குழந்தைகளின் மூளை வளர்ச்சி, இயக்கத்துக்கு உதவும் மூளை விளையாட்டுகள்...

குழந்தைகளின் மூளை வளர்ச்சி, இயக்கத்துக்கு உதவும் மூளை விளையாட்டுகள்...

குழந்தைகள் தங்களின் ஐந்து வயதை அடைவதற்குள் 90% அளவுக்கு மூளை வளர்ச்சி பெற்றுவிடும் என ஆய்வார்கள் தெரிவிக்கின்றனர். இந்த வயதில் குழந்தைகளுக்கு மூளைக்கான பயிற்சிகளைக் கொடுத்து குழந்தையை ஊக்கப்படுத்த வேண்டும். வெறும் படிப்பு மட்டுமே குழந்தைகளுக்கு போதாது. இன்னும் நிறைய நல்ல விஷயங்களைக் குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டும். அவை என்னென்ன? இப்பதிவில் பார்க்கலாம்.

குழந்தைகளின் மூளை நன்கு வளர்ச்சி பெறவும் தூண்டப்படுவதற்கு ஏற்றதான பயிற்சிகளை விளையாட்டு மூலம் கொடுக்கலாம்.

பில்டிங் பிளாக்ஸ் விளையாட்டு

ஒரு வயது முடிந்த குழந்தைகளுக்கு தருகின்ற எளிமையான விளையாட்டு இது.

வெவ்வேறு தோற்றத்தில், பல நிறங்களில் காணப்படும் இந்த பிளாக்ஸால் உருவத்தைக் கட்டமைக்க வேண்டும்.

தங்களின் சொந்த கற்பனையால், படைப்பாற்றல் திறமையால் குழந்தைகள் பில்டிங் பிளாக்ஸ் வைத்து ஏதோ ஒரு உருவத்தை செய்வார்கள்.

இது மூளைக்கு சிறந்த பயிற்சியாகும்.

மூளை தூண்டப்படும்.

பசல்ஸ்

கிச்சடி சமையலில் எவ்வளவு சத்துகள் நிரம்பியுள்ளதோ அதுபோல இந்த பசல்ஸ் விளையாட்டில் மூளை தூண்டப்படும் காரணிகள் அமைந்து இருக்கும்.

அவர்கள் ஒரு உருவத்தை வரவைக்க சிந்தித்து, அதை, இதை என மாற்றி மாற்றி மூளைக்கு வேலைத் தருகிறார்கள்.

கண்களும் கைகளும் ஒருங்கிணைப்பாக வேலை செய்யும்.

இந்த பசல்ஸ் வெற்றிகரமாக விளையாடி முடித்தவுடன், குழந்தை வெற்றி பெற்றதற்கான மகிழ்ச்சியைப் பெறும். தன் மேல் நம்பிக்கை வரும்.

வார்த்தை விளையாட்டு

ஃப்ளாஷ் கார்டில் உள்ள வார்த்தைகளைப் பார்த்து, அதற்கு ஏற்ற படத்துடன் பொருத்துவது போன்ற விளையாட்டு இது.

சிங்கம், புலி, மான், மயில் என விலங்குகளின் பெயரை வைத்துப் படத்தை பொருத்துவது, படத்தை வைத்து பெயரை பொருத்துவது போன்ற விளையாட்டு.

எழுத்து திறமை மேலோங்கும்.

நினைவு திறன் அதிகரிக்கும்.

brain games for kids

Image Source : Busy teacher

googletag.cmd.push(function() { googletag.display(‘div-gpt-ad-1528202144377-0’); });

ரோல் ப்ளே

ஆசிரியர், டாக்டர், போலீஸ் என எதாவது ஒரு கதாப்பாத்திரத்தை எடுத்துக் கொண்டு, அந்த கதாப்பாத்திரமாக நடித்து, அவர்கள் செய்வதை செய்து விளையாடும் விளையாட்டு இது.

கற்பனை திறன் வளரும்.

படைப்பாற்றல் திறன் பெருகும்.

டாக்டராக விளையாடி ஊசி போடுவது, மாத்திரை கொடுப்பது போன்ற செல்ல சேட்டைகளை செய்வார்கள்.

இதையும் படிக்க: உங்கள் குழந்தை வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? இதை முதலில் செய்யுங்கள்…

கண்டுபிடி கண்டுபிடி

ஏதாவது ஒரு பேப்பரில் பந்து என எழுதிவிட்டு அதைக் குழந்தையிடன் காண்பிக்கவும்.

அந்தப் பந்தை வீட்டில் தேடி கண்டுபிடிக்க சொல்லலாம்.

இதுபோல வார்த்தை வைத்து பொருளை கண்டுபிடிக்கும் விளையாட்டால் குழந்தைகள் வார்த்தைகளை அதன் சொல் அமைப்பை நன்றாகவே கற்றுக் கொள்வார்கள்.

பாதையைக் கண்டுபிடி

இடதா? வலதா? யூ டர்னா? திரும்ப வேண்டுமா? முன்னே செல்ல வேண்டுமா? எனப் பாதை தேடி கண்டுபிடிக்கும் விளையாட்டு.

மூளைக்கானப் பயிற்சியை அளிக்கும் விளையாட்டு இது.

