துணி வகை டயாப்பர்… பயன்படுத்தும் முறைகள் மற்றும் டிப்ஸ்...

துணி வகை டயாப்பர்… பயன்படுத்தும் முறைகள் மற்றும் டிப்ஸ்...

டயாப்பர்… இது பெரும்பாலானோருக்கு வரம். முன்பெல்லாம் குழந்தைகளை வெளியே தூக்கி செல்வது கடினம். சிறுநீர், மலம் கழித்துவிட்டால் தண்ணீர் தேடி திரிய வேண்டியிருக்கும். டயாப்பர்கள் வந்ததும் அந்த சவால்களை நாம் எளிமையாக சமாளிக்கிறோம். ஒரு முறை பயன்படுத்திய பின்னர் மீண்டும் பயன்படுத்த முடியாத டிஸ்போசிபிள் டயாப்பர் பற்றி அனைவருக்கும் தெரியும். அதை எப்படி கவனமாக பயன்படுத்துவது என்பதை இங்கு பார்க்கலாம்.

துணி டயாப்பர் (மீண்டும் மீண்டும் பயன்படுத்த கூடியவை)

ப்ளாட்

டயாப்பரிலே குறைவான விலை கொண்டது. பெரிய, ஒரே ஒரு லேயர் இருக்கும். நீங்கள் அதை குழந்தைக்கு ஏற்ற மாதிரி மடித்துக் கொள்ளலாம்.

ப்ரீ-ஃபோல்ட்

இது ஒருவகை ரெக்டாங்கிள் தோற்றமுள்ள டயாப்பர். 3 செக்‌ஷனாக பிரிக்கப்பட்டிருக்கும். வெல்கிரோ அல்லது சேஃப்டி பின்கள் மூலம் பொருத்தி கொள்ளலாம். மல்டிபள் லேயர் இருக்கும்; தைக்கப்பட்டிருக்கும்.

பாக்கெட்

இதில் வாட்டர்-ப்ரூஃப் லேயர் வெளிபக்கமாக ஒட்ட பட்டிருக்கும். உள்ளுக்குள் உலர்வான லேயர் இருக்கும். பாக்கெட் திறந்து இருக்கும். அதில் நீங்கள் நீர் உறிஞ்சுவதை வைத்துக் கொள்ளலாம்.

ஃபிட்டட்

பார்ப்பதற்கு ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் டயாப்பர் போலவே இது இருக்கும். வெல்கிரோ போட்டு ஒட்டி கொள்ளலாம். ஆனால், இதற்கு தண்ணீர் உறிஞ்ச கூடிய டயாப்பர் கவர் தேவை.

ஆல் இன் ஒன்

இதில் வெளிபக்கமும் வாட்டர்-ப்ரூஃப் லேயர் இருக்கும். இதற்கு எந்த டயாப்பர் கவரும் தேவைப்படாது. பிறந்த குழந்தைகளுக்கு பொருத்தமானது. டே கேர் அனுப்பும் குழந்தைகளுக்கு பொருந்தும். இந்த துணி டயாப்பர் வகைகளில் எது உங்களுக்கு பொருத்தமானது என நீங்கள் தேர்ந்தெடுத்து வாங்கலாம்.

ஓவர் நைட் டயாப்பர்

துணி வகையிலே இரவு முழுவதும் வைக்க கூடிய கிளாத் டயாப்பர் வாங்கலாம். இரவு முழுவதுமான ஈரத்தை உறிஞ்ச பொருத்தமானது. ஆனால், இந்த டயாப்பர் இரவு முழுவதும் இருப்பதால் குழந்தையின் சருமம் பாதிக்கவும் செய்யலாம். துர்நாற்றம் வருவது, அரிப்பு எடுக்கும் பிரச்னையும் வரலாம். தினமும் இதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். how to use cloth diaper Image Source : Ali express

