குழந்தைகளின் மூளைக்கு சக்தி தரும் 10 சிறந்த உணவுகள்...

குழந்தைகளின் மூளைக்கு சக்தி தரும் 10 சிறந்த உணவுகள்...

குழந்தை திறமையாக இருக்க வேண்டும். ஆரோக்கியமாக இருக்க வேண்டும். மற்ற குழந்தைகளைவிட படிப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். இதெல்லாம் பெற்றோரின் ஆசைதான். ஆனால், இதையெல்லாம் நடக்க வேண்டுமெனில் குழந்தையின் மூளை நன்றாக செயல்பட வேண்டும். மூளையின் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகள் குழந்தைக்கு உணவு மூலமாகக் கிடைக்க வேண்டும். குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு DHA சத்துகள் தேவை. வால்நட், ஃப்ளாக்ஸ் விதைகள், மீன், முட்டை போன்ற உணவுகளில் இருந்து பெறலாம். மருத்துவர் பரிந்துரைப்பின் படி DHA சப்ளிமென்ட்களையும் குழந்தைக்கு கொடுக்கலாம்.

மூளைக்கு DHA தரும் பலன்கள் என்னென்ன?

திட்டமிடுதல் பிரச்னைக்குத் தீர்வு காணுதல் கவனத்திறன் சமூக, உணர்வு மற்றும் நடத்தைத் தொடர்பான வளர்ச்சி ஆகியவற்றுக்கு DHA உதவுகிறது.

மூளைக்கு சக்தி தரும் சிறந்த உணவுகள்

#1. தாய்ப்பால்

இது குழந்தைகளுக்கான உணவும் மருந்தும். பிறந்தவுடன் கொடுக்க வேண்டிய சீம்பாலை அம்மாக்கள் அவசியம் குழந்தைக்கு தருவது நல்லது. அனைத்து ஊட்டச்சத்துகளும் கொட்டி கிடக்கும் பொக்கிஷம் இது. 0-2 வயது வரை தாய்ப்பால் கொடுப்பது நல்லது. குறைந்தது ஒரு வயது வரையாவது அவசியம் கொடுக்க முயற்சி செய்யுங்கள். 0-6 மாதம் தாய்ப்பால் மட்டுமே அதிக அளவில் கொடுக்கப் பாருங்கள். தாய்ப்பால் கொடுக்க முடியாதவர்கள், DHA ஃபார்டிஃபைட் மில்க் கொடுக்கலாம்.

#2. பால் மற்றும் யோகர்ட்

பி விட்டமின்கள் நிறைந்து உள்ளதால் மூளை திசுக்கள், நியூரோ ட்ரான்ஸ்மிட்டர், என்ஸைம் ஆகியவை சுரக்க, வேலை செய்ய உதவும். யோகர்டில் உள்ள புரதம், மாவுச்சத்து மிகவும் நல்லது. கொழுப்பு உள்ள பால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும். பால் குடிக்காத குழந்தைகளுக்கு, யோகர்ட் கொடுக்கலாம். யோகர்டில் பழங்களைப் போட்டு கொடுக்கலாம். யோகர்டை ஃப்ரிட்ஜில் வைத்து அதில் வாழைப்பழம், ஆப்பிள், மாழ்பழம், ஸ்டாபெர்ரி அறிந்து போட்டு ஐஸ்கிரீம் எனச் சொல்லி கொடுக்கலாம். apple for brain growth

#3. ஆப்பிள் மற்றும் ப்ளம்

ஆப்பிள், ப்ளம் இந்த இரண்டு பழங்களிலும் ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துகள் நிறைந்து உள்ளன. மூளை வளர்ச்சி, திறன் ஆகியவற்றுக்கு இப்பழங்கள் நல்லது. இனிப்பு சுவை கொண்ட பழங்கள் என்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். லன்ச் பாக்ஸ், ஸ்நாக்ஸ் பாக்ஸில் இப்பழங்களை வைத்துக் கொடுக்கலாம்.

#4. பீன்ஸ்

அனைத்து வகை பீன்ஸ்களும் உடலுக்கு நல்லது. புரோட்டீன், மாவு சத்து, நார்ச்சத்து, தாதுக்கள், விட்டமின்கள் ஆகியவை உள்ளன. உடலில் எனர்ஜி அளவு அதிகரிக்க உதவும். கிட்னி பீன்ஸில் சத்துகள் மிக மிக அதிகம். ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் நிறைந்துள்ளன. சுண்டல், கீரை, காய்கறி அவியல், வேக வைத்த சாலட் போன்றவற்றில் சேர்த்துக் குழந்தைகளுக்கு தரலாம்.

