தம்பதிகள் வாழ்வின் ஒரு கட்டத்தில் கருத்தடையைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழலுக்கு வர நேரிடும். இந்த வகையில் தம்பதிகள் மூன்று பிரிவுகளாக உள்ளனர். முதல் பிரிவில் உள்ளவர்கள் திருமணம் ஆன உடனே குழந்தை பெற விரும்பாமல், குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போட விரும்புகின்றவர்கள். இரண்டாம் பிரிவில் உள்ளவர்கள் முதல் குழந்தை பிறந்த பிறகு இரண்டாம் குழந்தைக்கான திட்டமிடுதலைத் தாமதப்படுத்த விரும்புகின்றவர்கள். மூன்றாம் பிரிவில் உள்ளவர்கள் இரண்டு குழந்தை பிறந்த பிறகு நிரந்தர அல்லது தற்காலிக கருத்தடையை நாடுகின்றவர்கள்.
இதில் மூன்றாம் பிரிவினர்கள் உள்ள பெரும்பாலானவர்களின் தேர்வு கருத்தடை அறுவை சிகிச்சை ஆகவே உள்ளது. இரண்டாம் பிரிவில் உள்ள பெரும்பாலானோர்கள் மற்றும் மூன்றாம் பிரிவில் சிலர் மற்ற கருத்தடை வழிமுறைகளை நாடுகின்றனர். இதிலும் பெரும்பாலானவர்கள் கருத்தடை மாத்திரைகளை நம்பியுள்ளனர். இதற்கு மாற்றாக இன்னொரு வழி உள்ளது. அது இன்ட்ரா யுட்ரைன் சாதனம் எனப்படுவது.
இந்த இன்ட்ரா யுட்ரைன் சாதனம் வட்டவடிவம் ,வலை வடிவம் ,நான்கு கால் சிலந்தி வடிவம் என்று பல அமைப்புகளில் இவை விற்கப்படுகின்றன. இதில் ‘டி’ வடிவ சாதனமே அதிக அளவு பெண்களால் பயன்படுத்தப்படுகின்றன. இதனையே ‘காப்பர் டி’ என்று பிரபலமாகக் கூறுகின்றனர். இந்த காப்பர் டி சாதனம் பெண்களின் உடலில் எப்படிப் பொருத்தப்படுகிறது? இதனால் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன? என்று அனைத்தையுமே இந்த பதிவில் விரிவாகக் காணலாம். (Copper T side effects in Tamil)
இந்த ‘காப்பர் டி’ கருத்தடை சாதனம் செம்பில் ஆனது. இது டி வடிவத்தில் காணப்படும். இந்த சாதனத்தின் கீழ்ப்புறத்தில் நூல் மாதிரி அமைப்பு காணப்படும்.இந்த நூல் போன்ற அமைப்பானது இந்த காப்பர் டி-யை வெளியே எடுக்க உதவுகின்றது. இந்த காப்பர் டி ஆனது பெண்ணின் கர்ப்பப்பையில் மருத்துவர்களால் பொருத்தப்படும். ஆகப் பெண்ணின் கருப்பையில் உள்ள இந்த காப்பர் டி கருத்தரித்தல் ஏற்படாமல் தடை செய்யும்.
ஆணின் விந்தணு பெண்ணின் கருமுட்டையைச் சென்று சேராமல் இருப்பதை இந்த சாதனம் சாத்தியப் படுத்துகின்றது. ஆக இதன் மூலம் கருத்தரித்தல் ஏற்படாமல் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. இந்த சாதனத்தை மருத்துவரின் உதவியோடு மட்டுமே பொருத்த வேண்டும். இது ஒரு மிகச்சிறந்த கருத்தடை சாதனம் என்றால் மிகையில்லை.
