குழந்தைக்கு திட்டமிடும் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டுபவர்களுக்கு மிகவும் அவசியமான ஒரு சத்து!

குழந்தைக்கு திட்டமிடும் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டுபவர்களுக்கு மிகவும் அவசியமான ஒரு சத்து!

ஃபோலிக் ஆசிட் (ஃபோலிக் அமிலம்) சத்து பெண்களின் சூப்பர் ஹீரோ என்று சொல்லலாம். ஃபோலிக் ஆசிட் எவ்வளவு முக்கியம்? ஃபோலிக் ஆசிட் (folic acid) ஒரு நாளைக்கு எவ்வளவு தேவை? யார் யாருக்குத் தேவை? என்னென்ன குறைபாடுகளைத் தடுக்கலாம்? என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

ஏன் ஃபோலிக் ஆசிட் சத்து தேவை?

கர்ப்பிணிகளின் சூப்பர் ஹீரோ யார் என்றால் அது ஃபோலிக் ஆசிட்தான். ஒரு செல் வளர்ச்சிக்கே ஃபோலிக் ஆசிட் (ஃபோலிக் அமிலம்) சத்து தேவை. நீங்கள் கர்ப்பிணியாக இருந்தாலோ, கர்ப்பத்துக்காக திட்டமிட்டு இருந்தாலோ ஃபோலிக் ஆசிட் சத்து மிக மிக முக்கியம். விட்டமின் பி9 என்பதே ஃபோலேட். குழந்தை உருவாகின்றபோது ஃபோலிக் ஆசிட் சத்து குறைவாக இருந்தால், குழந்தைக்கு குறைபாடுகள் ஏற்படலாம். மூளை வளர்ச்சி குறைபாடு ஏற்படலாம். உதடு பிளவு பிரச்னை வரலாம். இதயம் தொடர்பான பிரச்னைகள் வரலாம். எடை குறைவானக் குழந்தை பிறக்கலாம். குறைப்பிரசவம் ஏற்படலாம் கருச்சிதைவுகூட நடக்கலாம் ஃபோலிக் ஆசிட் சத்தின் அவசியம் பெண்களுக்கு தேவை. ஃபோலிக் ஆசிட் சத்து போதுமான அளவில் இருந்தால்தான் நியூரல் டியூப் குழந்தைக்கு சீரான வளர்ச்சியில் இருக்கும். முதுகுத்தண்டு மற்றும் மூளையின் வளர்ச்சிக்கு ஃபோலிக் ஆசிட் மிகமிக முக்கியம். கரு வயிற்றுக்குள் இருக்கும்போது அதன் வளர்ச்சிக்கு ஃபோலிக் ஆசிட் முக்கிய தேவையாகிறது. ஆரம்பகால கர்ப்பக்காலத்திலே நியூரல் டியூப், வயிற்றில் உள்ள கருவுக்கு உருவாகும் என்பதால், கர்ப்பத்துக்குத் திட்டமிடும்போதே போதிய ஃபோலிக் ஆசிட் சத்துடன் பெண்கள் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. குழந்தைக்கு எந்த தம்பதியாவது திட்டமிட நினைத்தால், ஃபோலிக் ஆசிட் சத்து உடலில் இருக்கும்படி பெண் தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். கர்ப்பக்கால முதல் மாதத்திலே நியூரல் டியூப் வளர்ச்சி குழந்தைக்கு இருக்கும் என்பதால், கர்ப்பத்துக்கு முதலில் இருந்தே ஃபோலிக் ஆசிட் சத்தை உண்ட தாய்மார்களுக்கு 70 சதவிகித ஆபத்துகள் குறைந்ததாக Centers for Disease Control and Prevention அறிக்கையில் தெரிய வந்தது. folic acids during pregnancy Image Source :  Abbott nutrition

கருவுக்கு ஃபோலிக் ஆசிட் மிக மிக முக்கியம்

இயல்பான ரத்த சிவப்பணுக்கள் உங்களுக்கு இருக்க வேண்டும். அது இயல்பான அளவில் உங்களுக்கு இருந்தால்தான் உங்களது கருவும் ஆரோக்கியத்துடன் இருக்கும். செல், டி.என்.ஏ, பிளாசன்டா போன்ற அடிப்படை வளர்ச்சிக்கு ஃபோலிக் ஆசிட் முக்கியம்.

கர்ப்பத்துக்குத் திட்டமிடும் பெண்கள்

நீங்கள் கர்ப்பமாக உதவுவதில் ஃபோலிக் ஆசிட்டின் பங்கு அதிகமே. உங்களது ரத்த சிவப்பணுக்கள் சரியான அளவில் உற்பத்தியாக இந்த ஃபோலிக் ஆசிட் சத்து உதவும்.

ஃபோலிக் ஆசிட் எவ்வளவு இருக்க வேண்டும்?

