8 மாத குழந்தைகளுக்கான உணவு அட்டவணை மற்றும் ரெசிபி

8 மாத குழந்தைகளுக்கான உணவு அட்டவணை மற்றும் ரெசிபி

8 மாத குழந்தைக்கு உணவு ஊட்டுவது என்பது சவாலான விஷயம்தான். ஏனெனில் உங்கள் குழந்தை தவழ ஆரம்பித்திருக்கும். உணவு ஊட்ட பின்னாடியே செல்ல வேண்டியதாக இருக்கும். பற்களும் முளைத்திருப்பதால் உணவின் அளவும் அதிகமாக கொடுக்க வேண்டியதாக இருக்கும். இந்த 8-வது மாதத்தில் குழந்தைக்கு என்னென்ன (Food Chart for 8 Month Babies) கொடுக்கலாம் எனப் பார்க்கலாமா…

கீழ்காணும் உணவுகளை உங்கள் குழந்தைக்கு அறிமுகப்படுத்தலாம்.

 • காலிஃப்ளவர்
 • புரோக்கோலி
 • முட்டை மஞ்சள் கரு
 • மீன்
 • தோல் நீக்கப்பட்ட சிக்கன்
 • தயிர்
 • சீஸ்
 • ஹோம்மேட் செர்லாக் (சத்துமாவு)
 • பழங்களால் தயாரிக்கப்பட்ட ஸ்மூத்தி (ஃபார்முலா பால்)

நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை

 • குழந்தை அங்கும் இங்கும் தவழுவதால் தாய்ப்பால் கொடுப்பது சிரமமாக இருக்கும். எனினும் தாய்ப்பால் கொடுக்கத்தான் வேண்டும். அதற்கு உங்களைத் தயார்படுத்திக்கொள்ளுங்கள்.
 • தன் கைகளால் தொடுவது, விளையாடுவது, கைகளால் சேட்டைகள் செய்வது போன்றவற்றை கவனித்து சரியானவற்றை செய்ய அனுமதியுங்கள்.
 • குழந்தைகள் விதவிதமான உணவுகளை சாப்பிட முயல்வது, தொடுவது போன்றவை இருந்தால் உங்கள் குழந்தைக்கு ஃபிங்கர் ஃபுட் கொடுக்கலாம்.
 • உணவு பறித்து சாப்பிட முயன்றால் குழந்தைக்கு நிறைய உணவு தேவைப்படுகிறது. சத்தான உணவைக் கொடுக்க பாருங்கள்.
 • சில குழந்தைகள் உணவை கீழே தள்ளும், கொட்டும். அதற்கெல்லாம் தயாராக இருங்கள்.
 • இந்த நேரத்தில் இந்த உணவு என்ற எதுவும் இல்லை. குழந்தைக்கு எப்போதெல்லாம் பசிக்கிறதோ அப்போதெல்லாம் உணவைக் கொடுக்க வேண்டும்.
 • குழந்தைக்கு எப்போது பசிக்கிறது எனக் கவனித்து பாருங்கள்.

இதையும் படிக்க: 6 மாத குழந்தைகளுக்கான உணவு அட்டவணை

8 மாத குழந்தைகளுக்கான உணவு அட்டவணை

food chart for 8 month baby

பொதுவான டைம் டைபிளை இங்கே பாருங்கள்.

 • காலை உணவு – 9 மணி
 • மிட் மீல் ஸ்நாக்ஸ் – 12 மணி
 • மதிய உணவு – 1.30 மணி
 • மாலை நேர ஸ்நாக்ஸ் – 5 மணி
 • இரவு உணவு – 8 மணி
 • இதற்கு நடுவில் உங்கள் குழந்தை பசி இருந்தால், தாய்ப்பால் கொடுக்கலாம்.
 • தாய்ப்பாலை கொடுப்பதை நிறுத்த வேண்டாம். முடிந்த அளவுக்கு ஒரு நாளைக்கு ஒரு முறையாவது தாய்ப்பால் கொடுங்கள். குறிப்பாக இரவு தூங்க செல்லும் முன் தாய்ப்பால் கொடுப்பது நல்லது.
 • எப்போதும் 3 நாள் விதியை பின்பற்றுங்கள். புதிய உணவுக் கொடுத்தால், அந்த உணவை 3 நாள் வரை உங்கள் குழந்தைக்கு ஒத்துக் கொள்கிறதா எனக் கவனித்த பிறகு மீண்டும் அந்த உணவைக் கொடுக்கலாம்.