டயாப்பருக்குள் சொருக வேண்டியவை

cloth diaper inserts, doublers, boosters, and soakers. இதெல்லாம் வாங்கி வைத்துக் கொண்டால் நீங்கள் வாங்கும் டயாப்பருக்கு ஏற்றபடி இதை அதில் வைக்கலாம். எல்லாத் துணி டயாப்பர் வகைகளுக்கும் இது அனைத்தும் தேவையில்லை. நீங்கள் வாங்கும் துணி டயாப்பரின் அம்சங்களைப் பொறுத்து இவை உங்களுக்கு தேவைப்படும். நீண்ட நேரம் தாங்க, ஈரத்தை உறிஞ்ச கூடிய வேலைகளை செய்யும். இதையும் படிக்க: டயாப்பரால் ஏற்படும் பாதிப்புகள்… 99.9% குணமாக உதவும் வீட்டு வைத்தியம்

ஒரு நாளைக்கு குழந்தைக்கு எத்தனை டயாப்பர் தேவை?

பிறந்த குழந்தை மற்றும் கைக்குழந்தைகள் - 10 - 12 முறை டயாப்பர் மாற்ற வேண்டி இருக்கும். 6+ மாத குழந்தைகள் - 8-10 முறை டயாப்பர் மாற்ற வேண்டி இருக்கும். இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு நீங்கள் டயாப்பர் வாங்கலாம்.

புதிய துணி டயாப்பர்

குழந்தைக்கு புது துணி வாங்கினால் எப்படி ஒரு முறை அலசிவிட்டு போடுகிறீர்களோ அதுபோல புதிய டயாப்பரையும் ஒரு முறை அலசிவிட்டு காய வைத்துப் பயன்படுத்துவது நல்லது. இதையும் படிக்க: குழந்தைகளின் சருமப் பிரச்னைகளும் அதன் தீர்வுகளும்...
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });

அடிக்கடி டயாப்பர் மாற்றுங்கள்

குழந்தையின் வயது, பருவம் பொருத்து அவர்களின் சிறுநீர், மலம் கழிப்பதை பொறுத்து டயாப்பர் அடிக்கடி மாற்றலாம். சிறிய குழந்தை எனில் 2-3 மணி நேரத்துக்கு ஒரு முறை டயாப்பர் மாற்றுங்கள். கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கு 3-4 மணி நேரத்துக்கு ஒரு முறை மாற்றுங்கள்.

துணி டயாப்பரை சுத்தம் செய்வது எப்படி?

பாக்கெட் டயாப்பரில் உள்ளே சொருகி இருப்பதை நீக்கிவிடுங்கள். உள்ளே சொருகும் அனைத்து நீக்கிவிட்ட பின் நீங்கள் துணி டயாப்பரை துவைக்கலாம். டிடர்ஜென்ட் இல்லாமல், சாதாரண தண்ணீரில் முதலில் அலசுங்கள். அதன் பிறகு இளஞ்சூடான தண்ணீரில் போட்டு துவைக்கலாம். இப்போது டிடர்ஜென்ட் சேர்த்துக்கொள்ளலாம். அதிக கெமிக்கல்கள் இல்லாத மிதமான டிடர்ஜென்ட் பயன்படுத்துங்கள். துணி டயாப்பர் டிடர்ஜென்ட் என்றே சில கடைகளில் கிடைக்கின்றன. அதைப் பயன்படுத்த அதன் அட்டையில் உள்ள விதிமுறைகளைப் பாருங்கள். இறுதியாக அலசுவதற்கு சாதாரண தண்ணீரில் அலசலாம். இளஞ்சூடான நீரில் ஊற வைக்க நினைத்தால், 20 நிமிடங்களுக்கு மேல் ஊற வைக்க வேண்டாம். குழந்தையின் டயாப்பர் துவைப்பதற்கென்றே சோப், டிடர்ஜென்ட், பிரஷ் தனியாக வைத்துக்கொள்வது நல்லது. மற்ற குழந்தைகளின் துணியோடு துணி டயாப்பரையும் சேர்க்க வேண்டாம். cloth diaper Image Source : Noras nursery

துணி வகை டயாப்பரால் என்னென்ன நன்மைகள்?