கர்ப்பத்துக்குத் திட்டமிடும் பெண்களது உடலுக்கு 400 மைக்ரோ கிராம் தேவை. முதல் மூன்று மாத கர்ப்பிணிக்கு 400 மைக்ரோ கிராம் தேவை. இரட்டை குழந்தை வயிற்றில் இருந்தால் 1000 மைக்ரோ கிராம் தேவை. 4 - 6 மாத கர்ப்பிணிகளுக்கு 600 மைக்ரோ கிராம் தேவை. தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்கு 500 மைக்ரோ கிராம் தேவை.

ஃபோலிக் ஆசிட் சத்து உள்ள கருவுக்கு என்னென்ன பிரச்னைகள் வராது?

காது கேளாமை பிரச்னை தடுக்கப்படும் ரத்த சிவப்பணுக்கள் சரியாக இருக்கும் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும். முதுகுத்தண்டு வளர்ச்சி நன்றாக இருக்கும் ஆட்டிசம் பிரச்னை தடுக்கப்படும் உதடு கிழிந்ததுபோல உள்ள குறைபாடு வராது எலும்புருக்கி பிரச்னை வராது இதையும் படிக்க: யாருக்கு கருச்சிதைவு நடக்கலாம்? காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள்...

ஃபோலிக் ஆசிட் குறைபாடு உள்ளவருக்கான அறிகுறிகள்…

பேதி அதிகமான மனச்சோர்வு மறதி மூளையின் இயக்கத்தில் குறைபாடு அலர்ஜி நோய்கள் எலும்பு அடர்த்தி குறைவு பிரச்னை ரத்தசோகை பசியின்மை எடை குறைவு பலவீனமாக இருத்தல் புண்ணான நாக்கு, வறண்ட நாக்கு தலைவலி அதிக படபடப்பு அதிகமான இதயத்துடிப்பு எரிச்சல் உணர்வு

ஃபோலிக் ஆசிட் எப்போதிலிருந்து சாப்பிட வேண்டும்?

கர்ப்பத்துக்குத் திட்டமிடுகிறீர்கள் என்றால், 3 மாதத்துக்கு முன்னிருந்தே ஃபோலிக் ஆசிட் சத்து மாத்திரையை சாப்பிட்டு வரவேண்டும். folic acids foods Image Source : Daily family

எவ்வளவு ஃபோலிக் ஆசிட் ஒரு நாளைக்கு தேவை?

ஒரு நாளைக்கு 400 - 600 மைக்ரோகிராம் அளவுக்கு ஃபோலிக் ஆசிட் சத்து தேவை. கர்ப்பத்துக்கு 3 மாதத்துக்கு முன்பிருந்தே இதை சாப்பிட்டு வர வேண்டும். மருத்துவரிடம் சென்று அவர் ஆலோசித்த பின் அவசியம். ஃபோலிக் ஆசிட் மாத்திரையை சாப்பிட்டு வருவது நல்லது. உங்களுக்கு எந்த அளவில் ஃபோலிக் ஆசிட் மாத்திரை தேவைப்படும் என மருத்துவர் மட்டுமே சொல்ல முடியும். இதையும் படிக்க: கருத்தரிக்க சரியான நாள் எது? எப்படி கருமுட்டை வெளிவரும் நாளை கணக்கிடுவது?

ஃபோலிக் ஆசிட் சத்து உள்ள உணவுகள்

அவகேடோ - வெண்ணெய் பழம் பட்டாணி பீன்ஸ் வகைகள் அனைத்தும் நட்ஸ் பயறு வகைகள் அடர் பச்சை நிற காய்கறிகள் அனைத்தும் அனைத்துக் கீரைகள் வெண்டைக்காய் பீட்ரூட் குடமிளகாய் கொண்டைக்கடலை நிலக்கடலை முழு தானியங்கள் வாழைப்பழம் கேரட் தக்காளி ஸ்டாப்பெர்ரி புரோக்கோலி காளான் சிட்ரஸ் பழங்கள், ஜூஸ் முட்டைக்கோஸ், காலி ஃப்ளவர் முட்டை மஞ்சள் கரு கிட்னி பீன்ஸ் வேகவைத்த உருளைக்கிழங்கு சூரியகாந்தி விதைகள்

ஃபோலிக் அமிலத்தின் அளவு…

உணவுகள்… அளவு (mg)...

வேகவைத்த கீரை - 262 வேகவைத்த புரோக்கோலி - 78 ஒரு கப் சூரிய காந்தி விதை - 300 ஒரு கப் கருப்பு பீன்ஸ் - 256 ஒரு கப் ஃப்ரெஷ் ஆரஞ்சு ஜூஸ் - 109 ஒரு கப் நிலக்கடலை - 212 ஒரு கப் பயறு வகைகள் - 358 அரை கப் அவகேடோ - 58 இதையும் படிக்க: ஆரோக்கியமான உடல் மற்றும் மனம் கிடைத்திட வாழ்வியல் ரகசியங்கள்... ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா?  தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null