இதையும் படிக்க: 7 மாத குழந்தைகளுக்கான உணவு அட்டவணை

ஓட்ஸ் உப்புமா செய்வது எப்படி?

oats upma for toddlers

Image Source: Flavouroma

தேவையானவை

 • ஓட்ஸ் – ½ கப்
 • தக்காளி ப்யூரி – ½ கப்
 • நெய் – 1 டீஸ்பூன்
 • தண்ணீர் – ½ கப்

செய்முறை

 • ஓட்ஸை ஒன்னும் பாதியுமாக கொஞ்சமாக தண்ணீர் விட்டு மசித்து கொள்ளுங்கள்.
 • பிரஷர் குக்கரில் மேற்சொன்ன அனைத்தையும் போட்டு இரண்டு விசில் வரை வேக விடுங்கள்.
 • இரண்டு விசில் வந்ததும் நிறுத்தி, இளஞ்சூடாக கொடுக்கலாம்.

இதையும் படிக்க: குழந்தைகளுக்கான ஹோம்மேட் ஹார்லிக்ஸ் பவுடர் தயாரிப்பது எப்படி?

வாழைப்பழ பான்கேக்

pancakes for toddlers

Image Source: toddler tummies

தேவையானவை

 • வாழைப்பழம் – 1
 • முட்டை மஞ்சள் கரு – 1
 • நெய் – 1 டீஸ்பூன்

செய்முறை

 • ஒரு பவுலை எடுத்து அதில் வாழைப்பழத்தை போட்டு மசித்துக் கொள்ளுங்கள்.
 • இன்னொரு பவுலில் முட்டை மஞ்சள் கருவை நன்றாக அடித்து கொள்ளவும்.
 • வாழைப்பழத்தையும் முட்டையும் ஒன்றாக சேர்க்கவும்.
 • சூடான தவாவில் நெய் ஊற்றவும்.
 • இதில் நீங்கள் கலந்து வைத்த கலவையை பான்கேக் அளவில் ஊற்றவும்.
 • பொன்னிறமாக வந்த உடனே அடுப்பை நிறுத்திவிடவும்.

இதையும் படிக்க: ஹோம்மேட் டேட்ஸ் சிரப், டேட்ஸ் ப்யூரி செய்வது எப்படி?

பீட் அல்வா

halwa for toddlers

Image Source: yummy tummy

தேவையானவை

 • பீட்ரூட் – 1 மீடியம் அளவு
 • நெய் – 1 டேபிள் ஸ்பூன்
 • நட்ஸ் பவுடர் – 1 டீஸ்பூன்
 • பொடித்த ஏலக்காய் தூள் – ஒரு சிட்டிகை
 • ஹோம்மேட் டேட்ஸ் சிரப் – 1 டீ ஸ்பூன்
 • தண்ணீர் – 1 கப்

செய்முறை

 • பீட்ரூட்டை நறுக்கி மிக்ஸியில் அடித்து கூழாக்கி கொள்ளவும்.
 • பானில் நெய், நட்ஸ் பவுடர், ஏலக்காய் தூள் சேர்த்துக் கலக்கவும்.
 • 2 நிமிடங்கள் அப்படியே வறுத்த பின், பீட்ரூட் கூழை சேர்க்கவும்.
 • பச்சை வாசனை நீங்கும் வரை பீட்ரூட்டை வதக்கவும்.
 • பீட்ரூட் வெந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, டேட்ஸ் சிரப் சேர்க்கவும்.

இதையும் படிக்க: குழந்தைகளுக்கான ஹோம்மேட் நட்ஸ் பவுடர் செய்வது எப்படி?

