உணவுகள் மூலம் தாய்ப்பாலை அதிகமாக சுரக்க வைப்பது எப்படி?

உணவுகள் மூலம் தாய்ப்பாலை அதிகமாக சுரக்க வைப்பது எப்படி?

தாய்ப்பால்… இதன் மகிமை அனைத்து பாலூட்டி ஜீவராசிகளுக்கு தெரியும். தாய்மார்களுக்கு, தாய்ப்பால்  கொடுப்பதில் சிரமம் இல்லை. ஆனால், தாய்ப்பால் சரியாக, போதுமான அளவு சுரப்பதில்லை எனக் கவலைக் கொள்கின்றனர். உங்களுக்காகவே இந்தப் பதிவு.

இயற்கையான முறையில் உணவுகள் மூலமாக தாய்ப்பாலை அதிகமாக சுரக்க வைப்பது எப்படி?

நிச்சயம்… உணவு  மூலமாக இயற்கையான முறையில் தாய்ப்பாலை சுரக்க வைக்க முடியும்.

தாய்ப்பால், தாயின் மார்பில் பாலாக சேமிக்கப்படவில்லை. தாயின் மார்பக சுரப்புகளில், கொழுப்பாக (Omega 3) சேமித்து வைக்கப்படுகிறது.

தாய்ப்பால் எப்படி சுரக்கிறது?

தாய்ப்பால் கொடுக்கும்போது, கொழுப்பானது அத்தியாவசிய அமினோ அமிலங்களைக் கொண்ட புரதத்தோடும், ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கால்சியத்தோடு இணைந்து தாய்ப்பால சுரக்கிறது.

தாய்ப்பாலை சுரக்க வைக்க ப்ரொலாக்டின் எனும் சுரப்பானது, மார்பகத்தை தூண்ட ஆக்ஸிடோசின் என்ற பெண் ஹார்மோன் கொழுப்பை பாலாக மாற்றுகிறது.

இந்த தூண்டல் சரியாக நடக்க விட்டமின்கள், புரதம், தாதுக்கள் ஆகிய ஊட்டச்சத்துகள் அவசியம் தேவை.

ஒவ்வொரு முறையும் தாய் தன் குழந்தைக்கு பாலூட்ட வேண்டும் என்று நினைக்கையில், இந்த நிகழ்வு ஏற்படுகிறது.

தாய்ப்பால் கொடுப்பதற்கு, ஹார்மோன்கள் சரியாக இயங்குவதும் கொழுப்பு சரியான அளவில் இருப்பதும் அவசியம். இரண்டில் ஏதாவது ஒன்றுக்கு பிரச்னை என்றாலும் தாய்ப்பால் சுரப்பு சரியாக நிகழாது.

foods to increase breastmilk naturally

Image Source : Credit Modernmom.com

ஒரு நாளைக்கு சுரக்கும் தாய்ப்பாலின் அளவு என்ன?

ஆரோக்கியமான தாயாக இருந்தால், தாய்ப்பால் ஊட்டும் தாயுக்கு ஒரு நாளைக்கு 850 மில்லி அளவுக்கு பால் சுரக்கும்.

எல்லோருக்கு இந்த அளவு தாய்ப்பால் சுரக்காது. அவரவர் உடல்நிலை, மனநிலை பொறுத்து மாறுப்படும். அதனால் பயப்பட வேண்டாம்.

குழந்தை பிறந்தது, அந்தக் குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பால் தாயுக்கு நிச்சயம் சுரக்கும். அதை மனதில் ஏற்றுக் கொண்டு அன்புடன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தாலே போதுமானது.

நாம் ஒல்லியாக இருக்கிறோமே எப்படி பால் சுரக்கும் என உங்களுக்கு நீங்களே குழப்பிக் கொள்ள வேண்டாம். அனைத்து தாய்மார்களுக்கும் தாய்ப்பால் நிச்சயம் சுரக்கும்.

தாய்ப்பால் சரியாக சுரப்பதற்கான உணவுகள் (Foods to increase Breast Milk naturally)

தாய்ப்பால் ஊட்ட 2000 கலோரி சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

  • 8 கோப்பை திரவு உணவுகள் – பால், ஜூஸ், இளநீர், சூப், குடிநீர், நீராகரங்கள் ஆகியவை.
  • பச்சை காய்கறிகள் மற்றும் அடர் பச்சை நிற காய்கறிகள்
  • கீரைகள் அனைத்தும்.
  • மீன் வகைகள்
  • பழங்கள்
  • முழு தானிய உணவு வகைகள்
  • கொழுப்பு நீக்கிய இறைச்சி வகைகள்
  • கொழுப்பு நீக்கிய பசும்பால்     fruits and vegetables to increase breastmilkImage Source : reccentersm.com

இதையும் படிக்க: பிறந்த குழந்தைகளின் இறப்பைத் தடுக்க… தாய் கட்டாயமாக செய்ய வேண்டிய 2 டெக்னிக்

உணவில் அடிக்கடி சேர்க்க வேண்டியவை

  • வெந்தயம்
  • சுரைக்காய்
  • சீரகம்
  • சோம்பு
  • பூண்டு
  • கறுப்பு எள்
  • துளசி டீ
  • பருப்பு வகைகள்
  • நட்ஸ்

பால் மற்றும் பூண்டு

பசும்பாலில் 3-4 பூண்டை சேர்த்து, சிறிது மிளகுத்தூள் சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்க கொடுக்கலாம்.

