10 நாட்களில் கருவளையத்தை போக்கும் ஹோம்மேட் சிகிச்சைகள்...

10 நாட்களில் கருவளையத்தை போக்கும் ஹோம்மேட் சிகிச்சைகள்...

முகம் முழுவதும் சீரான சருமம் இருந்தாலும், கண்களை சுற்றி கருவளையம் இருந்தால் பார்க்கவே நன்றாக இருக்காது. பிரசவத்துக்குப் பின் சரியாக தூங்காமல் பல தாய்மார்களுக்கு கண்களை சுற்றி கருவளையம் இருக்கும். அதை எளிய முறையில் நிரந்தரமாகப் போக்கிட சில இயற்கை சிகிச்சைகள் உள்ளன. அவற்றை இங்கு பார்க்கலாம்.

கருவளையத்தைப் போக்கும் புதுமை சிகிச்சைகள்…

ஹோம்மேட் ஹனி ஐ கிரீம்

 • வெள்ளரி துண்டு - 3
 • உருளை ஸ்லைஸ் - 3
 • தேன் - 1 டீஸ்பூன்
 • ஆலுவேரா ஜெல் - 1 டீஸ்பூன்
வெள்ளரியையும் உருளையும் தனி தனியாக மிக்ஸியில் அரைத்து ஜூஸ் எடுத்துக் கொள்ளவும். இதில் தேனும் ஆலுவேரா ஜெல்லும் கலந்து நன்கு கலக்கவும். ஹனி ஐ கிரீம் ரெடி. இதைக் கண்களை சுற்றி தடவுவதற்கு முன், பன்னீரால் சுத்தமாக துடைத்த பின் இந்த கீரிமை போடவும். மறுநாள் காலை கழுவி விடலாம். ஒரு வாரத்திலே கருவளையம் போவதைப் பார்க்க முடியும்.

ஹோம்மேட் கிரீன் டீ ஐ கிரீம்

homemade green tea eye cream Image Source : Inhabitat
 • பாதாம் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
 • ஆலுவேரா ஜெல் - 1 டேபிள் ஸ்பூன்
 • கிரீன் டீ - 1 டீஸ்பூன்
இவற்றை ஒரு பவுலில் போட்டு, நன்கு கலந்து சுத்தமான டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ளவும். இதைத் தினமும் இரவில் உங்கள் கண்களை சுற்றி தடவிய பின், மோதிர விரலால் கிளாக் வைஸ் மற்றும் ஆன்டி கிளாக் வைஸாக சுற்றி மசாஜ் செய்யவும். 30 நாட்களில் மாற்றம் தெரியும்.
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });

வெள்ளரி சிகிச்சை

இது பரவலாக தெரிந்தாலும் 2-3 வாரத்தில் நல்ல ரிசல்டை கொடுக்கும். வெள்ளரி ஜூஸை பஞ்சில் நனைத்து, அதை 20 நிமிடங்கள் கண்களின் வைத்திருக்கவும். 2 வாரத்தில் கருவளையம் குறைந்திருப்பதை நீங்கள் பார்க்க முடியும். இதையும் படிக்க: 3 மாதத்தில் பிசிஓடியை விரட்டும் சிம்பிள் வீட்டு வைத்தியம்

ஹோம்மேட் ஐ மாஸ்க்

 • கடலைமாவு - 1 டேபிள் ஸ்பூன்
 • மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்
 • ரோஸ் வாட்டர் - கரைக்கத் தேவையான அளவு
ஒரு பவுலில் கடலைமாவு, மஞ்சள் தூள் போட்டு தேவையான அளவு ரோஸ் வாட்டர் ஊற்றி பேஸ்டாக்கி கொள்ளவும். இதை கண்களுக்கு கீழே பூசி 20 நிமிடங்கள் கழித்துக் கழுவி விடலாம்.

