குழந்தை வளர்ப்பில் தந்தை செய்ய தவறுவது என்னென்ன?

குழந்தை வளர்ப்பில் தந்தை செய்ய தவறுவது என்னென்ன?

குழந்தை வளர்ப்பில் தாயானவள் கட்டாயமாக இருப்பார். ஆனால், பெரும்பாலும் தந்தையானவர் இதில் இணையாமல் இருக்கிறார். தந்தையும் குழந்தை வளர்ப்பில் ஈடுபட வேண்டும். குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமான சில கடமைகள் தந்தைக்கு உள்ளன. அவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு பின்பற்றினால் வாழ்க்கை சுகம். சமூகத்துக்கு நல்ல குழந்தையை கொடுக்கலாம்.

முதல் கடமை

குழந்தையைத் தாயானவள் பார்த்துக்கொள்வதுபோல, குழந்தையின் தாயை நீங்கள் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். உங்களது மனைவியையும் சேர்த்து நீங்கள் கவனிக்க வேண்டியது அவசியம். இதுவே முதல் கடமை.

என்னென்ன பொறுப்புகளை அப்பாக்கள் செய்யலாம்?

  • குழந்தையை குளிப்பாட்டுவது
  • தொட்டிலில் போட்டு தூங்க வைப்பது
  • பாட்டில் பாலை குடிக்கும் குழந்தைகளுக்கு சரியான நேரத்துக்குத் தவறாமல் பால் தருவது.
  • நாப்கின் மாற்றுவது.
  • குழந்தைக்கு தேவையானவற்றை வாங்கி தருவது
  • குழந்தையுடன் நேரம் செலவழிப்பது
இதையெல்லாம் நீங்கள் செய்தால் தாய்க்கு ஓய்வு கிடைக்கும். உடல் புத்துணர்வு அடைந்த பின்தான் எந்த வேலையும் தாயால் சீராக செய்ய முடியும்.

சில குழந்தைகள் தந்தையிடம் செல்லாது? என்ன காரணம்?

குழந்தையை தூக்குவது, கொஞ்சுவது, உணவு ஊட்டுவது என முழுமையாக தாயே குழந்தையை பராமரித்தால், தாயிடம் மட்டுமே குழந்தைக்கு நல்லுறவு இருக்கும். தந்தையை வேறு ஒரு ஆளாக குழந்தை புரிந்து கொள்ளும். தந்தையர்கள் சிலர் விளையாட்டுக்காக குழந்தையை மிரட்டி கொண்டே இருப்பார்கள். இதனாலும் குழந்தை தந்தையிடம் செல்லாது. தாயுடன் மட்டுமே நெருக்கம் காண்பிக்கும். இதையும் படிக்க: எந்த குழந்தைகள் கற்றல் குறைபாட்டால் (டிஸ்லெக்சியா) பாதிக்கப்படுகிறார்கள்? அறிகுறிகள் என்ன? father role in kids life

அம்மாக்கள் செய்யும் தவறு?

குழந்தை சாப்பிடவில்லை என்றால் அப்பாவிடம் சொல்லிவிடுவேன். அப்பா அடிப்பாரு அல்லது வீட்டில் மாமா, சித்தப்பா எவரேனும் இருந்தால் அவர்களை காண்பித்து குழந்தையை பயமுறுத்தி உணவு ஊட்டுவது, தூங்க செய்வது போன்றவற்றை செய்ய கூடாது. இதெல்லாம் தவறான வளர்ப்பு முறை. இதையும் படிக்க: ஃபேஸ்புக் நிறுவனரான 'மார்க்' தன் குழந்தைக்கு 'குவான்டம் ஃபிஸிக்ஸ்' வாசித்து காட்டுகிறார் (Newborn Parenting tips)... ஏன்?

தந்தை செய்ய வேண்டியவை

  • குழந்தையுடன் விளையாடுதல்
  • நல்லது சொல்லிக் கொடுத்தல்
  • குழந்தைக்கு வரைய கற்றுக் கொடுப்பது
  • குழந்தையின் மனதில் நல்ல எண்ணங்களை உருவாக்குவது
  • மரியாதை சொல்லி தருவது
  • குழந்தைகளை டிவி பார்க்காமல் தவிர்ப்பது
  • மொபைலில் விளையாட விடாமல் தவிர்ப்பது
  • குழந்தைகள் முன் செல்போன் அதிகமாக பயன்படுத்துவதைத் தவிர்ப்பது.
  • குத்துச்சண்டை, நாடகங்கள் போன்ற டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதைத் தவிர்ப்பது.
  • குழந்தையை ஓடியாடி விளையாட செய்வது.
  • நல்ல தரமான கதைகளை சொல்வது
தந்தை இப்படி பல நல்ல பொறுப்புகளை எடுத்துக்கொண்டால் குழந்தை இச்சமூகத்தில் நல்ல குழந்தையாக வளரும்.

