முந்தைய காலத்தில் மருத்துவ வசதி, தொழில்நுட்பம், நவீன அறிவியல் அதிகம் இல்லை. ஆனால் அப்போதே சுகப்பிரசவங்கள் அதிகம் இருந்தன. இப்போது அனைத்தும் உள்ளது. மருத்துவ வளர்ச்சி மிக மிக அதிகம். அப்படி இருந்தும் இக்காலத்தில் சிசேரியன்தான் அதிகம்.
நிறையப் பெண்கள் மருத்துவர் சிக்கலாகும் என்று பயமுறுத்திய பின்னர் சிசேரியன் செய்துகொண்டதாக சொல்கிறார்கள். சில மருத்துவமனைகள் (c section complications) பணத்துக்காகவும் செய்கிறார்கள். ஆனால், தாய்மார்களுக்கு சிசேரியன் தங்களுக்கு அவசியம்தானா என எப்படி தெரிந்து கொள்வது… எந்த காரணத்தால்? எந்த சூழ்நிலையில் சிசேரியன் தேவை எனத் தெரிந்துகொண்டால் விழிப்புணர்வு கிட்டும். இதோ உங்களுக்காகவே இந்தப் பதிவு. உண்மையில் யாருக்கு சிசேரியன் தேவை?
கருவின் வளர்ச்சி 39 வாரங்கள் முழுமையடைந்துவிடும். 40-வது வாரத்துக்கு பிறகு பிரசவமாவது நல்லது.
சிலருக்கு 37 - 40 வாரங்களில் பிரசவமாகலாம்.
இந்த 37 - 40 வாரங்களில் தாயுக்கு வலி வந்து, சுகப்பிரசவத்துக்கு வழியில்லாமல், தாய்க்கோ பிறக்கப்போகும் குழந்தைக்கோ ஏதாவது ஆபத்து, சிக்கல்கள் இருந்தால் மட்டும், மிக விரைவில் குழந்தையை வெளியில் எடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அப்போது சிசேரியன் அறுவை சிகிச்சை தேவைப்படும்.
சிசேரியனுக்கு தள்ளப்படும் காரணங்கள்...
குழந்தையின் எடை 4 கிலோவுக்கும் அதிகமாக இருப்பது
கர்ப்பப்பையில் நீர் குறைவாக இருப்பது
தாய்க்கு எச்.ஐ.வி பாதிப்பு இருந்தால் சிசேரியன் செய்யவேண்டும்
கர்ப்பப்பையில் ஏதாவது பெரிய கட்டி இருந்து அகற்றப்பட்டிருந்தால், இது தாயின் உடல்நிலையை பொறுத்துதான். சிலருக்கு சுகபிரசவம்கூட நடக்கலாம்.
இரட்டை குழந்தைகள் இருப்பது
கர்ப்பப்பை சுவரோடு நஞ்சு ஒட்டியிருப்பது
கர்ப்பப்பை வாயில் நஞ்சு இருப்பது
பிரசவ நேரத்தில் குழந்தையின் இதயத் துடிப்பு, ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருப்பது
கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தையின் நிலை மாறுபட்டு இருப்பது
முந்தைய பிரசவம் சிசேரியனாக இருப்பது.
தாய்க்கு இதய நோய் பாதிப்பு, நுரையீரல் பிரச்னை, அதிக ரத்த அழுத்தம், நீரிழிவு, கர்ப்பப்பை வாய் பலவீனமாக இருப்பது
வலி வந்த பின்னும் கர்ப்பப்பை வாய் திறக்காமல் இருப்பது
30 வயதை கடந்தவர்கள்… இது சிலருக்கு மட்டுமே…
இதெல்லாம் காரணங்களாகும்.
Image Source : the hie help center
இதையும் படிக்க : சிசேரியனுக்கு பிறகு தாய்மார்கள் விரைவில் குணமடைய 24 டிப்ஸ்...
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });
தாய்மார்களே சிசேரியன் செய்துகொள்ள முன்வருகிறார்கள்…!
வலி காரணமாக, பயம், பதற்றம், மனப்பிரச்னை காரணமாகத் தாய்மார்களே மருத்துவரிடம் கேட்டு சிசேரியன் செய்து கொள்கிறார்கள்.
