வீசிங், ஆஸ்துமா இருப்பவர்கள் எதை சாப்பிடலாம்? எதை சாப்பிட கூடாது?

வீசிங், ஆஸ்துமா இருப்பவர்கள் எதை சாப்பிடலாம்? எதை சாப்பிட கூடாது?

குழந்தை தூங்காமல் இழுத்துக் கொண்டே அவதிப்படுவது பார்ப்பது மிகக் கொடுமை. குளிர் காலம், மழைக் காலத்தில் ஆஸ்துமா, வீசிங் தொல்லை அதிகமாக இருக்கும். தாய்மார்களும் கர்ப்பிணிகள்கூட இப்படி அவதிப்படலாம். உணவுகள் மூலமாகவே வீசிங், ஆஸ்துமாவை விரட்டுவது எப்படி என இந்தப் பதிவில் பார்க்கலாம்.

காலையில் தூங்கி எழுந்தவுடன்...

தூங்கி எழுந்ததும் வெறும் வயிற்றில் 2-3 டம்ளர் இளஞ்சூடான நீர் பெரியவர்கள் அருந்தலாம். 1 வயது + குழந்தைகளுக்கு 1 டம்ளர் இளஞ்சூடான நீர் கொடுக்கலாம். ஆஸ்துமா உள்ளவர்கள், பாலோ பால் கலந்த எந்தப் பானங்களும் குடிக்க கூடாது. சத்து மாவு கஞ்சியில் பசும்பால் சேர்க்க கூடாது. தேங்காய்ப் பால் அல்லது தண்ணீர் சேர்த்து கஞ்சி காய்ச்சிக் குடிக்கலாம். பால் கலக்காத காபி, டீ ஏதாவது ஒன்றை பெரியவர்கள் குடிக்கலாம். குழந்தைக்கும் சத்து மாவு கஞ்சி, பால் சேர்க்காத காபி, டீ தரலாம். காபி, டீ மூலிகைகளால் இருப்பது நல்லது. மூலிகை காபி, டீ தயாரிப்பது எப்படி என இந்த லின்கை பார்க்கவும். இதையும் படிக்க: வெறும் வயிற்றில் குடிக்க ஹெல்தியான 9 வகை டீ, காபி... பாலூட்டும் தாய்மார்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும்...

காலை உணவு என்ன சாப்பிட வேண்டும்?

இட்லி, இடியாப்பம் ஆவியில் வேக வைத்த தோசை அரிசி கஞ்சி சிறுதானிய உணவுகள் சிவப்பரிசி அவல் உணவுகள் இதையும் படிக்க: குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும் சத்துகள் மிக்க 5 அவல் ரெசிபி அரை வயிறு அளவு சாப்பிட்டாலே போதும். வயிறு முட்ட சாப்பிட வேண்டாம். இடை இடையே குழந்தைகளோ பெரியவர்களோ இளஞ்சூடான மூலிகை டீ அருந்தலாம். கிரீன் டீ அல்ல. வீட்டில் செய்ய கூடிய மூலிகை டீ நல்லது. pineapple

googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });

மிட் மார்னிங் உணவு

சிவப்பு வாழைப்பழம் தேங்காய் துருவல் வெல்லம் சேர்த்து சாப்பிடலாம். மாதுளை அல்லது மாதுளை ஜூஸ் குடிக்கலாம். அன்னாசி பழ சாலட் மிளகு தூள் தூவி சாப்பிடுவது நல்லது.

மதிய உணவு

நீர்ச்சத்துள்ள காய்கறிகள் தவிர்க்கவும். மணத்தக்காளி வற்றல் குழம்பு - புளி சேர்க்க கூடாது புளி சேர்க்காத குழம்பு வகை உணவுகள் மிளகு, சீரகம் சேர்த்த ரசம் சாதம் + காய்கறிகள் (நீர்க்காய்கறிகள் வேண்டாம்) தூதுவளை ரசம் சாதம் + காய்கறிகள் கிழங்கு வகை உணவுகள் தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகளைச் சாப்பிட கூடாது. தயிர் சாப்பிட கூடாது. மோர் தாளித்து குடிக்கலாம் அல்லது உணவில் சேர்த்து சாப்பிடலாம். அலர்ஜி தரும் உணவுகளைத் தவிர்த்து விடலாம். இதையும் படிக்க: எந்தெந்த உணவுகளால் குழந்தைக்கு அலர்ஜி ஏற்படுகிறது?

மாலை நேரம்

சுக்கு காபி இஞ்சி டீ புதினா, தனியா டீ ஆகியவை சாப்பிடலாம். நாட்டு வாழைப்பழம் அல்லது மலை வாழைப்பழம் 1-2 சாப்பிடலாம். மலம் கழிக்க உதவும். ஹைபிரிட் பழம், பச்சை பழம், மோரிஸ் பழம் அவசியம் தவிர்த்துவிடுங்கள்.

