பிரசவத்துக்குப் பிறகு எப்போது முதல் மாதவிலக்கு வரும்? மாதவிலக்கு வருவது இயல்பானதா?

பிரசவத்துக்குப் பிறகு எப்போது முதல் மாதவிலக்கு வரும்? மாதவிலக்கு வருவது இயல்பானதா?

பிரசவத்துக்குப் பிறகு இயல்பாக பீரியட்ஸ், மாதவிலக்கு எப்போது வரும் என்பது அனைவருக்குமே குழப்பமான விஷயம்தான். இதோ உங்களது குழப்பத்தைத் தீர்க்கவே (first period after delivery) இந்தப் பதிவு. எது நார்மல்? எது நார்மல் அல்ல? ஏன் உங்களுக்கு மாதவிலக்கு வருகிறது? வராமல் போக என்ன காரணம்? அனைத்தையும் இங்குப் பார்க்கலாம்.

பிரசவத்துக்குப் பிறகு மாதவிலக்கு வருவதையோ வராமல் போவதையோ நினைத்து பலரும் அச்சமடைகின்றனர்.

மாதவிலக்கு வருவதைப் பற்றி, அனைவருக்குமே இப்படிதான் மாதவிலக்கு வரும் எனக் குறிப்பிட்டு சொல்ல முடியாது. பொதுவாக சொல்லலாம். அதை வைத்து அவரவர்கள் ஒப்பிட்டுப் பார்த்து பயனடையலாம்.

ஏனெனில், அதற்கு உண்மை காரணம். ஒவ்வொருவரின் உடலும் தனி தன்மை வாய்ந்தது. அவர்களது மரபியல், உடல்நல தன்மை, உணவுப் பழக்கம், வாழ்வியல் பழக்கம், சுற்றுசூழல், மனநலம் ஆகியவற்றைப் பொறுத்தே தீர்மானிக்க முடியும்.

நீங்கள் பாட்டிலில் பாலை மட்டும் கொடுக்கும் தாய்மாராக இருந்தால் அல்லது தாய்ப்பாலும் பாட்டிலில் பாலும் கொடுப்பது என மாற்றி மாற்றி செய்யும் தாய்மாராக இருந்தால் 5 – 6 வாரங்களுக்குப் பிறகு உங்களுக்கு மாதவிலக்கு வரலாம்.

தாய்ப்பால் சரியாக கொடுக்காத தாய்மார்களுக்கு, 4-8 வாரத்திலே மாதவிலக்கு வரலாம்.

நீங்கள் எந்த பாட்டில் பாலும் கொடுக்காமல் முழுவதுமாக தாய்ப்பால் கொடுத்துக் கொண்டே இருந்தால், நீங்கள் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தும் வரை உங்களுக்கு மாதவிலக்கு வராது. இரவிலும் நீங்கள் தாய்ப்பாலே கொடுப்பவராக இருந்தால், உங்களுக்கு மாதவிலக்கு வராது. 6 மாதம் வரை மாதவிலக்கு வராமல் நீங்கள் முழுமையாக உங்கள் குழந்தையையும் உங்களையும் கவனித்துக்கொள்ள முடியும்.

தாய்ப்பால் கொடுப்பதைப் பொறுத்தே உங்களுக்கு மாதவிலக்கு வருவதும் வராமல் தள்ளி போவதும் தீர்மானிக்கப்படும். தாய்ப்பால் கொடுப்பதால் உங்களால் 6 மாதங்களுக்கு மேல்கூட மாதவிலக்கு வராமல் பார்த்துக்கொள்ள முடியும். இது நார்மல், இயல்பானது. பயப்பட வேண்டாம்.

இதற்கு காரணம் என்னவென்றால், தாய்ப்பாலைத் தயாரிக்கும் ஹார்மோன் மாதவிலக்கை வர செய்யும் ஹார்மோனையே கட்டுப்படுத்தும்.

உங்களது குழந்தை ஒரு நாளைக்கு 3 முறை மட்டும் தாய்ப்பால் குடித்தால், உங்களுக்கு சொட்டு சொட்டாக மாதவிலக்கு வரலாம். சீரற்ற மாதவிலக்காகவும் சிலருக்கு வரலாம்.

குழந்தையின் இரவு தூக்கம்

உங்கள் குழந்தை இரவில் அடிக்கடி அழுது, நீங்கள் தாய்ப்பால் கொடுத்து வந்தால் உங்களுக்கு விரைவில் மாதவிலக்கு வராது. ஒருவேளை உங்கள் குழந்தை தாய்ப்பாலுக்காக அழாமல், தூங்கி கொண்டே இருந்தால், உங்களது ப்ரொலாக்டின் ஹார்மோன் குறைவாக சுரந்து உங்களுக்கு மீண்டும் மாதவிலக்கு வரும்படி செய்யும்.

இரவில் குழந்தை அழுவதும் ஒருவித நல்லதுக்குதான் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்.

இதையும் படிக்க: குறை ரத்த அழுத்தம், உயர் ரத்த அழுத்தம்… ஏன்? எப்படி? அறிகுறிகள்? தீர்வுகள்?

first period after baby

Image Source : baby center

திடஉணவு உண்ணத் தொடங்கும் குழந்தை

6 மாதம் முடிந்த குழந்தைக்கு திட உணவு மிக மிக அவசியம்.

திட உணவை உண்ணும் குழந்தை, தாய்ப்பால் குடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கும். இது நார்மல். இதனாலும் தாய்க்கு மாதவிலக்கு வரத் தொடங்கும். இதுவும் நார்மல்.

6 மாதம் முடியாத குழந்தைக்கு திட உணவு தர வேண்டாம். தாய்ப்பாலை அதிகமாக கொடுங்கள்.

