ஒரு நாளைக்கு எத்தனை முறை, எவ்வளவு நேரம் தாய்ப்பால் கொடுக்கலாம்?

ஒரு நாளைக்கு எத்தனை முறை, எவ்வளவு நேரம் தாய்ப்பால் கொடுக்கலாம்?

குழந்தை பிறந்த உடன் மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருப்போம். ஆனால், அதே சமயம் நிறைய கேள்விகளும் சந்தேகங்களும் மனதில் எழும்.

தாய்மார்களுக்கு ஏற்பட கூடிய, தாய்ப்பால் தொடர்பான கேள்விகளுக்கு நாம் இங்கு விடை காண்போம்.

ஏன் குழந்தைக்கு சீம்பால் ஊட்டவேண்டும்? அதன் முக்கியத்துவம் என்ன?

  • சீம்பால் என்பது குழந்தை பிறந்த முதல் 2, 3 நாட்கள் வரை தாயிடம் ஊறும் கெட்டியான மஞ்சள் நிற பால்.
  • தாயிடமிருந்து வரும் சீம்பாலில் விட்டமின் ஏவும், நோய் எதிர்ப்பு சக்தியும், குழந்தை வளர்ச்சிக்கான சத்து பொருட்களும் உள்ளன.
  • சீம்பாலைக் குழந்தைக்கு கொடுப்பதால் வயிற்றுப்போக்கு, நோய் தொற்றுகள் உள்ளிட்ட பல நோய்களிடமிருந்து குழந்தைகளைக் காக்கும்.
  • மேலும், குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை சீம்பால் அதிகரிக்கும்.

ஒரு நாளில் தாய் எத்தனை முறை தன் குழந்தைக்கு பால் கொடுக்கலாம்?

breastfeeding moms

Image Source : Credit medicalnewstoday.com

இதையும் படிக்க: பிறந்த குழந்தைகளின் இறப்பைத் தடுக்க… தாய் கட்டாயமாக செய்ய வேண்டிய 2 டெக்னிக்

  • ஒரு நாளைக்கு ஒரு குழந்தைக்கு 2-3 மணி நேரத்துக்குள் ஒருமுறை பால் ஊட்ட வேண்டும்.
  • அதாவது 8-12 தடவை குழந்தைக்கு பால் ஊட்ட வேண்டும்.
  • மாலையிலும் இரவிலும் பால் ஊறுவது அதிகம் என்பதால் ராத்திரி நேரத்திலும் குழந்தைகளுக்கு பால் ஊட்ட வேண்டும்.

ஒரு தடவையில் எவ்வளவு நேரம் தாய்ப்பால் கொடுக்கலாம்?

  • ஒரு மார்பகத்தில் குழந்தை எவ்வளவு நேரம் குடிக்கிறதோ அதைப் பொறுத்து சுமார் 15-20 நிமிடங்கள் வரை கொடுக்கலாம்.
  • அதன் பிறகு குழந்தைக்கு தேவை என்றால் அடுத்த மார்பகத்திலும் பால் குடிக்க வைக்கலாம்.

ஒரு குழந்தைக்கு பால் போதும் என்பதைத் தாய் எப்படித் தெரிந்து கொள்கிறார்?

  • ஒரு குழந்தை 6-8 முறை சிறுநீர் கழித்தாலோ, 2-3 முறை மலம் கழித்தாலோ குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்கிறது என அர்த்தம்.
  • குழந்தையின் மலத்தின் நிறம் கருப்பிலிருந்து மஞ்சளுக்கு மாறுகிறது என்றால் குழந்தைக்கு போதுமான அளவு பால் கிடைக்கிறது எனப் புரிந்து கொள்ளலாம்.
  • இரண்டு வாரங்களுக்கு பிறகு ஒவ்வொரு வாரமும் 150-200 கிராம் வரை குழந்தையின் எடை அதிகரித்தாலே பால் போதுமாக இருக்கிறது என அறிந்து கொள்ளலாம்.

இதையும் படிக்க: உணவுகள் மூலம் தாய்ப்பாலை அதிகமாக சுரக்க வைப்பது எப்படி?

குழந்தைக்கு வயிற்றுப்போக்கு வந்தால் தாய் என்ன செய்ய வேண்டும்?

mother feeding doubts

Image Source : Credit mommymundo.com

இதையும் படிக்க: யாரெல்லாம் குழந்தைக்கு தாய்ப்பால் தரக்கூடாது? தாய்ப்பால் தருவதை எப்போது நிறுத்தலாம்?