இரவு உணவு

இட்லி, இடியாப்பம் தோசை சம்பா கோதுமை உப்புமா சிறுதானிய கஞ்சி இரவு உணவை 8.30 மணிக்குள் சாப்பிட்டு விடுவது நல்லது. 10 மணிக்கு படுக்கலாம். குழந்தைகளுக்கு இரவு உணவை 7.30 மணிக்கு கொடுத்துவிட்டு, 9.30 மணிக்கு படுக்க வைத்து விடுங்கள். வயிறு முட்ட சாப்பிட வேண்டாம். பாதி அல்லது முக்கால் வயிறு சாப்பிட்டால் போதும்.

வீசிங், ஆஸ்துமா இருப்பவர்களுக்கு ஏற்ற கஷாயம்

வீசிங்கால் குழந்தைகளோ பெரியவர்களோ அவதிப்பட்டால், அவர்களுக்கு கற்பூரவல்லி, கரிசலாங்கண்ணி, துளசி ஆகியவைக் கலந்து கஷாயம் செய்து தேன் அல்லது கருப்பட்டி கலந்து கொடுக்கலாம்.

ஆஸ்துமா உள்ள தாய்மார்கள்

உணவுக்கு பின் வெற்றிலையில் 2 மிளகு வைத்து, கடித்து மென்று சாப்பிட்டால் ஆஸ்துமா மற்றும் வீசிங்கிலிருந்து தப்பிக்கலாம். வாரம் 2-3 முறை சாப்பிடலாம். 6 வயது + குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

மூச்சுப்பயிற்சி

8+ வயது குழந்தைகள், பெரியவர்கள் வீசிங் மற்றும் ஆஸ்துமாவால் அவதிப்பட்டால், தகுந்த யோகா நிபுணரிடம் சென்று மூச்சு பயிற்சியை கற்றுக் கொள்வது நல்லது. இதையும் படிக்க: குழந்தைகளுக்கு பயன்படுத்த கூடிய ஹோம்மேட் நேச்சுரல் வேப்பர் ரப் செய்முறை...

ஆஸ்துமாவால் அவதிப்படும் தாய், குழந்தைகள் சாப்பிட கூடாதவை

புளி உருளைக்கிழங்கு மூக்கடலை (கொண்டைக்கடலை) துவரம்பருப்பு, கடலைப்பருப்பு வாழைக்காய், கொத்தவரை, காராமணி குளிர்பானங்கள் கமலா, ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை - மருந்து எடுக்கும் காலத்தில் தவிர்க்கலாம். செரிமானத்திற்கு சிரமம் தரும் மாவு உணவுகள் தவிர்க்கவும். இது வாயுவைத் தரும். மூட்டுவலி மற்றும் மலச்சிக்கல் இருப்பவர்கள், ஆஸ்துமாவில் அதிகம் அவதிப்படுவோர் இந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

ஆஸ்துமா உள்ளவர்களின் உடலில் உள்ள வாயுவை வெளியேற்ற உதவும் உணவுகள்…

பட்டை, லவங்கம் மிளகு, சீரகம் புதினா, பூண்டு இதனை உணவில் சேர்ப்பது நல்லது. spices

ஆஸ்துமா உள்ளவர்கள் மழைக் காலங்களில் சாப்பிட கூடாதவை

நீர்க்காய்கறிகள் அனைத்தும் தர்பூசணி குளிர்பானம், செயற்கை பழச்சாறுகள் மில்க் ஸ்வீட், சர்க்கரை சேர்க்கப்பட்ட இனிப்புகள் எதுவும் வேண்டாம். சாக்லெட் இதையும் படிக்க:  குழந்தைக்கு ஏற்படும் குமட்டல், வாந்தி… சிம்பிளான வீட்டு வைத்திய முறைகள்...

ஆஸ்துமா உள்ளவர்கள் மழைக் காலங்களில் சாப்பிட வேண்டியவை

மிளகு திப்பிலி துளசி கற்பூரவல்லி தூதுவளை கற்பூரவல்லி பஜ்ஜி சுக்கு காபி

வீசிங், ஆஸ்துமா இருப்பவர்களுக்கான சத்தான டயட் லிஸ்ட்

சிவப்பரிசி அவல் உணவுகள் - உப்புமா, கஞ்சி, அளவுடன் இனிப்பு சேர்த்த கீர் முருங்கை கீரை பொரியல் மற்றும் சாம்பார் புழுங்கல் அரிசி கஞ்சி மற்றும் துவையல் மிளகு ரசம், திப்பிலி ரசம், தூதுவளை ரசம், பைன் ஆப்பிள் ரசம் ஆகியவை சாப்பிடலாம். முசுமுசுக்கை இலைகள் சேர்த்த அடை சாப்பிடுவது நல்லது. இதையும் படிக்க: குழந்தையின் கண்கள் மற்றும் மூக்கை சுத்தம் செய்வது எப்படி? ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null