வாரா வாரம் கருவில் குழந்தை வளரும் விதம் எப்படி இருக்கும்?

வாரா வாரம் கருவில் குழந்தை வளரும் விதம் எப்படி இருக்கும்?

ஒரு பெண் கர்ப்பம் தரித்து விட்டால், அவளது வயிற்றில் கருவானது
மெல்ல வளரத் தொடங்கும். ஒவ்வொரு காலகட்டங்களிலும் கருவின் வளர்ச்சி
படிப்படியாக நிகழும். ஒரு கருவானது வளர்ந்து முழு வளர்ச்சியை அடைய 38 வாரங்கள் எடுக்கும். இந்த பதிவில் ஒவ்வொரு வாரங்களிலும் கருவின் வளர்ச்சி நிலை எப்படி இருக்கும் என்பதைத் தெளிவாகப் பார்க்கலாம்.  இது கருவில் குழந்தை வளரும் விதம் பற்றிய பதிவு.

ஒரு பெண்ணின் உடலில் இனப்பெருக்க செல் உருவாகும். அதனையே கருமுட்டை என்று அழைப்பார்கள். இந்த கரு முட்டையானது பெண்ணின் உடலிலிருந்து அண்டம் விடுப்புகாலத்தில் வெளியே வரும். ஆக ஆணின் இனப்பெருக்க செல்லான விந்தும், கருமுட்டையும் கர்ப்பப்பை ஃபலோபியன் குழாய்கள் ஒன்றினுள் இணையும். இந்த நிகழ்வின் மூலம் உருவாக்கப்பட்ட உயிரணுவே கரு என்பதாகும். இந்த நிகழ்வையே கருத்தரித்தல் என்று கூறுகின்றோம். ஆக இந்த கருத்தரிப்பு ஏற்பட்ட சுமார் 30 மணி நேரத்திற்குள், கருவின் முதல் செல் பிளவு முடிகிறது. இதுவே கருவில் குழந்தை வளரும் விதம் என்கிறோம். இதை ஆங்கிலத்தில் Fetal development week by week (Varaa varam Karuvil kulanthai valarum vitham) என்கிறோம்.

கருவில் குழந்தை வளரும் விதம்

முதல் வாரம் கருவின் வளர்ச்சி

ஃபலோப்பியன் குழாயில் இருக்கும் கருவானது தன் பயணத்தைத் தொடங்க ஆரம்பிக்கும். அதாவது குழாயில் இருந்து நகர்ந்து பெண்ணின் கர்ப்பப்பை உட்சுவரில் பதிந்துவிடும். இந்த நிகழ்வானது, கருத்தரித்தல் ஏற்பட்ட 6வது நாளில் ஏற்பட்டு 12ஆம் நாளில் நிறைவு அடையும். இது கருவில் குழந்தை வளரும் விதமாகும்.

நஞ்சுக் கொடி

இந்த நேரத்தில் வெளிப்புற செல்கள், பிளாசன்டா/நஞ்சுக்கொடி என்ற அமைப்பை ஏற்படுத்தத் தொடங்கும். கருவின் வளர்ச்சியில் இது ஒரு மிகப் பிரதானமான நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நஞ்சுக்கொடி தாய் மற்றும் கருவினை இணைக்கும் மகத்தான பணியைச் செய்கிறது. இந்த நஞ்சுக்கொடியின் மூலமாகவே பிராணவாயு, சத்துக்கள், ஹார்மோன்கள் முதலிய அனைத்து விஷயங்களும் வளரும் கருவிற்குக் கிடைக்கப் பெறுகின்றன. மேலும் இது கழிவுப் பொருட்களை அகற்ற உதவுகின்றது. தாயின் இரத்தம் கருவின் இரத்தத்துடன் கலக்காமல் தடுத்து உதவுகின்றது. இந்த பிளசன்டாவானது வளரும் கருவுடன் தொப்புள்கொடி வழியே தொடர்பு கொள்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு முதல் நான்கு வாரங்கள் கருவின் வளர்ச்சி

