குழந்தை வெற்றியாளராக உதவும் ஒரு பழக்கம்தான் புத்தகம் படிப்பது. தன் திறமைகளை வளர்த்துக்கொள்ள மிகவும் உதவும். பாட புத்தகங்கள் மட்டும் அல்லாமல் பல புத்தகங்களைக் குழந்தை முதலே பழக்கமாக்கி கொண்டால் எதிர்காலத்தில் சிறப்பானவர்களாக மாற முடியும். தன் ஒட்டுமொத்த வாழ்க்கைக்குமே புத்தகம் வாசிக்கும் பழக்கம் மிகவும் உதவும்.
வாழ்க்கை முழுக்க ஒரு விஷயம் கூட வரும் என்றால், அது இந்த புத்தகம் வாசிக்கும் பழக்கம்தான்.
தான் கற்றதுதான் எந்த சூழலில் இருந்தாலும் பயன்படும்.
புத்தகம் படிப்பது என்பதே ஒரு தனிக்கலை. அறிவின் வாசல் அது.
நிறைய வார்த்தைகளைக் குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள்.
தன்னை மேம்படுத்திக் கொள்வார்கள்.
சிந்தனைகள் சிறப்பானதாக இருக்கும்.
உங்களுக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லையென்றாலும் தன் குழந்தைக்கு அதைப் பழக்கப்படுத்த முயற்சி செய்யலாமே.
எப்படி புத்தகம் படிக்கும் பழக்கத்தை உண்டாக்குவது?
முதலில் புத்தகம் படிப்பது எவ்வளவு நல்ல விஷயம் எனக் குழந்தை முன் யாரிடமாவது பேசுங்கள். அதன் நன்மைகளை அதிகமாகப் பேசுங்கள்.
புத்தக கடைக்கு அழைத்து சென்று, சும்மாவே சுற்றி காண்பியுங்கள்.
விலங்குகள், பறவைகள் உள்ள கதை புத்தகங்களை வாங்கி கொடுக்கலாம்.
வீட்டில் ஒரு அழகான இடத்தை உருவாக்குங்கள். அந்த இடம் புத்தகம் படிப்பதற்காக எனக் குழந்தைக்கு சொல்லுங்கள்.
வெறும் புத்தகத்தை படிக்க வைப்பது மட்டுமே சரி என நினைக்க வேண்டாம். ஹோட்டல் மெனு கார்டு, ரோட்டில் உள்ள நல்ல போஸ்டர், பெயர்கள், வாசகங்கள் போன்றவை கூட படிக்க வைக்கலாம்.
ரோல் மாடல் வைக்க சொல்லுங்கள். நல்ல ஆசான்களை பற்றிக் குழந்தை தெரிந்து கொள்ளட்டும். அவர்களை பற்றிய சின்ன சின்ன விஷயங்களை சொல்லி ஊக்கப்படுத்துங்கள்.
தன்னுடைய நிஜ வாழ்க்கைக்கும் புத்தகம் படிக்கும் பழக்கத்துக்கு ஏன் இவ்வளவு தொடர்பு என சொல்லி கொடுக்கலாம். அதனால் தன் வாழ்க்கை நன்றாக இருக்கும் என சொல்லி தரலாம்.
லோக்கல் லைப்ரரிக்கு குழந்தையை அழைத்து செல்லுங்கள்.
குழந்தை படித்ததை, உங்களுக்கு கதையாக சொல்ல சொல்லுங்கள்.
நகைச்சுவை, அறிவியல், கதை, உண்மைகள் போன்ற பல தலைப்புகளில் குழந்தைக்கு புத்தகங்களை அறிமுகப்படுத்தலாம்.
ஒரு நாளைக்கு ஒரு பக்கமாவது, குழந்தை படிக்க அறிவுறுத்துங்கள்.
சிறு வயதிலே தொடங்கும் பழக்கம் வாழ்நாள் முழுவதும் இருக்கும்.
இதையும் படிக்க: சண்டை போடும் குழந்தைகள்… சரிப்படுத்தும் வழிமுறைகள்…
புத்தகம் படிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
பிடிக்குதோ பிடிக்கவில்லையோ நீங்கள் முதலில் புத்தகம் படிக்கத் தொடங்குங்கள்.
ஒரு புத்தகமாவது படியுங்கள்.