சிலர் பிறந்த நாள், திருமண நாள், பண்டிகை நாள், ஜாதகம் பார்த்து செய்வது, தங்களுடைய சொந்த விருப்பத்தில் சில நாளை குறிப்பிட்டு குழந்தையை பெற்றுக்கொள்ள சிசேரியன் செய்வது போன்றவையும் நடக்கின்றன.
ஆடி, சித்திரை மாதங்களில் குழந்தை பிறக்க கூடாது என்ற மூடநம்பிக்கையிலும் சிசேரியன் செய்து கொள்கின்றனர்.
பிரசவ வலிக்கு ரொம்பவே பயப்பட்டும் இப்படி சிசேரியன் செய்து கொள்கின்றனர்.
மேற்சொன்ன காரணங்களும் சிலருக்கு சுகப்பிரசவம் நடக்க வாய்ப்பு இருக்கும். எனினும் அவர்களே தானாக முன்வந்தும் சிசேரியன் செய்துகொள்பவர்களும் உண்டு என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
இதையும் படிக்க : குழந்தைக்கு திட்டமிடும் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டுபவர்களுக்கு மிகவும் அவசியமான ஒரு சத்து!
சிசேரியனுக்கு பிறகு என்னென்ன பிரச்னைகள் வரலாம்?
சிசேரியனால் தாயின் கர்ப்பப்பையும் நீர்ப்பையும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளும். இதனால் அடுத்த குழந்தையும் சிசேரியனாக இருந்தால், அப்போது தாய்க்கு ரத்தப்போக்கு ஏற்படலாம். இதனால், பிரசவம் சிக்கலாகும்.
குறை மாத குழந்தைகளுக்குப் பிரசவ நேரத்திலும், பிறந்த பின் சிறிது நேரம் கழித்தும் மூச்சுத்திணறல் ஏற்படலாம்
வயிற்றினுள் ரத்த ஓட்டத்தில் பிரச்னை வந்து, அதனால் மலக்குடலில் பிரச்னை ஏற்பட்டு ரத்தப்போக்கு ஏற்படுவது. இது சிலருக்கு மட்டுமே.
தொற்றுநோய்கள் வரலாம்.
சிசேரியன் செய்து கொண்ட பெண்களுக்கு, மற்ற பெண்களைவிட உடல்வலி, வயிற்று வலி, தலைவலி, முதுகு வலி அதிகமாக இருக்கும். அதிக உதிரப்போக்கு ஏற்படலாம்.
Image Source : first cry parenting
நஞ்சுக்கொடி பிரசவத்துக்குப் பிறகு கர்ப்பப்பையில் இருந்து தானாகவே பிரித்துவந்துவிட வேண்டும். ஆனால், சிசேரியன் பிரசவத்தில் நஞ்சுக்கொடி கர்ப்பப்பையிலேயே ஒட்டிக்கொள்ளலாம். இதனால் அடுத்த பிரசவத்துக்கு, தாய்க்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு பிரசவம் சிக்கலாகலாம்.
நிறைமாதமான கர்ப்பிணிக்கு 37 - 40 வாரங்களுக்கு முன்பாக சிசேரியன் செய்வது தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். விழிப்புணர்வு தேவை.
நல்ல நேரம், நல்ல நாள் பார்ப்பதைவிட தாயின் ஆரோக்கியத்தையும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் மனதில் வைப்பது நல்லது.
சுகப்பிரசவம் தரும் நன்மைகள் என்ன?
ஒரு ஆய்வில் இவை தெரிய வந்துள்ளது.
சுகபிரசவமான குழந்தைகள்,
எதிர்காலத்தில் உடல் மற்றும் மனதளவில் தைரியமானவர்களாக திகழ்பார்களாம்.
திறமையானவர்களாக இருக்க வாய்ப்புகள் அதிகம்
புத்திக்கூர்மை நிறைந்தவர்கள்
ஆரோக்கியமானவர்கள்
என ஒரு ஆய்வின் முடிவு சொல்கிறது.
இதையும் படிக்க : ஆரோக்கியமான உடல் மற்றும் மனம் கிடைத்திட வாழ்வியல் ரகசியங்கள்...
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர
இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
null
null