#5. நட்ஸ் மற்றும் விதைகள்

வால்நட், பாதாம், ஃப்ளாக்ஸ் விதைகள், சூரிய காந்தி விதைகள் போன்ற பல்வேறு விதை மற்றும் நட்ஸை அவசியம் குழந்தைகளின் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக்கும். விட்டமின் இ, ஆன்டிஆக்ஸிடன்ட், தியாமின், குளுக்கோஸ் ஆகிய சத்துகள் உள்ளன. இதை ஸ்நாக்ஸாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஜூஸ், ஸ்மூத்தி, இனிப்பு பண்டங்களில் சேர்த்துக் கொடுக்கலாம்.

#6. முழு தானியங்கள்

முழு தானியங்களில் உள்ள சத்துகள், மூளை வளர்ச்சிக்கு மிகவும் உதவும். குளுக்கோஸ் சுரப்புக்கு உதவும். பி விட்டமின்கள் அதிகம். நார்ச்சத்து உள்ளதால் குழந்தைகளின் உடலில் கழிவு தங்காது. நரம்பு மண்டலம் பலப்படும். இவற்றால் ஹோம்மேட் செர்லாக் பவுடர் செய்யலாம். இந்தத் தானியங்களால் செய்த பவுடர் மூலம் ரொட்டி செய்யலாம். oats for brain growth

#7. ஓட்ஸ்

சுவையான, சத்தான உணவு இது. மூளைக்கு மிகவும் நல்லது. மூளையின் செயல்திறனைத் தூண்டும். விட்டமின் இ, பி, பொட்டாசியம், ஜின்க் ஆகியவை உள்ளன. கஞ்சி, ரொட்டி, உப்புமா, ஓட்ஸ் கீர், ஓட்ஸ் மில்க் ஷேக், ஓட்ஸ் லட்டு எனப் பல ரெசிபிகளை செய்து கொடுக்கலாம்.

#8. முட்டை

மூளைக்கு நல்லது. மூளையின் வளர்ச்சிக்கு உதவ கூடியது. அனைத்து அமினோ அமிலங்களும் முட்டையில் உள்ளன. கொலைன் சத்துகள் அதிக அளவில் உள்ளது. சான்ட்விச், சாலட், முட்டை ஆம்லெட் எனப் பல ரெசிபிகள் மூலமாக முட்டையைக் குழந்தைகளுக்கு கொடுக்க முடியும்.

#9. மீன்

ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளதால் மூளையின் வளர்ச்சிக்கும் செயல்பாட்டுக்கும் நல்லது. நினைவு திறன் அதிகரிக்கும். குழந்தைகள் மூளை தொடர்பான திறன்களை மேம்படுத்தும். குழந்தைகளுக்கு தேவையான கவனம், புரிதல் திறன் மேம்படும். வாரம் இருமுறை மீன் சமைத்துக் கொடுக்கலாம்.

#10. காய்கறிகள்

தக்காளி, சர்க்கரைவள்ளி கிழங்கு, பூசணி, கேரட், கீரைகள் ஆகியவை ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துகள் கொண்டுள்ளன. ஃபோலேட், விட்டமின் சத்துகள் நிறைந்து உள்ளன. பின்னாளில் வரும் டிமான்ஷியா பிரச்னை வராது. சிறு குழந்தைகளுக்கு பெரும்பாலும் காய்கறிகளை வேக வைத்துக் கொடுப்பது நல்லது.

என்னென்ன ரெசிபிகளை செய்து தரலாம்?

மில்லட் தோசை

அனைத்து சிறுதானியங்களிலும் தோசை, இட்லி செய்து கொடுக்கலாம்.

பான்கேக்

ஓட்ஸ், சர்க்கரைவள்ளி கிழங்கு ஆகியவற்றில் பான்கேக் செய்து கொடுக்கலாம்.

இனிப்பு அவல்

இனிப்பு அவல், பாயாசம் செய்து கொடுக்கலாம்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் சால்ட், மில்க் ஷேக், பாயாசம் போன்றவை செய்து தரலாம்.

முட்டை

முட்டை தோசை, முட்டை சப்பாத்தி, காய்கறிகளில் முட்டை கலந்து கொடுக்கலாம்.

null

null