கற்பனைத்திறன், பிரச்னையை தீர்க்கும் திறன், சிந்திக்கும் திறன் மேலோங்கும்.

கண்களுக்கு நல்ல பயிற்சி.

பென்சில், பேனா பிடித்து வரைவதால் கை மற்றும் கண்கள் ஒருங்கிணைப்பு அதிகரிக்கும்.

கை விரல்களின் நுணுக்கத்தைக் கற்று கொள்வார்கள்.

குழந்தையுடன் பெற்றோரும் சேர்ந்து செய்தால், குழந்தைகள் இன்னும் எளிமையாக அனைத்தையும் கற்று கொள்வர்.

போர்ட் கேம்ஸ்

பாம்பு – ஏணி, லூடோ, செஸ் போன்ற போர்டில் விளையாடும் விளையாட்டுகளால் சிந்திக்கும் திறன் அதிகரிக்கும்.

பிரச்னையை கையாளும் திறன் மேலோங்கும்.

பொறுமை, வெற்றி, தோல்வி ஆகியவற்றைப் புரிந்து கொள்வார்கள்.

ரைம்ஸ் பாடி ஆடுதல்

ரைம்ஸ் பாடல்களை போட்டு பாடிக்கொண்டே நடனமாட சொல்லலாம்.

குதிப்பது, இடுப்பு ஆட்டுவது, கைகளை அசைப்பது போன்ற உடல் தொடர்பான பயிற்சியாகவும் அமையும்.

மகிழ்ச்சியான மனநிலை குழந்தைகளுக்கு கிடைக்கும்.

மறைந்து விளையாடுதல் – ஹைட் அண்ட் சீக்

ஒரு குழந்தை ஒரு இடத்தில் மறைந்து கொண்டு, இன்னொரு குழந்தை மறைந்து கொண்டிருக்கும் குழந்தையை தேடி கண்டுபிடிப்பது.

இந்த விளையாட்டால் உடலுக்கு பயிற்சி. தேடி கண்டுபிடித்து விளையாட்டை முடிக்கும் நோக்கம் கிடைக்கும்.

ஆர்வம் அதிகரிக்கும்.

மூளை திறன் மேம்படும். தேடும்போது மூளைக்கு பயிற்சியாகும்.

இதையும் படிக்க: குழந்தைகளுக்கு என்னென்ன பொம்மைகள் வாங்கி தரலாம்?

எண் விளையாட்டு

இசையை ஒலிக்க செய்துவிட்டு, 1 முதல் 100 வரை சொல்ல வேண்டும். பாட்டை நிறுத்திய உடனே எந்த எண்ணில் இருக்கிறார்களோ அந்த எண்ணை எழுதி காண்பிக்கலாம்.

ஒவ்வொரு முறை பாட்டை நிறுத்தும்போது ஒவ்வொரு குழந்தையும் எண்ணை மாற்றி மாற்றி சொல்லி கொண்டே இருப்பார்கள். இசை நிறுத்தியவுடன் எந்த எண்ணில் விட்டார்களோ அந்த எண்ணை எழுதி காண்பிக்கலாம்.

குழுவாக விளையாடும் திறன் மேலோங்கும்.

எண் பற்றிய அறிவு கிடைக்கும்.

brain games for kids

Image Source : Getjar

மொழி திறன்

உங்களுக்கு தெரியுமா? குழந்தைகளால் தங்களது 3-5 வயதுக்குள்ளேயே 2-3 மொழிகளைக் கற்கும் திறன் இருக்கும்.

தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளை வீட்டில் பேசினால், இரண்டையுமே கற்று கொள்ளும் ஆற்றல் குழந்தைகளுக்கு உண்டு.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என எந்த மொழியையும் சுலபமாக குழந்தைகளால் கற்க முடியும்.

உடலுக்குப் பயிற்சி தரும் விளையாட்டு

ஓடுதல், ஸ்கிப்பிங் விளையாடுதல், குதித்தல், ஓடிப் பிடித்து விளையாடுதல், பந்தை பிடித்தல், கொகோ விளையாடுதல் எனப் பல்வேறு விளையாட்டுகளால் பல்வேறு நன்மைகள் குழந்தைகளுக்கு கிடைக்கும். உடற்பயிற்சி, மனபயிற்சி இவை.

கலை கற்றல்

பாடல், நடனம், இசை, ஓவியம் வரைதல் ஆகிய பல்வேறு கலைகளைக் குழந்தைகளால் கற்க முடியும்.

இவை அனைத்தும் விளையாட்டாக இருப்பின் எளிதில் குழந்தைகள் இதைக் கற்பர்.

கதை புத்தகம் வாசித்தல் அல்லது கதை சொல்லுதல்

நாள்தோறும் ஒரு கதையை சொல்லி குழந்தைகளுக்கு பழக்கப்படுத்தலாம்.

அவர்களையும் புத்தகம் பார்த்துக் கதை சொல்ல சொல்லலாம்.

கதை சொல்லியாகவும் மாறுவார்கள்.

கற்பனை திறன், பேசும் திறன், மொழி திறன் ஆகியவை கிடைக்கும்.

இதையும் படிக்க: பாரம்பர்ய விளையாட்டுகளால் குழந்தைக்கு கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா?  தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null