கர்ப்பக்காலத்தில் சில உணவுகள் சாப்பிட கூடாது என்று இருக்கிறது. ஆனால், அதைக் காலம் காலமாக சாப்பிட்டும் வருகிறோம். இதனால் என்ன பாதிப்பு இருக்கப் போகிறது என்ற அலட்சியமே உடல்நிலையை மோசமாக்குகிறது. நாம் அறியாமல் செய்வதை காரணம் தெரிந்ததும் தவிர்த்துவிடுவது நல்லது. கர்ப்பம் தரித்தவுடன் காபி, டீ குடிக்க கூடாது. ஏன்?
கர்ப்பக்காலங்களில் ரத்தசோகை ஏற்படவே கூடாது. அப்படி பாதிப்பு ஏற்பட்டால் அதுவே பல பிரச்னைகளுக்கு வாசலாகி விடும்.
ரத்தசோகை இருந்தால் என்ன நடக்கும்?
3 மாதங்களுக்குள்ளேயே கரு கலைந்து விடுதல்.
வளர்ச்சி இல்லாத குழந்தை பிறக்க கூடும்.
குறைமாத பிரசவமும் நடக்கும்.
பிரசவ வலி முன்பாகவே தோன்றிவிடும்.
நச்சு கொடியோ இடம் மாறியும் போகலாம்.
பிரசவத்தின் போது தாய் உயிர் இழக்ககூட நேரலாம்.
குழந்தை மிகவும் பலவீனமாக பிறக்கலாம்.
அதுபோல தாயும் மோசமான நிலைக்குத் தள்ளப்படலாம்.
கர்ப்பமாக இருக்கும்போது தாய்க்கு என்ன தேவை?
இரும்புச்சத்தும் புரதச்சத்தும் குழந்தைக்கு தேவை.
ஃபோலிக் அமிலம் மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரைப்பின் கீழ் சாப்பிட வேண்டும்.
கர்ப்பம் தொடங்கி முதல் 3 மாதங்கள் வரை மருத்துவர் சொல்லும் மாத்திரைகள், உணவு முறையைப் பின்பற்ற வேண்டும்.
இரும்புச்சத்து, கொழுப்பு, புரதம், நார்ச்சத்து ஆகிய முக்கிய சத்துகள் கர்ப்பிணிகளுக்கு தேவை.
இதையும் படிக்க: கரு பத்திரமாக இருக்க கர்ப்பிணிகள் எதையெல்லாம் செய்ய கூடாது?
ஏன் ஃபோலிக் அமிலம் மாத்திரை தேவை?
கர்ப்பம் தரித்த 4-ம் மாதத்திலிருந்து ஃபோலிக் அமிலம் தேவையில்லை என்பதால் மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த மாத்திரைகளைத் தவிர்க்கலாம்.
கருவில் வளரும் குழந்தையின் முதுகெலும்பு வளர்ச்சிக்கு ஃபோலிக் அமிலம் மாத்திரம் அவசியம்.
இரும்புச்சத்தை உடல் கிரகிக்கவும் ஃபோலிக் அமிலம் மாத்திரைகள் உதவுகிறது.
கருவில் குழந்தைக்கும் தாய்க்கும் இடையேயான நச்சுக்கொடி எனும் ப்ளாசன்டா உருவாகவும் உதவுகிறது.
பச்சைக் காய்கறிகளில் ஃபோலிக் அமிலம் சத்து இருக்கும். ஆனால், வேகவைத்து சாப்பிடுவதால் சத்துகள் நீங்கிவிடும்.
முடிந்தவரை காய்கறிகள், பழங்களை சாலட்டாக சாப்பிடுவது நல்லது.
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });
கர்ப்பிணிகள் காபி, டீ அருந்தலாமா?
கர்ப்பமானதும் அல்லது குழந்தைக்கு முயற்சி செய்பவர்கள் காபி, டீ குடிக்காமல் தவிர்க்க வேண்டும்.
காபி, டீ குடித்தால் உடலுக்கு சேர வேண்டிய இரும்புச்சத்தை காபி, டீ சேர விடாமல் தடுத்துவிடும்.
இரும்புச்சத்து தடுக்கப்பட்டால் மேற்சொன்ன பிரச்னைகள் அனைத்தும் தாயுக்கும் சேயுக்கும் வரலாம்.
இதையும் படிக்க: ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளின் நிலை என்ன?
ரத்தசோகை தவிர்க்கும் உணவுகள்
- பேரீச்சம் பழம்
- உலர்திராட்சை
- வெல்லம்
- முட்டை
- அசைவ உணவுகள்
- கீரைகள்
- பச்சை நிற காய்கறிகள் அனைத்தும்
- ஆப்பிள்
- மாதுளை
- அத்தி
இதையும் படிக்க: குழந்தைகள், கர்ப்பிணிகள், பெண்கள்… ரத்தசோகையை 100% விரட்டும் உணவுகள்...
ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இரும்புச்சத்து கிடைக்கும். ரத்தசோகை வராமல் தடுக்கலாம். குழந்தை ஆரோக்கியமானதாகப் பிறக்கும். தாயின் உடல்நலமும் நன்றாக இருக்கும்.
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர
இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
null
null