மீண்டும் அழகான கட்டுடல் சாத்தியமே... 5 ஈஸியான கார்டியோ பயிற்சிகள்...

மீண்டும் அழகான கட்டுடல் சாத்தியமே... 5 ஈஸியான கார்டியோ பயிற்சிகள்...

கார்டியோ பயிற்சிகள் ஒவ்வொருவருக்கும் முக்கியம். அனைத்துத் தாய்மார்களும் கார்டியோ பயிற்சிகளை செய்வது நல்லது. பயிற்சிகள் என்றவுடன் ஏதோ கஷ்டமான பயிற்சிகளாக இருக்குமோ எனப் பயப்பட வேண்டாம். இதெல்லாம் உங்கள் உடலுக்கும் இதயத்துக்கும் இவ்வளவு நன்மைகள் தருமா என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவுதான் இது. மெல்ல மெல்ல உங்களது உடலமைப்பை சீராக்கும். மீண்டும் கட்டுடல் கிடைக்கும். இந்தப் பயிற்சிகளை நீங்கள் குழந்தை பிறந்து 6-8 மாதத்துக்கு பிறகு செய்யத் தொடங்கலாம். கடினமாகப் பயிற்சிகளை இங்கு சொல்ல போவதில்லை எனவே பயப்பட வேண்டாம். சிசேரியன் செய்தவர்கள், மருத்துவரிடம் ஆலோசனை கேட்ட பின் தொடங்கலாம்.

ஏன் கார்டியோ பயிற்சிகள் முக்கியம்?

இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். ஸ்ட்ரெஸ், மனச்சோர்வு, கவலை, பயம் ஆகிய மனம் ரீதியான பிரச்னைகளைப் போக்க உதவும். கல்லீரலில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும். உடலில் அதிக எடை போட விடாமல் தடுக்கும். உங்களது உடலுக்கான ஸ்டாமினாவைத் தரும். தூக்கத்தைத் தரும். தூக்கமின்மையைப் போக்கும். இதயத்தையும் முழு உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் பயிற்சிகள் இவை…

#1. நடைப்பயிற்சி

முதலில் நடக்கத் தொடங்குபவர்கள். ஒரு நாளைக்கு 10 நிமிடங்கள் நடக்கலாம். பூங்கா, தெருக்கள் போன்ற வெளி இடங்களில் நடப்பது நல்லது. ஒரு வாரத்துக்கு 5 முறை நடந்தால்கூட போதும். முதல் வாரம் முடித்த பின், 2-வது வாரம் 20 நிமிடங்கள் நடக்கலாம். 3-வது வாரத்தில், 30 நிமிடங்கள் நடக்கலாம். இப்படி பழகிய பிறகு, தினமும் 30-40 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது நல்லது. கொஞ்ச நேரம் பிரிஸ்க் வாக்கிங், கொஞ்ச நேரம் சாதாரண நடை என மாற்றி மாற்றியும் செய்யலாம். ஆனால், பிரிஸ்க் வாக்கிங்கே நல்லது. உடலில் உள்ள கொழுப்பின் அளவு சீராகும். ரத்த அழுத்தத்தை சீர் செய்யும். புற்றுநோய் வராமல் பார்த்துக்கொள்ள முடியும். உடலில் ரத்த ஓட்டத்தை சீர் செய்யும். சர்க்கரை நோய் வராமல் தடுக்கும். நுரையீரலின் திறன் மேம்படும். இதையும் படிக்க: பிரசவத்துக்கு பிறகு தாய்மார்களின் தொப்பையை குறைப்பது எப்படி?