 • இதுவும் மிக முக்கியமான காலகட்டமாகும். ஏனென்றால் இந்த சமயத்தில்தான்
  கருவின் பல்வேறு அமைப்புகள் உருவாகத் தொடங்கும். அவை என்னவென்று அறிந்து கொள்ள ஆவல் வந்துவிட்டதா? மூளை முதுகுத்தண்டு, நரம்புகள், நகங்கள், தோல் மற்றும் முடி முதலிய அமைப்புகள் இவற்றில் அடங்கும்.
 • மேலும் சிசுவின் செரிமான பாதை வளர தொடங்கும். இன்னும் சில உறுப்புகளின் பகுதிகளும் வளர தொடங்குகின்றன. அவை கணையம் மற்றும் கல்லீரல் என்பனவாகும்.
 • இதயம் ,எலும்புகள், சிறுநீரகம், தசைகள் ரத்த அமைப்புகள் முதலிய முக்கிய அமைப்புகளும் உருவாகத் தொடங்குகின்றன. மூன்று வாரங்களில் மூளையானது முன்பகுதி, நடுப்பகுதி மற்றும் பின் பகுதி என்று மூன்று முக்கிய பாகங்களாகப் பிரியத் தொடங்குகின்றன. சுவாச அமைப்புகளின் வளர்ச்சியும் நடக்கத் தொடங்குகின்றன.
 • இரத்த அணுக்கள் முதன்முதலாகக் கருவில் உருவாகிய சமயத்தில் ரத்தநாளங்கள் கருவின் உடல் முழுவதும் உருவாகத் தொடங்குகின்றன. இதன் இறுதி மற்றும் முத்தாய்ப்பான கட்டமாகக் குழாய் வடிவில் இதயம் கருவில் தோன்றுகின்றது. பிறகு இதயத்தில் அறைகள் தோன்றி மேலும் வளர்ச்சி நிலை ஏற்படும். அதாவது சரியாகச் சொல்வதானால் கரு உருவான 3 வாரங்கள் மற்றும் 1 நாளில் இதயத்துடிப்பு ஏற்படுகின்றது.
 • கருவில் உடலில் முதன் முதலாக இரத்த ஓட்டம் சிறப்பாக நடக்கத் தொடங்கும். இதுவே முதல் இயங்கத் தொடங்கும் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
 • படிக்க: சுக பிரசவம் அறிகுறிகள் என்ன?

முதல் மூன்று முதல் நான்கு வாரங்கள் கருவின் வளர்ச்சி

இந்த சமயத்தில் தட்டையாக இருக்கும் கரு மடங்கு தொடங்கும் அதனால் செரிமான அமைப்பு சரியான வகையில் இணைக்கப்பட்டு மார்பு மற்றும் வயிற்றுப் பகுதி தோன்ற தொடங்கும்.

முதல் நான்கு முதல் ஆறு வாரங்கள் கருவின் வளர்ச்சி

இந்த நேரத்தில் தான் மிக முக்கியமான அம்னியான் திரவம் கருவைச் சுற்றி உருவாகத் தொடங்கும். இந்த அம்னியான் திரவம் கருவிற்குத் தேவையான பாதுகாப்பை நல்குகிறது.

இதயத் துடிப்பு

சிசுவின் இதயத் துடிப்பு ஏற்படத் தொடங்கும்.

மூளை வளர்ச்சி

இந்த சமயத்தில் மூளையின் வளர்ச்சி வேகமாக நடைபெறும் தொடங்கும்.

கை கால்

கை மற்றும் கால் போன்ற பாகங்களில் வளர்ச்சி ஏற்படத் தொடங்கும்.

படிக்க: யாருக்கு சிசேரியன் பிரசவம் செய்ய வேண்டும்?

ஐந்தாம் வாரம் கருவில் குழந்தை வளரும் விதம்

இந்த ஐந்தாவது வாரத்தில் மூளை ஐந்து தனிப்பட்ட பகுதிகளாகப் பிரிந்து விடும். அதாவது செரிபிரல் ஹெமிஸ்பியர் ஏற்பட்டுவிடும். இவையே சிசுவின் சிந்தனை , புத்திக்கூர்மை ,பேச்சு ,பார்வை ,அசைதல் போன்ற பல்வேறுவிதமான விஷயங்களைக் கட்டுப்படுத்தும் அமைப்பாகும்.

சுவாச அமைப்பின் முக்கிய பகுதியான பிராங்கை நுரையீரல் உடன் இணைய தொடங்கும்.

ஈரல் மற்றும் சிறுநீரகங்கள்

சிசுவின் உடல் உருவாகிவிடும். அதைப் போல நிரந்தரமான சிறுநீரகங்கள் அமைந்துவிடும்.

இனப்பெருக்க உறுப்புகள்

கருவின் மேற்பகுதியில் இனப்பெருக்க உறுப்புகள் உருவாகும். ஐந்தாவது வாரங்களில் இவை உரிய உறுப்புகளுக்கு இடம் நகர்ந்து செல்லும். அதாவது சிறுநீரகத்திற்கு அருகே இந்த இனப்பெருக்க உறுப்புகள் தோன்றிவிடும்.

