சில மாதங்களுக்கு முன் வெளியான மலையாள பத்திரிக்கையில் குழந்தைக்கு பாலூட்டியபடி கவர் ஃபோட்டோவில் ஒரு மாடல் வந்திருந்தார். இது தொடர்பாக பல நல்ல கருத்துகளும் (Public Breastfeeding Awareness) சில விமர்சனங்களும் வரத்தான் செய்தன. ஆனால், தாய்ப்பால் தருவதில் என்ன கூச்சம். குழந்தையின் உரிமை தாய்ப்பால், அதைத் தர தாயானவள் ஏன் மூடி மறைத்துக் கொடுக்க வேண்டும் என்ற கேள்வியைத்தான் இப்படம் எழுப்புகிறது?
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், தங்களது மார்பகங்களை மூடியே கொடுக்கின்றனர். தாய்ப்பால் கொடுப்பதில் வெட்கப்படவோ கூச்சப்படவோ தேவையில்லை என்கின்றனர் பல தாய்மார்கள். சிலர் இந்த கருத்தை மறுக்கவும் செய்கின்றனர்.
பத்திரிக்கையில் கவர் போட்டோவில் வந்த கிலு ஜோசஃப் சொன்னது, “பத்திரிக்கைக்கு கவர் ஃபோட்டோவாக தருகிறாயா என்றதற்கு, அடுத்த நொடியே சரி என்று சொன்னேன். இதில் என்ன தவறு இருக்கிறது? என் உடலை நினைத்து நான் பெருமை கொள்கிறேன், இந்த படம் விழிப்புணர்வு ஏற்பட பயன்படட்டும்” என்று சொல்லி இருக்கிறார். கிலு ஜோசஃப் ஒரு கவிஞர், மாடல், நடிகர் மற்றும் இதற்கு முன்னே விமான பணிப்பெண்ணாகவும் வேலை செய்திருக்கிறார்.
Image Source : The News Minute
இதையும் படிக்க: குழந்தைகளின் முதல் 1000 நாட்கள்… மறக்கவே கூடாத 21 விதிமுறைகள்..!
23 வயதான இளம் தாய் ஒருவர், ஓபன் பிரெஸ்ட் ஃபீடிங்கில் தவறில்லை எனும் கருத்தைக் கொண்டவர். தாயான அமிரித்தா கூறுகையில், “நான் மருத்துவமனையில் இருக்கும்போதும் ஓபன் பிரெஸ்ட்ஃபீடிங்தான் கொடுத்தேன். சிலர் இப்படி ஓப்பனாக தாய்ப்பால் கொடுத்தால் பால் வறண்டு போகும் என்றும் சொன்னார்கள். பலர் முகத்தை சுளிக்கவும் செய்தார்கள்.” எனக்கு பல ஆதரவுகளும் சில விமர்சனங்களும் வரத்தான் செய்தன என்கிறார் அமிரித்தா.
ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்ப்பால் என்பது உரிமை. தாய்ப்பால் கொடுப்பதை அவசியமாக்க இப்படி பல விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்துவதை வரவேற்க வேண்டும். தாய்ப்பால் கொடுக்காத குழந்தைகளுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். இவர்களால் மற்றவர்களைப் போல ஆரோக்கியமாக இருக்க முடியாது. அதே சமயம், செயல் திறன், அறிவுத் திறனும் குறைவாக இருக்கும்.
Image Source : The Quint
நடிகை கஸ்தூரியும், தாய்ப்பாலின் முக்கியத்துவத்துகாகவும் விழிப்புணர்வுகாக பிரெஸ்ட் ஃபீடிங் போட்டோ ஷூட் எடுத்தவர். இவர் கூறுகையில், “தாய்ப்பாலை எங்கும் கொடுங்கள், எந்த நேரத்திலும் கொடுங்கள்”.
குழந்தையை தன் கைகளில் வைத்துக்கொண்டு முழுமையான பெண்ணாக மாறிவிட்டேன் என்றார் ஸ்நேகா. தாயான பிறகு என் வாழ்க்கையே மாறிவிட்டது. என் குழந்தையை எல்லா நேரங்களில், எப்போதும் கவனிக்கவே செய்கிறேன். எனக்கென்று நேரம் செலவழிக்க வாய்ப்பை இல்லை என்றாலும் நான் தாயாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். இதனால் எனக்கு பெரும் மகிழ்ச்சியே என்கிறார். என் மகனுடன் இருப்பதில் நேரம் செலவழிப்பதில் எனக்கு மிகவும் திருப்தி. பிரசவத்துக்கு பிறகு ஒவ்வொரு பெண்ணும் சத்தான உணவை சாப்பிடுங்கள். உணவு விஷயத்தில் அலட்சியம் வேண்டாம் என்கிறார் ஸ்நேகா.
என் குழந்தைக்கு நான் தாய்ப்பால் கொடுத்தேன். பிரசவத்துக்கு பிறகான உடலமைப்பு, தாய்ப்பால் தருவதால் பெரிதும் உதவியாக இருந்தது. தாயாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தாய்ப்பால் கொடுப்பதும் தாயாக இருப்பதும் மிகப்பெரிய பொறுப்பாக கருதுகிறேன். தாய்ப்பால் கொடுத்தாலே உடலமைப்பு நன்றாக இருக்கும்.
இதையும் படிக்க: ஃபேஸ்புக் நிறுவனரான ‘மார்க்’ தன் குழந்தைக்கு ‘குவான்டம் ஃபிஸிக்ஸ்’ வாசித்து காட்டுகிறார்… ஏன்?
Image Source : Pinterest, Back in Skinny Jeans
ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகை இவர். ஒருமுறை இவர் தன் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும்படி போட்டோ எடுக்கப்பட்டு, அது பத்திரிக்கையின் கவர் போட்டோவாகவும் வந்தது. இவரும் தாய்ப்பாலின் முக்கியத்துவம் மற்றும் விழிப்புணர்வுக்காக அவர் போட்டோவை கொடுத்தார்.
உலக அழகி… இவர் உடல் எடை அதிகரித்ததில் உலகமே ஆச்சர்யப்பட்டு பார்த்தது. பலரும் இவர் மீண்டும் மெலிய மாட்டார் என்ற கருத்தையும் சொன்னார்கள். ஆனால், உண்மையில் அவர் விமர்சனங்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் தன் குழந்தையின் உடல்நலத்தில் மட்டுமே கவனம் செலுத்தினார். தாய்ப்பால் கொடுத்து குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தினார். இன்று இவரும் இவரது குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கின்றனர்.
தாயான பிறகு தனது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில் கவனம் செலுத்தியவர். அதுபோல சத்தான உணவுகளையும் சாப்பிட்டு அதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் சேர வேண்டும் என தனது டயட்டையே சத்துள்ளதாக மாற்றி கொண்டார்.
தாய்ப்பாலை 6 மாதமாவது தொடர்ந்து கட்டாயம் கொடுக்க வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் சமயத்தில் டயட்டில் இருக்க வேண்டாம். முதலில் குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். அதன் பிறகு உடல் எடையைப் பார்த்துக் கொள்ளலாம். தாய்ப்பாலை சீராக கொடுத்தாலே உடல் எடை குறையும் என்கிறார் இவர்.
தாய்ப்பால் குழந்தைகளின் உரிமை. அவற்றை நாம் எங்கும் எந்த நேரத்திலும் தரலாம்…
இதையும் படிக்க: பிறந்த குழந்தைகளின் இறப்பைத் தடுக்க… தாய் கட்டாயமாக செய்ய வேண்டிய 2 டெக்னிக்
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
null
null