ஆணின் விந்து பெண்ணின் கருப்பையை வந்தடையும் இடத்திற்கு ரத்த வெள்ளை அணுக்கள் விரைந்து செல்கின்றன. இதற்குக் காரணம் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் அதிக அளவு காணப்படுவதே. இந்த வெள்ளை அணுக்கள் விந்து அணுக்களுக்கு எதிராகச் செயல்பட்டு அவற்றை விரைவில் அழித்துவிடும். இதனால் விந்து செயலற்றதாக மாற்றிவிடும். ஆகக் காப்பர் டி இந்த ரத்தத்தின் வெள்ளை அணுக்களின் அளவை மிகவும் அதிக அளவு ஆக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த சாதனம் செம்பால் செய்யப்பட்டது இன்னொரு சிறப்பம்சமாகும். இந்த செம்பு உலோகம் விந்தணுக்களை அழிக்கும் தன்மை கொண்டது.
ஒரு தடவையாவது பிரசவம் ஏற்பட்ட தாய்மார்களுக்குத் தான் இந்த காப்பர் டி ஏற்புடையது. இதற்குக் காரணம் பிரசவம் நிகழ்ந்த பிறகு இயற்கையாகவே பெண்ணின் பிறப்பு உறுப்பு இளக்கமாகி விடும்.
இது பெரும்பாலான பெண்களின் சந்தேகம் ஆகும். பொதுவாகக் காப்பர் டி பொருத்திய காலத்தில் இருந்து இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கழித்து மாற்றப்பட வேண்டும். அதேபோல இன்னும் மாற்ற நேரம் உள்ளது என்று எண்ணித் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் அப்படியே கவனிக்காமல் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. 6 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவரைச் சந்தித்துக் காப்பர் டி சரியான முறையில் உள்ளதா? என்பதைச் சோதனை செய்து கொள்வது மிக அவசியம். சில சமயம் காப்பர் டி நகர்ந்து விட மிகவும் சிறிய வாய்ப்புள்ளது.
1.இது ஒரு கருத்தடை சாதனம் என்பது முன்னரே சொல்லப்பட்டுள்ளது. அதாவது ஒரு வேற்று பொருள் உடலில் வைக்கப் படுகின்றது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
2.இந்த கருத்தடை சாதனத்தை மாதவிலக்கு நிகழ்ந்த 10 நாட்களுக்குள் உடலில் பொருத்தப்பட வேண்டும்.
3.காப்பர் டி பொருத்தப்பட்ட பிறகு அதிக அளவு இரத்தபோக்கு ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரைச் சென்று பார்க்க வேண்டும்.
4.ஒருவேளை காப்பர் டி போட்டும் ஆயிரத்தில் ஒரு வாய்ப்பாகக் கர்ப்பம் ஏற்பட்டுவிட்டால் அந்த கர்ப்பத்தைத் தொடர்வது அவ்வளவு ஏற்புடையது அல்ல. ஏனென்றால் கரு கருக்குழாயில் வளர்ந்து இருக்க அநேக வாய்ப்புள்ளது. இதனால் உடனே மருத்துவரைச் சந்தித்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
இது மாதிரியான பல்வேறு விதமான வதந்திகள் நிலவி வருகின்றன. காப்பர் டி-யை பற்றி இந்த வகை வதந்திகளுக்கு எந்தவிதமான அடிப்படை ஆதாரங்களும் இல்லை என்பது குறிப்பிடத் தகுந்தது.
காப்பர் டியைப் பற்றிய தெளிவான தகவல்களை அறிந்து இருப்பீர்கள். காப்பர் டி (Copper T)யின் நன்மைகள் மற்றும் பாதகங்களைப் பற்றிய புரிதல் ஏற்பட்டிருக்கும் என்று நம்புகின்றோம். ஆக இந்த வகை கருத்தடை சாதனத்தைப் பயன்படுத்துவதற்கு முன், ஒன்றுக்கு இரண்டு முறை நன்கு யோசித்து ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். அதேபோல பெண்கள் மருத்துவரின் பரிந்துரைத்தல் மற்றும் குடும்பத்தின் நிர்ப்பந்தத்திற்கு மட்டும் கீழ்ப்படிந்து இந்த மாதிரி கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தக் கூடாது. இது முழுக்க முழுக்க சம்பந்தப்பட்ட பெண்ணே எடுக்க வேண்டிய முடிவு என்பதை நினைவில் உறுதியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
null
null