ஊறவைத்த நிலக்கடலை

6-8 மணி நேரம் ஊற வைத்த நிலக்கடலையை 10-15 நிலக்கடலைகளைச் சாப்பிட்டு வந்தால் நல்ல கொழுப்பு, நார்ச்சத்து, புரதம் ஆகியவை தாய்க்கு கிடைக்கும். இதனால் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

கடலை உருண்டை

நிலக்கடலை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிடலாம். அல்லது தரமான கடலை உருண்டையாக சாப்பிடலாம்.

Pea

Image Source : Credit jeyashriskitchen.com

இதையும் படிக்க: குழந்தைக்கு தாய்ப்பால் தருவதை சரியான முறையில் நிறுத்துவது எப்படி?

எள்ளு உருண்டை

எள்ளில் உள்ள நல்ல கொழுப்பு தாய்ப்பாலை அதிகமாக சுரக்க உதவுகிறது. மேலும், தாயின் உடலில் உள்ள மண்ணீரல், கல்லீரல் ஆகியவற்றை பலப்படுத்துகிறது.

பாதாம் மற்றும் பிஸ்தா

2-3 என்ற அளவில் நாள்தோறும் பாதாம், பிஸ்தா சாப்பிட்டு வர தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். செரிமான பிரச்னை கொண்ட தாய்மார்கள் இதை தேனில் ஊறவைத்து சாப்பிடலாம்.

கஞ்சி

kanji to increase breastmilk

இதையும் படிக்க: யாரெல்லாம் குழந்தைக்கு தாய்ப்பால் தரக்கூடாது? தாய்ப்பால் தருவதை எப்போது நிறுத்தலாம்?

முருங்கை கீரை

முருங்கை கீரையை செய்து மதிய வேளையில் சாப்பிட்டால் தாய்ப்பால் நன்கு சுரக்கும். செரிமான பிரச்னை உள்ள தாய்மார்கள், முருங்கை கீரையை சூப்பாக வைத்துக் குடிக்கலாம். முருங்கை கீரை சாறெடுத்து மிளகு, சீரகம் தட்டிப்போடு கொதிக்க வைத்த பிறகு குடிக்கலாம்.

முருங்கைப் பூ

முருங்கை பூவை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். அதை துவையல் போல செய்து தாய்மார்கள் சாதத்தில் பிசைந்து சாப்பிட தாய்ப்பால் சுரப்பு நிச்சயம் அதிகரிக்கும்.

murangai poo to increast breastmilk naturally

Image Source : Credit flickr.com

இதையும் படிக்க: ஒரு நாளைக்கு எத்தனை முறை, எவ்வளவு நேரம் தாய்ப்பால் கொடுக்கலாம்?

அகத்தி கீரை சாம்பார்

15 நாட்களுக்கு ஒருமுறை அகத்தி கீரை சாம்பார் செய்து சாப்பிடலாம். அகத்தி கீரை பொரியல், அகத்தி கீரை சூப் செய்தும் சாப்பிடலாம். ஆனால் மாதம் 2-3 முறைக்கு மேல் சாப்பிட கூடாது. அளவாக மாதத்துக்கு 2-3 முறை சாப்பிட்டு வந்தாலே தாய்ப்பால் சுரப்பு சீராக இருக்கும்.

பத்தியக் குழம்பு

பிரசவித்த தாயின் வயிறு மற்றும் குடல் பலம் பெற்று, செரிமான சக்தி அதிகரித்து ஊட்டச்சத்துகள் தாய்ப்பாலில் சேர பத்தியக் குழம்பு உதவும்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டியவை

காபி, டீ குடிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். காபி, டீ அதிகம் குடிக்கும் தாய்மார்களின் தாய்ப்பாலை குடிக்கும் குழந்தைகள் சரியாக தூங்காது. இதனால் வளர்ச்சியே தடைப்படும்.

மது, புகைப்பழக்கம் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

பாக்கெட் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், ரெடிமேட் உணவுகள், கேன் ஜூஸ், கூல் டிரிங்க்ஸ் இவற்றையெல்லாம் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

இதையும் படிக்க: தாய்ப்பால் சுரப்பு குறைந்திருப்பதை எப்படி கண்டுபிடிப்பது? தீர்வு என்ன?

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா?  தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null