எடை குறைவான குழந்தைகள் பிறப்பதற்கான 10 காரணங்கள்

எடை குறைவான குழந்தைகள் பிறப்பதற்கான 10 காரணங்கள்

இன்று பிறக்கும் அதிக குழந்தைகள் சரியான எடை இல்லாமல் பிறக்கின்றன. ஒன்று அதிக எடை அல்லது மிகக் குறைவான எடை கொண்டே பிறக்கின்றன. இதனால் அந்தக் குழந்தைகளுக்குப் பல உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.

எது சரியான எடை? (What is the correct weight of a new born?)

ஒரு குழந்தை எடை குறைந்து பிறப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். எனினும், சராசரியான எடை என்று ஒன்று உள்ளது. ஒரு குழந்தை பிறக்கும் போது குறைந்தது 2500 கிராம் முதல் 3000 கிராம் வரையிலும் இருக்க வேண்டும். இதற்கும் குறைவான எடையோடு பிறக்கும் குழந்தைகள் சில குறைபாட்டுடன் பிறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. நல்ல ஆரோக்கியமான குழந்தை பிறப்பது முக்கியம். அப்படிப் பிறக்கும் குழந்தைகள் வளரும் போது சுறுசுறுப்பாகவும் நல்ல மூளை வளர்ச்சியோடும் வளரும். எனினும் எடை குறைவாகப் பிறந்த குழந்தைகள் (Low birth weight baby) ஆரோக்கியம் இல்லாமல் போய்விடுமோ என்று நீங்கள் பயப்பட வேண்டும். அவ்வாறு பிறக்கும் குழந்தைகளின் உடல் எடையை சில மருத்துவ முயற்சிகளால் ஆரோக்கியமான விதத்தில் அதிகரிக்க முடியும். எனினும், தாயின் கருவில் இருக்கும் போதே சரியான எடையோடு பிறக்கும் குழந்தைகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது அந்தக் குழந்தைகளுக்கு சில உடல் நலக் குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதும் கவனிக்கப்பட வேண்டிய உண்மை தான்.

 

எப்படி எடை குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகள் பாதிக்கப் படுகிறார்கள்? (How low birth weight baby is affected?)

உங்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த மற்றும் நீங்கள் தெரிந்து கொள்ள இங்கே சில குறிப்புகள் தரப்பட்டுள்ளன.நன்கு வளர்ச்சி அடையாமல் எடை குறைவோடு பிறக்கும் குழந்தைகள் சில உடல் நலப் பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். அவற்றில் குறிப்பிடத்தக்கவை என்னவென்று கீழே காணலாம்.
• தொற்று நோய்
• இரத்த சம்பந்தப்பட்ட பிரச்சனை
• சுவாச பிரச்சனை
• இரத்த சர்க்கரை குறைபாடு
• பலவீனமான நோய் எதிர்ப்புச் சக்தி
• நுரையீரல் செயல்பாட்டில் பிரச்சனை

இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சனைகள் எந்த அளவிற்குக் குழந்தையைப் பாதிக்கும் அபாயம் உள்ளது என்பது அந்தக் குழந்தை எவ்வளவு எடை குறைவோடு பிறந்திருக்கிறது என்பதை பொருத்தே இருக்கும்.

 

10 எடை குறைவோடு குழந்தைகள் பிறக்கக் காரணங்கள் (Causes of Low Birth Weight of Babies in Tamil)

கருவுற்றிருக்கும் ஒவ்வொரு தாயும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் இது. இதனை நீங்கள் தெரிந்தும் புரிந்தும் கொண்டால் நல்ல ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுக்கலாம். ஒரு குழந்தை எடை குறைவோடோ அல்லது ஆரோக்கியமாகவோ பிறப்பதற்கு அந்தக் குழந்தையின் தாயே முக்கிய காரணம். அதனால் ஒவ்வொரு கருவுற்றிருக்கும் பெண்ணும் இந்த தகவலைத் தெரிந்து கொள்வது மிக அவசியம்.

1. முழு பிரசவ காலத்திற்கு முன்பே பிறப்பது (preterm birth)

முழுமையாக 37 வாரங்கள் முடிவதற்கு முன்னரே குழந்தை சில சமயம் பிறப்பதால் எடை குறைவு ஏற்படக்கூடும்.அதாவது குழந்தை குறை மாதத்தில் பிறந்துவிடுவது.இதற்குக் காரணம் தாயின் வயிற்றில் வளரும் குழந்தையின் எடை கடைசி மூன்று மாத கர்ப்பகாலத்திலே போதிய எடை வளர்ச்சியை அடையும்.இது நிகழாத போது,குழந்தையின் எடை நிச்சயம் குறைவாகத் தான் காணப்படும்.

2. ஒன்றுக்கும் மேற்பட்ட கரு (more than one fetus)
ஒரு பெண் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கருவில் சுமக்கும் போது இத்தகைய எடை குறைவு ஏற்படக்கூடும். இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் கருத்தரித்திருந்தால் குழந்தைகளுக்குப் போதுமான சத்துணவு கிடைக்காமல் 2500 கிராமிற்கும் கீழே எடை குறையக்கூடும்.ஏனென்றால் ஒரு குழந்தைக்குச் செல்ல வேண்டிய சத்துக்கள் இன்னொரு குழந்தைக்குச் சென்று விடலாம்.அதனால்
ஏதாவது ஒரு குழந்தை பலவீனமாக இருக்கலாம் அல்லது
ஏனைய குழந்தைகளும் சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படலாம்.ஆக
இந்தக் குழந்தைகள் பிறக்கும்போது எடைக் குறைவோடே காணப்படுவார்கள்.

