எந்த குழந்தைகள் கற்றல் குறைபாட்டால் (டிஸ்லெக்சியா) பாதிக்கப்படுகிறார்கள்? அறிகுறிகள் என்ன?

எந்த குழந்தைகள் கற்றல் குறைபாட்டால் (டிஸ்லெக்சியா) பாதிக்கப்படுகிறார்கள்? அறிகுறிகள் என்ன?

எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரியான குழந்தைகள் அல்ல. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி. சில குழந்தைகளை நாம் புரிந்துகொள்ள முடியாது. நாம் ஒன்று சொன்னால் அவர்கள் அதை வேறு மாதிரி சொல்வார்கள். உடனே நாம் குழந்தைகளை அடிப்போம். இது சரியா? குழந்தையை முதலில் புரிந்து கொள்ளுங்கள். அவர்களின் வளர்ச்சியையும் முழுமையாக அறிந்துகொள்ளுங்கள். பொதுவாக நம் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பார்ப்போம். இரண்டாம் குழந்தையை முதல் குழந்தையுடன் ஒப்பிட்டு பார்ப்பது. முதல் குழந்தையை பக்கத்து வீட்டு குழந்தையுடனோ தெரிந்த குழந்தைகளுடனோ ஒப்பிட்டு பார்ப்பது. வளர்ச்சி நிலையைக் கண்டறிய ஒப்பிட்டு பார்ப்பதில் தவறில்லை.ஆனால், தனித்திறமைகளுடன் ஒப்பிட்டு பார்ப்பது சரி அல்ல. சில குழந்தைகளுக்கு கற்றல் குறையாடு இருக்கும். அதை ஆங்கிலத்தில் டிஸ்லெக்‌சியா என்பார்கள்.

கற்றல் குறைபாடு (டிஸ்லெக்சியா) ஏற்பட காரணங்கள்

  • காரணங்கள் இன்னும் உறுதியாகக் கண்டுபிடிக்கவில்லை.
  • பரம்பரை
  • மரபணு குறைபாடு உள்ளவர்களின் குழந்தைகள்
  • கர்ப்பக்காலத்தில் அதிக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ள தாயின் குழந்தைகள்
  • பிரசவத்தில் சிக்கல் அனுபவித்த குழந்தைகள்
  • குறை மாத குழந்தைகள்
  • பிறக்கும்போது விபத்து ஏற்பட்ட குழந்தைகள்
  • கர்ப்பக்காலத்தில் விபத்தால் பாதித்த குழந்தைகள்
  • பாதரசம், காரியம் ஆகிய நச்சால் பாதித்த குழந்தைகள்
  • அதிதுரித செயல்பாட்டு தன்மைகொண்ட குழந்தைகள்
இவர்களுக்கெல்லாம் கற்றல் குறைபாடு திறன் ஏற்படுகின்றன. இதையும் படிக்க: குழந்தையின் காது கேட்கும் திறனையும் பேசும் திறனையும் அறிவது எப்படி? dyslexia in kids Image Source : Expert Beacon
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });

டிஸ்லெக்‌சியா - கற்றல் குறைபாடு

நமக்கெல்லாம் சில நினைவுகள் மூளையில் பதியும். கல்வி சார்ந்த விஷயங்களும் பதியும். ஆனால் சாதாரண விஷயமும் கல்வி சார்ந்த விஷயமும் மூளையில் பதிய சில வேறுபாடுகள் ஏற்படும். இந்தப் பிரச்னை சில குழந்தைகளுக்கு இருக்கும்.
  • மூளை நிகழ்வுகளைப் பெற்றுக்கொள்ளுதல்
  • ஆராய்தல்
  • சேமித்தல்
  • வெளிப்படுத்துதல்
  • ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திக்கொள்ளுதல்
இந்த 5 நிலைகளில் மூளை வேலை செய்யும். பதிவுகளைச் செய்யும். இந்த 5 நிலைகளிலும் பதிவு செய்யும்போது விடுபட்டாலோ தாமதமானாலோ குழந்தைகளின் கற்கும் திறன் பாதிக்கப்படுகின்றன.
  • டிஸ்லெக்சியா - படிப்பதில் குறைபாடு
  • டிஸ்கால்குலியா - எண்ணிக்கை, கணக்கிடுவதில் குறைபாடு
  • டிஸ்கிரேபியா - எழுதுவதில் குறைபாடு
  • டிஸ்பிரேக்சியா - நுண்கலைகளான ஓவியம், மெக்கானிசத்தில் குறைபாடு
  • டிஸ்பேசியா - உரையாடல், பேசுவதில் குறைபாடு
இதையும் படிக்க: குழந்தைகளின் விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்துவது எப்படி?

என்னென்ன பிரச்னைகள்?

learning disability in kids Image Source : Emaze
  • எழுத்துகளை மாற்றிப்போட்டு எழுதுவது, படிப்பது
  • வார்த்தைகளை மாற்றி பேசுவது
  • முதன் முதலில் பேச தயங்குவது
  • தான் எழுதுவதைப் பிறர் பார்த்தால் தடுமாறுவது
போன்ற பல கற்றல் குறைபாடுகளை அறியலாம். இதையும் படிக்க: குழந்தைகளின் முதல் 1000 நாட்கள்... மறக்கவே கூடாத 21 விதிமுறைகள்..!

கற்றல் குறைபாடு (டிஸ்லெக்சியா) பாதிக்கபட்ட குழந்தைகளின் அறிகுறிகள்

  • குழந்தைகளின் எழுதும் திறன், படிக்கும் திறன் குறைவாக இருக்கும்.
  • சம வயது குழந்தைகளுடன் ஒப்பிட்டால் கற்கும் திறன் குறைவாக காணப்படும்.
  • பேசும் மொழி, பேச்சு திறன் ஆகியவற்றில் தயக்கம், மாறுபாடு, குறைபாடு பிரச்னை
  • சம வயது குழந்தைகளுடன் பழகுவதில் வித்தியாசம்
  • மருத்துவ ரீதியாக IQ குறைவாக இருப்பது
  • சக மாணவர்களுடன் ஒத்துப்போக முடியாமை
  • பள்ளிக்கு செல்வதில் விருப்பமின்மை
  • ஆசிரியர் மற்றும் சக மாணவர்களின் கேலிக்கு உள்ளாகுதல்
  • படிப்புக்காக கூடுதல் நேரத்தைக் குழந்தைகள் செலவழித்தல்

சிகிச்சை

  • இந்த அறிகுறிகளை அறிந்து கொண்டு பெற்றோர் குழந்தைகளை மருத்துவரிடம் காண்பித்து சரியான சிகிச்சை பெறுவது முக்கியம்.
  • கவனிக்காமல் அலட்சியப்படுத்த கூடாது.
  • குழந்தைகளை அடித்துத் திருத்த முயற்சிப்பது தவறு. ஆபத்தும்கூட.
  • தனிப்பட்ட கவனம் எடுக்க வேண்டும்.
  • ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் போன்றோர் சில பயிற்சிகளைத் தருவார்கள். இது இந்த குழந்தைகளுக்கு முக்கியம்; அவசியம்.
  • இந்தப் பயிற்சிகளை முறையாக மேற்கொண்டால் 14 வயதுக்குள் இயல்பான வாழ்க்கைக்கு குழந்தைகள் திரும்ப வாய்ப்புகள் அதிகம்.
Source :ஆயுஷ் குழந்தைகள் இதையும் படிக்க: குழந்தைகள் முதல் தாய்மார்கள் வரை... தேவையான சத்துகள் என்னென்ன? எவ்வளவு? ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா?  தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null