டைம் சேவிங் ட்ரீட்மென்ட்

சிலருக்கு இதையெல்லாம் தயாரிக்க கூட டைம் இருக்காது. அவர்களுக்கான பெஸ்ட் வழி இது. வெள்ளரி ஜூஸை ஐஸ் ட்ரேவில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். தினமும் ஒரு ஐஸ் கியூப் எடுத்து கண்களை சுற்றி மசாஜ் செய்யுங்கள். இதுவும் 3 வாரத்திலே கருவளையத்தை நீக்கும். eye gel for dark circles Image Source : youtube

விட்டமின் இ எண்ணெய்

கடைகளில் விட்டமின் இ காப்ஸ்யூல் கிடைக்கும். அதை வாங்கி தினமும் ஒரு காப்ஸ்யூல் எடுத்து, அதில் உள்ள எண்ணெயை கண்களை சுற்றி தடவி வரலாம். மறுநாள் காலை கழுவி விடுங்கள். இதுவும் பெஸ்ட் ட்ரீட்மென்ட். விரைவில் உங்களது கருவளையம் நீங்கிவிடும்.

7 நாட்களில் தீர்வு தரும் வீட்டு வைத்தியம்

 • உருளை ஜூஸ் - 2 டேபிள் ஸ்பூன்
 • வெள்ளரி ஜூஸ் - 2 டேபிள் ஸ்பூன்
 • தக்காளி ஜூஸ் - 2 டேபிள் ஸ்பூன்
 • ஆலுவேரா ஜெல் - 1 டீஸ்பூன்
 • ரோஸ் வாட்டர் - 1 டீஸ்பூன்
இவற்றையெல்லாம் நன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும். இதில் பஞ்சை நனைத்து இரண்டு கண்களை சுற்றிலும் அப்படியே போட்டு வைக்கவும். 25 நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் கழுவுங்கள். முகம் முழுவதும் கூட பூசலாம். கருமை நீங்கும். 7 நாட்களில் பளிச் கண்களும் முகமும் பெறலாம். இதையும் படிக்க: பிரசவத்துக்கு பிறகான முடி உதிர்தலைத் தடுக்கும் 4 வகை புரோட்டீன் ஹேர் பேக்

பாதாம் வெள்ளரி கிரீம்

 • பாதாம் எண்ணெய் - 2 டீஸ்பூன்
 • வெள்ளரி ஜூஸ் - 3 டேபிள் ஸ்பூன்
இதை நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். இதில் பஞ்சை நனைத்து கண்களில் அப்படியே ஒட்டி வைத்து விடுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவி வரலாம். ஒரு மாதத்தில் ரிசல்ட் தெரியும். homemade eye cream Image Source : Safebee

முக்கியமாக வாழ்வியலில் கடைபிடிக்க வேண்டியவை

2-3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இளநீர், கூழ், கஞ்சி,ரசம், ஜூஸ், ஸ்மூத்தி, நீர் மோர் போன்ற திரவ உணவுகளை சாப்பிடுவது நல்லது. விட்டமின் சி சத்துள்ள பழங்களை அன்றாடம் ஒன்றாவது சாப்பிட வேண்டும். எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, மாம்பழம், கிவி, பப்பாளி, அவகேடோ, பைன் ஆப்பிள் ஆகியவை சருமத்துக்கு நல்லது. தக்காளி ஜூஸ் வாரம் ஒருமுறை குடிக்கலாம். யோகர்ட், தயிர் சாப்பிடுவது நல்லது. தினமும் ஒரு கேரட் சாப்பிட வேண்டும். அன்றாடம் காலை எழுந்தவுடன் மலம் கழிக்க வேண்டும். மலம் கழிக்காமல் இருக்க கூடாது. மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ளவும். அதிக நேரம் மொபைல், லாப் டாப், டிவி, ஐ பாட் ஆகியவைப் பார்க்க கூடாது. தினமும் கண் பயிற்சி செய்வது நல்லது. தினமும் இரவு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வர வேண்டும். 7-8 மணி நேரமாவது தூங்க வேண்டும். இரவு 10 - 10.30 மணிக்குள்ளே தூங்கி விடுவது நல்லது. உங்கள் வாழ்வியலை நீங்கள் ஆரோக்கியமாக மாற்றிக் கொண்டால் மீண்டும் கருவளையம் திரும்ப வராது. இதையும் படிக்க: ஒரே மாதத்தில் பளபளப்பான சருமம்... 10 புதுமையான இயற்கை சிகிச்சைகள்… ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null