கோடைக்காலம் வந்துவிட்டது. வெப்பத்தை சமாளிக்க சத்தான உணவுகள் தேவை. அதில் கேரட்டுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. அதுபோல குழந்தைக்கு பெஸ்ட் உணவு, பேரீச்சை. இவற்றால் செய்யப்பட்ட கேரட் டேட்ஸ் கீர்தான்(Carrot Dates Kheer) இன்றைய பதிவு.
விட்டமின் ஏ, பீட்டாகரோட்டீன், ஆன்டிஆக்ஸிடன்ட், விட்டமின் சி ஆகிய சத்துகள் நிறைந்துள்ளதால் கேரட்டை சத்தான உணவு எனச் சொல்லலாம். பேரீச்சை நார்ச்சத்து, இரும்புச்சத்து மிகுந்தது.
தாய்ப்பால் ஒத்துக்கொள்ளாத குழந்தைகளுக்கு தேங்காய்ப்பால் கொடுத்து வளர்த்த கதைகளை நாம் நிறையவே கேட்டிருப்போம்.
இலங்கை, தாய்லாந்த், மலேசியா, வியாட்னாம் ஆகிய நாடுகளில் பசும்பாலுக்கு பதிலாக தேங்காய்ப் பாலைதான் குழந்தைகளுக்குத் தருகின்றனர்.
பசும்பாலில் உள்ள லேக்டோஸ் எனும் சர்க்கரை தேங்காய்ப் பாலில் கிடையாது என்பதால் செரிமானம் எளிதாகும்.
அதுவும் குழந்தைகளுக்கு முதல் உணவாக கொடுக்ககூடிய அளவுக்கு சத்துகள் நிறைந்துள்ளது. இந்த சுவையான கேரட், பேரீச்சை, தேங்காய்ப் பால் மூலமாக சுவையான முறையில் ரெசிபி செய்வது எப்படி எனப் பார்ப்பாமோ…
இந்த ரெசிபியை 8 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
கேரட் – டேட்ஸ் கீர் (Carrot Dates Gheer) செய்வது எப்படி?
தேவையானவை:
- மெலிதாக அறிந்த கேரட் துண்டுகள் – 3/4 கப்
- பேரீச்சை – 6
- பாதாம் – 10
- முந்திரி – 5
- உலர்திராட்சை – 10
- தேங்காய்ப் பால் – 2 டம்ளர்
- ஏலப்பொடி – ¼ டீஸ்பூன்
- பிரவுன் சுகர் (பாலிஷ் போடாத ஆர்கானிக் சுகர்) – தேவையான அளவு (விருப்பப்பட்டால்)
இதையும் படிக்க: ஹோம்மேட் ஹாட் சாக்லேட் மில்க் செய்வது எப்படி?
செய்முறை:
- பாதாம் பருப்புகளை நன்கு கழுவி, 5 மணி நேரத்துக்கு ஊற வைக்கவும்.
- ஊறிய பாதாம்களை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.
- அதுபோல முந்திரி, உலர்திராட்சை, கொட்டை நீக்கிய பேரீச்சை ஆகியவற்றைச் சேர்த்து, சிறிது தண்ணீரில் 3 மணி நேரத்துக்கு ஊறவிடவும்.
- அறிந்த கேரட் துண்டுகளை கால் கப் தண்ணீரில் வேக விடவும்.
- அடுப்பில் அடிபிடிக்காத பாத்திரத்தை வைத்து, ஒரு டம்ளர் தேங்காய்ப் பால் ஊற்றி, 2 நிமிடங்கள் சூடேற்றி, அதில் சர்க்கரையை சேர்த்துக் கலக்கவும்.
- குறைவான தீயிலே வைத்து 2 நிமிடங்கள் வரை தேங்காய்ப் பாலை கலக்கவும்.
- மிக்ஸியில் வேக வைத்த கேரட்டும் மீதமிருக்கும் தண்ணீரும் சேர்த்து, அதனுடன் ஊறவைத்த பாதாம், முந்திரி, உலர்திராட்சை, பேரீச்சை சேர்த்து ஸ்மூத்தி போல திக்கான பதத்துக்கு அரைக்கவும்.
- பானில் உள்ள தேங்காய்ப் பாலில், அரைத்த கேரட் – டேட்ஸ் விழுதை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
- மேலும், இதில் ஒரு டம்ளர் தேங்காய்ப் பாலும் சேர்த்து, அதனுடன் ஏலப்பொடியும் சேர்க்கவும்.
- 2-3 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.
- மிதமான சூட்டில் குழந்தைகளுக்குப் பரிமாறலாம்.
Image Source : Credit pinterest.com
இதையும் படிக்க: 1 வயது+ குழந்தைகளுக்கு ஏற்ற 5 விதவிதமான அவல் ரெசிபி
குறிப்பு:
- தேங்காய்ப் பாலை கொதிக்க வைக்கத் தேவையில்லை. சூடேற்றினாலே போதும்.
- கேரட்டை வேக வைத்த தண்ணீர் மிச்சமிருந்தால் அதையும் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.
- கேரட்டுக்கு பதிலாக பீட்ரூட், ஆப்பிள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.
- தேவைப்பட்டால் சர்க்கரை சேர்க்கலாம். இல்லையெனில் விட்டுவிடலாம்.
- 8 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைளுக்கு கொடுக்கலாம். பெரியவர்கள் கூட இதைச் சாப்பிடலாம்.
- இதை மாலை 6 மணிக்கு மேல் குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது.
- உங்களுக்கு விருப்பப்பட்ட பிஸ்தா, வால்நட் போன்ற நட்ஸை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் அவற்றை நன்கு ஊறவைத்து அரைத்து விடுவது நல்லது.
- காலை 11, மாலை 4 மணி போன்ற ஸ்நாக்ஸ் இடைவேளியில் செய்து தர ஏற்றது.
- ஆர்கானிக் பசும்பால் கிடைத்தால், தேங்காய்ப் பாலுக்கு பதிலாக சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், பாலை நன்கு காய்ச்சி கொள்ளுங்கள்.
- பசும்பால் சேர்த்தீர்கள் என்றால், ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குத் தரலாம்.
Image Source : Credit pinterest.com
பலன்கள்
- குழந்தைகளின் பார்வைத் திறனை மேம்படுத்தும்.
- நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும்.
- மூளைக்கு மிகவும் நல்லது. மூளை வளர்ச்சிக்கு உதவும்.
- லூக்கெமியா போன்ற புற்று செல்களை வளராமல் தடுக்கும்.
- ஒமேகா 3 பேட்டி அசிட், விட்டமின் இ, நல்ல கொழுப்பு ஆகியவை கிடைக்கும்.
- குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ற உணவு இது.
- விட்டமின் இ, நல்ல கொழுப்பு இருப்பதால் சருமம் பொலிவு பெறும்.
- ஊட்டச்சத்துகள் நிறைந்தது.
- நீண்ட நேரம் பசியைத் தாங்கும்.
- பேரீச்சை, உலர் திராட்சை சேர்ப்பதால் மலமிலக்கியாக செயல்படும்.
- வயிற்று வலி, வயிற்றுப் புண்களை சரி செய்யும்.
- உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் இந்த கேரட்-டேட்ஸ் கீர்.
இதையும் படிக்க: குழந்தைகளுக்கான 6 வகையான கஞ்சி ரெசிபி
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
null
null