குழந்தைக்கு திட்டமிடுவோருக்கும் இனிமையான தாம்பத்யத்துக்கும் உதவும் உணவுகள்...

குழந்தைக்கு திட்டமிடுவோருக்கும் இனிமையான தாம்பத்யத்துக்கும் உதவும் உணவுகள்...

குடும்ப அமைப்புகளில் பல்வேறு பிரச்னைகள் இருக்கும். இது பொதுவானது. எனினும், இந்த அவசர உலகில் மகிழ்ச்சி இல்லாத தாம்பத்ய வாழ்க்கையே பெரும்பாலும் காணப்படுகிறது. இதைப் பலரும் வெளியில் சொல்வதும் கிடையாது. குழந்தைக்கு திட்டமிடுபவர்களுக்கும் தம்பதியர்களுக்கும் இந்தப் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அட்வான்ஸ் வாழ்த்துகள்.

தம்பதியர் இருவரும் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருக்க வேண்டியது முக்கியம். அப்போதுதான் குடும்ப வாழ்க்கையும் நன்றாக இருக்கும்.

ஆரோக்கியமான தம்பதியர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்கள். சமூகத்தில் நன்மதிப்பைப் பெறுவர். ஆரோக்கியமான பிள்ளைகளையும் பெற்றெடுப்பார்கள்.

ஆரோக்கியமான தாம்பத்ய வாழ்க்கை எது?

பலருக்கும் இதில் சந்தேகம் இருக்கிறது.

ஹனிமூன் போவதுதான் ஆரோக்கியம் என்று சிலர் சொல்வார்கள்.

ஆனால், ஆரோக்கியமான தாம்பத்ய வாழ்க்கை இருக்கிறதா என உங்களுக்கு நீங்களே செக் செய்து கொள்ளுங்கள்.

பதில் இதோ, தாம்பத்ய வாழ்வு நன்றாக, ஆரோக்கியமாக இருக்கிறது என்பதற்கான அடையாளம் – சோர்வு இல்லாத முகமும் உடலும்தான்.

சோர்வுடன் காணப்படும் மனைவியோ கணவனோ தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட்டால் அவர்களால் மகிழ்வான தருணங்களை எட்ட முடியாது.

இதற்கு உடலும் மனமும் சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம்.

புத்துணர்வு கிடைக்க என்ன செய்யலாம்?

எப்போதும் புத்துணர்வாக இருக்க, ஃபிரெஷ் பழங்களை சாப்பிடலாம்.

தினமும் ஒரு வேளையாவது ஃபிரெஷ்ஷான பழங்களை சாப்பிடுவது நல்லது. ஏதேனும் ஒரு வகை பழமாவது சாப்பிட வேண்டும்.

ரத்தசோகை இருந்தால் சரி செய்து கொள்ளுங்கள். ரத்தசோகையை சரி செய்வது சுலபம். லின்க் இதோ.

இதையும் படிக்க : ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளின் நிலை என்ன?

இதையும் படிக்க : குழந்தைகள், கர்ப்பிணிகள், பெண்கள்… ரத்தசோகையை 100% விரட்டும் உணவுகள்…

தைராய்டு சுரப்பதில் மாற்றம் இருக்கிறது என டாக்டர் சொன்னால் அதையும் சரி செய்து கொள்ளுங்கள்.

சர்க்கரை நோய் இருந்தாலும், அதை உணவின் மூலம் கட்டுப்படுத்துங்கள். லின்க் இதோ.

இதையும் படிக்க: கர்ப்பக்கால சர்க்கரை நோய் வராமல் தவிர்க்க… சாப்பிட வேண்டிய 22 உணவுகள்…

இதெல்லாம் சரியானால் சோர்வும் மறையும்.

pomengranate

சாப்பிட வேண்டிய முக்கிய பழம்

முத்து முத்துகளாய் அழகாக இருக்கும் பழம். இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை. ஆம், மாதுளை பழம்தான் அது.

தாம்பத்ய வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான பழம். இயற்கையாகவே தாம்பத்ய வாழ்க்கைக்கு சிறந்த சக்தி அளிக்கும்.

தம்பதியர் இருவருமே இதைச் சாப்பிடலாம். இதை இயற்கை வயாகரா என்றும் சொல்வார்கள்.

மாதுளையை காதலைக் கொடுக்கும் கனி என்கிறது சீன மருத்துவம்.

மனதை ரம்மியமாக்கும் பழங்கள்

மனம் நன்றாக இருந்தால்தான் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும்.

இன்பமான தாம்பத்ய உறவும் அமையும்.

அதற்கு உதவும் சில பழங்களின் பட்டியலைப் பார்க்கலாமா… சிவப்பு கொய்யா, ஸ்டாப்பெர்ரி, தக்காளி, கொட்டை நீக்கப்படாத கருப்பு திராட்சை, உலர்திராட்சையும் பலன் தரும்.

இதெல்லாம் மனதை ரம்மியாக்கும். காதலைக் கொடுக்கும் உணவுகள்…

கீரையை வெறுத்து, ஒதுக்கி தள்ளும் தம்பதியர்களுக்கு…

தாம்பத்ய வாழ்க்கை நலம் பெற உடலை வலுவாக்கும் கீரைகளை அறிந்து கொள்ளுங்கள்.

