தினமும் குழந்தைகளுக்கு தர வேண்டிய 12 உணவுகள்...

தினமும் குழந்தைகளுக்கு தர வேண்டிய 12 உணவுகள்...

உணவுகள் விஷயத்தில் அதிக கவனம் செலுத்துவது முக்கியம். துரித உணவுகள் கொடி கட்டி பறக்கும் காலம் இது. இவற்றில் சிக்கி உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்ளாமல் ஆரோக்கியமான உணவு முறைகளைப் பின்பற்றி நலமாக வாழ வழி செய்யும் பதிவு இது. தினமும் அல்லது ஒருநாள் விட்டு ஒருநாளாவது தொடர்ந்து சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான உணவுகளைப் பற்றிப் பார்க்கலாம்.

ஆரோக்கியம் அளிக்கும் உணவுகளின் பட்டியல்

#1. தேன்

உலகிலேயே கெடாத பொருள் தேன் என்பார்கள். ஆனால், கலப்படமில்லாத உண்மையாகத் தேனாக இருந்தால் மட்டுமே கெடாது. இக்காலத்தில் சுத்தமான தேன் கிடைப்பது அரிது. எனினும், மலை தேன், கிராமங்களில், ஆர்கானிக் கடைகளில் முடிந்தளவு சுத்தமான தேனாகப் பார்த்து வாங்கி கொள்ளுங்கள். இளஞ்சூடான பாலில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குழந்தைகளுக்கு தரலாம். பால் பிடிக்காதோர், தேனை ஒரு டீஸ்பூன் அளவுக்கு நாள்தோறும் சாப்பிடலாம். ஒரு வயது + குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

#2. தேன் நெல்லி

தேன் நெல்லி என்று கடையில் விற்பார்கள். அல்லது வீட்டிலேயே நீங்களே தயாரித்துக் கொள்ளலாம். நெல்லியை கழுவி சுத்தம் செய்து, ஈரம் நீங்கிய பின், கொட்டை நீக்கி 4 பாகங்களாக கட் செய்து தேனில் ஊற வைத்து வெள்ளை துணியை கட்டி 48 நாட்கள் வீட்டில் வைத்திருக்க வேண்டும். தேன் நெல்லி இருக்கும் பாத்திரம், பீங்கானாக இருக்க வேண்டும். 49-வது நாள் தேன் நெல்லி சாப்பிட தயார். ஆறு சுவைகளையும் கொண்டது நெல்லி. தேனுடன் சேரும் போது சத்துகளையும் சுவையையும் இரண்டு மடங்காக பெருக்கி கொள்கிறது. 1 வயது + குழந்தைகளுக்கு தரலாம்.

#3. மலை வாழைப்பழம்

தினமும் இரவு 7 மணியளவுக்கு ஒரு மலை வாழைப்பழம் கொடுக்கலாம். 6+ மாத குழந்தைகளுக்கு மசித்து கூழ் போல கொடுக்கலாம். 3 வயது + குழந்தைகளுக்கு இரண்டு பழமாகவும் தரலாம். மலச்சிக்கலைப் போக்கும். குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் இதில் உள்ளன.
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });
healthy foods for toddlers இதையும் படிக்க: 6 + மாத குழந்தைகளுக்கான சத்தான உணவு பட்டியல்...

#4. தேங்காய்

தினம் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் அரை டம்ளர் அளவுக்கு கருப்பட்டி கலந்த தேங்காய்ப் பாலை பகலில் குழந்தைகளுக்கு குடிக்க கொடுக்கலாம். 11 மாத + குழந்தைகளுக்குகூட தரலாம். பள்ளி செல்லும் மாணவர்களுக்கு, வெறும் வயிற்றில் ஆரோக்கிய பானமாகவும் அடிக்கடி கொடுக்கலாம். வயிற்று புண்களை ஆற்றும். வயிற்றுப் பகுதிக்கு நல்லது. ஒரு பீஸ் தேங்காயை தினமும் மென்று தின்றாலும் ஆரோக்கியம்தான். சருமத்தின் ஆரோக்கியம் கூடும்.

