உடலில் உள்ள கழிவுகளை நீக்கும் 9 வகை டீடாக்ஸ் டிரிங்க்ஸ் ரெசிபி...

உடலில் உள்ள கழிவுகளை நீக்கும் 9 வகை டீடாக்ஸ் டிரிங்க்ஸ் ரெசிபி...

தற்போது அதிகமாகப் பிரபலமாகி வருவது டீடாக்ஸ் டிரிங்க்ஸ். அதாவது, கழிவுகளை நீக்கும் ஆரோக்கிய பானம் என்று இதைச் சொல்லலாம். அலுவலகம் செல்வோர், இதை அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, பெண்களிடம் இது மிக பிரபலம். உடல் கழிவுகளை, நச்சுகளை நீக்கும் ஆரோக்கியமானத் தண்ணீர் என்றும் இதைச் சொல்லலாம். இந்தத் தண்ணீர் உடலில் சென்று பல இயக்கங்களை சீர் செய்து வெகு விரைவிலே ஆரோக்கியமான கட்டுடலாக மாற்றுகிறது என்கின்றனர் வல்லுநர்கள். இப்போது இந்த டீடாக்ஸ் டிரிங்க்ஸ் பற்றி இந்தப் பதிவில் முழுமையாகப் பார்க்கலாம்.

டீடாக்ஸ் டிரிங்க் அல்லது டீடாக்ஸ் வாட்டர் என்றால்…

சுவையான, ஆரோக்கியமான தண்ணீரால் உடலில் உள்ள கழிவுகள் நீக்கப்பட்டு, உடல் ஆரோக்கியமாவதே இந்த டீடாக்ஸ் வாட்டரின் செயல்.

டீடாக்ஸ் டிரிங்க்ஸ்… எதற்கு?

உடல் எடை குறைக்க உதவுகிறது. டாக்ஸின் (நச்சுக்களை) உடலில் இருந்து நீக்குகிறது. சுவையாகவும் இந்தத் தண்ணீர் இருக்கிறது. வளர்சிதை மாற்றம் சீராகிறது. எனர்ஜி தருகிறது. உடல் இயக்கங்கள் அனைத்தும் சீராகிறது. இந்தத் தண்ணீரால் உடலுக்கு விட்டமின், தாதுக்களும் கிடைக்கிறது. சிப் பை சிப், அடிக்கடி வாய் வைத்து சிப் செய்து கொண்டே குடித்துக் கொண்டிருந்தால் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து கிடைக்க வழி அமைகிறது. அதிக செலவே இல்லாத, மிகவும் சுலபமான வழியில் ஆரோக்கியமாக இருக்கவும் உடல் எடை குறையவும் உதவும் இந்தப் பானம்.

டீடாக்ஸ் டிரிங்க்ஸ் எப்படி செய்வது?

டீடாக்ஸ் டிரிங்க்ஸ் பல விதமான முறையில் நாம் வீட்டிலே தயாரிக்கலாம். பெரியவர்கள் அனைவரும் இதைக் குடித்து பழகலாம். நீங்கள் குடிக்கும் தண்ணீருக்குப் பதிலாக இதைக் குடிக்கிறீர்கள் அவ்வளவுதான். 2-3 லிட்டர் தண்ணீரை அனைவரும் குடிக்க வேண்டும். அதில் சத்துகள் நிறைந்த டீடாக்ஸ் வாட்டரை குடிப்பது இன்னும் சிறப்பு. 1-2 லிட்டர் தண்ணீரில் நீங்கள் கீழே சொல்லப்படும் பொருட்களை வைத்து, அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப செய்து கொள்ளலாம். 8 மணி நேரம் இந்தத் தண்ணீரில் சேர்க்கும் பொருட்கள் ஊற வேண்டும். ஆதலால், சத்துகள் தண்ணீரில் கலந்துவிடும். இரவில் தண்ணீரில் போட்டு வைத்துவிட்டால், மறுநாள் இதைக் குடித்து வரலாம். மிகவும் சுலபம். குழந்தை பெற்ற தாய்மார்கள் பருகலாம். தாய்ப்பால் கொடுப்பவர்களும் குடிக்கலாம். இது ஆரோக்கியமான பழங்களின் தண்ணீர் என்பதால் அனைவருக்கும் ஏற்றது.

#1.ஆப்பிள் பட்டை டீடாக்ஸ் வாட்டர்

ஆப்பிளை 2 ஸ்லைஸாக அறிந்து கொள்ளுங்கள். விதை நீக்கவும். சிறிதளவு புதினா இலைகள் சேர்க்கவும். ஒரு சின்ன பட்டை எடுத்துக்கொள்ளுங்கள். இதை 2 லிட்டர் கண்ணாடி பாட்டிலில் இரவு போட்டு விடுங்கள். மறுநாள் இதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம். தண்ணீருக்கு பதிலாக இந்தப் பானம். புற்றுநோய் உருவாகுவது தடுக்கப்படும். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் உள்ளவர்களுக்கு நல்லது. நச்சுக்கள் நீங்கும். இதையும் படிக்க: உடல் எடையை விரைவாக குறைக்கும் 3 ஹெல்தி பானங்கள்…
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });

