குழந்தைகள் பின்னாடி ஓடியே பலருக்கு சோர்வு வருகிறது. குழந்தை மற்றும் வீட்டை பராமரிக்கும் பெண்கள் தங்களைப் பராமரித்துக்கொள்ள நேரமில்லாமல் அவதிப்படுகின்றனர். காலையில் தூங்கி எழுந்தும் உற்சாகம் இல்லாமல் களைப்பாக இருக்கும் தாய்மார்களா நீங்கள்… உங்களது சோர்வை எளிமையாக விரட்டி அடிக்க வழிகள் இருக்கின்றன.
இந்த அறிகுறிகளை செக் செய்யுங்க
செரிமான பிரச்னை
கால்சியம் குறைவு
உயிர்சத்து குறைவு
இரவில் கெண்டைக்காலில் வலி
ரத்த கொதிப்பால் வரும் தலை வலி
காலை நேர அலுப்பு
இரவில் 2-3 முறை சிறுநீர் கழித்தல்
ரத்தசோகை
தைராய்டு சுரப்பு குறைவு
6-7 மணி நேரம் தூக்கம் இல்லாதது…
இதெல்லாம் இருந்தால் நீங்கள் காலை தூங்கி எழுந்தாலும் உற்சாகமாக இருக்காது. சோர்வாகதான் இருக்கும்.
முக்கியமாக மலச்சிக்கல் இருந்தால் உடல் மற்றும் மனம் இரண்டையும் கெடுத்துவிடும்.
மாதவிடாய் காலத்தில் எரிச்சல், பதற்றம், பயம், திடீரென வியர்க்கும் பிரச்னை போன்றவை இருக்கலாம்.
இவை அனைத்தும் காலை சோர்வுக்கான காரணங்கள்….
மனமும் ஒரு பங்கு...
எல்லா வேலையும் நாமே செய்ய வேண்டும்.
அலுப்பு வருதல்
செய்கின்ற வேலையை திரும்பத் திரும்ப செய்தல்
செய்கின்ற வேலைக்கும் சின்ன பாராட்டுகூட இல்லாதது
சுற்றி இருப்பவர்கள் சொல்லும் குறை கூறுதல்
அதிகபடியான ஸ்ட்ரெஸ்
தங்களுக்கு எனப் பிடித்த உணவுகளைகூட சாப்பிட முடியாத சூழல்
இதெல்லாம் மனசோர்வையும் உண்டாக்கும்… தியானம் செய்யுங்கள்… மனதை அமைதிப்படுத்தும் இசையை கேட்கலாம்.
இதையும் படிக்க: மென்சுரல் கப் எப்படி பயன்படுத்துவது? ப்ளஸ், மைனஸ் என்னென்ன?
Image Source : olivers market
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });
என்ன செய்யலாம்? தீர்வுகள்…
இரவில் ஒரு வாழைப்பழம், ஒரு சப்போட்டா பழம் சாப்பிடுங்கள்.
இரவில் 3 வகை பழ உணவுகளை மட்டும் சாப்பிடுவதுகூட நல்லதுதான்.
எளிதில் செரிக்க கூடிய உணவுகளைக் கட்டாயம் இரவில் சாப்பிடுங்கள்.
முழு வயிறு மூக்கு முட்ட சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
இட்லி, ஸ்டீம் தோசை, இடியாப்பம், ஆப்பம் போன்ற ஆவியில் வேகவைக்கப்பட்ட உணவுகள் நல்லது.
பழங்கள், காய்கறிகள் நல்லது.
ஹெவி உணவுகள் கூடவே கூடாது.
தூக்கம் 6-7 மணி நேரமாவது கட்டாயம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
காலையில் சாப்பிட வேண்டியவை
கட்டாயம் காலை உணவு சாப்பிடுங்கள்.
நெல்லிக்காய் அல்லது உலர்ந்த நெல்லிக்காய் அல்லது தேன் நெல்லிக்காய் சாப்பிடலாம்.
உலர்ந்த திராட்சை, உலர்ந்த அத்தி, 2 பாதாம், 2 வால்நட் சாப்பிடுங்கள்.
மதியம் உண்ண வேண்டியவை
காய்கறி, கீரைகள்…
கூட்டு, பருப்பு உசிலி, பருப்பு போட்ட காய்கறி
தேங்காய்ப் பால் சேர்த்த அவியல், சொதி
முருங்கைக்கீரை
மற்ற கீரைகளை பொரியலாக மசியலாக சாப்பிடலாம்.
100 கிராம் அரிசி சாப்பிடலாம்.
ஒருநாள் அரிசி, அடுத்த நாள் பிரவுன் அரிசி, பின், வரகு, சாமை, குதிரைவாலி என மாற்றி மாற்றி சாப்பிடுங்கள்.
இதையும் படிக்க: கருமையான உதடு… காரணங்கள் என்னென்ன? தீர்வுகள்...
இதெல்லாம் சோர்வை போக்கும்…
புதினா டீ
ஹோம்மேட் மால்ட்
பழச்சாறு, ஸ்மூத்தி
பழ சாலட்
2-3 லிட்டர் தண்ணீர் அருந்துவது
கரும்பு ஜூஸ்
பால் சேர்க்காத மூலிகை டீ
Image Source : spoon university
ஆரோக்கிய நொறுக்குதீனி
சுண்டல் வகைகள்
கொழுக்கட்டை
போலி
கடலஉருண்டை, எள்ளு உருண்டை
ஹோம்மேட் ஜாம் சேர்த்த கோதுமை அல்லது முழு தானிய பிரெட்
முட்டை சேர்த்த பிரெட்
சத்து மாவு கஞ்சி
கட்லெட்
சூப்
பனைவெல்லம், கருப்பட்டி
தேன்
ஜூஸ், ஸ்மூத்தி
யோகர்ட்
மலச்சிக்கல் இருந்தால் சோர்வு உண்டாகும். மலச்சிக்கல் தீர…
இரவில், காலை வெறும் வயிற்றில் 2 டம்ளர் இளஞ்சூடான நீர் குடிக்க வேண்டும்.
இதையும் படிக்க : கசப்பு இல்லாத 5 இனிப்பான சிரப்பால் தீரும் மலச்சிக்கல் பிரச்னை...
கடுக்காய் பொடி சிறிதளவு இளஞ்சூடான நீரில் கலந்து இரவில் குடிக்கலாம்.
திரிபலா பொடி வாங்கி மாலையில் ஒரு டீஸ்பூன் இளஞ்சூடான நீரில் கலந்து குடிக்கலாம்.
ஊறவைத்த வெந்தயம் சாப்பிடுங்கள்.
கமலா பழம், சாத்துக்குடி பழம் ஆகியவற்றை சுளையாக சாப்பிடுங்கள். சுளையின் மேல் உள்ள மெல்லிய தோலை உரிக்க கூடாது.
இதையும் படிக்க: தாய்மார்களுக்கு வரும் முதுகு வலி, மூட்டு வலி போக்கும் எளிய வழிமுறைகள்...
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர
இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
null
null