குட்டிஸ்க்கு பிங்கர் புட்ஸ் எப்போது தரலாம்?சில பிங்கர் புட்ஸ்  டிப்ஸ்…!!

குட்டிஸ்க்கு பிங்கர் புட்ஸ் எப்போது தரலாம்?சில பிங்கர் புட்ஸ் டிப்ஸ்…!!

குழந்தைகளுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான உணவுகளைக் கொடுக்க தொடங்குவோம்.அந்த வகையில் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த ஏற்ற பிங்கர் புட்ஸ்க்கு தனியிடமுண்டு. ஆனால் பல தாய்மார்களுக்கு இந்த பிங்கர் புட்ஸ்யை குழந்தைகளுக்கு எப்பொழுது தர தொடங்கலாம்? என்னென்ன வகை பிங்கர் புட்ஸ் உள்ளன? போன்வற்றறை எல்லாம் தெளிவாகத் தெரிவதில்லை.

இந்த பதிவில் இந்த பிங்கர் புட்ஸ் பற்றியும்,சில பிங்கர் புட் ரெசிபிஸ் பற்றித் தெளிவாகப் பார்க்கலாம்.

எந்த வயதில் பிங்கர் புட்ஸ் தர தொடங்கலாம்?

இந்த பிங்கர் புட்ஸ் தருவதற்கு என்று குறிப்பிட்டு வயது இல்லை.மிகவும் அதிக சதவீத குழந்தைகள் 7 முதல் 8 மாத வயதில் பிங்கர் ஃபுட்ஸ் சாப்பிடத் தயார் ஆகி விடுகின்றார்கள்.

இந்த வயது வரம்புகளை விட முதலில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளிடம் தென்படும் சில அறிகுறிகளை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்க வேண்டும். சில குறிப்பிட்ட அறிகுறிகள்   குழந்தைகளிடம் காணப்பட்டால் ,பெற்றோர்கள் தாராளமாக பிங்கர் புட்ஸ் தரத் தொடங்கலாம்.

பிங்கர் புட்ஸ் சாப்பிடத் தயார் என்பதற்கான அறிகுறிகள்

குழந்தைகள் பிங்கர் புட்ஸ் சாப்பிடத் தயாராகிவிட்டார்கள் என்றால் அதற்கான பல்வேறு விதமான அறிகுறிகள்,மாற்றங்கள் அவர்களிடம் தென்படும்.அவை என்ன என்று பார்க்கலாமா?

1.உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் சாப்பாடு ஊட்டும் சமயங்களில், குழந்தைகள்

கரண்டியைப் பிடித்து இழுத்து வாயில் வைத்துக் கொள்ள முற்படுவார்கள்.இவ்வாறு குழந்தைகள் செய்யத் தொடங்கினால்,குழந்தைகள் தாங்களே சாப்பிட முயல்கிறார்கள் என்று அர்த்தம்.இது போன்ற செயலில் ஈடுபட்டால் அவர்களுக்குப் பெற்றோர்கள் தாராளமாக பிங்கர் புட்ஸ் தர ஆரம்பிக்கலாம்.

2.குழந்தை ஒரு பொருளை தன் ஆட்காட்டி விரல் மற்றும் கட்டை விரலைக் கொண்டு தூக்க/ எடுக்க முயன்றால், அது பிங்கர் புட்ஸ் அறிமுகப்படுத்த ஏற்ற மிகச்சிறந்த அறிகுறி ஆகும்.

3.எதையாவது கடிக்க வேண்டும் மாதிரியான ஆர்வம் தென்படும்.

பற்கள் வந்த பிறகு தான் பிங்கர் புட்ஸ் தர வேண்டுமா?

