பிறந்த குழந்தைகளின் இறப்பைத் தடுக்க... தாய் கட்டாயமாக செய்ய வேண்டிய 2 டெக்னிக் (Must Do techniques for Moms)

பிறந்த குழந்தைகளின் இறப்பைத் தடுக்க... தாய் கட்டாயமாக செய்ய வேண்டிய 2 டெக்னிக் (Must Do techniques for Moms)

குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் (First hour Breastfeeding) அளிப்பது 22% சதவிகித பிரசவத்துக்கு பிந்தைய குழந்தைகளின் மரணத்தைத் தடுக்கிறது. ஆம், குழந்தை பிறந்து ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுத்தால் அவ்வளவு நன்மைகள் குழந்தைகளுக்கு கிடைக்கும். அதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் பிரசவங்கள் பெரும்பாலும் மருத்துவமனைகளில் நடந்தாலும் பாதி தாய்மார்கள் மட்டும்தான் குழந்தை பிறந்தவுடன் ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்கின்றனர். அதாவது 54.7%.

மூன்றில் ஒரு பங்கு பிரசவங்கள் சிசேரியனாக இருக்கின்றன. அதாவது 34% சதவிகித தாய்மார்கள் குழந்தை பிறந்து ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுப்பதில்லை.

பிறந்த குழந்தைக்கு தாய் அளிக்கப்படும் உண்மையான பரிசு எது தெரியுமா?

  • தாயின் முதல் பால், குழந்தைகளுக்கு சிறந்த நோய்த் தடுப்பு மருந்தாகும். குழந்தைகளைத் தொற்றுகளிலிருந்து பாதுகாக்க, நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்துள்ளது.
  • தாய்ப்பாலில் குழந்தைகளுக்கு தேவையான எளிதில் செரிமானம் ஆக கூடிய சத்துகளும் உள்ளன.
  • தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளிடையே மரணத்தையும் நோய்களையும் சத்துகுறைபாட்டையும் குறைக்கின்றன.
  • தாய்ப்பால் அளித்தால், 13 சதவிகித குழந்தைகளில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மரணம் தடுக்கப்படுகிறது.
  • குழந்தைகள் ஆரோக்கியத்துடன் அறிவுடன் அழுகுடன் இருக்க தாய்ப்பால் கொடுப்பதால் இவை அனைத்தும் கிடைக்கும்.
  • தாய்ப்பால் குடித்த குழந்தைகளுக்கு பாட்டிலில் பால் குடித்த குழந்தைகளைவிட அறிவாற்றல் புள்ளிகள் 5 முதல் 8 வரை அதிகமாக உள்ளது.
  • தாய்ப்பால் குடித்த குழந்தைகள், அறிவுசார் தேர்வுகளில் தாய்ப்பால் குடிக்காத குழந்தைகளைவிட நன்றாக செயல்படுகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு.
  • தாய்ப்பாலைத் தொடர்ந்து குடிக்கும் குழந்தைகளுக்கு தொற்று, நிமோனியா, குடல் சார்ந்த நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு.
  • முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் குழந்தைகளுக்கு 2 வயது வரை காதுகளில் தொற்று வரும் வாய்ப்பை 43% குறைக்கிறது.
  • மேலும், சர்க்கரை நோய், ஆஸ்துமா, இதய நோய்கள், புற்றுநோய் வரும் வாய்ப்புகள் குறைவு.

இதையும் படிக்க: ஒரு நாளைக்கு எத்தனை முறை, எவ்வளவு நேரம் தாய்ப்பால் கொடுக்கலாம்?

Breastfeeding mom

பிரசவத்துக்கு பிறகு ரத்தப்போக்கை குறைப்பது எப்படி?

  • சமீபத்தில் குழந்தை பெற்ற தாய்க்கு ஒரு நற்செய்தி. அதிக உடல் எடையை குறைக்க ஒரு ஈஸி வழி உள்ளது. அதுதான் தாய்ப்பால் கொடுப்பது.
  • ஆய்வுகளின் படி, தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்கள் உடல் எடையை விரைவாக இழக்க முடிகிறது. தங்களின் உடல் வடிவத்தை மீண்டும் பெற முடிகிறது.
  • தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்களுக்கு, மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், டைப் 2 சர்க்கரை நோய் ஆகிய நோய்கள் தாக்கும் அபாயம் குறைகிறது.
  • பிரசவத்துக்கு பின்னர் ரத்தபோக்கைக் குறைக்கிறது.
  • தாய்மார்கள் விரைவில் இயல்புநிலைக்கு திரும்ப உதவுகிறது.
  • தாய்ப்பால் அளிப்பது ஒரு கர்ப்பத்தடை போல செயல்பட்டு, அடுத்த கர்ப்பத்தைத் தாமதப்படுத்துகிறது.
  • தாய்க்கும் குழந்தைக்குமான உறவை மேம்படுத்துகிறது.

