும் உப்பு சிறிதளவு இருக்கின்றன.மேலும் சோடியம் மற்றும் புரதச் சத்துக்கள் நிரம்பி உள்ளன.இந்த சத்துக்கள் உடலில் உள்ள நீர்ச் சத்து மற்றும் எலெக்ட்ரோலைடுகளின் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றன.

 

நோய்த் தொற்று தவிர்க்கப்படும் (Prevent from infection)

கர்ப்பிணிப் பெண்களுக்கு எளிதாக நோய்த் தொற்று ஏற்படுகின்றது. மேலும் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் நோய்த் தொற்று எளிதாக ஏற்பட வாய்ப்பு உள்ளது. இளநீரைக் கர்ப்பிணிப் பெண்கள் அருந்துவதால் சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்றுகள் மற்றும் வேறு சில நோய்த் தொற்றுகளும் வராமல் தடுக்கப்படுகின்றன.

 

எடை மேலாண்மை (Weight management)

இளநீரில் கலோரியின் அளவு குறைவாக இருக்கின்றது. மேலும் இதில் நார்ச் சத்து மற்றும் ஒமேகா கொழுப்பு அமிலம் நிரம்பி உள்ளன. அதனால் கர்ப்பிணிப் பெண்கள் இளநீர் அருந்துவதால் உடல் எடை அதிகரித்து விடும் என்ற பயப்படத் தேவை இல்லை.இளநீர் அருந்துவதால் எடை மேலாண்மை அடையும்.

 

தேவையில்லா கொழுப்பு நீங்கும் (Removes unwanted fat)

இளநீரில் கொழுப்புச் சத்து முற்றிலும் இல்லை. இதனால் உடம்பில் கொழுப்பு சேர்ந்து விடுமோ என்ற பயம் தேவை இல்லை. மேலும் இது உங்கள் உடலில் உள்ள தேவையில்லா கொழுப்புகளை அகற்ற உதவுகின்றது.

 

நல்ல ஜீரணத்தை ஏற்படுத்தும் (Helps in digestion)

பெரும்பாலான கர்ப்பிணிப் பெண்களுக்குக் கர்ப்ப காலத்தில் ஜீரணம் சரியாக நடப்பதில்லை. இதனால் பல உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. எனினும், இளநீரைத் தொடர்ந்து அருந்தும் போது, அது அவர்களின் ஜீரண சக்தியை அதிகரித்து சரியாக ஜீரணம் ஏற்பட உதவுகின்றது. மேலும் இளநீர் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளையும் சரி செய்ய உதவுகின்றது.

 

நோய் எதிர்ப்புச் சக்தி (Immunity)

இளநீரில் தேவையான உயிர்ச்சத்துகள், தாதுப் பொருட்கள் மற்றும் நீர்ச்சத்து இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கின்றது. இதனால் கர்ப்ப காலத்தில் எந்த நோயும் தாய் மற்றும் சேய்க்கு ஏற்படாமல் தவிர்க்க இளநீர் உதவுகின்றது. சுரம், மற்றும் வைரஸ் நோய்கள் ஏற்படாமல் தடுக்க இளநீர் உதவுகின்றது.

 

பயிற்சி நேரப் பானம் (Energy drink)

உடற்பயிற்சி செய்யும் போது இளநீரை அருந்துவதால் போதுமான சக்தி கர்ப்பிணிப் பெண்களுக்கு கிடைக்கின்றது. இதனால்  நல்ல ஆரோக்கியத்தைப் பெற வழி வகை செய்கிறது.இளநீர் தேவையான தெம்பைத் தருவதால் உங்கள் உடற்பயிற்சியை எளிமையாகிறது.

 

காலைச் சோர்வை நீங்கும் (Cures tiredness)

பொதுவாகக் கர்ப்பிணிப் பெண்கள் காலையில் எழுந்தவுடன் அதிக சோர்வோடு காணப்படுவார்கள். அந்த நேரத்தில், சோர்வு மற்றும் மயக்கத்தைப் போக்க, இளநீரை அருந்தலாம். அப்படி அருந்தும் போது, இளநீர் மயக்கம் மற்றும் காலைச் சோர்வைப் போக்கி புத்துணர்ச்சியோடு இருக்க உதவுகின்றது.

 

இதய செயல்பாடு (Regulate heart)

இளநீர் இருதயத்தையும், இருதயத்தின் செயல்பாட்டையும் சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றது. குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்களுக்கு இது மிக முக்கியமான ஒன்று. கர்ப்ப காலத்தில் இருதயத்தின் செயல்பாடு சற்று அதிகரிக்கும். இந்த நேரத்தில் இருதயத்தின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்துவது முக்கியம். இளநீரில் பொட்டாசியம் இருப்பதால், இருதய செயல்பாட்டைச் சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றது.

 

சிறுநீரக செயல்பாடு (Regulates Kidney)

இது மட்டுமல்லாது, இளநீர் சிறுநீரகத்தின் செயல்பாட்டையும் சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றது.  இதனால் சிறுநீரகத்தில் கல் மற்றும் வேறு குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.

 

இளநீரைக் கர்ப்பிணிப் பெண்கள் அருந்துவதால், அவர்களுக்குக் கர்ப்ப காலத்தில் தேவைப்படும் பல சத்துகளும்,அதன் மூலமே கிடைத்துவிடும். மேலும் ஒரு இயற்கையான சத்துக்கள் நிறைந்த பானம் என்பதால், கர்ப்பிணிப் பெண்கள் இதை அருந்தினால் அவர்கள் உடல் நலத்திற்கு எந்த தீங்கும் வர வாய்ப்பில்லை.

 

Read Also: ஹீமோகுளோபின் என்றால் என்ன?

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null