3.அதிக இரத்தக் கொதிப்பு ஏற்படுதல் (mother with high blood pressure)
கருவுற்றிருக்கும் தாய் அதிக இரத்தக் கொதிப்போடு பிரசவ காலத்திலிருந்தால் அது குழந்தையைப் பாதிக்கக் கூடும். இதனால் குழந்தை குறைந்த எடையோடு பிறக்கக்கூடும்.இதனைத் தவிர்க்கத் தாய் கர்ப்பகாலத்தில் அமைதியான மனநிலையோடு இருப்பதோடு ஆரோக்கியமான உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கூடுதலாக மருத்துவரின் கண்காணிப்பில் இருப்பதும் நல்லது.அதே கருவில் வளரும் குழந்தையின் எடை வளர்ச்சிக்கு நல்லது.

4. தாயின் தவறான வாழ்க்கை முறைப்பழக்கங்கள் (bad lifestyle habits of mother)
கருவுற்றிருக்கும் பெண் புகை பிடித்தல், மது அருந்துதல் மற்றும் உடல் உபாதைகளை ஏற்படுத்தக்கூடும் வாழ்க்கைமுறைப் பழக்கங்களைக் கடைப்பிடிப்பது குழந்தையின் எடை குறைபாட்டிற்குக் காரணம்.மேலும் பதப்படுத்திய உணவுகளை உண்பது, துரித உணவுகளை அதிகம் உண்பது போன்ற விசயங்கள் எல்லாம் குழந்தைக்குப் போதுமான பிராண வாய்வு கிடைக்காமலும் போதிய சத்து கிடைக்காமலும் போகும் வாய்ப்பையும் அதிகரிக்கின்றன. இதனால் கருவில் இருக்கும் குழந்தை எடை குறைவோடு பிறக்கும் சதவீதம் அதிகம்.

5. சர்க்கரை நோய் (diabetes)
கருவுற்றிருக்கும் தாயிற்கோ அல்லது கருவில் இருக்கும் குழந்தைக்கோ சர்க்கரை நோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் கர்ப்ப காலத்தில் உள்ளது. இதனால் குழந்தை பிறக்கும் போது எடை குறைவு அல்லது அதீத எடை போன்ற பிரச்சனைகளோடு பிறக்கக்கூடும்.இதைத் தவிர்க்கக் கர்ப்பிணிப் பெண்கள் உணவு மேலாண்மையைக் கையாள வேண்டும்.

6. கருப்பையில் பிரச்சனை (problem in uterus)
கருவுற்றிருக்கும் தாய்க்குக் கருப்பையில் ஏதாவது பிரச்சனைகள் இருந்தாலும் குழந்தை எடை குறைவோடு பிறக்கக்கூடும். இதனால் வேறு பல பிரச்சனைகளும் குழந்தைக்கு ஏற்படக்கூடும்.இது மருத்துவ பரிசோதனைகளும்,ஆலோசனைகளும் மிக முக்கியம்.

7. தாய் சரியான ஊட்டச்சத்து உணவை எடுக்காமல் இருப்பது (malnutrition in mother)
கருவுற்றிருக்கும் தாய் போதுமான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வதற்கு மாற்றாக சத்தான கீரை வகைகள், பழங்கள், காய் மற்றும் பசும் பால் போன்ற ஊட்டச்சத்து நிரம்பிய உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் குழந்தை சீரான உடல் எடையோடு பிறக்கும்.

8. நோய்த் தொற்று (infection during pregnancy)
தாய் கருவுற்றிருக்கும் போது தாயிற்கோ அல்லது குழந்தைக்கோ நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தால் குழந்தை பிறக்கும் போது உடல் எடை குறைபாட்டோடு பிறக்கக்கூடும். இதனால் கர்ப்ப காலத்தில் நோய்த் தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது.ஏனென்றால் தாயிற்கு ஏற்படும் எந்த வித நோய்ப் பாதிப்புகளும் கருவில் வளரும் குழந்தையையும் தாக்குகின்றன.இதன் விளைவாக அந்த குழந்தை பிறக்கும் போது உடல் எடை குன்றியே காணப்படுகிறது.

9. தாயின் வயது (mother’s age)
சரியான பருவத்தில் தாய் கருவுற வேண்டும். குறைந்த வயதிலோ அல்லது அதிக வயதிலோ ஒரு பெண் கருவுற்று குழந்தை பெற எண்ணினால், அதுவும் உங்கள் குழந்தை எடை குறைபாட்டோடு பிறக்க ஒரு முக்கிய காரணமாக இருக்கக்கூடும்.அதனால் பெண்கள் இயன்ற வரை உரிய வயதில் தாய்மை கொள்வது நல்லது.

10. தாயின் மன நிலை (mother mental condition)
கருவுற்றிருக்கும் பெண் முடிந்த வரை மகிழ்ச்சியாகவும் புத்துணர்ச்சியோடும் தனது கர்ப்ப காலத்தில் இருக்க வேண்டும். தாய் மனச் சோர்வோடும் மன அழுத்தத்தோடும் இருந்தால் அது கருவில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கக் கூடும்.ஆக தாய் மனத் தெளிவோடு எந்த ஒரு விசயத்திற்கும் கவலை கொள்ளாது தன் கர்ப்ப காலத்தைக் கழித்தால் பிறக்கும் குழந்தை போதிய எடையோடு நிச்சயம் இருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களை ஒவ்வொரு கருவுற்றிருக்கும் பெண்ணும் புரிந்து கொண்டு தன் குழந்தை சரியான உடல் எடையோடும் ஆரோக்கியத்தோடும் பிறக்க உதவ வேண்டும். மேலும் நீங்கள் பெரியோர்களின் மற்றும் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுக் கொண்டு அதன் படி ஆரோக்கியமான உடல் எடையைக் கொண்ட குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null