பணம் செலவு குறைவு. கெமிக்கல்கள் இல்லை. திரும்பத் திரும்ப பயன்படுத்தலாம். குழந்தைக்கு சௌகரியமாக இருக்கும். அரிப்பு பிரச்னைகள் மிகவும் குறைவாகவே காணப்படும். இதையும் படிக்க: மென்மையான சருமத்தை பெற 5 இயற்கை வழிகள்...

துணி வகை டயாப்பர் பயன்படுத்த சில டிப்ஸ்...

துணி வகை டயாப்பர் பயன்படுத்தினாலும் குழந்தையின் சருமத்தைப் பாதுகாக்க சில விஷயங்கள் செய்தாக வேண்டும். ஒவ்வொரு முறை சுத்தப்படுத்தினாலும் குழந்தையின் சருமத்தை நன்கு உலரவிட்டு பின் தேங்காய் எண்ணெயோ தரமான மாய்ஸ்சரைசரோ குழந்தைக்கு தடவிய பின்பே டயாப்பர் போட வேண்டும். துணி வகை டயாப்பரில் நடுவில் சொருக கூடியவற்றை கொஞ்சம் அதிகமாகவே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். நிறைய துணி வகை டயாப்பர் இருப்பதால், குழந்தையின் பருவத்துக்கு ஏற்றபடி தேர்வு செய்யுங்கள்.

சாதாரண டயாப்பரை பயன்படுத்துபவர்களுக்கான டிப்ஸ்...

சரியான இடத்தில் டயாப்பர் வைத்துப் பராமரியுங்கள். அதிக வெயில் படுகின்ற இடத்தில் வைப்பதைத் தவிர்க்கலாம். அதிக சென்ஸ்டிவ் சருமம் உள்ள குழந்தைகளுக்கு, ஹைபோ அலர்ஜெனிக் டயாப்பர் வாங்கி பயன்படுத்துங்கள். டயாப்பரை தூக்கி எறியும் முன், கழிப்பறையில் கொட்டி அதன் பிறகு தூக்கி எறிந்தால் ஓரளவுக்கு துர்நாற்றம் வீசுவது குறையும். டயாப்பர் போடுவதற்கென தனியாக ஒரு குப்பைத்தொட்டி வைத்திருப்பது நல்லது. மூடி இருக்கும் குப்பைத்தொட்டையில் மட்டுமே பயன்படுத்திய டயாப்பரை போடுங்கள். இல்லையெனில் கிருமிகள் பரவும். வெளியில் செல்லும்போது, எல்லா இடங்களில் குப்பைத்தொட்டி இருக்காது. எனவே, ஒரு கவரையாவது கையில் எடுத்து செல்லுங்கள். குழந்தை வளர வளர டயாப்பர் அளவும் மாறும். அதை சரியாக பார்த்து வாங்குவது நல்லது.

பாட்டி காலத்தில் இருந்து துணியை கட்டி விடும் பழக்கம்…

இது நம் பாட்டிமாக்கள் கற்றுக் கொடுத்தவை. இதை டயாப்பர் என்று சொல்ல முடியாது. ஆனால், காட்டன் துணி, புடவைகளை நன்கு சுத்தமாக்கிய பின் குழந்தைகளுக்கு கட்டிவிடலாம். உண்மையில் சொல்லப்போனால், கடையில் விற்க கூடிய ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் டிஸ்போசெபிள் டயாப்பர்களைவிட புடவையை கிழித்து இடுப்பில் கட்டி விடும் பழக்கம் பாதுகாப்பானது. கட்டும் காட்டன் துணி சுகாதாரமாக இருந்தால் போதும். குழந்தைக்கு எந்த பிரச்னையும் வராது. கர்ப்பிணி பெண்கள், உங்கள் குழந்தைக்காக காட்டன் புடவைகளை சேர்த்து வைத்துக்கொண்டால் பின்னர் குழந்தை பிறந்த பின் உதவியாக இருக்கும். இதையும் படிக்க: 0-5 வயது + குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு… உடனடி பலனைத் தரும் வீட்டு வைத்தியம் ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா?  தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null