குழந்தை பிறந்தது முதல் 1000-வது நாளுக்குள்தான் அதிக அளவில் வளர்ச்சி குறைபாடு நோய்கள் ஏற்படுகின்றன என லேன்செட் அறிக்கைகள் கூறுகின்றன. ஊட்டச்சத்து குறைபாடு (Causes of Malnutrition) ஏன்?
தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட 4-ல் 1 குழந்தை எடை குறைவாக இருக்கிறது. அதாவது 23.8%.
மேலும், 27.1% குழந்தைகள் போதுமான வளர்ச்சியில்லாமல் இருக்கின்றன.
இந்தப் புள்ளி விவரத்தை வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால்,
#1. குழந்தைக்குத் தேவையான அளவு தாய்ப்பால் கொடுக்காதது.
#2. ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளைத் தர தவறியது.
Image Source: Credit romper.com
#3. குழந்தையை சரியாக பராமரிக்காதது.
#4. நுண்ஊட்டச்சத்துகள் இல்லாத உணவுகளால் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை.
#5. கருவுற்றபோது தாய் ஊட்டச்சத்தான உணவை உண்ணாமல் இருந்தது.
#6. தாய் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டது அல்லது தாய் குறைந்த எடையுடன் இருப்பது. இதனால் குழந்தை குறைந்த எடையுடன் பிறக்கும்.
#7. சுகாதாரமற்ற தண்ணீரைப் பருகுதல், சுகாதாரமற்ற சுற்றுச்சூழல், தேவையானபோது கைகளை சோப் பயன்படுத்தியோ அல்லது நன்றாக கை கழுவாமலோ இருத்தல்.
#8. சுகாதாரத்தைப் பின்பற்றாமல் இருப்பது. சுகாதாரமற்ற சூழலில் இருப்பது.
இதையும் படிக்க: பிறந்த குழந்தைகளின் இறப்பைத் தடுக்க… தாய் கட்டாயமாக செய்ய வேண்டிய 2 டெக்னிக்
குழந்தையின் வளர்ச்சியை முடக்கிவிடும்.
ஊட்டச்சத்துக் குறைபாடு இருந்தால் ஆயுள் முழுமைக்கும் பிரச்னைதான்.
1.5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மரணச் சம்பவங்களில் 45% இறப்புகள் போதுமான அளவு ஊட்டச்சத்து இல்லாததே காரணம்.
வளர்ச்சியின்மை, விட்டமின் ஏ, துத்தநாக தாது குறைபாடு, போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்காத நிலை ஆகியவற்றாலே 45% இறப்புகள் நேர்கிறது என ராபர்ட் இ பிளாக், லேன்செட் தாய் சேய் ஊட்டச்சத்து அறிக்கை 2013 தெரிவிக்கிறது.
எடை குறைவான, வளர்ச்சி குன்றிய குழந்தைகள் தொற்றுநோய்களாலும், சீதபேதி, நிமோனியா, அம்மை நோய்களால் அதிகம் உயிரிழக்கின்றனர்.
Image Source : Credit blog.theautismsite.com
ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகளால் கல்வியில் சிறந்து விளங்க முடிவதில்லை. அறிவாற்றல் வளர்ச்சியில் தடை ஏற்படுகிறது.
விளையாட்டிலும் ஆர்வம் குறைகிறது. எதிலும் அக்கறையற்ற போக்கு மேலோங்குகிறது.
உலக சுகாதார மையம் 2004-ம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையின்படி ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஒரு தேசம் அதன் ஜிடிபியில் 6%-ஐ இழக்க நேரிடும் என எச்சரிக்கப்படுகிறது. இதற்கு காரணம் குறைந்த செயலாற்றல் கொண்ட நபர்கள்தான்.
இதையும் படிக்க: குழந்தைக்கு கொடுக்க வேண்டிய கால்சியம் சத்து நிறைந்த 15 உணவுகள்
ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட பிரதான காரணம் வறுமையும் உணவு பாதுகாப்பின்மையும் மட்டும்தானா…
இல்லை.. இது தவறு. பல்வேறு நாடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளில் வறுமையும் உணவு பாதுகாப்பின்மையும் ஊட்டச்சத்து குறைபாடுக்கு முக்கிய காரணிகள் அல்ல என்றே கூறுகிறது.
பஞ்சம் அல்லது போர், பொருளாதார நெருக்கடி சூழல் வேண்டுமானால் வறுமையும் உணவு பாதுகாப்பின்மையும் ஊட்டச்சத்து குறைபாடுக்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறுகிறது உலக வங்கி அறிக்கை, 2006.
உணவுத் தட்டுப்பாடு இல்லாத வீடுகளில் உள்ள குழந்தைகளுக்கும்கூட ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவது தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் பால்வாடி பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகளில் 26% குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது. 64% குழந்தைகளுக்கு ரத்தசோகை ஏற்படுகிறது எனக் கூறுகிறது.
#1. உணவில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். 6 மாத குழந்தைக்கு மேற்பட்டவர்களாக இருப்பின் சத்தான உணவுகளைக் கூழ், கஞ்சி வடிவில் கொடுங்கள்.
Image Source: Credit parents.com
இதையும் படிக்க: குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தைத் தரும் 13 மாலை நேர ஸ்நாக்ஸ்…
#2. பற்கள் முளைத்து விட்ட குழந்தைகள், உடல் பலவீனமாக இருப்பவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுப்பவர்கள் சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டும்.
#3. ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்க பொருளாதார மேம்பாடும் வறுமை ஒழிப்புமே ஒரே வழி எனக் கருதப்படுகிறது. இது மற்றுமொரு மாயை.
#4. பொருளாதாரம் மேம்படும்போது ஊட்டச்சத்து பிரச்னைகளுக்குத் தீர்வு கிட்டும் என்றாலும் ஒட்டுமொத்தமாக ஊட்டச்சத்து பிரச்னைக்குத் தீர்வு கிட்ட வேண்டும்.
#5. உணவு ஊட்டும் முறையை மேம்படுத்துதல், சுகாதாரமான வாழ்வுமுறையைப் பின்பற்றுதல், கர்ப்பிணிகளைப் பேணுதல் போன்றவை குறித்து தொடர் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும். இதனால் தீர்வு கிடைக்கும்.
#6. தமிழக குழந்தைகள் மத்தியில் நிலவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் குறைக்க தாய்ப்பால் தருவது அவசியம்.
#7. ஊட்டச்சத்தின் தேவை, கர்ப்பக்கால ரத்தசோகையைத் தவிர்த்தல், குழந்தைகளை நோயிலிருந்து தற்காத்தல், தடுப்பு மருந்துகளைத் தவறாமல் செலுத்துதல், கைகளை சோப்பு போட்டுக் கழுவும் பழக்கத்தை ஊக்குவித்தல் போன்றவை குறித்து விழிப்புணர்வு அவசியம்.
இதையும் படிக்க: குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த 8 பிரச்னைகளுக்கும் தீர்வு நீங்கள்தான்… இந்த 7 பழக்கங்களை உடனடியாக செய்யுங்க…
Source: UNICEF
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
null
null