இந்த சந்தேகம் நிறைய பெற்றோர்களுக்கு உள்ளது.சில பெற்றோர்கள் குழந்தைக்குப் பற்கள் Palsothai Sariyaga Patti Vaithiyam Recipe

வளர தொடங்கியவுடன் மட்டுமே பிங்கர் புட்ஸ் தர வேண்டும் என்று நினைக்கின்றார்கள்.ஆனால் அது அப்படி கிடையாது.குழந்தைகளுக்குத் திட உணவு கொடுக்க தொடங்கும் முன்பு பற்கள் முளைத்து இருக்க வேண்டுமென்று அவசியமோ கட்டாயமோ இல்லை. பற்கள் இல்லாத போதும் அவர்களால் ஈறுகளின் உதவியைக் கொண்டு மெல்ல இயலும்.பற்கள் முளைக்காத போதும்,உங்கள் குழந்தை உங்கள் விரலையோ அல்லது வேறு பொருட்களையும் பற்றிக் கடிக்கத் தொடங்கினால் உங்கள் குழந்தை பிங்கர் புட் சாப்பிடத் தயாராகிவிட்டது என்று அர்த்தம்.

பிங்கர் புட்டாக உங்கள் குழந்தைக்கு எந்த உணவுகளைத் தேர்ந்தெடுக்கலாம்?

  • காய்கறிகள்
  • பழவகைகள்
  • பருப்பு வகைகள்
  • அசைவ உணவுகள்

போன்ற பலவற்றைத் தேர்ந்தெடுக்கலாம். இவற்றில் தேவையானவற்றை வேகவைத்துக் கொடுக்கும் பொழுது இன்னும் எளிமையாகக் குழந்தைகளால் சாப்பிட முடியும்.

பிங்கர் புட் உணவுப் பட்டியல்

பிரட்

பிரட்டை குழந்தைகளுக்கு இரண்டு துண்டாக வெட்டி பிங்கர் புட்டாக சாப்பிடத் தரலாம்.

சீஸ்

பால் வகையான சீஸ் குழந்தைகளுக்குத் தர ஏற்ற பிங்கர் புட்டாகும்.

காய்கறிகள்

இது மிகவும் சத்து நிறைந்த உணவாகும். இதனைக் குழந்தைக்குத் தரும்பொழுது ஆர்வமாக எடுத்துச் சாப்பிடுவார்கள்.

என்னென்ன காய்கறிகள் தரலாம் என்று விவரமாகப் பார்க்கலாமா?

1.வேகவைத்த கேரட் துண்டுகள்

2.வேக வைத்த பீன்ஸ்

3.வேகவைத்த ப்ராக்கோலி துண்டுகள்

4.வேகவைத்த காலிபிளவர் துண்டுகள்

5.வேகவைத்த உருளைக்கிழங்கு துண்டுகள்

6.வேக வைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு துண்டுகள்

7.வேகவைத்த பேபிகார்ன்

8.வேகவைத்த பட்டாணி

9.வேகவைத்த பூசணிக்காய் துண்டுகள்

10.வேகவைத்த தக்காளி துண்டுகள்

இவற்றில் தேவைப்பட்டால் நெய் தடவிக்கொள்ளலாம். நெய் அதன் சுவையை மேலும் கூட்டும் அதனால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

பழம் வகைகள்

பழங்களைத் துண்டு துண்டுகளாக நறுக்கி குழந்தைகளுக்கு பிங்கர் புட்டாக தரலாம். பழங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியான சுவையோடு இருக்கும். தினம் ஒரு பழம்  தேர்ந்தெடுத்துத் தரலாம். இதன் மூலம் குழந்தைகளுக்குத் தேவையான சத்துக்கள் எளிதில் கிடைத்துவிடும்.

என்னென்ன பழங்கள் தரலாம் என்று பார்க்கலாமா?