தாய்மார்கள் கவனிக்க வேண்டியவை

தாய்மார்கள் சிலர் பால் பொருட்களை குழந்தை பிறந்த 4 மாதங்களிலிருந்து தருவார்கள். சிலர் 6 மாதங்களுக்கு குறைந்த வயதுடைய குழந்தைகளுக்கு கோடை காலத்தில் தண்ணீர் கொடுப்பார்கள். முக்கியமாக தெரிந்து கொள்ளுங்கள். 11.6% குழந்தை மரணங்களுக்கு காரணம் குறைந்த அளவிலான தாய்ப்பால் கொடுப்பதுதான்.

இதையும் படிக்க: தாய்ப்பால், குழந்தைகளின் உரிமை… எங்கும் எந்த நேரத்திலும்… 

அலுவலகம் செல்லும் தாய்மார்கள் கவனிக்க

ILO உடன்பாட்டில் 183வது பிரிவின் படி தாய்மார்களுக்கு குறைந்தது 14 வாரங்களுக்கு ஊதியத்தோடு கூடிய விடுப்பு வழங்க வேண்டும்.

தாய்ப்பால் கொடுக்க வேலை இடைவெளியில் தாய்மார்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும்.

வேலை பார்க்கும் தாய்மார்கள் தாய்ப்பாலை எடுத்து, அறை வெப்பத்தில் 6-8 மணி நேரம் வைக்கலாம். அல்லது குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம்.

இப்படி வைக்கப்பட்ட தாய்ப்பாலை வேலை காரணமாக தாய் வெளியில் இருக்கும்போது குழந்தைக்கு அளிக்க முடியும்.

இதற்காக, ஒவ்வொரு அலுவலகத்திலும் வேலை செய்யும் இடத்தில் பால் கொடுப்பதற்கானத் தனியான இடம் வைத்திருக்க வேண்டும்.

பணிபுரியும் இடங்களில் குழந்தை காப்பகங்கள் இருக்க வேண்டும்.

பிறந்த குழந்தைகள் இறப்பதைத் தடுக்க 2 வழிகள்

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பிறந்த 28 நாட்களுக்குள் சுமார் 18,000 குழந்தைகள் இறந்து போகின்றன. அதாவது 1000 குழந்தைகளில் 15 குழந்தைகள் இறக்கின்றன எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: குழந்தையின் காது கேட்கும் திறனையும் பேசும் திறனையும் அறிவது எப்படி?

#1. ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுப்பது (First hour Breastfeeding) 

பிரசவத்துக்கு பின்னர் குழந்தைகள் இறப்பதைத் தடுக்க  வழி இருக்கிறது. முதல் வழியைப் பார்ப்போமா… அதுதான் குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

ஆறு மாதத்துக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.

அதாவது இப்படி ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுத்தாலே தொற்றுகள், பிறந்த உடன் இறப்பது போன்றவை தடுக்கப்படும். அதாவது 44-45% சதவிகித குழந்தைகள் இறப்பைத் தடுக்க முடியும்.

#2. கங்காரு தாய் பராமரிப்பு

babycare breastfeeding

பிரசவத்துக்கு பின்னரான குழந்தை இறப்புகளைத் தடுக்க இரண்டாவது சிறந்த வழி, “கங்காரு தாய் பராமரிப்பு”.

குழந்தை பிறந்த உடன் தாய்க்கும் குழந்தைக்கும் உடலோடு உடல் தொடர்பு கொள்ளுதல். அதாவது, அரவணைத்துக் கொள்ளுதல். இந்த தொடர்பு இருந்தாலே 40% சதவிகித குழந்தை இறப்புகளைத் தடுக்க முடியும்.

இப்படி தாய்மார்கள் குழந்தைகளை அரவணைத்துக் கொண்டால், தீங்கு விளைவிக்கும் கிருமிகள் இருப்பதை 58% குறைக்கும்.

உடல் வெப்பக் குறைவை 77% சதவிகிதம் குறைக்கும்.

பிறந்த குழந்தைகளுக்கு செய்ய வேண்டியவை என்னென்ன?

குழந்தை பிறந்த உடன் உலர்வாக வைத்தல், தலையையும் பாதங்களையும் மூடுதல், 7 நாட்களுக்கு பின்னர் நாட்பட்ட குளியல் ஆகிய குழந்தைப் பராமரிப்பு நடவடிக்கைகள் உடல் வெப்ப குறைவைத் தடுக்கும்.

மேற்சொன்ன பாதுகாப்பு முறையைப் பின்பற்றினால் குறை பிரசவ குழந்தைகளுக்கும் குறைந்த எடையோடு பிறந்த குழந்தைகளுக்கும் இறக்கும் வாய்ப்பைக் குறைக்கும்.

தொப்புள் கொடி அறுப்பதும் தொப்புள் கொடி பாதுகாப்பதும் அவசியம். ஏனெனில் இவை குழந்தை இறப்பதைத் தடுக்கும்.

குழந்தையின் முதல் 1000 நாட்களின் முக்கியத்துவத்தைப் பற்றித் தெரிந்து கொண்டு அதை சரியாக பின்பற்றினால் குழந்தைகளை நோயின்றி ஆரோக்கியமாக வளர்த்தெடுக்க முடியும்.

Source: UNICEF

இதையும் படிக்க: ஃபார்முலா மில்க் சரியான அளவில் தருகிறீர்களா என எப்படி கண்டறிவது?

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null