சம்பா கோதுமை கஞ்சி

porridge for toddlers

Image Source: My little Moppet

தேவையானவை

 • சம்பா கோதுமை – 2 டேபிள் ஸ்பூன்
 • தண்ணீர் – 1 ½ கப்
 • நெய் – 1 டீஸ்பூன்

செய்முறை

 • பானில் நெய் ஊற்றி, சம்பா கோதுமை சேர்த்து வறுக்கவும்.
 • பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
 • மிதமான தீயில் வைத்து, வறுத்து, அதன் பின்னர் தேவையான தண்ணீர் சேர்க்கவும்.
 • கெட்டிப்பதத்துக்கு வரும் வரை நன்றாக கலந்து கொண்டே இருக்கவும்.
 • அடுப்பை அணைத்துவிடவும்.
 • குழந்தைக்கு கொடுப்பதற்கு முன் தாய்ப்பால் அல்லது ஃபார்முலா மில்க் இதனுடன் சேர்க்கலாம்.
 • இதனால் இன்னும் சத்துள்ளதாக கிரீமியாகவும் மாறும்.

இதையும் படிக்க: குழந்தைகளுக்கான சத்துமாவு – ஹோம்மேட் செர்லாக் தயாரிப்பது எப்படி?

ராகி கூழ்

ragi porridge for babies

Image source: Yummy tummy

தேவையானவை

 • ராகி (கேழ்வரகு மாவு) – 1 டேபிள் ஸ்பூன்
 • தண்ணீர் – 1 கப்
 • டேட்ஸ் ப்யூரி – 1 டீஸ்பூன்

செய்முறை

 • கேழ்வரகை நன்கு கழுவி, அலசி, ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவும்.
 • தண்ணீரை வடித்து, உலர்த்தி வெள்ளை துணியில் வெயிலில் கேழ்வரகை காயை வைக்கவும்.
 • ஒரு பானை எடுத்து, அதில் ராகியை போட்டு வறுத்துக்கொள்ளவும். மிதமான தீயில் வைக்கவும்.
 • சூடு ஆறியதும், வறுத்த கேழ்வரகை மெஷினில் கொடுத்து மாவாக்கி கொள்ளவும்.
 • சுத்தமான, காற்று புகாத டப்பாவில் இதைப் பாதுகாப்பாக சேமித்து வைத்துக் கொள்ளவும்.
 • ஒரு பானில் தண்ணீர் ஊற்றி, அதில் 1 டேபிள் ஸ்பூன் ராகி மாவை சேர்க்கவும்.
 • இந்த கூழ் நன்கு திக்காகும் வரை வேக விடவும். இதில் 1 டீஸ்பூன் டேட்ஸ் ப்யூரி கலந்து விடவும்.
 • ஒரு வயதுக்கு மேல் உள்ள குழந்தைக்கு கொடுத்தால் ஒரு ஸ்பூன் வெல்லம் சேர்க்கலாம்.
 • இளஞ்சூடாக குழந்தைக்கு கொடுக்கலாம்.

இதையும் படிக்க: 7 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான காய்கறி பருப்பு கிச்சடி ரெசிபி

பிளெயின் கிச்சடி

kichadi for babies

Image Source: Yummy tummy

தேவையானவை

 • அரிசி – ⅔ கப்
 • பாசி பருப்பு – ⅓ கப்
 • நெய் – 1 டேபிள் ஸ்பூன்
 • பெருங்காயம் – 1 சிட்டிகை

செய்முறை

 • அரிசியையும் பருப்பையும் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
 • நெய்யைத் தவிர அனைத்தையும் பிரஷர் குக்கரில் போட்டு வேக விடவும்.
 • 3 விசில் வந்ததும் நிறுத்தி விடுங்கள்.
 • பிரஷர் நீங்கியதும், நெய் சேர்த்து கலக்கவும்.
 • நன்கு மசித்து குழந்தைக்கு கொடுக்கவும்.

இதையும் படிக்க: குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் 15 உணவுகள்

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா?  தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null