#2. விட்டமின் சி வாட்டர்

2 லிட்டர் தண்ணீரில், அரை எலுமிச்சை மெல்லியதாக அறிந்து போடவும். அரை கப் வெள்ளரிக்காயை மெல்லியதாக அறிந்து சேர்க்கவும். ஒரே ஒரு ஆரஞ்சு துண்டு சேர்க்கலாம். இரவில் போட்டு, மறுநாள் முழுக்க இதை சிப் செய்து குடிக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி தரும். இதய நோய்கள் தடுக்கப்படும். குழந்தை பெற்ற தாய்மார்களின் உடல்நல நன்மைக்கு குடிக்கலாம். கழிவுகள் நீங்கும். பார்வைத்திறன் மேம்படும். சரும சுருக்கங்கள் நீங்கும். detox water recipes Image Source : Happy foods tube

#3. ஆரஞ்சு வாட்டர்

2 ஆரஞ்சு பழத்தை மெல்லியதாக அறிந்து நீரில் சேர்க்கவும். கருப்பு திராட்சைகள் 10 எண்ணிக்கையில் சேர்க்கலாம். பசியின்மை நீங்கும். விட்டமின் சி கிடைக்கும். வளர்சிதை மாற்றம் சீராகும். சருமம் அழகாகும். இதையும் படிக்க: தாய்மார்களுக்கான 5 வெயிட் லாஸ் ஈஸி ரெசிபி

#4. தர்பூசணி வாட்டர்

ஒரு கப் தர்பூசணி துண்டுகள், சில துண்டுகளை லேசாக நசுக்கிக் கொள்ளவும். 6-8 புதினா இலைகள். இதை 1 - 2 லிட்டர் தண்ணீரில் சேர்க்கவும். குறை ரத்த அழுத்தம் கட்டுப்படும். இன்சுலின் சுரப்பு சீராகும். தசைகள் வலுவாகும்.

#5. மாம்பழ இஞ்சி வாட்டர்

ஒரு கப் மாம்பழ துண்டுகள். அதிகமாகப் பழுத்திருக்க கூடாது. அதில் ஒரு இன்ச் இஞ்சியை நறுக்கிக் கொள்ளவும். இதைத் தண்ணீரில் போட்டு வைக்கலாம். செரிமானத் தொல்லைகளை நீக்கும். நினைவுத் திறனை அதிகரிக்கும்.

#6. வெள்ளரி தண்ணீர்

அரை வெள்ளரியை மெலிதாக அறிந்து கொள்ளுங்கள். அரை இன்ச் இஞ்சியை சிறிது சிறிதாக நறுக்கவும். இதைத் தண்ணீரில் கலந்து டீடாக்ஸ் வாட்டர் தயாரிக்கவும். உடலில் உள்ள வீக்கங்களைக் குறைக்கும். விட்டமின், ஃபிளேவனாய்டு உள்ளன. மூளைக்கு நல்லது. உடல் சூட்டைக் குறைக்கும்.

#7. லெமன் வாட்டர்

அரை எலுமிச்சை சாறைத் தண்ணீரில் கலக்கவும். 5-6 புதினா இலைகள் சேர்க்கவும். 10 கருப்பு திராட்சை சேர்க்கவும். 2 துண்டு வெள்ளரி சேர்க்கலாம். விட்டமின் சி அதிகம். ஆன்டிஆக்ஸிடன்ட் சத்து உள்ளது. கழிவுகளை நீக்கும். இதையும் படிக்க: தைராய்டு பிரச்னை… தாய்மார்களுக்கான நிரந்தர தீர்வுகள்... detox water recipes Image Source : Creative green living

#8. ஸ்டாபெர்ரி மின்ட் வாட்டர்

3 ஸ்டாபெர்ரி பழங்களை மெல்லியதாக அறிந்து போடவும். 6 புதினா இலைகளை சேர்க்கவும். ஒரு ஒரு எலுமிச்சை துண்டை மெலியதாக அறிந்து சேர்க்கலாம். புற்றுநோய் வராமல் தடுக்கும். தொப்பைக் குறையும். கழிவுகள் நீங்கும்.

#9. அன்னாசி ஆரஞ்சு வாட்டர்

அன்னாசி பழத்துண்டுகள் அரை கப், ஆரஞ்சு 4 ஸ்லைஸ். 2-3 புதினா இலைகள். இவற்றை சேர்த்து டிடாக்ஸ் வாட்டர் தயாரிக்கவும். கெட்ட கொழுப்பு கரையும். தொண்டைத் தொற்று நீங்கும். விட்டமின் சி கிடைக்கும். சருமத்துக்கு அழகு சேர்க்கும். ஆரோக்கியமாகும். வளர்சிதை மாற்றம் சீராகும். இதையும் படிக்க: ஹோம்மேட் ஹெல்த் மிக்ஸ் பவுடர் செய்வது எப்படி? ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா?  தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null