சிறுகீரை

தூதுவளைக் கீரை

முருங்கைக்கீரை

இந்த மூன்று கீரைகளும் காமப்பெருக்கி கீரைகள் என்று சித்த மருத்துவம் சொல்கிறது.

உடலுக்கு தெம்பு தரும் கீரைகளாம்.

நரம்புகளுக்கு சக்தி அளித்து, புத்துணர்வு அளிக்க கூடியதாம்.

இதில் உள்ள சத்துகள், நரம்புகள் மற்றும் நரம்பு மண்டலத்தையே பலப்படுத்தும்.

இதில் உள்ள சத்துகள் வேறு தாவரங்களில் கிடையாது. அவ்வளவு சக்தி வாய்ந்த கீரைகள் என்று சொல்கிறார்கள்.

உங்கள் வீட்டு குழந்தைகளுக்குகூட இதை தொடக்கத்திலிருந்தே கொடுத்து வந்தால், பின்னாளில் அவர்களுக்கு குழந்தை பெறுவதில் எந்த கஷ்டமும் இருக்காது.

ரத்தத்தில் வேகமாக உறிஞ்சப்படும் சர்க்கரையைகூட அனைத்து வகை கீரைகளும் தடுக்கும். எனவே, எந்த கீரையையும் வெறுக்க வேண்டாம்.

கீரைகளை அதிகம் சாப்பிடுவோருக்கும் மலட்டுத்தன்மை பிரச்னை இருக்காது.

குழந்தைக்கு திட்டமிடும் தம்பதியர் சாப்பிட வேண்டியவை

பெண்

அனைத்துக் கீரைகள்

வெண்பூசணி

வெண்டைக்காய்

முருங்கைக்கீரை மற்றும் காய்

இரவில் வாழைப்பழம்

ஆண்

பாதாம், சாரைப்பருப்பு கலந்த பசும்பால்

வெண்டைக்காய்

இரவில் வாழைப்பழம்

முருங்கை கீரை மற்றும் காய் – ஆண்களின் விந்தணுக்களை அதிகரிக்க உதவும்.

தம்பதியர் இருவரும் வாழைப்பழத்தை இரவில் சாப்பிடுங்கள். பொட்டாசியம் இருப்பதால் டெஸ்டோஸ்டீரானை தூண்டும்.

googletag.cmd.push(function() { googletag.display(‘div-gpt-ad-1528202144377-0’); });

மாதவிலக்கு பிரச்னை உள்ள பெண்களுக்கு…

குழந்தை பெற திட்டமிட்டால் மாதவிலக்கு பிரச்னையை சரி செய்து கொள்ள வேண்டும்.

இதையும் படிக்க: சீரற்ற மாதவிடாய் பிரச்னைகளைப் போக்கும் 13 வீட்டு வைத்தியம்… ஒரு ஸ்பெஷல் ரெசிபி…

garlic

குழந்தைக்கு திட்டமிடும் பெண்களுக்கு…

கருத்தரிக்கத் தயாராகும் பெண், தங்களது உணவுப் பட்டியலை சரி செய்து கொள்ளுங்கள்.

ஃபோலிக் அமிலம் உள்ள உணவுகளை சாப்பிடுங்கள்.

மருத்துவர் பரிந்துரைத்தால், ஃபோலிக் அமில சத்து மாத்திரையை சாப்பிடலாம்.

விட்டமின்கள் அடங்கியுள்ள அனைத்து உணவுகளும் உங்களது டெய்லி மெனுவில் இடம் பெறட்டும்.

எந்த உணவில் என்னென்ன சத்து இருக்கிறது எனத் தெரிந்துகொள்ள இதைப் படியுங்கள். லின்கில் உள்ள உணவுகளை அவசியம் சாப்பிடுங்கள்.

இதையும் படிக்க : குழந்தைகள், தாய்மார்கள், கர்ப்பிணிகள்… தேவையான சத்துகள் என்னென்ன? எவ்வளவு?

தொலி உளுந்து

வெந்தயம்

பூண்டு

கற்றாழை ஜூஸ்

இந்த நான்குமே தாம்பத்ய வாழ்க்கைக்கு இதமளிக்கும். கருத்தரிக்க உதவும்.

திருமண வாழ்வில் இருக்கும் அனைத்துத் தம்பதியரும் சாப்பிட வேண்டியவை

டபுள் பீன்ஸ்

நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காய்

கேரட்

பீட்ரூட் அல்லது பீட்ரூட் ஜூஸ்

சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை

ஆப்பிள்

நட்ஸ்

வெந்தயம்

விதைகள்

மீன்

அவகேடோ

இஞ்சி

டார்க் சாக்லேட்

இதையும் படிக்க: குழந்தைக்காக திட்டமிடும் பெண்களுக்கு 10 பயனுள்ள ரகசியங்கள்…

Source : நாட்டு மருந்து கடை புத்தகம்

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா?  தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null