#5. பேரீச்சை

தினமும் 2 பேரீச்சை சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கும். தேவையான இரும்புச்சத்து கிடைக்கும். ரத்தசோகை நீங்கும். விட்டமின், தாதுக்கள் நிறைந்து உள்ளன. 8+ மாத குழந்தைக்கு டேட்ஸ் சிரப்பாக கொடுக்கலாம். இதையும் படிக்க: ஹோம்மேட் டேட்ஸ் சிரப், டேட்ஸ் ப்யூரி செய்வது எப்படி?

#6. உலர் திராட்சை

தினம் 10-15 உலர்திராட்சை சாப்பிடுவது குடலை சுத்தம் செய்யும். ரத்தத்தை உற்பத்தி செய்யும். ரத்தசோகை நீங்கும். மலச்சிக்கல் தொந்தரவு அகலும். குழந்தைகளுக்கு உலர்திராட்சையை அரைத்து விழுதாக கொடுக்கலாம். 2 வயது + குழந்தைகளுக்கு அப்படியே தரலாம்.

#7. வால்நட்

மனித மூளையின் தோற்றமும் வால்நட்டின் தோற்றமும் ஒன்றுதான். மூளைக்கான சிறந்த உணவு, வால்நட். வால்நட்டில் உள்ள சத்துகள், குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உகந்தது. மூளைத்திறன் செயல்பாட்டுக்கு மிகவும் நல்லது. சிறு குழந்தைகளுக்கு நட்ஸ் பவுடராக தரலாம். இதையும் படிக்க: குழந்தைகளுக்கான ஹோம்மேட் நட்ஸ் பவுடர் செய்வது எப்படி?

#8. மஞ்சள் பால்

இரவில் ஒரு டம்ளர் பாலில், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். வயிற்றில் உள்ள கிருமிகள் அழியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஒரு வயது + குழந்தைகளுக்கு தரலாம். turmeric milk for kids

#9. குல்கந்து

காலை, மாலை சாப்பிட வேண்டிய உணவு இது. தினம் ஒரு டீஸ்பூன் அளவுக்கு சாப்பிடலாம். 2 வயது + குழந்தைகளுக்கு ஏற்றது. சருமம் பொலிவு பெறும். ஊட்டச்சத்துகள் நிறைந்தது. இதையும் படிக்க : கசப்பு இல்லாத 5 இனிப்பான சிரப்பால் தீரும் மலச்சிக்கல் பிரச்னை...

#10. பாதாம்

கண்களின் தோற்றமும் பாதாமின் தோற்றமும் ஒன்று. பார்வைத்திறனை மேம்படுத்தும். சருமத்துக்கு அழகு சேர்க்கும். ஆரோக்கியம் தரும். மூளை வளர்ச்சிக்கு நல்லது. நல்ல கொழுப்பு உடலில் சேரும்.

#11. சத்து மாவு கஞ்சி

தானியங்களால் தயாரித்த சத்து மாவு கஞ்சியை நாள்தோறும் காலை வேளையில் ஆரோக்கியப் பானமாகக் குடித்து வருவது நல்லது. சத்தான, திடமான உணவு காலை வேளையில் சாப்பிடுவதால் அன்றைய நாளுக்கான சக்தி கிடைக்கும். இதையும் படிக்க : ஹோம்மேட் ஹெல்த் மிக்ஸ் பவுடர் செய்வது எப்படி?

#12. கருப்பட்டி அல்லது பனங்கற்கண்டு

தினமும் இவற்றில் ஏதாவது ஒன்றை குழந்தைகளின் ஆரோக்கிய பானத்தில் சேர்த்து வருவது நல்லது. உடலுக்கு குளிர்ச்சி தரும். உடலுக்கு தேவையான இனிப்பு சத்து இதிலிருந்து கிடைக்கும். இந்த இனிப்புகள் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை சேர்க்கும். இதையும் படிக்க: குழந்தைகளுக்கு தரக்கூடாத 10 உணவு வகைகள்... ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null