கை தட்டுகள் மற்றும் மணிக்கட்டு

சிசுவின் உடலில் கை தட்டுகள் மற்றும் மணிக்கட்டு போன்ற பாகங்கள் உருவாகத் தொடங்கும்.

6 முதல் 8 வாரங்களில் கருவின் வளர்ச்சி

தற்சமயம் கருவானது அசையத் தொடங்கும்.

காதுகள்

இந்த சமயத்தில் வெளிப்புற காதுகள் உருவாகத் தொடங்கும். மேலும் டயப்ரம் மற்றும் உடல் பாகங்கள் வளர்ச்சி நிலையை எய்தும்.

மூளை அலைவரிசை

மேலும் இந்த காலகட்டத்தில் கை தட்டுதல் ஒரு முழுமையான உருவம் பெறுகின்றன. சுமார் 6 வாரங்கள் 2 நாட்கள் என்ற சமயத்தில் மூளையின் அலைவரிசைகள் பதிவாகத் தொடங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 • மேலும் 61/2 வாரங்களில் மார்பு காம்புகள் தோன்றுகின்றன. முழங்கைகள்
  ஏற்பட்டு விரல்கள் விரியத் தொடங்கும். கை அசைவுகளை ஏற்படும்.
 • 7ஆம் வாரங்களில் சிசுவிற்கு விக்கல்கள் தோன்றும். சிசுவின் திடுக்கிடும் உணர்வுகளை வெளிப்படுத்தும் கால் இயக்கங்களை அறிய முடியும்.
 • நான்கு அரைகளோடு இதயம் வளர்ந்து ஒரு நிமிடத்திற்கு சுமார் 167 முறை துடிக்கத் தொடங்கும்.
 • 7ஆம் வாரங்களில் பெண் கருவில் முட்டைகள் தோன்றிவிடுகின்றன.
 • 71/2 ஆம் வாரங்களில் கண்ணீர் விழித்திரையில் ஏற்படுகின்றது.கண் இமைகளும் வளரத் தொடங்கிவிடும்.

எட்டாம் மாத கருவில் குழந்தை வளரும் விதம்

இந்த நேரத்தில் மூளை சிறப்பான வளர்ச்சியை எட்டி இருக்கும்.கருவின் மூளையின் எடை மொத்த உடல் எடையில் பாதி அளவிற்கு இருக்கும்.

 • இந்த காலத்தில் முக்கிய நிகழ்வாக வலது அல்லது இடது கை ஆளுமை சிசுவிற்கு ஏற்படும்.
 • இந்த காலகட்டத்தில் குழந்தை தலையைச் சுழற்றும். கழுத்தை நீட்டிப் பார்க்கும். மேலும் முகத்தைத் தடவிப் பார்க்கும்.
 • இந்த காலத்தில் கரு சுவாசிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் மேலும் கருவின் சிறுநீரகங்கள் இருந்து சிறுநீர் உற்பத்தியாகத் தொடங்கும். இவை அம்மினியாட்டிக் திரவத்தில் கலந்துவிடும்.
 • மேலும் முகத்தில் புருவங்கள் ஏற்படும். வாய் பகுதியைச் சுற்றி முடிகள் வளரத் தொடங்கும்.
 • இந்த 8ஆம் வாரக் கால இறுதி நேரத்தில் கரு ஏறக்குறைய கடைசிக் கட்ட வளர்ச்சியை எட்டி இருக்கும். அதாவது 1 அணு செல்லாக தோன்றியிருந்த கரு தற்சமயம் 1 பில்லியன் செல்களாக வளர்ந்து பல்வேறு உடல் அமைப்புகளைப் பெற்றுவிடும். சுருங்கச் சொன்னால் மனித உடலின் 90 % அமைப்புகளைக் கரு பெற்றுவிட்டது என்று அர்த்தம்.

ஒன்பதாவது வாரம் கருவின் வளர்ச்சி

சிசு இந்த நேரத்தில் கை கட்டை விரலைச் சூப்பத் தொடங்கும். மேலும் அம்னியாடிக் திரவத்தைக் குடிக்கத் தொடங்கும். சிசு நாக்கை நீட்டத் தொடங்கும் பெருமூச்சு விடும். ஏதாவது பொருளைப் பற்ற இயலும்.

இந்த காலகட்டத்தில் ஆண் மற்றும் பெண் என்று சுட்டிக்காட்டும் வெளிப்புற பாலுறுப்புகள் உற்பத்தியாகும்.