#2.மிதமான ஓட்டம்

jogging ஜாக்கிங் எனச் சொல்வார்கள். மெதுவாக ஓடுவது என்பதே இந்தப் பயிற்சி. இதய நோய்கள் வராமல் பாதுகாக்கும். கெட்ட கொழுப்பை குறைக்கும். சில வகை புற்றுநோய்களை வராமல் தடுக்கும். தொற்று நோய்களை வராமல் தடுக்கும் அந்த அளவுக்கு நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும். அடிக்கடி சளி, காய்ச்சல் வராது. மனரீதியாக ஒரு தெளிவு கிடைக்கும். ஸ்ட்ரெஸ் தரும் ஹார்மோன்களை சீர் செய்யும். உடல் எடையைக் குறைக்க உதவும். எனர்ஜி அதிகரிக்கும். இதையும் படிக்க: தாய்மார்களுக்கான 5 வெயிட் லாஸ் ஈஸி ரெசிபி
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });

#3.சைக்கிளிங்

குறைந்த முயற்சி அதிக பலன்களைத் தரும். சைக்கிள் வாங்கி ஓட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டிலே சைக்கிள் பெடலிங் வாங்கி கொள்ளுங்கள். அதை ஓட்டினாலே போதும் பலன் கிடைக்கும். 20-30 நிமிடங்கள் நாள்தோறும் வீட்டில் இன்டோர் சைக்கிள் பயிற்சியை செய்யுங்கள். தசைகளுக்கான சிறந்த வொர்க் அவுட் அது. உறுதி தன்மை கிடைக்கும். நீங்கள் செலவழிக்கும் நேரத்துக்கு சரியான ரிசல்டை தரும். மூட்டுக்களில் வளைவுத்தன்மை கிடைக்கும். எலும்புகளை உறுதி செய்யும். கால் வலி, முட்டி வலி வராது. இடுப்பு தசைகள் கரையும். இடுப்பழகைப் பெறலாம்.

#4.நீச்சல்

சிசேரியன் செய்தவர்கள், மருத்துவரிடம் ஆலோசனை கேட்ட பின் தொடங்கலாம். உங்களைப் புதுப்பிக்கும் பயிற்சிதான் இது. ரிலாக்ஸாக்க உதவுவதில் பெஸ்ட். ‘ஃபீல் குட்’ என்பதை நீங்கள் அனுபவிப்பீர்கள். பிரெஸ்ட் ஸ்ட்ரோக், பேக் ஸ்ட்ரோக், சைட் ஸ்ட்ரோக், ஃப்ரீ ஸ்டைல் என அனைத்து நீச்சல் முறைகளும் பலனை அளிக்கும். இதயத் துடிப்பை சீர் செய்யும். தசைகளுக்கு வலுவைத் தரும். உடலுக்கு வளைவுத்தன்மையை அதிகரிக்கும். மூட்டுகளை வலுவாக்கும். உடல் எடையைக் குறைக்கும். எடையை சீராக பராமரிக்க முடியும். உடலின் போஸ்சரை சரிசெய்யும். இதையும் படிக்க: உடல் எடையை விரைவாக குறைக்கும் 3 ஹெல்தி பானங்கள்…

#5.ஏரோபிக்ஸ்

aerobic exercise Image Source :  Studio 30 இதயத்துக்கு நல்லது. எலும்பு உருக்கி நோய்கள் வராமல் பாதுகாக்கும். உணர்வுகளின் மேலாண்மையை வளர்க்கும். நினைவு திறன், தன்னம்பிக்கையை வளர்க்கும். உடல் எடையைக் குறைக்கும். உடலுக்கு சீரான ஆக்சிஜன் பரவ வழி செய்யும். ஸ்டாமினா அதிகரிக்கும். எனர்ஜி அதிகமாக கிடைக்கும். மூச்சு தொடர்பான பிரச்னைகளைக் குணமாக்கும். ஆர்டரி ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கெட்ட கொழுப்பை கரைக்கும். ஆயுட்காலத்தை அதிகரிக்கும். எளிதில் நோய்கள் அண்டாது. மூப்படைதலைத் தாமதப்படுத்தும். வயதான தோற்றம் எளிதில் வராது. லிகாமென்ட்கள் வலுவாகும். கவனத்திறன் ஓங்கும். இதையும் படிக்க: சிசேரியனுக்கு பிறகு தாய்மார்கள் விரைவில் குணமடைய 24 டிப்ஸ்... ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null