1.வாழைப்பழத் துண்டுகள்

2.திராட்சைப்பழம்( பாதியாக நறுக்கியது)

3.ஆப்பிள் பழத்துண்டுகள்

4.கொய்யாப்பழ துண்டுகள்

5.ஸ்ட்ராபெரி பழத்துண்டுகள்

6.மாம்பழத் துண்டுகள்

7.பப்பாளித் துண்டுகள்

8.தர்பூசணி பழத்துண்டுகள்

9.அவகேடோ பழத்துண்டுகள்

10.கிவி பழத்துண்டுகள்

11.ப்ளம் பழத்துண்டுகள்

பருப்பு வகைகள்

1.நன்கு வேக வைத்த சுண்டல்

2.வேகவைத்த கிட்னி பீன்ஸ்( இதனைச் சிவப்பு காராமணி/ ராஜ்மா என்றும் குறிப்பிடுவார்கள்)

3.பருப்பு அடை தோசை( இது துண்டுகளாக நறுக்கிக் கொடுக்கலாம்)

தானியங்கள்

1.சப்பாத்தி

இதனை நீளமாகக் கையில் பிடிப்பதற்கு ஏதுவாக வெட்டி மடித்துத் தரலாம். சிறிய பழத் துண்டு அல்லது காய்கறிகளை உள்ளே வைத்து ஸ்டப்பிங் செய்து சுருட்டி தரலாம்.குழந்தைகள் சுவைத்துச் சாப்பிடுவார்கள்.

2.சிறிய அளவு இட்லிகள்( மினி இட்லி)

3.சிறிய அளவு தோசை( இதை இரண்டாக வெட்டி சாப்பிடத் தரலாம்)

4.பனியாரம்

அசைவ உணவுகள்

அசைவ உணவுகளில் பலவற்றைக் குழந்தைகளுக்கு பிங்கர் புட்டாக தரமுடியும். இருப்பினும் அசைவ உணவுகளைத் தரத் தொடங்குவதற்கு முன்பு மருத்துவரை ஆலோசித்துக் கொள்ளுங்கள். சில அசைவ வகை பிங்கர் புட் என்னவென்று பார்க்கலாம்.

1.சிக்கன் ஃபிங்கர்ஸ்

2.வேக வைத்த சிக்கன் மற்றும் முள்ளில்லா மீன் துண்டுகள்

3.ஆம்லெட்( துண்டுகளாகக் கத்தியில் வெட்டி தரலாம்)

ஹோம் மேட் பிஸ்கட்

பிஸ்கட் ஒரு சிறந்த பிங்கர் புட் ஆகும். ஆனால் கடையில் கிடைக்கும் பிஸ்கட் வகைகளில் குழந்தைகளின் உடலுக்கு ஆகாத பொருட்கள் கலந்த இருக்கக்கூடும். அதனால் வீட்டிலேயே சுவையான பிஸ்கட்களை

தயாரித்து குழந்தைகளுக்குச் சாப்பிடத் தரலாம். கோதுமை பிஸ்கட், ராகி பிஸ்கட், ஓட்ஸ் பிஸ்கட் என்று பலவகையான ரெசிபிகளை தயாரித்துத் தரலாம்.

புரதச்சத்து நிறைந்த பிங்கர் புட்கள்

குழந்தைகளின் வளர்ச்சியில் புரதச் சத்து பெரும் பங்கு வகிக்கின்றது.கீழே புரதச் சத்து நிறைந்த சில பிங்கர் புட் வகைகளைப் பார்க்கலாம்.

1.பன்னீர் ஸ்டிக்ஸ்

2.பன்னீர் டிக்கா கியூப்

3.டோடோ ஸ்டிக்ஸ்

4.சோயா கட்லட்

5.சீஸ் டிக்

கவனத்தில் கொள்ள வேண்டியவை

மேலே குழந்தைகளுக்கு என்ன வகையான பிங்கர் புட்ஸ் தரலாம் என்று அறிந்து கொண்டீர்கள். இப்பொழுது இந்த புட்ஸை குழந்தைகளுக்குக் கொடுக்கும் பொழுது எந்தெந்த விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.

