குழந்தைகளுக்கு உணவு தர வெள்ளி பாத்திரங்களைப் பயன் படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்

குழந்தைகளுக்கு உணவு தர வெள்ளி பாத்திரங்களைப் பயன் படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்

பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு, அதிலும் குறிப்பாகப் பிறந்த கைக் குழந்தைகளுக்கு சிறப்பாகவும், ஆரோக்கியம் தரக்கூடியதாகவும் இருக்கும் விசயங்களையே செய்ய எண்ணுவார்கள். இந்த வகையில் அவர்கள், தங்கள் குழந்தைகளுக்காகப் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருள் மீதும் அதிகம் கவனம் செலுத்தி, சரியானதைத் தேர்ந்தெடுக்க எண்ணுவார்கள். இந்த வகையில், தங்கள் குழந்தைகளுக்குப் பால் மற்றும் உணவு தரச் சரியான பாத்திரங்களை, அதிலும் குறிப்பாக உடல் நலத்தை அதிகப் படுத்தக் கூடிய பாத்திரங்களைப் பயன்படுத்த எண்ணுவார்கள்.

 

பிறந்த குழந்தைகளுக்குப் பால் மற்றும் மருந்து கொடுக்க பொதுவாக உலோகத்தால் செய்யப்பட்ட சங்கு பயன் படுத்துவார்கள். மேலும் அவர்கள் குவளை, தட்டு என்று பல வகை பாத்திரங்களை உணவு அளிக்கப் பயன்படுத்துவார்கள்.அதே நேரத்தில்  அவர்கள் பயன் படுத்தும் பாத்திரத்தின் உலோக வகையிலும் இந்தக் கால பெற்றோர்கள் அதிகம் கவனம் செலுத்துகின்றார்கள். இந்த வகையில், பித்தளை,நிலை வெள்ளி, வெண்கலம், செம்பு என்று பல வகை உலோக பாத்திரங்கள் இருந்தாலும், வெள்ளி பாத்திரங்களுக்கு அதிகம் முக்கியத்துவமும்,மகத்துவமும் இருக்கத் தான் செய்கிறது.இதற்குப் பல காரணங்கள் உள்ளன.ஆகப் பெற்றோர்களே!வெள்ளி பாத்திரத்தில் உங்கள் குழந்தைக்கு உணவு தருகின்றீர்களா?அதன் நன்மைகளை நீங்கள் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காக மேலே தொடர்ந்து  படியுங்கள்!

 

வெள்ளி பாத்திரங்களை ஏன் குழந்தைகளுக்கு உணவு தரப் பயன் படுத்த வேண்டும்? (Why should we prefer silver utensils  for babies?)

இன்று பல வித விதமான பாத்திரங்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருந்தாலும், வெள்ளி பாத்திரங்களைத் தேர்ந்தெடுக்க சில மருத்துவ காரணங்கள் உள்ளன. அவற்றை நீங்கள் தெரிந்து கொண்டால், நிச்சயம் இதைத் தவிர்க்க மாட்டீர்கள். மற்ற உலோகங்களை ஒப்பிடும் போது வெள்ளி பாத்திரங்கள் சற்று விலை அதிகமானது என்பதில் சந்தேகத்திற்கு இடம் இல்லை. எனினும், நீங்கள் செலவு செய்யும் பணத்திற்கு நிச்சயம் இந்த வெள்ளி பாத்திரங்கள் பலன் தரும் என்பது உண்மை.

 

வெள்ளி பாத்திரங்களில் பயன்பாட்டால் கிட்டும் நன்மைகள் (Benefits of Feeding your Kids in Silver Utensil in Tamil)

ஏன் வெள்ளி பாத்திரங்களைக் குழந்தைகளுக்கு உணவு தரப் பயன் படுத்தலாம்  என்பதற்கு இங்கே சில முக்கிய காரணங்களையும் நன்மைகளையும் காணலாம்.

 

பாக்டீரியாக்களை அகற்றி விடும்(Removes bacteria)

நம் பெரியோர்களின் அறிவுரைப்படி, குழந்தைகளுக்கு வெள்ளி பாத்திரத்தில் உணவு தரும் போது அதிலுள்ள நுண்ணுயிர்கள் முற்றிலுமாக அகற்றப்படும். இதனால், நீங்கள் அதிக சிரமப் பட்டு பாத்திரத்தைச் சுத்தப் படுத்த தேவை இல்லை. சாதாரணமாகத் தண்ணீரில் கழுவினாலே, வெள்ளி பாத்திரம் சுத்தமாகி விடும். இதனால் குழந்தையின் ஆரோக்கியமும் பாதுகாக்கப் படுகின்றது.