  • வயிற்றுப்போக்கின்போது குழந்தையின் உடலில் தண்ணீர் இழப்பதைத் தடுக்க தாய் இன்னும் அதிக முறை பால் கொடுக்க வேண்டும்.
  • மருத்துவரின் ஆலோசனைப்படி குழந்தைக்கு மருந்து கொடுக்கலாம்.

குழந்தைக்கு புட்டி பாலில் பால் தரலாமா?

  • மார்பகத்துக்கும் பாட்டிலில் பால் குடிப்பதற்கும் இடையே குழந்தை குழம்புகிறது.
  • இதனால், குழந்தை சப்பிக் குடிக்கும் பழக்கத்தைப் பாதிக்கிறது.
  • பாட்டிலில் உள்ள நிப்பிள் எளிதில் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ள இடம். இதனால் குழந்தைக்கு பாதிப்பு உண்டாகும்.
  • புட்டி பாலில் பால் கொடுப்பதைத் தவிர்ப்பதே நல்லது.

வெறும் தாய்ப்பாலை மட்டும் உண்டு குழந்தை எப்படி கோடை காலத்தை சமாளிக்கிறது?

  • குழந்தையின் முதல் 6 மாதத்துக்கு கோடை காலம் உள்ளிட்ட அனைத்து காலத்திலும் தாய்ப்பால் மட்டும்தான் தரவேண்டும்.
  • தாய்ப்பாலில் குழந்தைக்கு தேவையான தண்ணீர் இருக்கிறது. அதனால் எந்த விதமான தண்ணீரும் குழந்தைக்கு தேவையில்லை.

குழந்தை பிறந்த முதல் ஒரு மணி நேரத்தில் தாய் எப்படி பாலூட்ட முடியும்?

  • குழந்தையை மார்பகத்துக்கு நெருக்கமாக வைக்க வேண்டும். குழந்தை சப்பத் தொடங்கும். அதனால் பால் ஊறத் தொடங்கும்.

doubts about breastfeeding

Image Source : Credit singaporemotherhood.com

இதையும் படிக்க: குழந்தைக்கு தாய்ப்பால் தருவதை சரியான முறையில் நிறுத்துவது எப்படி?

முதல் ஆறு மாதத்துக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் எனச் சொல்வதன் காரணம் என்ன?

  • குழந்தையின் முதல் 6 மாதங்களில் அதன் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் தாய்ப்பாலில் உள்ளன.
  • குழந்தைக்கு தண்ணீர், டீ, மற்ற பால் உணவுகள், வேறு வகையான உணவுகள் போன்ற எதுவும் தர கூடாது.

எப்போது குழந்தைக்கு தண்ணீர் தர தொடங்கலாம்?

  • மற்ற உணவுகளைப் போலவே தண்ணீரும் குழந்தைக்கு 6 மாதங்கள் நிரம்பிய பிறகே தர வேண்டும்.
  • அதற்கு முன்னால் குழந்தைக்கு தாய்ப்பால் தவிர வேறு எந்த உணவு தந்தாலும் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கலாம்.
  • நோய் தொற்றுக்கு குழந்தை ஆளாகலாம்.

தாயின் பால் குழந்தைக்கு போதுமானதாக இல்லை, மற்ற பால் வகை உணவுகளைத் குழந்தைக்கு தரலாமா?

  • இல்லை… வேறு எந்த வித உணவு வகைகளும் குழந்தைக்கு தர கூடாது.
  • குழந்தைக்கு தாய்ப்பாலே போதுமானது.

வேலைப் பார்க்கும் தாய்மார்கள் எப்படி குழந்தைக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் கொடுப்பது சாத்தியமாகும்?

  • வேலைக்கு நடுவில் பால் ஊட்ட ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள்.
  • முடியாத நிலை என்றால், தாய்ப்பாலை வெளியேற்றி ஃபிரிட்ஜில் வைத்து குழந்தைக்குத் தேவைப்படும்போது அதன் குளிர் தன்மை நீங்கிய பின் குழந்தைக்கு தர வேண்டும்.

Source: UNICEF

இதையும் படிக்க: தாய்ப்பால் சுரப்பு குறைந்திருப்பதை எப்படி கண்டுபிடிப்பது? தீர்வு என்ன?

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null