  • இந்த உணவைக் குழந்தைகளுக்குத் தரும்பொழுது அவசியம் பெரியவர்கள் ஒருவர் அருகிலிருந்து கண்காணிக்க வேண்டும்.
  • நீங்கள் எந்த வகை பிங்கர் புட்டை தேர்வு செய்தாலும் அது சிறிய அளவில் இருப்பதாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது குழந்தைகளின் குட்டி விரல்களால் அந்த உணவை எளிதில் பற்றிப் பிடிக்க முடிய கூடியதாக இருக்க வேண்டும்.
  • சில சமயம் குழந்தைகள் இந்த விவரம் தெரியாமல் குழந்தைகள் மூக்கு ,காது போன்ற பகுதிகளில் போட்டுக் கொள்ள பார்ப்பார்கள். அதனால் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு பிங்கர் புட்ஸ் தருவதால் ஏதாவது நன்மைகள் உள்ளனவா?

1.குழந்தைகளுக்கு பிங்கர் புட்ஸ் தருவதால் பல நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அவை பின்வருமாறு.

2.குழந்தை தானே எடுத்துச் சாப்பிடப் பழகத் தொடங்கும்.

பிங்கர் புட் ரெசிபிகள்

சில பிங்கர் புட் ரெசிபிகளை பார்க்கலாம்.

உருளைக் கிழங்கு பிரட் ரோல்

தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம் -1

எண்ணெய்- தேவையான அளவு

சீரகம்-¼ ஸ்பூன்

உருளைக்கிழங்கு-1

(உங்கள் தேவைக்கு ஏற்ப எடுத்துக்கொள்ளலாம்)

மஞ்சள் தூள்-¼ ஸ்பூன்

மிளகாய்த்தூள்- சிறிதளவு( உங்கள் குழந்தையின் தேவைக்கேற்ப)

பிரெட்-1

உருளைக் கிழங்கு பிரட் ரோல் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

1.உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை உரித்து மசித்து வைத்துக் கொள்ளவும்.

2.கடாயில் எண்ணெய்  ஊற்றி சீரகம் ,வெங்காயம் முதலான பொருட்களைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

3.இத்தோடு மஞ்சள்தூள் ,மிளகாய்த்தூள் சேர்க்கவும்.

4.பிறகு வேக வைத்து மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை இதோடு சேர்த்துக் கலக்கவும்.

5.கொத்தமல்லி தலை சிறிதளவு சேர்க்கவும். தேவைக்கேற்ப உப்பைக் கலந்து கொள்ளவும்.

6.இவற்றை உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும்.

7.பிரெட்டின் ப்ரவுன் நிற பகுதியை நீக்கிக் கொள்ளவும். இதைத் தண்ணீரில் ஒருமுறை தோய்த்து எடுத்துக் கொள்ளவும்.

8.கைகளுக்கு இடையில் இந்த பிரெட்டை வைத்து தண்ணீரைப் பிழிந்து எடுக்கவும்.முடிந்த அளவு தண்ணீரை நீக்கிவிடவும்.

9.உருளைக்கிழங்கு உருண்டையை இந்த பிரட்டில் வைத்து பின் சுற்றிலும் மடித்து மூடவும்.

10.எங்காவது ஓட்டைத் தென்பட்டால் அதைக் கையில் லேசாக அழுத்தி மூடி விடவும்.

11.இதை எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

12.சுவையான உருளைக்கிழங்கு பிரட் ரோல் தயார்.

ஸ்வீட் சப்பாத்தி

வழக்கமாகச் செய்யும் சப்பாத்தியை விட ஸ்வீட் சப்பாத்தி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். சப்பாத்தி மாவின் மீது சிறிதளவு கரும்பு சக்கரை மற்றும் தேங்காயை வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு உருட்டிக் கொள்ளவும்.சப்பாத்தியாகத் தோசைக்கல்லில் சுடவும். பிறகு வெட்டி குழந்தைகளுக்குச் சாப்பிடத் தரவும். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பிங்கர் புட்டாகக் கண்டிப்பாக இருக்கும்.

இந்த பதிவின் மூலம் பிங்கர் புட்ஸ் பற்றிய பல தகவல்களையும் ,சுவையான ரெசிப்பிகள்  சிலவற்றையும் அறிந்திருப்பீர்கள். உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குத் தவறாமல் இந்த உணவுகளை அறிமுகப்படுத்துங்கள்.

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null