 

நோய் எதிர்ப்பு சக்தி (Improves immunity  power)

குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் வெள்ளிக் கிண்ணத்தில் உணவு அளிப்பதால் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுகின்றது. சூடாக உணவை வைத்து தரும் போது, வெள்ளியின் எதிர்ப்பு பாக்டீரியல் பண்புகள் அதிகமாகி உணவில் கலக்கின்றது. இதனால் குழந்தைகளுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகின்றது.

 

நச்சுத் தன்மையும் இருக்காது (No toxicity)

வெள்ளி பாத்திரங்களில் உணவைச் சூடாக வைக்கும் போது எந்த விதமான நச்சுத் தன்மையும், இரசாயன செயல்பாடும் நடக்காது. இது ஏன் என்றால், வெள்ளியைப் பல விதி முறைகளுக்குப் பின்னரே சுத்திகரிக்கப் பட்டு பின் தேவைப்படும் பாத்திரமாக வடிவமைக்கப் பட்டு பயன் பாட்டிற்குத் தருகின்றார்கள். இதனால், இதில் எந்த நச்சுத் தன்மையும் இருக்காது.

 

கெட்டுப் போகாது (Not get spoiled)

வெள்ளி பாத்திரத்தில் வைக்கப் படும் உணவு அதிக நேரத்திற்கு தன் தன்மையை இழக்காமல் புதிதாக இருக்கும். விரைவில் கெட்டுப் போகாது. இதனாலேயே பழங்காலங்களில்,மக்கள் வெள்ளி குடங்களில் தண்ணீர் சேமித்து வைப்பார்கள்.மேலும்  உணவுப் பொருட்களை வெள்ளிப் பாத்திரங்களில் வைப்பார்கள்.ஆக இந்த வெள்ளிப் பயன்பாடு நம் முன்னோர்கள் காலத்திலிருந்தே வழக்கத்திலிருந்துள்ளது.

 

உடல் சூடு சீராகும் (Regulate body temperature)

வெள்ளியின் மற்றுமொரு முக்கியமான பண்பு என்னவென்றால், இதில் உணவை உண்ணும் போது உடல் சூட்டைச் சீராக வைத்துக் கொள்ள உதவும். இதனாலேயே, வெள்ளியை நகை/ஆபரணங்கள் செய்ய அதிகம் பயன் படுத்துகின்றனர்.

 

குழந்தைகள்  பயன்படுத்த ஏற்ற பல வகை வெள்ளி பாத்திரங்கள் (Types of silver utensils for babies)

வெள்ளிக் கிண்ணம் (Silver bowl)

இதில் நறுக்கிய பழம்,கொட்டை வகைகள் என்று பலவகை உணவுகளை வைத்து கொடுக்கலாம். இதில் சூடாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும் எந்த உணவையும் வைத்துக் கொடுக்கலாம்.

 

வெள்ளித் தட்டு (Silver plate)

இதில் பெரும்பாலும் குழந்தைகளுக்கு உணவு, அதாவது சாம்பார் சாதம், பருப்பு சாதம்,நெய் சாதம் போன்ற உணவை வைத்துக் கொடுக்கலாம். இது குழந்தைகள் எளிதாக உணவை எடுத்து உண்ண உதவும்.

 

வெள்ளி தேக்கரண்டி (Silver spoon)

இதைக் குழந்தைகள் உணவைச் சிறிது சிறிதாக எடுத்து உன்ன தோதான வகையில் பயன்படுத்தலாம். இது அவர்கள் எளிதாகவும், கீழே அதிகம் சிந்தாமலும் உண்ணவும் உதவும். மேலும் குழந்தைகள் சுத்தமாக கை கழுவவில்லை என்றாலும், எந்த பயமும் இல்லாமல், இந்த தேக்கரண்டி பயன்படுத்தி உண்ணக் கொடுக்கலாம்.

 

வெள்ளிக் குவளை (Silver tumbler)

இதை நீங்கள் பால், தண்ணீர் மற்றும் பழச் சாறுகள் அருந்தப் பயன் படுத்தலாம். மேலும் பல குவளைகள், குழந்தைகளுக்காகவே உறிஞ்சு குழாய் வைத்து வடிவமைக்கப் பட்டிருக்கும். அதனை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கும் போது, மேலும் விரும்பி பால் அல்லது தண்ணீரை அருந்துவார்கள். இது அவர்களுக்குச் சுவாரசியமாகவும் இருக்கும்.