உணவுகளைப் பற்றி தந்தை குழந்தையிடம் சொல்ல வேண்டியவை

இதை சாப்பிடகூடாது. அதை சாப்பிடகூடாது எனச் சொல்வதைவிட இதைச் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. இதைச் சாப்பிட்டால் உடலுக்கு கேடு விளைவிக்கும் என எடுத்து சொல்ல வேண்டும். தனக்கு கீரை பிடிக்கவில்லை என்றால் குழந்தைக்கும் அதைச் சொல்லிதர கூடாது. தன் சொந்த கருத்துகளை குழந்தையின் மீது திணிக்க கூடாது. கட்டாயப்படுத்தி குழந்தைகளுக்கு பிடிக்காததை செய்வதோ செய்ய சொல்வதோ கூடாது. குழந்தை துரித உணவுகளை ஆசைப்பட்டு கேட்டால், உடனே வாங்கி தர கூடாது. இதையெல்லாம் ஏன் சாப்பிட கூடாது என முதலில் சொல்லி பழக்குங்கள். இதையும் படிக்க: பிரச்னையில்லாமல் உறவுகளை மகிழ்ச்சியாக வழிநடத்தி செல்ல உதவும் 10 வாழ்க்கை ரகசியங்கள்… fathers role in child life
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });

தந்தை கவனிக்க வேண்டியவை

  • திக்கிப் பேசும் குழந்தைகள்
  • பெட் வெட்டிங் செய்யும் குழந்தைகள்
  • பள்ளிக்கு செல்ல அழும் குழந்தைகள்
  • பொய் சொல்லும் குழந்தைகள்
  • அதீத செயல்பாடுடன் உள்ள குழந்தைகள்
இவர்களைத் தாய் கவனிப்பதுடன் தந்தையும் சேர்ந்து கவனிப்பது நல்லது. இவர்களுக்கு மனம் மற்றும் உடல் ரீதியான சிகிச்சைகளைத் தர வேண்டும். கவுன்சலிங் செய்வதும் நல்ல பலன் கொடுக்கும்.

தாயும் தந்தையும் பின்பற்ற வேண்டியவை

  • குழந்தைக்கு எப்போது எவர்சில்வர் பாத்திரங்கள், தட்டுகளில் உணவைக் கொடுத்து பழக்க வேண்டும்.
  • தண்ணீர் பாட்டிலும் ஸ்டீல் அல்லது காப்பரில் வாங்கலாம்.
  • வாய் சிறிதாக உள்ள பாட்டிலை வாங்குவது நல்லது.
  • பணிக்கு செல்லும் பெற்றோர் ஞாயிற்றுகிழமையாவது முழு நேரத்தையும் குழந்தையிடம் செலவிட வேண்டும்.
  • வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் சேர்ப்பது நல்லது. பாதுகாப்பும்கூட.
  • பஸ், வேன்களில் நீண்ட தூரம் குழந்தை பயணம் செய்தால், முதுகுத்தண்டுவடம் சார்ந்த பிரச்னைகள் வரக்கூடும்.
  • குழந்தையை படி, படி என அடிக்கடி கட்டாயப்படுத்தாமல், புரியும்படி சொல்வது நல்லது. விளையாட்டும் படிப்பும் இரண்டுமே குழந்தைக்கு இருப்பது நல்லது.
  • ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு திறன் இருக்கும். அந்த தனித்துவ திறனை கண்டுபிடிக்க முயலுங்கள்.
  • பிடிக்காத விஷயத்தை செய்ய சொல்லி குழந்தையை வற்புறுத்த கூடாது.
  • டிவி, மொபைல் விளையாட்டுகளைவிட உடலுழைப்பு தரும் விளையாட்டுகளை விளையாட குழந்தையை ஊக்குவியுங்கள்.
  • அன்றாடம் தாயும் தந்தையும் காலை முதல் இரவு வரை என்ன நடந்தது எனக் குழந்தைகளிடம் தினமும் கேட்க வேண்டும். ஏனெனில் காலம் மிகவும் மோசமாக இருப்பதால் குழந்தையைப் பாதுகாப்பது பெற்றோரின் கடமை.
குழந்தை என்ன நடந்தாலும் தாய், தந்தையரிடம் பயம் இல்லாமல் சொல்லும் அளவுக்கு உங்களது வளர்ப்புமுறை இருந்தால் எல்லாக் குழந்தைகளும் பாதுகாப்புடன் இருக்கும். குழந்தையின் பாதுகாப்பு பெற்றோர் கையிலே. இதையும் படிக்க: அப்பாக்கள் பின்பற்ற வேண்டிய 6 செயல்கள்… ஆரோக்கிய குழந்தைக்கான மந்திரங்கள்... ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா?  தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null