பத்தாம் மாதத்தில் குழந்தையின் வளர்ச்சி

சிசுவின் கைகளில் ரேகைகள் தோன்றுகின்றன. கை மற்றும் கால்களில் நகங்கள் வளர தொடங்கும்.

பதினோராம் மாதத்தில் கருவின் வளர்ச்சி

சிசுவின் மூக்கு ,உதடு பகுதிகள் தோன்றுகின்றன.சிசு விழுங்கிய பொருட்களைக் குடல் கிரகிக்கத் தொடங்கும்.

12 முதல் 16 வாரங்கள் கருவின் வளர்ச்சி

12வாரக் கர்ப்ப காலத்தோடு முதல் ட்ரை செமஸ்டர் நிறைவடையும். தற்சமயம் குழந்தைக்குச் சுவை அமைப்புகள் உருவாகும். கையின் நீளமானது உடலுக்கு ஏற்ற சரியான விகிதத்தில் அமைந்துவிடும் கன்னங்களில் கொழுப்புச்சத்து படியும். பல் வளர்ச்சி ஏற்படும். ஆறாவது வாரத்திலே கரு அசைய தொடங்கிவிடும் என்றாலும் கர்ப்பிணிப் பெண்ணால் இந்தக் கட்டத்தில்தான் அசைவுகளைச் சரியாக உணர முடியும்.

16 முதல் 20 வாரங்கள் கருவின் வளர்ச்சி

16வது வாரங்கள் தொடக்கத்திலிருந்து சுவாச தினசரி சுழற்சி ஆரம்பித்து விடும்.
சிசுவின் மீது ஒரு பாதுகாப்பான திரவம் படர்ந்திருக்கும்.இது சிசுவின் தோலை அம்னியாட்டிக் திரவத்தின் எரிச்சல் தன்மைகளில் இருந்து காப்பாற்ற உதவுகிறது.

20 முதல் 24 வாரங்கள் கருவின் வளர்ச்சி

இந்த சமயத்தில் கருவின் வெளிப்புற காதுகள் அமைந்து விடுகின்றன. குழந்தைக்குச் சத்தங்கள் கேட்கத் தொடங்கிவிடும்.தலையின் மேல் பகுதியில் முடி வளர ஆரம்பித்துவிடும்.

படிக்க: குழந்தை பிறக்க செக்ஸ் பொசிஷன்-கள்

24 முதல் 28 வாரங்கள் கருவின் வளர்ச்சி

இந்த காலகட்டத்தில் சிசுவின் கண்கள் கண்ணீரை உற்பத்தி செய்கின்றன. சிசுவினால் ஒளியினை உணர முடியும்.சிசு குட்டிக்கரணம் கூட அடிக்கத் தொடங்கும். சிசுவின் தோலில் இருக்கும் சுருக்கங்கள் குறைய தொடங்கும்.சிசுவின் தோலில் போதிய கொழுப்புச் சத்துக்கள் படியத் தொடங்கும்.

28 முதல் 32 வாரங்கள் கருவின் வளர்ச்சி

கரு ஒரு முழுமையான வளர்ச்சி நிலையை எய்தி இருக்கும். சிசுவானது ஒரு ஒருங்கிணைத்த இயக்கத்தை வெளிப்படுத்தத் தொடங்கும் .தனக்குத் தேவையான ஓய்வு எடுத்துக் கொள்ளும்.

32 முதல் 36 வார கருவில் குழந்தை வளரும் விதம்

இந்த சமயங்களில் சிசுவின் கைகள் ஒரு உறுதியான பிடிமானத்தை அடைந்துவிடும். சிசுவிற்குச் சுவை திறன் நன்றாக ஏற்பட்டு விடும். தாய் சாப்பிடும் உணவுகளின் சுவையை உணர முடியும்.பிடித்த உணவுகள் என்றால் சிசு மகிழ்ச்சி அடையும்.

36 வாரங்கள்

இது சிசு வெளியுலகத்துக்கு வரத் தயாராக இருக்கும் காலகட்டம் ஆகும். தாய்க்கு ஏற்படும் ஹார்மோன்கள் மாற்றத்தின் மூலம் பிரசவ வலி ஏற்படும். சிசுவானது வெளியுலகத்திற்கு வரத் தயாராகும்.

இந்தப் பதிவின் மூலம் கருவின் வளர்ச்சி நிலைகள் ஒவ்வொரு வாரமும் எப்படி இருக்கும் அதாவது கருவில் குழந்தை வளரும் விதம் எதுவென்று தெளிவாக அறிந்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null