 

பாலேடு (Small chank shaped silverware)

இதை பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பயன் படுத்துவார்கள். இதில் குழந்தைகளுக்கு, குறிப்பாகப் பிறந்த பால் குடிக்கும் குழந்தைகளுக்கு, பால் மற்றும் மருந்து தரப் பயன் படுத்துவார்கள். இதில் எளிதாகக் குழந்தைகளுக்குப் பால் ஊட்டி விடலாம். கீழே சிந்தி வீணாகும் வாய்ப்பும் இதில் குறைவு.

 

பிற பாத்திரங்கள் போல் அல்லாமல், வெள்ளி பாத்திரங்களைச் சுத்தம் செய்ய சில எளிய மற்றும் பலன் தரக்கூடிய வழிகள் உள்ளன. குறிப்பாக இதனை நீங்கள் எளிதாகப் பாத்திரம் விளக்கும் சோப்பு அல்லது பொடி வைத்து சுத்தம் செய்து விடலாம்.

 

வெள்ளி பாத்திரங்களின் கருமை நீங்க வழி(How to remove tanning?)

நாளடைவில் வெள்ளி பாத்திரம் கருமை நிறத்தில் மாறி விட்டால், அதனை நீங்கள் கொதிக்கும் நீரில் போட்டு, சிறிது சோடாத் தூள் மற்றும் சிறிது எலுமிச்சை பழச் சாறு சேர்த்துத் தேய்த்து விட்டால், கருமையான படிவம் அகன்று விடும். மேலும் பளபளவென்று புது வெள்ளி பாத்திரம் போல மாறிவிடும்.

 

எப்படி குழந்தைகளுக்கு வெள்ளி பாத்திரங்கள் வாங்குவது? (How to buy silver utensils for babies?)

வெள்ளி பாத்திரங்களை வாங்கும் போது நீங்கள் சில விசயங்களை கருத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் அதைத் தெரிந்து கொள்ள உங்களுக்காக சில குறிப்புகள்,

 

  • நல்ல தரமான பொருட்களுக்குப் பெயர் போன பாத்திரக் கடைகளிலிருந்து வாங்கவும்.

 

  • பாத்திரத்தில் கூர்மையான முனை மற்றும் கைப்பிடி இல்லாமல், சற்று மங்கியவாறு இருப்பது நல்லது. இதனால் குழந்தைகளுக்கு அதைப் பயன் படுத்தும் போது எந்த காயமும் ஏற்படாது.

 

  • எளிமையான மற்றும் அதிக வடிவமைப்புகள் இல்லாமல் இருக்கும் பாத்திரங்களை வாங்குவது நல்லது. ஏனென்றால், வடிவமைப்புகளுக்கு இடையே தூசி அல்லது அழுக்கு சேராமல் இருக்கும். இதனோடு சேர்த்து உங்களுக்குப் பாத்திரத்தை எளிதில் சுத்தம் செய்யவும் வசதியாக இருக்கும்.

 

  • மிகக் குறைவான கணம் இல்லாமல், அதே சமயத்தில் அதிக கணம் இருக்கும் பாதிரத்தையும் வாங்கக் கூடாது. உங்கள் குழந்தை எளிதாகக் கையாளக் கூடிய கணத்திலும், விரைவாக நெளிந்து, வளைந்து அல்லது சேதம் அடையும் வகையிலும் இருக்கக் கூடாது

 

  • வெள்ளி பாத்திரத்தின் விலையும் முக்கியம். நீங்கள் பாத்திரத்தை வாங்கும் முன் அதன் விலை உங்கள் வரவு செலவு திட்டத்துள் உள்ளதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

 

  • உங்கள் குழந்தைக்காக நீங்கள் வெள்ளி பாத்திரங்கள் வாங்கும் முன் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அல்லது இதைப் பற்றி சில தகவல்கள் தெரிந்தவர்களிடம் ஆலோசனை பெற்று அதன் பின் சரியான ஒன்றை உங்கள் குழந்தைக்குத் தேர்ந்தெடுக்கலாம்.

 

என்ன பெற்றோர்களே!வெள்ளி பாத்திரத்தில் உங்கள் குழந்தைக்கு உணவு தருவதால் கிடைக்கும் நன்மைகளை நீங்கள் நிச்சயம் அறிந்து கொண்டு இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null