பின் நீங்கள் கற்றுக் கொண்டதை சொல்லி குழந்தைக்கு ஆர்வம் ஊட்டுங்கள்.
குழந்தைக்கு நல்ல உதாரணமாக நீங்கள் மாறுங்கள்.
படிக்கும் குழந்தைகளின் போட்டோகளை காண்பியுங்கள்.
நல்ல நல்ல வீடியோக்கள் - படிப்பது பற்றி இருந்தால், குழந்தைக்கு அதை காண்பிக்கலாம்.
உங்களுக்கு பிடித்தமான புத்தகங்களைப் பற்றி குழந்தையிடம் அதிகம் பேசுங்கள்.
இதையும் படிக்க: குழந்தையின் நகம் கடிக்கும் பழக்கம்… தீர்வுகள் என்னென்ன?
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });
தினமும் செய்ய வேண்டியவை
குழந்தைக்கு தினம் ஒரு கதை சொல்லுங்கள்.
நீதி கதை சொல்லலாம்.
மோட்டிவேஷன் கதை சொல்லலாம்.
நல்ல கருத்துகள் கொண்ட கதைகளை சொல்லலாம்.
இயற்கையைப் பற்றி சொல்லித் தரலாம்.
இதையும் படிக்க: குழந்தையை இந்த இடங்களில் அடிக்கவே கூடாது… ஏன்?
என்னென்ன பலன்கள்? படிக்கும் குழந்தைக்கு கிடைக்கும்?
தன்னுடைய சிந்தனை திறன் ஓங்கும்.
‘அவுட் ஆஃப் பாக்ஸ் திங்கிங்’ கிடைக்கும்.
மற்ற குழந்தைகளைவிட புத்திசாலியாக இருப்பர்.
அவர்களுடைய திறன்கள் அதிகரிக்கும்.
மெச்சூரிட்டி கிடைக்கும்.
சிறிய விஷயங்களுக்கு எல்லாம் துவண்டு போக மாட்டார்கள்.
எதையும் தாங்கும் திறனைப் பெறுவார்கள்.
மன தைரியம் அதிகரிக்கும்.
தன்னம்பிக்கையாளராக மாறுவார்கள்.
தனித்துவம் பெறுவார்கள்.
தங்களுக்கு எது வேண்டும் என அவர்களே மிக சரியாக தீர்மானிப்பார்கள்.
பொறுமை திறன் மேலோங்கும்.
கெட்ட குணங்கள் மறையும்.
நல்ல குணங்கள் பெறுவார்கள்.
பேச்சு திறன் மேலோங்கும்.
மொழி புலமை சிறப்பாக மாறும்.
ஆங்கில புத்தகங்கள் படித்தால், ஆங்கில சரளமாக பேச தொடங்குவார்கள்.
ஆங்கில புலமை சரளமாக இருக்கும். பள்ளியில் பாராட்டு கிடைக்கும்.
எதையும் புரிந்து, சிந்திந்து செயல்படுவார்கள்.
குருட்டு பாடம் படிக்க மாட்டார்கள். புரிதல் திறன் நன்றாக இருக்கும்.
ஒரு நல்ல புத்தகம் ஒரு குழந்தையின் எதிர்காலத்தையே மாற்றக்கூடும். எனவே, உங்கள் குழந்தையை புத்தகம் படிக்கும் பழக்கத்தில் ஈடுபட செய்யுங்கள்.
முக்கிய பிரமுகர்கள் சொன்னவை இது… உங்களுக்காக…
ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது” ஒரு நூலகம் கட்டுவேன்” என்றார் மகாத்மா.
‘படுக்கை அறைக்கு அருகில் படிப்பறை வேண்டும்’ என்றார் சட்ட மாமேதை அம்பேத்கர். அதுமட்டுமல்லாமல் ஆசியாவில் மிகப்பெறும் தனிநபர் நூலகம் இவருடையது தான்.
மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று கேட்ட போது, சற்றும் யோசிக்காமல் புத்தகம்” எனப் பதிலளித்தார், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
“உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!” என்றார் சிக்மண்ட் ஃப்ராய்ட்
“ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான்’’ என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்.
இதையும் படிக்க: அடம் பிடிக்கும் குழந்தையை சமாளித்து சரிசெய்வது எப்படி?
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர
இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
null
null