ஹார்மோனல் மாற்றம்

சில தாய்மார்கள் இரவு முழுவதும் தாய்ப்பால் கொடுப்பார்கள். அவர்களுக்கு 2-3 மாதத்திலே மாதவிலக்கு வரும்.

சில தாய்மார்கள் 4 மாதத்திலே தாய்ப்பாலை குறைத்து திட உணவு கொடுப்பார்கள். இவர்களுக்கு மாதவிலக்கு வராது.

இந்த இரண்டுக்குமே ஹார்மோன் மாற்றங்களே காரணம். இது பிரச்னையல்ல.

பிரசவத்துக்குப் பிறகு முதல் மாதவிலக்கு எப்படி இருக்கும்?

கொஞ்சமாக மாற்றம் இருக்கலாம். கொஞ்சம் கூட மாற்றம் இல்லாமலும் இருக்கலாம். முழுமையாக மாறியும் இருக்கலாம். இதெல்லாம் அவரவரின் உடல்நிலை பொறுத்து ஏற்படும் மாற்றம்.

மாதவிலக்கு வலி குறைந்தோ அதிகமாகவோ காணப்படலாம்.

சிலருக்கு தாய்ப்பால் கொடுத்து முடித்த பின்னர், சீரற்ற மாதவிலக்கு இருக்கலாம்.

சின்ன சின்ன கட்டிகளாக மாதவிலக்கு வரலாம்.

சீரற்ற மாதவிடாய் இருக்கும் பிரச்னை சரியாகியும் இருக்கலாம்.

எல்லாம் அவரவர்களின் உடல்நலம் பொறுத்து மாற்றங்கள் தெரியும்.

இதையும் படிக்க: தைராய்டு பிரச்னை… தாய்மார்களுக்கான நிரந்தர தீர்வுகள்…

எப்போது நீங்கள் அடுத்த முறை கர்ப்பமாக முடியும்?

உங்களது பிரசவத்துக்கு பின், 3 வாரம் கழித்துகூட நீங்கள் முயற்சி செய்தால் மீண்டும் கர்ப்பமாக முடியும். ஆனால், இந்த முயற்சியில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பாதுகாப்பானதும் கூட.

அடுத்த குழந்தைக்கு திட்டமிட நினைத்தால் 5 ஆண்டுகள் இடைவெளி விடுவது மிக மிகப் பாதுகாப்பானது.

5 ஆண்டுகள் முடியாது என்பவர்கள், குறைந்தது 3 ஆண்டுகளாவது இடைவெளி விடலாம்.

ஓர் ஆண்டுக்குள், 3 ஆண்டுக்குள் இன்னொரு குழந்தையை திட்டமிடுவது தாய்க்கும் குழந்தைக்கும் ஆரோக்கியத்தை அளிக்காது.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மீண்டும் கர்ப்பமாக மாட்டார்களா?

குழந்தை பெற்று, தாய்ப்பால் கொடுத்து கொண்டிருக்கும் தாய்மார்கள், உடலுறவில் ஈடுபட்டால் மீண்டும் கர்ப்பமாகும் வாய்ப்புகளும் உண்டு.

தாய்ப்பால் கொடுக்கிறோமே, மாதவிலக்கு வரவில்லையே என நினைக்க வேண்டாம். சிலர் இந்த குறுகிய நேரத்திலே கர்ப்பமாகி இருக்கிறார்கள்.

சிலர் இதனால் கருத்தடை மாத்திரைகளை உபயோகின்றனர்.

கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துவது நல்லதல்ல. அதுவும் தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருக்கும் தாய்மார்கள் அவசியம் கருத்தடை மாத்திரைகளை சாப்பிட கூடாது.

இந்தக் கருத்தடை மாத்திரைகளால் உங்களுக்கு ஹார்மோன் பிரச்னைகளும் வரும். தாய்ப்பால் சுரப்பு பாதிப்பும் வரும்.

இதையும் படிக்க: பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தும் முறைகளும் தாய்ப்பால் சேமிக்க வழிகளும்…

first period after pregnancy

Image Source : huffingtonpost

பிரவசத்துக்குப் பிறகு மாதவிலக்கு சுழற்சி எப்படி?

ஹார்மோன்கள் மீண்டும் இயல்பான நிலைக்கு வர சில காலமாவது தேவைப்படும்.

அதுவும் தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தால், மாதவிலக்கு சுழற்சி மாறத்தான் செய்யும். இது முழுக்க முழுக்க நார்மல்.

24 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு வரலாம்.

பின்னர் 28 நாட்களுக்கு ஒரு முறை வரலாம்.

அடுத்ததாக, 35 நாட்களுக்கு ஒரு முறை வரலாம்.

இப்படி சரியாக நிலைத்தன்மை இல்லாமல் மாறி மாறி வந்து பின்னர் அதுவாகவே சரியாகிவிடும்.

எந்த அறிகுறி இருந்தால் இருந்தால் டாக்டரை அணுக வேண்டும்?

பிரசவத்துக்குப் பின் அதிகமான ரத்தபோக்கு

ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை நாப்கின் மாற்றும் நிலை

தொற்று

ஃபைப்ராய்டு அல்லது பாலிப்ஸ்

இரண்டு மாதவிலக்குக்கு நடுவே அடிக்கடி ரத்தம் கசிதல்

கர்ப்பமான அறிகுறிகள் இருந்தால் டாக்டரை சந்திக்கவும்.

பெரிய பெரிய ரத்தக்கட்டிகளாக வருவது

இது போன்ற அறிகுறிகள் இருந்தால் மகப்பேறு மருத்துவரை உடனடியாக சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

இதையும் படிக்க: உடல் சூட்டை குறைக்கும் வழிகள்… அனைவருக்குமான தீர்வு…

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா?  தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null